எல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால்

பழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ஒன்றான பேரிச்சம்பழமும். சிறியவர் முதல் பெரியவர் வரை அன்றாடம் உணவு உண்டபின் ஒரு வேளையாவது 2 அல்லது 3 பேரிச்சம்பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். 
The image “http://www.koodal.com/contents_koodal/health/images/sigha.jpg” cannot be displayed, because it contains errors.
அரபுநாடுகளில் உற்பத்தியாகும் பேரிச்சை பழங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன . தடித்த தோலுடன் காணப்படும் பேரிச்சம் பழம் நல்ல இனிப்பாகவும் இருக்கும் . பழத்துக்கு உள்ளே விதை இருக்கும் . அதனை சாப்பிட கூடாது . தேனுடன் கலந்து பேரிச்சம் பழத்தை சாப்பிடால் உடம்புக்கு நல்லது . துப்பரவான இடத்தில் வைத்து ஈ , பூச்சிகள் தீண்டாத வண்ணம் வைத்து பாதுகாக்கலாம் . 
http://www.all-creatures.org/recipes/images/i-dates-barhi.jpg
நீரில் கூடுதலான நேரம் வைத்து பேரிச்சம் பழத்தை கழுவக் கூடாது . தினமும் இரவில் பேரிச்சம்பழத்தை பாலில் வேகவைத்து சாப்பிடுங்கள். அல்லது கொய்யாப்பழம் சாப்பிட்டு பால் அருந்துங்கள். மலச்சிக்கல் உடனே தீரும் என்கிறார்கள் . மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.  இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். பேரிச்சம்பழம் இரண்டை மதியம் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் இதயவலி குணமாகும்.


உடலின் மேலுள்ள தோல். கண் சம்பந்தமான கோளாறுகள் வராது. இருந்தாலும் குணமாகும். எந்த வகையான தொற்று நோயும் அணுகாது. சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாகும். தாது விருத்தியும், போக சக்தி குறையுடையவர்கள் பேரிச்சம்பழத்தைத் தேனில் ஊறவைத்து நாள்தோறும் சில துண்டுகளைச் சாப்பிட்டு பால் அருந்தினால் நல்ல குணம் தெரியும். இருமல், கபம் போன்ற கோளாறுகளுக்குப் பேரிச்சம்பழத்தைப் பாலில் வேகவைத்து உண்டால் நல்ல பலனுண்டு. எல்லோரும் பயனடையலாம் . கிழமைக்கு ஒருதடவை சாப்பிட்டு பாருங்கள் எல்லோரும் .
http://www.sheppardsoftware.com/images/Middle%20East/factfile/411px-Dates_on_date_palm.jpg
சாப்பாட்டுக்கு பின்பு எல்லோரும் பேரிச்சை பழம் சாப்பிடுங்கள் . பயன் அடையுங்கள் . உடல் நலத்துக்கு மிகவும் நல்லது . எல்லோருக்கும் உகந்தது . பேரிச்சம் பழத்தை வாங்கி ஒருதடவை சாப்பிட்டு பாருங்கள் . சிலர் இந்த பழத்தை சாப்பிடுவதில்லை . ஏனெனில் , துப்பரவாக இருக்காது , நாள்ப்பட்டது , வண்டுகள் வருகிறது என்று சிலர் இந்த பழத்தை சாப்பிடுவதில்லையாம் . அவர்களுக்கு நான் என்ன கூறுகிறேன் என்றால் நீங்கள் பொதி செய்யப்பட்ட திகதியை பார்த்து வாங்குங்கள் . 

பைக்கற்றுக்குள் அடைத்து வைக்கப்பட்ட பேரிச்சம் பழத்தை வாங்குங்கள் . பேரிச்சம் பழத்தில் செய்த கேக் கூட கடைகளில் இருக்கிறது . மிகவும் ருசியானதாக இருக்கும் . எனக்கு ரொம்பவும் பிடிக்கும் .