தன்னம்பிக்கை

இலட்சியத்தில் வெற்றிபெறுவோம் என்ற உறுதிமட்டும் இருந்தால்போதும். உங்கள் பணிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உழையுங்கள். தன்னம்பிக்கைதான் உங்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பான வாழ்க்கையாக மாற்றித் தருகிறது என்பதை மறவாதீர்கள். வெற்றியைச் சந்திக்காமல் திரும்பமாட்டேன் என்ற உங்களது உறுதிஒன்றே எப்பொழுதும் கைவிளக்காக இருக்க வேண்டும்.


"வெற்றிபெறவேண்டும்" என்னும் உங்களுடைய திடமான எண்ணம்தான் வேறு எந்தக் காரியத்தையும் விட மிக மிக முக்கியமானது. மிக இக்கட்டான சூழ்நிலைகளில், நான் தோற்றுவிடுவேனோ? என்று சிந்திக்காதிர்கள். நான் வெல்வேன் என்று நம்புங்கள்.

அப்போதுதான் பிரச்சினைகளை வெல்ல வழிபிறக்கும். வீட்டிலும், வேலையிலும், வெளியிலும் நான் வெற்றிபெறுவேன் என்கிற மனநிலையே உங்களை வெற்றிபெறச் செய்துவிடும். எதையும் ஒரு திட்டத்தோடு மட்டும் தொடங்காதிர்கள்.செயலோடும் தொடங்குங்கள்.சிந்தனை செய்யுங்கள்; முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கை யுடனேயே உங்களுடைய சிந்தனை அமைந்திருக்கட்டும். இந்த மனப்பான்மையிலிருந்து மாறிவிடாமல் சிந்தித்தைச் செயலில் காட்ட மிகுந்த மகிழ்ச்சியுடன் உழையுங்கள். வெற்றி மிக அருகில் இருப்பதை உணர்வீர்கள்.

தாழ்வுமனப்பான்மை வேண்டாம்.அனைத்தையும் வெல்ல முடியும்.வெற்றியைப்பற்றிய சிந்தனையுடன் செயல்படுங்கள். தோல்வி, வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடமளிக்காமல் வெற்றியை மட்டுமே சிந்தித்து உயர்வடையுங்கள்.

உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சியத்தை நோக்கித்தான் இருக்க வேண்டும். தடைகள் எதிர்படும்பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள் மனத்தையும், செயலையும் பின்வாங்கவிடாதீர்கள். இவையெல்லாம் உங்கள் உறுதியை சோதிகக வந்தவை என்று கருதி அந்தத் தடைகளையும் தாண்டி உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடையுங்கள்.

வெற்றியைக் கற்பனையில் நம்பிக்கையுடன் பார்க்கும் திறன்,என்னால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்ற செயல்வேகம், எது வேண்டும் என்றாலும் பொறுமையுடன் விடாப்பிடியாக முயற்சி செய்யும் குணம், இந்த நான்கும் உள்ளவரே தன்னம்பிக்கையுள்ள மனிதர்.

நம்முடைய வெற்றி,தோல்வியைத் தீர்மானிப்பது மனவளர்ச்சியோ, மனவளர்ச்சி இன்மையோ அல்ல.நல்லதே நடக்கும் என்ற மனோபாவம்தான்.எனவே எப்போதும் உண்மையான ஆர்வத்துடன் வெற்றிக்காக உழையுங்கள். நம்முடைய உழைக்கும் நேரம் நாள்தோறும் அதிகரிக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி நமது சிந்தனை,செயல்வேகம் ஆகியவை இருக்க வேண்டும். முயற்சியை எவனொருவன் எப்பொழுது கைவிடுகிறானோ அப்பொழுதே அவனது சக்தி முழுவதும் அவனிடமிருந்து பறந்து போய்விடுகிறது.

அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல.விடாமுயற்சியினால் தான்.வெற்றியின் இரகசியம் "கடின உழைப்பு" என்ற சொற்களில் தான் அடங்கி இருக்கிறது. நம்பிக்கையும் உற்சாகமும் மட்டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடைந்துவிடலாம்.சிந்தனையைவிடச் செயல்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். முன்னேற்றத்தையும் தரும். எப்போதும் சிந்தித்துக் கொண்டே மட்டும் இருக்காமல் செயல்பட்டுக் கொண்டெ இருங்கள்.

நீங்கள் பணிவுடன் பழகுபவர் என்றால் பலரை உங்கள் பக்கம் ஈர்த்து விடுவீர்கள். நேர்மை உள்ளம் கொண்டவர் என்றால் உங்களை எல்லோரும் நம்புவார்கள். விடாது முயற்சி செய்யும் அரிய குணத்தைப் பெற்றிருந்தால், எப்போதும் நீங்கள் வெற்றி வீரனாகத் திகழ்வீர்கள்.மனம் அமைதியாக இருக்கவேண்டுமானால் எதிர்மறையான சிந்தனைகளையும், பிறரது திறமைகளை சிறுமைபடுத்துவதையும், கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பதையும் நிறுத்துங்கள். உங்கள் மனதை சுத்தப்படுத்துங்கள். ஊக்கமான சிந்தனைகளையே நிரப்புங்கள். எதிலேயும் நல்லதே நடக்கும் என்றே செயல்படுங்கள். இப்போது நீங்கள் தான் உலகிலேயே மிகவும் அமைதியான மனம் உடையவர்.

வெற்றி பெறுவோம்' என்ற திடமான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்துவிடாது செயலாற்றிக்கொண்டேயிருந்தால் மிக எளிதாக வெற்றிக் கனியைப் பறிக்கமுடியும். வாழ்க்கையில் உயரவேண்டும் என்று உங்கள் மனத்திற்கு கட்டளையிடுங்கள்.

கட்டளையை முழு வேகத்துடனும் விருப்பத்துடனும் அடிக்கடி இட்டால் நீங்கள் உண்மையில் அதை அடைய செயலிலும் இறங்கிவிடுவீர்கள்.தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்த ஆயுதம். இந்த ஆயுதம் இருந்தால் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு அதற்கான காரணகாரியத்தை ஆராய்ந்து தீர்வு காணமுடியும். தன்னம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மனவேதனைகளையும் நீக்குகிறது. தன்னம்பிக்கையே நீடித்த நல்வாழ்க்கையை அமைத்துத் தருகிறது.
வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்திரச்சொல் "இப்பொழுது". தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் "பிறகு". வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே எதையும் தள்ளிப் போடாதிர்கள்.பிரச்னைகள்தாம் மிகப்பெரிய சாதனைகளையும், உறுதிமிக்க சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன. எனவே பிரச்னைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள்.

தோல்வி எனக்கு மனச்சோர்வை அளிப்பதில்லை. மாறாக அது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது.எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும் ஒருவனால் வெற்றி பெறமுடியாது. தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் ஊக்கம் அவனிடம் இருந்தால்தான் முன்னேற முடியும், வெற்றி பெற முடியும். இந்த ஊக்கம் இருந்தால், கல்வியறிவு இல்லாதவனும், பொருள்வசதி இல்லாதவனும் கூட முன்னேறுவது உறுதி.

முன்னேற முயற்சியை, உழைப்பை, அறிவை, ஒழுக்கத்தை நம்புங்கள். இதைத்தவிர வேறு எதை நம்பினாலும் முன்னேற முடியாது. அறிவுக்கு இந்த உலகம் எப்போதும் வணங்கும். திறமைக்கு இருகரம் நீட்டி ஆதரவு தரும். தூய்மையான உள்ளத்திற்கு மிகுந்த வரவேற்பு தரும்.வேதனையை மனோபலத்துடன் எதிர்கொள்ள முடிந்தால், எப்படிப்பட்ட துக்கத்தையும் தாங்கிக்கொள்ள முடியும்.

வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பிரச்சனையை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதை எதிர் கொள்வது எப்படி என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்தாலே போதும். குழப்பநிலையிலிருந்து நீங்கள் வெளியில் வந்துவிட்டதாக அர்த்தம். இந்த நிலையில்தான் நீங்கள் சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கவேண்டியுருக்கும். பிரச்சனை களுக்குத் தீர்வு காணும் முன்பு மனதை சமநிலைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

மிகப்பெரிய எழுத்தாளராகத் தன்னைக் கற்பனை செய்துகொள்ளும் ஒருவன் தான் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பு 'எப்படி முடிந்தால் சிறப்பாக இருக்கும்' என்பதை கற்பனையில் பார்த்து, அதற்கு ஏற்றபடி எழுதினால் நிகழ்காலத்தில் வெற்றி பெறமுடியும். ஆகவே நாம் செய்து முடிக்க எடுத்துக்கொண்டுள்ள காரியங்களும் அதை கற்பனையில் பார்த்தபடி உருவாக்கும் குணமும் நம் வாழ்வில் நிச்சயம் பலம் சேர்க்கும். எனவே ' முடிவு இப்படி இருக்க வேண்டும்' என்று உறுதியாக கற்பனையில் படமாகப் பார்த்து முடிவு செய்துகொண்டு தீவிராமாக உழைத்து வெற்றி அடையுங்கள். இதைப் பழக்கத்தில் கொண்டுவந்து தொடர்ந்து சாதனை புரியுங்கள்.

செயல்படுங்கள். காரியத்தில் இறங்குங்கள். அறிவுடன் இருங்கள். காலத்தை வீண் அடிக்காதிர்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி. உறுதியாக நின்று, நானும் ஓர் 'வெற்றி வீரனே' என்று காட்டுங்கள். வெற்றி வீரனாக செயல்படுங்கள்.
நிறைந்த முயற்சியை உடையவன், மலர்ந்த வாழ்வைப் பெறுவான்.ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி பிரார்த்திக்க மாட்டேன். ஆபத்துகளைச் சந்திக்க எனக்கு அஞ்சாமையைக் கொடு. நோய்களிலிருந்து காப்பாற்றும்படி யாசிக்க மாட்டேன். நோயைப் பொறுத்துக்கொண்டு வெற்றி கொள்ளும் மனதிடத்தை எனக்கு கொடு. வாழ்க்கை எனும் போரில் எனக்கு துணை கேட்க மாட்டேன். வெற்றியடைய சுயலாபத்தைக் கொடு.

எதிர்பார்ப்புகள் என்ன ஆகுமோ? என்ற பயத்திலிருந்து காப்பாற்றும்படி வேண்ட மாட்டேன். நம்பிக்கையுடன் இருந்து வெற்றியடைய பொறுமையைக் கொடு.-தாகூர்நிகழ்வதை கொண்டு நிகழ்ச்சிகள் உறுதிப்படுகின்றன. அகமகிழ்வதும், தோல்வியில் வருந்துதலும் சூழல்நிமித்தம். முழுமை பெறுவதே அமைதி.-தொல்காப்பியர்

எந்தப் பணியை நாம் மேற்கொள்கிறோம் என்பது முக்கியமில்லை. அந்தப் பணியில் நம்முடைய ஆற்றலை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். நமக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி வளர்த்துக்கொள்வது நம்முடைய ஆர்வத்தையும் முயற்சிகளையும் பொறுத்தே அமைகிறது. விரும்பியது கிடைக்கவில்லையெனில், கிடைத்தை விரும்பக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பல்வேறு காரணங்களால் நமக்குள்ளே உருவாகும் தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை, அச்சம், சந்தேகம், எதிர் காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை ஆகியவற்றறின் காரணமாக நம்மிடம் உள்ள ஆற்றல்செயல்பட முடியாமல் முடக்கி வைக்கப்பட்டுவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம்மைப்பற்றி நமக்கென்று "ஒரு சுயமதிப்பீடு" இல்லாதபோது நம்முடைய ஆற்றலைப்பற்றிய உணர்வும் நமக்கில்லாமல் போய்விடுகிறது. என்னால் இது முடியுமா? என்று சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, என்னால் முடியும் என்கிற நம்பிக்கையினைப் பெறுகிறபோது ஆற்றலும் செயல்படத் தொடங்குகிறது.

ஆற்றல் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும்தான் வெளிப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. எத்தனைத் துறைகளில் ஈடுபட்டாலும் அத்தனைத் துறைகளிலும் நம்முடைய ஆற்றலை நம்மால் வெளிப்படுத்த முடியும். ஆனால் அத்தனைத் துறைகளிலும் அக்கறை காட்டுகின்ற மனஉறுதி நமக்கிருப்பது அவசியம்.முயற்சிகள் தொடரும்போது ஆற்றல் வெளிப்படத் தொடங்குகிறது. முயற்சி விடாமுயற்சியாகும் போது ஆற்றல் வலிமை பெறுகிறது. ஆற்றல் வலிமை பெறுகிறபோது மனத்தளவில் ஏற்பட்ட தடைகள் தகர்ந்து போகின்றன.

நான் விரும்பிய துறை கிடைக்கவில்லை. ஆகவே என்னுடைய ஆற்றல் வெளிப்பட வழியில்லை என எண்ணுவது தவறு. அவ்வாறு எண்ணுகின்ற மனிதன் தன்னுடைய ஆற்றலுக்குத் தானே தடை விதித்துக்கொள்ளுகிறவன் என்றுதான் கருத வேண்டும்.கதவைத் தட்டி வாய்ப்புகள் தங்களை அறிவித்துக் கொள்வதில்லை. நாம்தான் வாய்ப்புகளின் கதவைத் தட்டி , திறக்க வைத்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்பு சிறிதாயினும், பெரிதாயினும் உங்களுடைய முழுத்திறமையைக் காட்டி செயல்படுங்கள். அப்போது உங்கள் ஆற்றல் வளர்ந்து கூர்மையடைவதை உணரலாம்.

தன் திறமையில் சந்தேகம், பயம், சோம்பல், வேண்டாத வீணான கற்பனை, கீழ்நிலையில் உள்ளவர்களின் துன்பத்தைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருப்பது, ஆரம்பத்திலேயே வெற்றியின் அறிகுறியை எதிர்பார்ப்பது, சிறுதடை என்றாலும் மனமுடைந்துபோவது, இவைபோன்ற பல காரணங்களால் ஒருவருக்குத் தோல்வி மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது. மனஉறுதியென்பது நமக்கு நாமே உண்மையோடும்,நம்பிக்கையோடும் உண்டாக்கிக் கொள்வதுதான்.விழுவதில் தவறில்லை. விழுந்தபின்பும் அமைதியாய் இருப்பதுதான் தவறு. விழுந்தபின்பு மீண்டும் எழுந்து நடப்பதில்தான், நமது வெற்றியின் ரகசியமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மூடிய கதவுகளை முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்காதிர்கள். அதையே நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்காதிர்கள். திறந்திருக்கும் கதவுகளை தேட முயலுங்கள். ஒவ்வொரு வினாடியும் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் மனிதனுடைய கால்களை முன்னோக்கி நடக்கும் விதத்தில் அமைத்திருக்கின்றார்.

பார்க்கின்ற பொருட்களில் மகிழ்ச்சியில்லை. அந்தப் பொருளை பார்க்கின்ற மன நிலையில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது. முயற்சி என்னும் விளைநிலத்தில் உழைப்பு எனும் இரயில் வெற்றி அனும் இடத்தை அடைய வேண்டுமானால் உற்சாகம் என்னும் பச்சைவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்க வெண்டும்.தாமதிப்பதால் நம் ஒளியை வீணாக்குகிறோம்.அது பகலில் விளக்குகளை எரிப்பதற்குச் சமம். தாமதம் செய்து கொண்டிருப்பவர்களும், தடுமாறிக் கொண்டிருப்பவர்களும் ஒருபோதும் செயலில் துணிந்து இறங்கமாட்டார்கள்.

ஒரு முக்கியமான காரியத்தை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுவிட்ட பின்பு, யாருடைய அபிப்பிராயத்துக்காகவும் காத்துக்கொண்டு இருக்கக் கூடாது. யாருடைய பேச்சைக் கேட்டும் இடையில் காரியத்தை நிறுத்திவிடுவதும் சரியல்ல. நாம் மேற்கொள்ள வேண்டிய காரியங்களைப் பற்றி நாம் ஆலோசனை செய்து பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. செயல் புரியாமல் சோம்பி இருப்பவர்கள் செத்துப்போன சவத்துக்கு ஒப்பானவர்கள்.

முன்னேற்றப்பாதைக்கு, அகத்தூண்டுதல் ஒரு சதவிகிதம். வியர்வை சிந்துதல் 99 சதவிகிதம் .-எடிசன்சுறுசுறுப்பு என்பது ஒரு செயலை நோக்கி தேக்கமில்லாமல், மந்தமில்லாமல் அதே சமயத்தில் அமைதியோடு முன்னேறும் (முன்னேற்றும்) உன்னத நிலையாகும். நாம் முன்னேற்றமடைந்து உயர்வடைவதை நம்மைத்தவிர வேறு எவராலும் தடுத்துவிட முடியாது.எந்தத் தொழிலும் வெற்றி பெறக் கூடியவர்கள் தங்களுடைய வேலை நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள்.-ஆண்ட்ரு கார்னீகிஊதியத்திற்கு மேற்பட்ட உழைப்பைச் செய்வதன் மூலம் நமக்கு நாமே பெரிய உதவியை செய்து கொள்கிறோம்.ஒரு இடத்திற்குப் போய் சேரவேண்டுமானால், இருக்கின்ற இடத்தை விட்டுத்தான் செல்லவேண்டும். ஆக உயர்ந்த குறிக்கோளை அடைய வேண்டுமெனில் சில இன்பங்களை மறந்துதான் ஆகவேண்டும்.'இன்று' என்பது நம்மிடம் உள்ள ஒரு பணநோட்டு போன்றது.

அதனை எப்படி வேண்டுமானாலும் நம்மால் செலவு செய்ய குடியும். 'நாளை' என்பது பின்தேதியிட்ட காசோலை போன்றது. அந்தத் தேதி வரும்வரை நம்மால் அதனைக் காசாக்க முடியாது. இன்று அது வெறும் தாளுக்குச் சமம்.

தோல்வியை சந்திக்க நேரும் போது அதிருப்தி ஏற்படுவது இயற்கைதான். ஆனால் அந்த அதிருப்தியானது உங்களை இயலாதவர்களாக, அவமானப்பட்ட வர்களாக உருமாற்றும் முன்பே அதை "பிடிவாதமாக" மாற்றிக் கொள்ளுங்கள். எதையோ சாதிப்பதற்காக நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். அது என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுடைய வேதனைகளை நினைத்து வருத்தப்படாதீர்கள். அப்படி வருத்தப் பட்டாலும் அதை வெளியில் சொல்லாதீர்கள். முக்கியமாக 'சுய இரக்கம்' என்பது கூடாது.உங்களை யாராவது விரும்பாவிட்டால் அது அவர்களுடைய பிரச்சனை. அது பற்றி நீங்கள் வருத்தப்பட வேண்டிய தேவை இல்லை.

மற்றவர்கள் உங்களுடன் கழிக்கப் போகும் நேரம் ரொம்பக் குறைவுதான். ஆனால் உங்களுடன் நீங்கள் 24 மணி நேரம் கழிக்க வேண்டியிருக்கும். உங்களுடைய கம்பெனி உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும்.விரும்பியதை யாராலும் பெறமுடியும்.முயன்றால் முடியாதது இல்லை.யாரையும் நம்மைவிட தாழ்ந்தவர்களாக எண்ணிவிடக் கூடாது. நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களை மிகவும் முக்கியமானவராக, தவிர்க்க இயலாதவராக மாற்றிக் கொள்ளுங்கள். இனிமையான பேச்சுக்களின் மறுபதிப்பாக இருங்கள்.

ஒரு மனிதனுக்குத் தேவை தன்னம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கையே அவனை முழுவேகத்தில் செயல்படவைத்து தடைகளையும் தாண்டி வலிமையுடன் வெற்றியைச் சந்திக்க வைக்கிறது.எல்லாக் கவலைகளையும் மறக்கவும், கவலையே இல்லாமல் வாழவும் தன்னம்பிக்கையுடன் சிந்தியுங்கள்.வழிபிறக்கும்.

"தோல்வி உறுதி" என்கிற நிலையிலும் போராடத் துணிந்தவனே உண்மையான வீரன். "வெற்றி பெறுவோம்" என்று நம்புங்கள். இறுதிவரை போராடுங்கள். விடாமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்.-முசோலினி தன் மேஜை மீது வைத்திருந்த பொன்மொழிமனதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலட்சியத்தை அடையும்வரை, நமது மனமும் செயலும் இலட்சியத்தை நோக்கியே சென்று கொண்டிருக்க வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றினாலும் மனப்பழக்கத்தினால் நம்முடைய பணிகளை வெகு எளிதாக தொடர்ந்து செய்யமுடியும். கடினமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சியை காணும் மனநிலை கொண்டவர்கள் எப்போதும் வெற்றியையும் அதன்மூலம் புகழையும் பெறுகிறார்கள்.

மனம் சோர்ந்து போனால் நீங்கள் இதுவரை பெற்ற வெற்றிகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் நண்பர்கள் உங்களைப் பாராட்டிய அம்சங்களை நினைவிற்குக் கொண்டுவாருங்கள். நாம் எழுந்து எழுந்து உறுதியுடன் எடுத்து வைக்கும் முயற்சிகளில்தான் நம்பிக்கையும் வெற்றியும் உள்ளன.



வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் Live Chat, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையளிக்க உதவும் Live Chat

தொழிலின் வளர்ச்சிக்கு வலைத்தளம் (Website) மிகவும் உதவுகிறது. இன்று வலைதளத்தின் மூலம் பல தொழில்கள் நடைப்பெற்று வருகின்றன. நிறுவனங்களைப் பற்றி வாடிக்கையாளர்கள் அறிய வலைத்தளம் உதவுகிறது. இன்றைய இணையத்தின் வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நிறுவனங்களை வலைதளத்தின் மூலமாக தொடர்பு கொள்கின்றனர். ஆகவே நிறுவனங்கள் தங்களின் வலைத்தளத்தை (Website) மேம்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவது அவசியமாகும். நிறுவனங்களின் வலைத்தளத்திற்கு (Website) வரும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக LIVE CHAT என்ற தொழில்நுட்பம் உதவுகிறது. வாடிக்கையாளர்களுக்கு தோன்றும் ஐயம், கேள்விகள், சந்தேகங்கள் போன்றவற்றை LIVE CHAT மூலம் நேரடியாக தீர்க்க முடியும். LIVE CHAT என்பது நேரடி உரையாடல் ஆகும். பல நிறுவனங்கள் LIVE CHAT வசதியை தங்கள் வலைதளத்தில் (Website) பயன்படுத்துகின்றன.
LIVE CHAT வசதியை வலைதளத்தில் பயன்படுத்துவதால் பல நன்மைகள் (More Advantages) உள்ளன.
  • பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நிறுவனங்கள், நிறுவனப் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து கொள்வதையே விரும்புகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க LIVE CHATவசதி உதவுகிறது.
  • பொருட்களின் விலையை வாடிக்கையாளர்கள் உரையாடல் மூலம் அறிய உதவுகிறது.
  • Instant Leads : பார்வையாளர்கள் LIVE CHAT-ன் மூலம் தங்களுக்கு தேவையான விவரங்களை உடனடியாக பெறுவதால், விரைவான விற்பனை நடைபெற வாய்ப்புள்ளது.
  • Customer Feedback : வாடிக்கையாளர்களிடமிருந்து நிறுவனத்தைப் பற்றிய கருத்துக்களை (Feedback) LIVE CHAT-ன் மூலம் பெறலாம்.
  • Develop deeper customer relationships: நேரடி உரையாடலின் மூலம் வாடிக்கையாளர்களிடம் ஆழமான உறவை வளர்க்கலாம்.
  • Better First Impression: பார்வையாளர்களுக்கு (Visitors) நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பற்றி அதிக தகவல்களை உரையாடல் மூலம் அளிப்பதால் அவர்களை வாடிக்கையாளராக மாற்ற முடியும்.
LIVE CHAT Software-ஐ நிறுவும் முறை:
  LIVE CHAT-ஐ வலைதளத்தில் நிறுவுவதற்கு எவ்வித programming அறிவும் தேவையில்லை.LIVE CHAT Software-ஐ பல நிறுவனங்கள் வழங்குகின்றன. நிறுவனத்தின் வலைத்தளத்தை வடிவமைத்த நிறுவனமே LIVE CHAT Software-ஐ நிறுவிக் கொடுக்கின்றன.
LIVE CHAT Software- ஐ சேவை வழங்கும் நிறுவனங்கள்:
   LIVE CHAT Software-ஐ சேவையை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. LIVE CHAT வசதியை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றன. ஆயிரம் ரூபாயிலிருந்து நிறுவனத்தைப் பொறுத்து கட்டணம் மாறுப்படும்.
போன்ற பல நிறுவனங்கள் Live Chat சேவையை வழங்குகின்றன.

கவலையை கழற்றி வீசுங்கள்

கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவித சொத்து. அதன் உருவங்கள் மாறலாம். ஆனால் அதன் அழுத்தம் ஒன்றாகவே இருக்கும். கவலையே இல்லாத மனிதர் யாருமே இல்லை. நமக்குத்தான் இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறதென்று பொதுவாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் ஒவ்வரிடமும் ஒவ்வொரு விதத்தில் கவலையின் ஆட்சி இருக்கிறது.
    கவலை என்று அதையே நினைத்துக் கொண்டு இருப்பதை தவிர்த்து மனதின் திசைகளை மாற்றுங்கள். கொஞ்சம் சிரமமான காரியம்தான் இருந்தாலும் அதனைச் செய்தாக வேண்டும். மனம் தன் இயல்புகளை மாற்றிக் கொண்டே இருந்தால் கவலை என்ற பேய் விரட்டப்படுகிறது. சிலருக்கு லச்சியவெறி என்று ஒன்று இருக்கலாம். அதற்காக நம்மால் இது முடிகிற காரியமா….? என்று மலைத்து நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். இதுதான் மனதின் திசைமாற்றல் எனப்படும். இப்படி ஒவ்வொன்றாக மனதின் திசைகளை மாற்றிக் கொண்டே போனால் குறிப்பிட்ட இலக்கை கவலைகள் இன்றி அடையலாம். மனித சக்தியை மீறி எதுவுமே கிடையாது.
    கவலையற்ற மனிதர் உலகில் உண்டா? எல்லாருக்கும் கவலைகள் உண்டு. எதற்காக கவலை …? எப்படிப்பட்ட கவலை? என்பது மட்டும் மனிதருக்குள் மாறுப்படும். ஒரு நேரத்தில் மனிதனை ஆர்வத்தோடு இயங்க வைத்துக் கொண்டிருக்கும். சில நேரங்களில் விரக்தியில் படுகுழியில் தள்ளிவிடும்.
கவலையில் வீழ்ந்து விடாமல் வீழ்கிற போதெல்லாமல் நம்பிக்கையுடனும், உற்சாகமாய் எழுந்துவிடுங்கள் பீனிக்ஸ் பறவையைப் போல். கவலையில் துன்பப்படும் எல்லோரும் உணர்ச்சி கொந்தளிப்பில் மூழ்கி விடுவது உண்டு. நன்றாக மூடப்பட்ட பாட்டிலில் காற்றைத் திணிப்பதைப் போன்று நமது உள்ளமாகிய பாட்டிலில் கவலைகளை அடைத்துத் திணித்துப் பூட்டி வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் உள்ளத்தில் இருக்கும் கவலைகளின் காரணமாகச் சோர்வு, தோல்வி மனப்பான்மை, வாழக்கையின் மேல் விரக்தி முதலியவைகள் உண்டாகும். உங்களுடைய கவலைகளை உங்களுடைய நண்பர்கள், மனைவி, பெற்றோர்கள் மற்றும் உங்களை விரும்பும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் கவலைகளின் சுமை குறையும்.
   கவலைப்படும்படி ஏதாவது நேர்ந்துவிட்டால் நம் கவலையிலிருந்து தப்பிச் செல்ல முயலவேண்டும். நண்பர்களுடைய வீட்டிற்குச் சென்று பேசிக் கொண்டிருக்கலாம் அல்லது சினிமாவிற்கு செல்லாம். உல்லாசப் பயணம் போகலாம். இதுபோன்ற எண்ணற்ற வழிகளில் நாம் சிறிது நேரம் செலவிட்டு கவலையை மறக்க முயற்சி செய்ய வேண்டும். அந்த நிலையில் உள்ளத்திற்கு ஓய்வு கிடைக்கிறது. கவலையை எதிர்த்து போராட மனதில் உற்சாகம் பீறிடும்.
    அனைவருடைய உள்ளங்களிலும் எப்போதும் ஏதோ கவலைகள் குடிகொண்டிருக்கின்றன. கவலைப்படும் சமயங்களில் நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். அதாவது நான் எதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது தேவைதானா….? இப்படி கேட்டு பார்த்தால் கவலைப்படும் விஷயங்கள் பெரும்பாலானவை கவலைப்படத் தேவையற்ற சில அர்த்தமற்ற விசயங்களாக தென்படும். கவலைகள் மலையாக உருவெடுத்து, தன் மேல் அமர்ந்திருப்பதைப் போன்ற மனநிலையை வளர்த்தல் கூடாது. கவலைகளுடன் போராடி அவைகளை எப்படியும் வெல்ல முயற்சி செய்வது சாலச்சிறந்தது.
     எதற்கும் உற்சாகமிழந்து விடாதீர்கள். உலகம் இருக்கிறது.நாட்கள் இருக்கின்றன. எதை இழந்தாலும் எதிர்காலம் இருக்கிறது. வாழக்கை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கின்றது. நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கிய பயணத்தில் எதிர்படுகின்ற தடைகளும், போராட்டங்களும் தான் வாழ்க்கை. கவலைகளை வளர விடாதீர்கள்.
  ஒரு நாளும், ஒரு வாரமும், ஒரு மாதமும், ஒரு வருஷமும் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் இது நம்மால் முடியும், நிச்சயம் முடியும் என்கிற அழுத்தமான மனக்கட்டளையிடுங்கள். முதலில் பூ… பூக்கும் பிறகு காயாகி அதன்பின் தானே கனியாகும். எனவே எப்போதும் எதிலும் வெற்றியை குறி வைத்து செயல்படுங்கள். நிச்சயம் கனி கிடைக்கும். கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்.

நன்றி : மனோ சக்தி

எதையும் கஷ்டப்பட்டு செய்யாதீர்கள்


சாதாரண விசயத்தைக்கூட  நீங்கள் கஷ்டப்பட்டுதான் செய்வீர்கள் என்றால் அதற்குப் பெயர் திறமைக் குறைவு என்பதுதானே அன்றி கடின உழைப்பு  என்பது அல்ல . ஒரு வேலையை கடினம் என்று நீங்கள் நினைக்கின்றபோதே அதை நீங்கள் இஷ்டப்பட்டு செய்யவில்லை என்பதாகதானே  அர்த்தம் . தாங்கள் அனுபவித்துச் செய்கிற எந்த வேலையையும் கஷ்டப்பட்டு செய்ததாய் வெற்றி பெற்றவர்கள் சொல்வதில்லை

எழுத்தாளர் சுஜாதாவிடம்  “இவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீகளே .. உங்களுக்கு இது கஷ்டமாக இல்லையா “ என்று கேட்டதற்கு ,”இதை வேலையாகச் செய்கிறவனுக்குத்தான் இது கஷ்டம். நான் எனது விருப்பமாக இதைச் செய்கிறேன் ” என்றார் . விருப்பத்தோடு செய்கிறயாரும் “மிகக் கடினம் ” என்று அங்கலாய்த்துக் கொள்வதில்லை.


“கஷ்டப்பட்டு உங்களை யார் அந்த வேலையைப் பார்க்கச் சொன்னது? இதே வேலையை இஷ்டப்பட்டு செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்களே. அவர்களிடம் அதை விட்டு விடலாமே.

ஒரு வேலையை விரும்பி செய்கிறபோது உங்களுக்கு அதன் கஷ்டம் தெரிவதில்லை . வருந்தி செய்கிறபோது உங்கள் கஷ்டம் பல மடங்காகிறது . நீங்கள் அழுதாலும்,புரண்டாலும் ஒரு   வேலையை  நீங்கள்தான்  செய்தாக வேண்டும் என்றால் ஏன் அதற்காக அழ வேண்டும். அதை ரசித்து செய்தால் நீங்கள் ஆசைப்படுகிற விஷயம் உங்களுக்கு மிகவும் அருகில் வரும்.

 –நன்றி : C.B.A. முத்துமணி-  CDISSIA


Follow Our Facebook Job Updates - http://fb.com/successgroupjobs

வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்



வேலையை  விடுத்து தொழில் தொடங்கலாமா? வேலையின் போது கிடைத்த அதே வருமானத்தை தொழிலில் ஈட்டுகிற   காலம்  எப்போது வரும்? தொழிலை  எங்கிருந்து தொடங்குவது? விலை நிர்ணயிப்பது எப்படி? பணத்திற்கு எங்கே போவது? என்பது போன்ற பல கேள்விகள்  தொழில் தொடங்க விரும்புவோருக்கு எழும்.
             தொழிலில் மிக முக்கியமான காலக்கட்டம் எது தெரியுமா? வேலையை விடுத்து, தொழில் தொடங்கி நிலைபெறச் செய்து, இன்னொருவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர்வது வரையிலான காலகட்டமே. இந்தக்  காலகட்டத்தைக் கடந்து விட்டால், பாதித் தொலைவு தாண்டியது மாதிரி.
             தொழில்முனைவர்கள் எல்லாம் பெரும்பாலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து, பிறகு சிறிய முதலீட்டில் தனியொரு ஆளாகத் தொழில் தொடங்கி, கஷ்டப்பட்டு பிறகுதான் வளரத் தொடங்கி இருப்பார்கள்.
             CATALYST PUBLIC RELATIONS PVT LTD நிறுவனத்தின் தலைமை  செயல் அதிகாரியான ( CEO) திரு.இராம்குமார்  சிங்காரம் பல்வேறு தொழில்முனைவர்களையும் பொதுமைப்படுத்தி ,அவர்கள் தொழிலில் நிலைத்து நின்றதற்கான  காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை 20 உத்திகளாக தந்திருக்கிறார் .வேலையை விடுத்து தொழிலில் இறங்க விரும்புகிற அனைவருக்கும் பயன்தரக்கூடியதாக  இருக்கும். இதோ,தனி ஆளாகதொழிலில் வெற்றி பெற அந்த 20 உத்திகள்.
                1.வேலையை விடுக்கின்ற போது  , உங்களுக்கான மாதந்திர  வருமானம் நின்றுபோகும். இதனால் உங்கள் வீட்டுச் செலவுபிள்ளைகளின் படிப்பு செலவு,வீட்டுக்கடன்  போன்றவற்றைச் சமாளிக்க குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது பணம் தேவை. இந்த தொகையை ஏற்பட்டு செய்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டும்.
               2.இதுமட்டுமில்லாமல், கூடுதலாக இரண்டு வகையான முதலீடுகளுக்கும்(Capital)  உங்களுக்கு பணம் தேவைப்படும் . ஒன்று , தொழில் தொடங்குவதற்காக -ஒரு முறை செய்யப்பட வேண்டிய நிரந்திர முதலீடு( Fixed Capital)  (அலுவலக வாடகை முன்பணம்(Office advance) , எந்திரங்கள் (Machinery)  , கணினி(Computer) போன்ற மின் மற்றும்  மின்னணு சாதனங்கள்(Electric & Electronics Goods), மேசை-நாற்காலிகள்(Furniture’s) , வாகனம்(Vehicles)  போன்ற  பல ).
இரண்டாவது, ஆறு மாதங்களுக்குத் தேவையான நடைமுறை மூலதனம்( Working Capital)  (வாடகை(Rent) , ஊழியர் சம்பளம்(Salaries)மின் மற்றும் தொலைபேசி கட்டணம்(Electric & Telephone Charges),  பயணச் செலவு (Travel Expenditures), விளம்பர செலவு(Advertisement Cost),பொருள் கொள்முதல்(Raw Material Cost) போன்றவை ), இந்த இரண்டு தேவைகளுக்கும் பணம் இருந்தால் மட்டுமே நீங்கள் தொழில் தொடங்க வேண்டும்.
                    3.தொழில் தொடங்க விரும்புவோர் , வேளையில் இருந்து கொண்டே அதற்கான தொடக்ககட்ட பணிகளை முடித்துவிட வேண்டும். அதாவது தொழிலுக்கான  Project Report தயாரித்தல், இடத்தை தேர்வு செய்தல் , TIN(Tax-Payer Identification Number)VAT(Value Added Tax Registration),PAN (Permanent Account Number),CST (Central sales Tax ), IEC (Import & Export Code),Company Registration போன்ற   அரசு நடைமுறைகளை நிறைவு செய்தல் , தொழிலுக்கு தேவைப்படும் அரசு அனுமதிகளை ( License ) பெறுதல் , வங்கி கணக்கு (Bank Account)  தொடங்குதல், அலுவலக உள் மற்றும் வெளி அலங்கார வேலைகளை மேற்கொள்ளுதல் , Business Card, Letter Pad, Brochure, Palm let  போன்றவற்றை  முன்கூட்டியே தயாரித்தல்,   உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டால், முதல் நாளில் இருந்தே வருமானத்தில் கவனம் செலுத்தலாம்.
          4.வேலையை விடுத்தவுடன் வீணாக்குகிற   ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வருமான இழப்பாகும்  . அதுமட்டுமல்ல… அன்றிலிருந்தே தொழிலை நடத்துவதந்கான  செலவும் தொடங்கிவிடும்.
5.எல்லாவற்றையும்விட , வாடிக்கையாளரையும்(Customers) கண்டறிந்து விட்டால் வேலை எளிதாகி விடும் . உங்களுடைய தொழிலில் , நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது , வருமானம் தரக்கூடிய  வாடிக்கையாளர்களைத்தான்( Revenue Customers)  .
6.வருமான உத்தரவாதம் இல்லாதவரை , தொழில்முனைவர் தொழிலை தள்ளிப் போடுவது நல்லது.
7.தொழில் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் பலரிடம் தொழில் தொடங்கப் போகின்ற செய்தியைச் சொல்லி அதைப் பரவலாக்க வேண்டும் .அப்போதுதான் வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடிவருவார்கள் .
8.உங்கள் தொழிலில்  பிற வருமானம் தரக்கூடிய ( Other Revenue Sources)  வழிகளை முடிந்தவரை அதிகரிக்கச் செய்யுங்கள் .
9.கல்லாவில் பணம் புழங்குகிற தொழிலாக  இருந்தால் ,தொழிலை கணினிமயம் ஆக்குகிற வரை நீங்கள்தான் கல்லாவில் அமரவேண்டும்.
10.தொழிலை தொடங்கத் திட்டமிடுகிறபோது, நீங்கள் உருவாக்குகிற திட்டம் இழப்பைத் தருமானால், அடுத்து மாற்று வழி ( Alternative Planning) என்ன என்பதையும்  முன்கூட்டியே திட்டமிட வேண்டும் .
11.உங்களைவிட அறிவாளிகளை உடன் வைத்துக்   கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்திற்கு தொழில் ஆலோசகர்களும் , வழிகாட்டிகளும் மிக,மிக முக்கியம் . குறிப்பாக திறமையான Auditor , Business Advisor, Business analyst,Advocate , Human Resource Advisor  போன்றோரை எப்போதும் கலந்து ஆலோசித்த பிறகே முடிவுகளை எடுங்கள்.
12.எந்த பொருளையும் கொள்முதல் செய்கின்றபோது குறைந்தபட்சம் மூன்று Supplier  களிடமாவது விலைப்பட்டியலைப் ( Price Quotation)  பெறுங்கள். இணையதளத்தில் உலவி (Search in Internet) கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
13.உங்கள் தொழில் வளர்ச்சி அடைகிற வரை ,குடும்பத்தினரில்   யாரவது ஒருவருடைய உதவி உங்களுக்கு அவசியம் தேவை .
14.தொழில் வளர்கிற வரை பிடிவாதம் வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற படி, நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் . உங்கள் திறமையை நிரூபித்தபின் உங்கள் ஆலோசனைகளை கேட்க அவர்கள் முன் வருவார்கள் .
15.முடிந்த வரை வாடகை ,சம்பளம் போன்ற நிரந்தரச் செலவுகளை குறைத்துக் கொண்டு , கொள்முதல் ,விளம்பரம் போன்ற மாறிக் கொண்டிருக்கும் செலவுகளை  அதிகரித்துக் கொள்வது நல்லது . இதனால், பணத் தேவையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
16.தொழிலில் எவ்வளவு முதலீடு , அதை  விட இரண்டு மடங்கு வரை நீங்கள் கடன் வாங்கலாம். அதற்கு மேல் வாங்கினால், இடர்கள் அதிகம்.
17.வாங்குகிற கடன்களுக்கெல்லாம் மாதந் தோறும்   வட்டியை மட்டுமே செலுத்தாமல், அசலில் ஒரு பகுதியையும் திருப்பிச் செலுத்தப் பழகுங்கள்.
18.முடிந்தவரை Supplier-களிடம் பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான காலக்கட்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
19.எளிதில் பணம் கிடைக்கிறது என்பதற்காக, பல தொழில்களில் கவனம் செலுத்தாதீர்கள்( Don’t Focus Many-things)  . நீங்கள் பணத்தை  தேடி ஓடுவதை  விட , பணம் உங்களைத் தேடி வரும் வகையில் , உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள் .
20. மாதந்தோறும் உறுதியாக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே , ஒரு ஆளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். அதுவரை நீங்கள் தனி ஆளாக ஓடிக்கொண்டே இருங்கள் .