"படிப்போம் பிச்சையெடுக்க மாட்டோம்...!' ஆதரிக்க யாருமின்றி, பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே கல்வி கற்கும் மணிமேகலை, லட்சுமி, செல்வராணி:
கரூர் அருகே சோழதாசன்பட்டி தான் எங்களின் சொந்த ஊர். என் பெயர் மணிமேகலை; ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். அடுத்து, லட்சுமி; மூன்றாவது படிக்கிறாள். கடைசி தங்கை செல்வராணி, இந்த ஆண்டு பால்வாடி பள்ளிக்கு செல்கிறாள். என் பெற்றோருக்கு கூலி வேலை தான். நாங்க மூவரும் பெண்களாகப் பிறந்ததில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. என் கடைசி தங்கை செல்வராணி பிறந்தபோது, 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்க, அம்மா விலை பேசிவிட்டார். அப்போது என் பாட்டி, "உன்னால வளர்க்க முடியாட்டி, நான் வளர்த்துக்கிறேன்' என தங்கையை விற்க விடவில்லை. அதன் பின், உடல் நிலை பாதிக்கப்பட்டு என் அம்மா இறந்துவிட்டார். அவர் இறந்த கவலையில் என் அப்பாவிற்கு கை, கால் வராமல் போனது. அப்போது, என் பாட்டி பேப்பர் பொறுக்கி காசு கொண்டு வந்து சோறாக்கும். அதில் தான் நாங்கள் பசியாறினோம்; பள்ளிக்கும் சென்று வந்தோம். கொஞ்ச நாள் முன், என் அப்பாவும் இறந்துவிட்டார். அப்போது, எங்க ஆசிரியர் உம்சல்மா அப்பாவை அடக்கம் செய்ய 500 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, எங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், படிப்பை பாதியில் விட வேண்டாம் எனவும் அறிவுரை கூறினார். அதன் பின், பாட்டியும் உடல் நிலை பாதிக்கப்பட்டார். யாருமில்லாமல், கஷ்டப்படுவதைப் பார்த்து, என் அத்தை எங்களுக்கு இருக்க இடம் கொடுத்தார். காலையில், 7 மணிக்கு என் தங்கை லட்சுமி தட்டும், தூக்கும் எடுத்துக் கொண்டு போவாள். யாராவது சோறும், குழம்பும் தருவாங்க. அதை மூன்று பேரும் சாப்பிடுவோம். மதியம் சத்துணவு சாப்பிடுவோம். இரவு என் அத்தை வீட்டில் உணவு தருவர். நான் எப்படியாவது எட்டாம் வகுப்பு வரை படிக்க வந்துவிட்டால் போதும்; படித்துக் கொண்டே காட்டு வேலைக்கு சென்று சம்பாதித்து, என் தங்கைகளுக்கு சோறு போட்டுவிடுவேன். அதன் பின், வீடுகளுக்குப் போய் பிச்சை எடுக்க மாட்டோம்.
இவர்களுக்கு உதவ தொடர்புக்கு: 9003756888
நன்றி தினமலர் மே 18,2012,
கடவுள் ஆசீர்வதிப்பாராக.
S.T.சிவா.,
No comments:
Post a Comment