அதீத மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? இந்த யோகாவை செய்து பாருங்கள்!

பள்ளி செல்லும் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்படாதவர்கள் இன்று குறைவு. 

ஏதேனும் ஒருவகையில் எல்லாருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறோம். இது எப்பவாவது வந்தால் அதனைப் பற்றி கலவைப்படத் தேவையில்லை. ஏனெனில் வாழ்க்கையில் எல்லாரும் இதனை அனுபவிப்பதுதான். தவிர இவை அன்றாட பிரச்சனைகளால் வரக் கூடியது. 

ஆனால் அடிக்கடி வந்தால் உடல் அல்லது மனதால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆகவே இதற்கான தீர்வை உடனடியாக காண வேண்டியது அவசியம். 

இல்லையென்றால் உங்கள் தினசரி வாழ்க்கை பாதிக்கக் கூடும். நிம்மதி சீர்குலைய வாய்ப்பிருக்கிறது.

யோகா : 
உங்களுக்கு மருத்துவரிடம் போக விருப்பமில்லையென்றால் நௌகாசன யோகாவை செய்து பாருங்கள். உங்களை சிறப்பாக உணர்வீர்கள் என்றால் மிகையாகாது. இப்போது உலகம் முழுவதும் நமது யோகாவை ஒரு சிகிச்சையாக பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். யோகாவில் இருக்கும் ஒவ்வொரு ஆசாகனங்களும் அர்த்தமுள்ளது. பயனுள்ளது.

நௌகாசனா : 
நௌகா என்றால் சமஸ்கிருதத்தில் பரிசல் என்று அர்த்தம். பரிசல் போன்று செய்யப்படும் வடிவில் செய்யப்படும் இந்த யோகா மன அழுத்தத்தை குறைத்து மனதிற்கும், உடலிற்கும் புத்துணர்வு தரும்.எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை : முதலில் தரையில் படுத்து ஆழ்ந்து மூச்சை நிதானமாக விடுங்கள். 

பின்னர் மெதுவாக காலை தரையிலிருந்து மேலே தூக்கவும். பிறகு கைகளை மெதுவாக உந்தி உடலை மெதுவாக மேலே தூக்கவும்.


சிறிது பேலன்ஸ் செய்த பின் கைகளை நீட்டிக் கொள்ளுங்கள். உங்கள் கண்கள் முன்னோக்கி இருக்க வேண்டும். கால்கள் மேலே பார்த்த நிலையில் நேராக இருக்க வேண்டும்.



இது பார்ப்பதற்கு பரிசல் வடிவில் இருக்கும். இந்த நிலையில் சில நொடிகள் இருந்தபின், மெதுவாக இயல்பான நிலைக்கு வரவும். இவ்வாறு 4- 5முறை செய்யவும்.

பலன்கள் : உங்கள் அடிவயிற்றை பலப்படுத்துகிறது. தொடைக்கும், கால்களுக்கும் வலுவளிக்கிறது. ஜீரணத்தை தூண்டும். மலச்சிக்கலை நீக்கும். மனதிற்கு புத்துணர்வு அளிக்கிறது.

குறிப்பு : இந்த ஆசனம் மனதிற்கு சிறந்த முறையில் புத்துணர்வு அளிக்கிறது. ஒற்றைத் தலைவலி, குறைவான ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment