சிரிச்சா போச்சு








பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்...

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்...

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்...

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்....

ஆண்:ம்ம்ம்ம்ம்..... நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ...!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது...!


பெண்:??????????????????


சர்தார்ஜிகளை பற்றி .............


சர்தார்ஜி ஜோக்கை படிக்கும் போது, சொல்லும் போதும் நினைவில் கொள்க சர்தார்கள் புத்திசாலிகள் நம்மைவிட.


சர்தார்ஜி, சிங் என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது தாடியும், பெரிய தலைப்பாகையும் அடுத்து அவர்களின் கோமாளித்தனங்களும் தான். சர்தார்ஜி ஜோக்குகள் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலம். மிகப்பல ஜோக்குகள் படித்திருந்தாலும் நினைவில் நின்ற ஒன்று.


ஒரு அறையின் மத்தியில் ஒரு கேக் வைக்கப் பட்டுள்ளது. அறையின் நான்கு மூலைகளில் முறையே ஹீமேன், ஸ்பைடர்மேன், ஒரு புத்திசாலி சர்தார் மற்றும் ஒரு முட்டாள் சர்தார் நிற்கின்றனர். ஒரு கணம் அறைவிளக்கு அணைக்கப் படுகிறது. நால்வரில் யார் போய் கேக்-ஐ எடுத்திருப்பார்கள்? என்ற கேள்விக்கு பதில், முட்டாள் சர்தார் என்பதாம். ஏனெனில் மற்ற மூன்றும் கற்பனை கதாபாத்திரங்களாம், 'புத்திசாலி சர்தார்' உட்பட. உங்களுக்கு தெரியுமா இது போன்ற பல ஜோக்குகளை உருவாக்கி உலவ விடுபவர்களே சர்தார்கள் தானென்று!. 


மற்றவர்கள் நினைப்பது போலல்லாமல் அவர்கள் புத்திசாலிகள். இன்றும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பல சரக்கு கடைகளையும், பல்வேறு முன்னனி நிறுவனங்களையும் நிறுவி நடத்தி வருபவர்கள். இந்தியாவின் அன்னியச் செலவாணியில் கணிசமான ப்ங்குக்குச் சொந்தக்காரர்கள். சர்தார்களின் குடும்ப அமைப்பு மிகவும் வலுவானது. எப்போதும் பெரிய வீடுகளில் கூட்டுக் குடும்பமாக வாழ்பதையே விரும்புபவர்கள். பெரிய பெரிய பண்ணைகள் அமைத்து விவசாயம் செய்து வரும், வந்த பஞ்சாப் மாகானத்தைச் சேர்ந்த, இவர்கள் தான் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். அதை குஷ்வந்த் சிங் (ஒரு சர்தார்) எழுதிய 'தி ட்ரென் டு பாக்கிஸ்தானி'-ல் படிக்க காணலாம். இவரின் 'ஜோக் புக்' -ம் மிக பிரபலம்!. 


சர்தார்கள் தைரியசாலிகள். இமயமலையின் இடுக்குகளில் பத்ரிநாத்துக்கு அருகில் இருக்கும் 'ஹேம்-குன்ட்' சர்தார்களின் புனிதத் தலம், நமக்கு திருப்பதி போன்று. அதன் தரிசனக் காலங்களில் பஞ்சாப், சண்டிகர் மாநிலத்தில் பதிந்த வாகனங்களை உத்ரான்சலில் உள்ள இந்த தலத்துக்கு போகும் வழியெங்கும் வெகுவாக காணலாம்.


சுமார் 3 நாள் பிடிக்கும் இந்த பயணத்திற்கு பெரும்பாலானவர்கள் இருசக்கர வாகனங்களில் இரண்டிரண்டு பேராக போவதையே விரும்புகிறார்கள். இந்த பயணத்தின் போது வழியில் உணவருந்த உணவகங்களை (லங்கர்) சர்தார்களே உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் அசோகர் செய்தது போல. அங்கு சென்று உணவருந்திவிட்டு பணம் கொடுக்க வேண்டியதில்லை. அங்கே ஒருசாமி படத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் தட்டில் காணிக்கையை போட்டுவிட்டு வந்தால் போதும். வழியெங்கும் உணவகம் அமைத்திருப்போர் மிகவும் அன்புடன் உணவருந்த அழைக்கின்றனர். யாரும் சாப்பிட்டுவிட்டு பணம் போடாமல் போவதில்லை என்பது குறிப்பிட வேண்டிய விசயம். நம்ம ஊராக இருந்திருந்தால் ஒரு கடை போட்டு, இரண்டு இட்லி ஒரு வடை, இருபத்தைந்து ரூபாய்க்கு விற்றிருப்போம். 


இமயமலைப் பயணத்தில் நிலச்சரிவு என்பது மிகவும் சகஜம் அதுவும் மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம். மலையிருந்து கல்லும், மண்ணும் ரோட்டில் சரிந்து பாதையை மூடிக்கொள்ளும். அப்படிபட்ட தருனங்களில் பயண போக்குவரத்து நாட்கணக்கில் கூட தடைபட்டுவிடும். அப்படிபட்ட ஒரு தருனத்தில் மாட்டிக் கொண்ட போது தான் அதை பார்க்க நேர்ந்தது. சுமார் நூற்றைம்பது வண்டிகள் தடையின் இருபுறமும் நின்றிருக்க இருசக்கர வாகனங்களில் வந்த சர்தார்கள் இருபது பேர் கலத்தில் இரங்கி வேலை செய்ய ஆரம்பித்தார்கள். 


வழியில் ரோட்டின் குறுக்கே ஓடிய ஒரு ஓடையில் நிலச்சரிவு நிகழ்ந்திருந்தது. பெரும்பாலும் இந்தொ-திபெத்திய எல்லை படை (ITBP) அல்லது GREF-லிருந்து ஆட்கள் வந்து புல்டோசர்களின் உதவியுடன் தடையை அப்புறப்படுத்தினால் மட்டுமே பயணத்தை தொடரமுடியும். 


ஆனால் இவர்கள் மூன்று மணிநேரத்தில் ஒருவாறு சரிசெய்து இரு சக்கர வாகனங்கள் போகுமாறு வழி செய்திருந்தார்கள். அதை மேலும் சரிசெய்து சிறிய கார்கள் போகும் வண்ணம் செய்துவிட்டு பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டு, அவர்களுக்காக மற்றவர்கள் கைதட்டியதையும் கண்டுக் கொள்ளாமல் போய்க் கொண்டிருந்தார்கள்.


எப்போதோ படித்த ஒரு கதை நியாபகம் வருகிறது. தென்னிந்தியாவிலிருந்து, வடக்கே சுற்றுலா போன மூன்று நண்பர்கள், டில்லியை சுற்றிப் பார்க்க ஒரு காரை வாடகைக்கு எடுத்தனர். காரின் ஓட்டுனராக வந்தவர் ஒரு சர்தார். வழிமுழுவதும் அவரை வெறுப்பேத்தும் வண்ணம் சர்தார் ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தனர் நண்பர்கள். பயண முடிவில் அவருக்கு வாடகை கொடுக்கும் போது, டிரைவர் ஒரு ரூபாயை நண்பர் கையில் கொடுத்து விட்டு சொன்னாராம், "நீங்கள் பார்க்கும் முதல் சர்தார் பிச்சைக்காரனுக்கு இதை கொடுத்து விடுங்கள்" என்று. அப்போது "சரி" என்று சொல்லி நண்பரும் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் வாங்கிக் கொண்டார்.


இந்த நிகழ்வு நடந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அவரால் ஒரு சார்தார் பிச்சையெடுப்பதையும் பார்க்க இயலவில்லை. சர்தார்கள் கடும் உழைப்பாளிகள். இந்தியாவில் அதிகபட்ச ட்ரக்குகளை ஓட்டுபவர்கள் அவர்கள் தான். அதன் விளைவுதான் நம்மூர் சாலையோர 'பஞ்சாபி டாபா'க்கள். இன்றைக்கும் சீக்கிய கோவில்களில் உணவு இலவசம்.


கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாங்களாகவே சென்று உணவு தயாரித்து கொடுப்பார்கள். இதை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். இன்றும் இராணுவத்தில் மிக மிக அதிக அளவில் சீக்கியர்களை காணலாம் (தற்போது பணிமூப்பு பெற்ற இராணுவ தளபதி JJ சிங் ஒரு உதாரணம்). மேலும் இராணுவ வீரர்களுக்கு தங்கள் பெண்னைக் கட்டிக் கொடுப்பதை ஒரு பெரிய கௌரவமாக கருதுகின்றனர். 


(நம்மூரில் மிலிட்டரில இருக்கற ஒருத்தருக்கு பொண்ணு கிடைக்கறதுக்குள்ள 'தாவு' தீந்துறுது). இவ்வளவு ஏன் நம்மை ஆள்பவரே ஒரு சர்தார் தானே!. அவரின் பெருமை எழுத ஒரு பதிவு போதாது. 

===========


இரண்டு அடுக்கு மாடி பஸ்

இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.

தபால்ல அனுப்பி இருக்கலாமே? 

தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?

விவாகரத்து 

சர்தாரும் அவர் மணைவியும் விவாகரத்துக்கு மணு கொடுத்தனர்.
நீதிபதி: உங்களிட்ம் மூனு குழந்தைகள் உள்ளனர். இப்போ பிரிஞ்சீங்கன்னா? சிக்கல் வரும்.
சர்தார்: சரி. அப்ப நாங்க அடுத்த வருசம் வர்ரோம் ஐயா.
நீதிபதி:??????????????????????


லாட்டரி சீட்டு 

சர்தார் இருபது ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். பரிசு ஒரு கோடி விழுந்தது. கடைக்காரர் வரி பிடித்தம் போக 55 இலட்ச ரூபாய் கொடுத்தார். சர்தார் கோபமாக "யாரை ஏமாத்தப் பார்க்கறே?. ஒரு கோடி முழு பரிசையும் தா. இல்லேன்னா என் இருபது ரூபாய மரியாதையா திருப்பிக் கொடு என்றார்.

செடிக்கு தண்ணீர் ஊத்து...

சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.
பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.
சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.

மக்கள் தொகை பற்றிய பாடம் 

டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.



என் வீட்டுக்கு வா... 



சர்தார்: (தன் நண்பியிடம்) இரவுக்கு என் வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள்.
( நண்பி அவ்வாறே சர்தாரின் விட்டுக்கு இரவு சென்றார். உண்மையில் யாருமே அங்கு இல்லை. சர்தார் உட்பட)

சடலங்களை தேடி...

இரண்டு சர்தார்கள் ஜாலியாக தனி விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது இரண்டு விமானக்களும் மோதிக் கொண்டு பஞ்சாபிலுள்ள சுடுகாட்டில் விழுந்து இறந்து விட்டனர். உள்ளூர் சர்தார்கள் அவர்களின் சடலங்களை தேடி மண்ணை தோண்டி வருகின்றனர். இதுவரை 500 சடலங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறார்களாம்.

பஸ் பயனிகள்

சர்தார் பெருமையாக தன் நண்பரிடம் சொன்னார்." என் தாத்தா சாகும் போது அமைதியாக எந்த சத்தமும் போடாமல் பஸ்சில் தூக்கத்திலிருக்கும்போது செத்தார். ஆனால் அவர் ஓட்டிக்கொண்டிருந்த பஸ் பயனிகள்தான் அலறிக் கொண்டே செத்தார்கள்"

சிறுநீர் கொண்டு வா!

ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார். மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.

டாக்டர்: என்ன இவை?

சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க.

ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.

சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.

நண்பர்: ஏன்?

சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது

நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?

சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே.

சிறந்த டிரைவர்..? 

அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'

எது என் குதிரை..?

குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.

சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".

அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.

அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வைத்துக் கொண்டு நின்றது. இதைப்பார்த்து கவலைப்பட்ட சந்தா சொன்னார், "சரி இனி சிகப்பு குதிரை உன்னது, வெள்ளை என்னது".

வேலை வாய்ப்பகத்தில்...

அரசு பணிக்காக வேலை வாய்ப்பகத்தில் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார் ஒரு சர்தார். மிக கவனமாக ஒவ்வொன்றாக படித்து பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார். SEX என்று குறிப்பிட்டிருந்த இடத்திற்கு என்ன எழுதுவது என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, 'மாதம் ஒரு முறை' குறிப்பிட்டார்.

இதை கவனித்த அருகில் இருந்த ஒருவர், சர்தாரிடம் சொன்னார், "அதில் ஆணா அல்லது பெண்ணா என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்" என்று சொன்னார். உடனே சர்தார், 'ஆண்/பெண் NN blem' என்று திருத்தி எழுதினார். அதற்க்கு பிறகு Salaaa EEEecced: என்ற இடத்தில் 'Yee' என்று எழுதினார். விண்ணப்பத்தின் கீழ் பகுதிக்கு வந்தவர், அங்கிருந்த குறிப்புகளை படித்துவிட்டு (IIIIIIcciii), உடனே விண்ணப்பத்தை கிழித்து போட்டு விட்டார். பக்கத்திலிருந்த ஒருவர் "ஏன் என்னாச்சு கிழித்து போட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டதற்கு சர்தார் சொன்னார், "நான் இப்ப அவசரமா டெல்லி போகனும், ஏன்னா இந்த விண்ணப்பத்தை அங்கதான் பூர்த்தி செய்யனும்னு இதிலே போட்டிருக்கு" என்றார். அருகிலிருந்தவர் குழம்பிப் போனவராய், "எங்கே அப்படி போட்டிருக்கு காண்பிங்க பார்க்கலாம்" என்றதற்க்கு, சர்தார் காண்பித்த இடத்தில் " Fill The Application In Capital" என்று எழுதியிருந்தது..


என்னையா முந்துகிறாய்.
.

ஒரு இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம் செய்துக் கொண்டிருந்தனர். திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட் இல்லாததால் விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்தனர்.

முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய டர்பனை பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை பாராசூட் போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக அமெரிக்கர் தன் சட்டையை கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப் போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ் நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு விட்டார்...

எத்தனை இட்லி?

ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார், 

'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.

உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..
சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.

ஹாஸ்பிட்டலில் நண்பர்

நோய்வாய்பட்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே சென்றுவிட்ட நண்பரை பார்க்க சர்தார் ஒருவர் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தார். நண்பரின் அருகில் போய் நின்றுக் கொண்டிருந்த சர்தார், நண்பரின் நிலைமை திடிரென்டு மிகவும் மோசமாவதை உணர்ந்து என்னவென்று கேட்டார். அந்த நிலையில் பேச முடியாத நண்பர் செய்கையால் ஒரு பேப்பரும், பேனாவும் வேண்டுமென கேட்டார். அவசரமாக ஏதோ எழுதி கொண்டிருக்கும் போதே நண்பரின் உயிர் பாதியிலேயே அவரைவிட்டு பிரிந்தது. சர்தார் அந்த பேப்பரில் தன் குடும்பத்துக்கு ஏதோ முக்கியமான தகவலை எழுதிவிட்டு போயிருக்கலாம், அதை நாம் படிக்கக் கூடாது என நினைத்து அதை மடித்து தன் சட்டை பைக்குள் வைத்துக் கொண்டார். சடங்குகள் எல்லாம் முடிந்து மறுநாள் சர்தார், நண்பர் வீட்டுக்கு போய் துண்டு பேப்பர் விஷயத்தை நண்பர் மனைவியிடம் சொல்லி அதைப் படித்துப் பார்க்க சொன்னார். பேப்பரை பிரித்து படித்த நண்பரின் மனைவி மயக்கம் போட்டு கீழேயே விழுந்துவிட்டார், அப்பொழுதுதான் சர்தார் அந்த பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தார். அதில் "நீ என் ஆக்சிஜன் குழாய் மீது நின்றுக் கொண்டிருக்கிறாய்என்று எழுதியிருந்தது.."

முதல் நாள் பள்ளியில்..

முதன் முறையாக ஸ்கூலுக்கு சென்று விட்டு திரும்பிய பந்தாசிங் தன் தந்தையிடம் வந்து அன்று ஸ்கூலில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். "அப்பா இன்றைக்கு ஸ்கூலில் ஸ்பெல்லிங் பற்றி கிளாஸ் எடுத்தார்கள், அதில் நான் மட்டும்தான் எல்லா எழுத்தையும் சரியாக சொன்னேன். மற்ற பசங்கள் யாருமே சரியா சொல்லவில்லை. அது ஏன்பா, நான் சர்தார் என்பதாலா?." அதற்க்கு அப்பா சொன்னார்,

"இல்லை மகனே, நீ ஒரு இன்டலிஜென்ட் பாய் அதனால்தான் சரியாக சொல்லி இருக்கிறாய். (அறிவு கொழுந்துங்கிறார்)..""அப்பா, பிறகு கணக்கு கிளாஸ் நடந்தது. அதில் எல்லோரையும் 1-லிருந்து 20-வரைக்கும் சொல்ல சொன்னார்கள். ஆனால் எல்லோரும் 1 லிருந்து 10 வரைக்கும்தான் சொன்னார்கள், நான் மட்டும்தான் ஒழுங்கா 20 வரைக்கும் சொன்னேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?". அப்பா, "நோ.. நோ.. மகனே, நீ ஒரு அறிவு கொழுந்துடா, அதனாலதான்..""அப்பா, இன்று மெடிக்கல் செக்-அப் கூட நடந்தது.. அங்க வந்த எல்லா பசங்களும் என்னைவிட ரொம்ப குட்டையா இருந்தாங்க, ஆனா நான் மட்டும் அவங்களைவிட இரண்டு மடங்கு உயரமாக இருந்தேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?".

அப்பா சொன்னார், "இல்லை மகனே, உனக்கு வயசு 31 ஆகிறது இல்லையா? அதனாலதான்..".



அன்னையின் கடிதம்..

வஹே.. குரு..

அன்புள்ள பந்தாவுக்கு,நான் இந்த கடிதத்தை மெதுவாக எழுதுகிறேன், ஏன்னா நான் வேகமா எழுதினா உன்னால படிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். நீ வீட்டைவிட்டு போகும் போது இருந்த வீட்ல இப்ப நாங்க இல்லை. நம்ம வீட்டிலிருந்து 20 மைல் து¡ரத்தில்தான் எல்லா ஆக்சிடன்டும் நடக்குதுன்னு பேப்பர்ல வந்த அன்னைக்கே அந்த வீட்டை உன் அப்பா காலி பண்ணிவிட்டார். புதுவீட்டு அட்ரசை என்னால இப்ப உனக்கு எழுத முடியாது, ஏன்னா, இதற்கு முன்னால இங்கிருந்த சர்தார் இந்த வீட்டு நம்பரை அவன் புதிய வீட்டுக்கு வைக்கிறதுக்கு எடுத்துக்கிட்டு போய்விட்டானாம். ஏன்னா அவன் வீட்டு அட்ர¨¨ மாற்ற வேண்டாம் பாரு..இந்த இடம் மிகவும் நன்றாக உள்ளது. இங்கு வாஷிங் மிசின் கூட இருக்கிறது. ஆனா அது ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்கிறது. போன வாரம் மூனு சட்டையை போட்டு சங்கிலியை பிடித்து இழுத்து விட்டேன். பிறகு கொஞ்சம் சத்தம் கேட்டது, ஆனா சட்டைகள் இதுவரை எங்கு போனதுன்னு தெரியல. கிளைமேட் ரொம்ப மோசமில்கை, போன வாரம் இரண்டு முறை மழை பெய்தது, முதன் முறை மூன்று நாட்களும், இரண்டாவது முறை நான்கு நாட்களும் பெய்தது. நீ கோட்டு கேட்டிருந்தாய் அல்லவா? அனுப்பியிருக்கிறேன். மெயிலில் அனுப்புவதற்க்கு கோட்டு மிகவும், எடை அதிகமாக இருந்ததால், அதிலிருந்த பட்டன்களை அறுத்து எடுத்து அதன் பாக்கெட்டுக்குள் போட்டிருக்கிறேன். சுடுகாட்டிலிருந்து, பாட்டியை எரித்ததிற்கான பில் வந்திருக்கிறது. இந்த முறை பணம் கட்டாவிட்டால் பாட்டியையே திருப்பி இங்கு அனுப்பி விடுவாதாக எழுதியிருக்கிறார்கள். மறுபடியும் பாட்டி இங்கு வந்துவிட்டால் தங்குவதற்கு ரொம்ப ககடமாக இருக்கும். உன் அப்பா மயானத்தில் புல்வெட்டும் வேலை ஒன்றில் சேர்ந்திருக்கிறார். நல்ல வேலை, அவருக்கு கீழே 500 பேர் இருக்கிறார்களாம், பெறுமையாக எல்லோரிடமும் சொல்கிறார். முக்கியமான செய்தி, உன் அக்காவுக்கு இன்று காலை குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை ஆனா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை, அதனால நீ இப்ப மாமாவா இல்லை மாமியா என்று எனக்கு புரியல. உன் மாமா ஜீதேந்தர் போன வாரம் தவறுதலா விஸ்கி வாட்டுக்குள்(பெரிய பாத்திரம்) விழுந்துவிட்டார். காப்பாற்றப் போன இரு நன்பரையும் போட்டு அடி அடின்னு அடித்துவிட்டு கடைசியில் மூழ்கி செத்து போனார், அவரை எரிச்சப்ப மூன்று நாள் முழுசா எரிஞ்சாராம். வேறு ஒன்றும் எழுதுவதற்க்கு இல்லை. மற்றவை அடுத்த மடலில்..அன்புடன் உன் அம்மா..

கொசுவலையுடன் போர்

இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டனர். என்ன செய்வது என்று இந்திய வீரர்கள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்டு

ஒரு சர்தார் மட்டும் தன் மேல் கொசு வலை ஒன்றை சுற்றிக் கொண்டு, மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். நிலைகுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் ஓடி விட்டனர். சர்தாரின் வீர செயலை பாரட்டி எல்லோரும், சர்தாரிடம் கொசு வலையை போர்த்திக் கொண்டு எப்படி உங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று கேட்டனர். அதற்கு சர்தார் சொன்னார், "எல்லாம் கொசு வலையை போர்த்திக் கொண்டால் குண்டு துலைக்காது என்கிற தைரியத்தில்தான், இவ்வளவு சின்ன கொசுவினாலேயே இதனுல் நுழைய முடியவில்லையே, அதை விட பெரிய தோட்டா எப்படி நுழையும்" என்றார்..இராணுவத்திலிருந்து இந்த சர்தாருக்கு ஓய்வு கிடைத்த பிறகு அவருடை மகனுக்கு அங்கே வேலை கிடைத்தது. இன்னொரு முறை போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டது. இம்முறை சர்தார்(மகன்) மட்டும் மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாக்கிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். ஆனால் எதிரிகள் திருப்பி சுட்டதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப் பட்டார். அங்கு அவரை பார்க்க வந்த சகவீரர் ஒருவர் கேட்டார் "உன் அப்பாவாவது உடம்பில் கொசுவலையை போர்த்திக் கொண்டு எதிரியை நோக்கி சுட்டார், நீ ஏன் ஒன்றுமே அணியாமல் வெளியே வந்தாய்?" அதற்க்கு சர்தார் சொன்னார், "நான்தான் உடம்பில் ஓடோமாஸ் (கொசு கடிக்காமல் இருக்க உடம்பில் சிக்கொல்லும் ஒரு வகை மருந்து) சியிருந்தேனே" என்றார்.

எத்தனை கோழி?

ஒரு முறை சர்தார் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தார், அப்போது அவருடையை நண்பர் ஒருவர் சந்தைக்குப் போய்விட்டு கையில் ஒரு பையுடன் அவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார்.

சர்தார்: "மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?"

நன்பர்: "வேறொன்றுமில்லை கோழிதான்.."

சர்தார்: "அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா ?

நண்பர்: "ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீ எடுத்துக் கொள்"

சர்தார்: "அஞ்சு கோழி , சரியா?.."

அடி வாங்கிய சர்தார்கள்

இரண்டு சர்தார்கள் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.

முதல் சர்தார் சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம், அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது. போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்".

'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் மற்ற சர்தார்.

"என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்".

இரண்டாவது சர்தார் தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது. அங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை. அன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது. துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை. வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன், அதற்கு அவர்கள் "எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள். அதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன், அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்கள். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்று மூன்றாவது வீட்டில் போய் கேட்டேன், அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்? என்றார் மற்ற சர்தார். "வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்.."

ஏன் குதிக்கிறாய்?

தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்த சர்தாருக்கு தெரு ஓரத்தில் குதித்துக் கொண்டிருந்த ஒரு ஆளைப் பார்த்ததும் அவனருகில் சென்று பார்க்க ஆர்வம். அந்த ஆள் ரோட்டில் இருந்த மேன்-ஹோல் மூடியின் மீது இருபத்தி மூனு.. இருபத்தி மூனு.. என்று எண்ணிக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தான்.

சர்தார் ஆர்வம் தாங்காமல் அவனிடம் போய், என்ன விசயம் இருபத்தி மூனு.. இருபத்தி மூனுன்னு குதிச்சுகிட்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான், நான் என்னவென்று சொல்வதைவிட நீயே போய் உள்ளே பார்த்தால் நல்லா தெரியும் என்று சொன்னான். சர்தாரும் குழிக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க உள்ளே இறங்கினார். அவ்வளவுதான், அந்த ஆள் உடனே மேன்-ஹோலை மூடியை போட்டு மூடிவிட்டு அதன் மேல் ஏறி மறுபடியும் குதிக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் இந்த முறை இருபத்தி மூனுக்கு பதில், இருபத்திநாலு.. இருபத்திநாலு.. என்று எண்ணத் தொடங்கினான்.

கொலஸ்ட்ரால் எங்கே?

ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.

'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், "அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.."

பந்தயம் கட்டிய சர்தார்

சோகமே உருவாக உட்கார்ந்திருந்த பந்தா சிங்கிடம் அவருடைய நன்பர் அருகில் வந்தமர்ந்து, ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டார். அதற்க்கு பந்தா சிங், தான் பந்தயத்தில் ரூ.800 தோற்று விட்டதாக சொன்னார். நன்பர் எப்படி 800 ரூபாயை தொலைத்தாய் என்றதற்க்கு சர்தார் பந்தா சிங் சொன்னார்,

"நேற்று நடந்த இந்திய-இலங்கை கிரிகெட் மேட்ச்சில் இந்தியா ஜெயிக்கும் என ரூபாய் 400 பந்தயம் கட்டினேன், ஆனால் இந்தியா தோற்று போய் விட்டது.." என்றார்.

நன்பர், "சரி மீதி ரூ.400 எப்படி தொலைந்தது?" என்றதற்க்கு பந்தா சிங் சொன்னார், "அன்றிரவு பார்த்த ஹை-லைட்ட்¢லும் பந்தயம் கட்டினேனே.." என்றார்.


ரயிலில் தூங்கிய சர்தார்

ஒரு முறை ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த சர்தாருக்கு தூக்கம் தூக்கமாக வந்தது. தான் இறங்க வேண்டிய இடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடும் என்பதால் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு யோசனை வந்தது, அருகில்

உட்கார்ந்திருந்த ஓருவரிடம், தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும்படியும், அதற்கு இருபது ரூபாய் தருவதாகவும் சொன்னார். அருகே இருந்த அந்த ஆள் அதற்கு ஒத்துக்கொண்டு, பணத்தையும் வாங்கிக் கொண்டார். சர்தார் நன்கு தூங்க தொடங்கினார். சர்தாரை எழுப்பி விடுவாதாக சொன்ன நன்பருக்கு, ஒரு ஆளை எழுப்பி விடுவதற்க்கு, இருபது ரூபாய் வாங்குவது அவருக்கு கஸ்டமாக இருந்தது. தான் வாங்கிய பணத்துக்கு மேலும் உபயோகமாக வேறு ஏதாவது சர்தாருக்கு செய்ய வேண்டும் என நினைத்தார். தான் ஓரு பார்பர் (முடி திருத்துபவர்) என்பதால், சர்தார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ஷேவ் செய்துவிட்டு (தாடியையும் எடுத்து விட்டார்), சர்தார் இறங்கக்கூடிய இடம் வந்ததும் எழுப்பியும் விட்டார். இதை எதையும் அறியாத சர்தார் நேரே வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, தன்னை கண்ணாடியில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். தன் மனைவியை அழைத்து சொன்னார், "ரயிலில் அந்த மடையன் என்னை எழுப்பி விடுவதற்க்கு பதிலாக வேறு யாரையே எழுப்பிவிட்டு விட்டான்" என்றார்.

எய்ட்ஸ் பயமா?

ஒரு முறை சர்தாரும் நண்பர்களும் (சர்தாரல்லாத) இரவில் தெரு வழியே வந்துக் கொண்டிருந்த போது ஒரு வழிபறியிடம் மாட்டிக் கொண்டனர். வழிபறி தன் கையில் டாக்டர் போடும் ஊசி (சிரின்ச்) ஒன்றை வைத்துக் கொண்டு, அதில் எயிட்ஸ் நோய் உள்ள இரத்தம் உள்ளதாகவும், தன்னிடம் உள்ளதை தர மறுப்பவர்களை குத்த போவதாகவும் மிரட்டினான்.

பயந்து போன எல்லோரும் தன்னிடமிருந்த பணம், கடிகாரம், மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கலட்டி கொடுத்து விட்டனர். ஆனால் நம் சர்தார் மட்டும் தைரியமாக, எதையும் கொடுக்க மறுத்து விட்டார். கோபமான வழிபறி ஊசியால் சர்தார் கையில் குத்தி விட்டு ஓடிவிட்டான். சர்தார் கவலை படவில்லை. மற்றவர்கள் பதறி போய், சர்தாரிடம் "ஏன் இப்படி செய்தாய், இப்ப உனக்கு எயிட்ஸ் வந்து விடுமே "என்று கேட்டதற்கக்கு சர்தார் கூலாக சொன்னார், "எனக்கு அதுலாம் வராது ஏன்னா நான்தான் காண்டம் அணிந்திருக்கேனே" என்றார்.

இன்னொரு சான்ஸ்

சர்தார்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய பொது குழு கூட்டம் ஒன்றில், பெருகி வரும் சர்தார்களை முட்டாள்கள் என்று சித்தரிக்கும் போக்கை, கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பெரிய அரங்கு ஒன்றில் சர்தார்களின் (கணித) அறிவு திறமையை நிருபிக்கும் போட்டி நடத்தப்பட்டது.

நிறைய சர்தார்கள் பார்வையாளர்களாக அரங்கிற்க்கு வந்திருந்தனர். சர்தார் அல்லாத நடுவர்கள் (ஒன்னாங்கிலாஸ் கணக்கு வாத்தியார்கள், சர்தாரின் கணித அறிவை சோதிக்க இவர்கள் போதும் என்று நினைத்தார்கள் போலும்) பங்கேற்றனர். முதலில் அங்கு வந்திருந்ததிலேயே கொஞ்சம் புத்திசாலியான சர்தார் ஒருவர் மேடைக்கு வந்து சோதனைக்கு தயார் ஆனார். சர்தாரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன..

நடுவர்: முதல் கேள்வி, 5 5 எவ்வளவு?

சர்தார்: (நிறைய யோசித்துவிட்டு) 20

பார்வையாளர்கள்(சர்தார்): பரவாயில்லை இன்னொரு சான்ஸ் கொடுங்க..(கூட்டமாக கத்தினர்)

நடுவர்: ஓ.கே, 7+3 எவ்வளவு?

சர்தார்: 8

பார்வையாளர்கள்(சர்தார்): இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க..

நடுவர்: கடைசி சான்ஸ், 2+2 எவ்வளவு?

சர்தார்: 4

பார்வையாளர்கள்(சர்தார்ர்): இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க..(?)


ஓவியம் அல்ல கண்ணாடி

ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்

"பார்க்க படுகேவலமாக இருக்கும் இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"

பதில் வருகிறது"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி"

தொலைபேசி அழைப்பு

சர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் "சந்தா! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.

துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.

50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.

25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.

10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சந்தா அல்ல பந்தா என்று.

ஸ்மைல் ப்ளீஸ்

ஒரு சர்தார்ஜி புகைப்படக்காரரை ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர்

"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?"

என்று மற்றொருவரைக் கேட்கிறார்.

"பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்?"

எடை பார்க்கும் மிஷின் 

நம்ம சர்தார்ஜி ஒரு நாள் கடை வீதிக்கு சென்று இருந்தார். அவருடன் அவரது 2 வயது பெண்ணும் சென்று இருந்தார். அப்போது அவர் குழந்தை தனது எடையய் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. மேலும் ஒரு ரூபாய் நாணையத்தையும் தானே போடுவேன் என்று பிடிவாதம் பிடித்தது. ஆணால் குழந்தை உயரம் இல்லாததால் அந்த குழந்தையால் நாணையத்தை போட முடியவில்லை. அதை பார்த்த நம்ம சர்த்தார்ஜி குழந்தையை தூக்கி பிடித்து கொண்டார். குழந்தையும் நாணையத்தை போட்டது.

உடனே ஒரு கார்டு வந்து விழுந்த்தது.

எடை 0 என்று.

கார் எஞ்சின்

ஒரு சர்தார்ஜி வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்குத் தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.மு ன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.


அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு இன்னொரு சர்தார்ஜி வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார். "கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"

'செல்லம்மா' பேசறேன்


சர்தார்ஜி: ஹலோ! யார் பேசுறது?

பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...

சர்தார்ஜி: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா?

யார் ரொம்ப சிக்கனம்?

சர்தார்ஜி 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன். என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்.


சர்தார்ஜி 2: ஹாஹா! நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன். என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?


சிரிச்சா போச்சு

சர்தார் 1: டேய்.. எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?சர்தார் 2: கரண்ட் இல்லடா.. சர்தார் 1: சரி சரி, பேனையாவது போடு.. சர்தார் 2: லூசாடா நீ.. மெழுகுவத்தி அணைஞ்சிடாது?
========

ஹோட்டல் ஓனர்:: சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?

சர்தார்::மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு.. அதுதான்.. !!!
============

சர்தார்ஜியின் மகன்:- கடவுளே, எப்படியாவது நியூயார்க்கை பஞ்சாபின் தலைநகரமா மாத்திரு...

அப்பா சர்தார்ஜி:- ஏண்டா அப்படி வேண்டுறே?சர்தார்ஜியின் மகன்:- ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன்.
===========

சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க...

கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..

சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.============

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், “வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்.....” என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், “சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?”

நம் சர்தார்ஜி சொன்னார், “ மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்”============ 

சர்தார்ஜி ஒருவர் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொண்டிருந்தார். வரிசையில் பின்னால் நின்று கொண்டிருந்தவர் சர்தார்ஜியிடம்

“நான் உங்களது பாஸ்வேர்டைப் பார்த்துவிட்டேன். அது ****.” என்றார்.

சர்தார்ஜி உடனே

“ஐயோ அது தப்பு. 1375 தான் எனது பாஸ்வேர்ட்” என்றாரே பார்க்கலாம்.============

இண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.

சர்தார்ஜி: அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.

நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார்.============

“25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?”

“என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்”

“வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?”

“அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்”============

“ஏன் சர்தார்ஜிகளால் ‘911’ எண்ணை டயல் செய்ய முடியாது?”

“அவர்கள் டெலிபோனில் 11 எண்ணைத் தேடிக் கொண்டிருப்பார்கள்”============

நண்பர்: ஏன் சம்பந்தமில்லாம, மெடிக்கல் புக் எடுத்து blood பத்தி எல்லாம் படிச்சுக்கிட்டு இருக்கீங்க?

சர்தார்ஜி: தொந்தரவு பண்ணாதீங்க, நாளைக்கு blood test னு டாக்டர் சொல்லியிருக்கார்.============

சர்தார் 1 : என்ன மச்சான், நல்லா இருக்கியா ரொம்ப நாளா போனையே காணோம்

சர்தார் 2 : மாப்ள சத்தியமா நான் எடுக்கலடா நல்லா தேடிப் பாருடா............ ============

ஜன்னல் சீட்டில் சர்தார்ஜி


புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், "அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்" என்று கூறினார். சர்தார்ஜியோ, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.


அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.

விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.

விமானி சொன்னது இதுதான்:

“நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன.”============

சர்தார்ஜி ஒரு பிஸா கடைக்குப் போய் பிஸா ஆர்டர் செய்தார்.

கடைக்காரர்: 6 துண்டுகளாக வெட்டித் தரவா அல்லது 12 துண்டுகளாக வெட்டித் தரவா?

சர்தார்ஜி: 6 துண்டுகளாகவே வெட்டுங்க. என்னால 12 துண்டுகள் எல்லாம் சாப்பிட முடியாது.============

ஆசிரியர்: காந்திஜி, ஏசு கிருஸ்து, கிருஷ்ணர் இவர்கள் மூன்று பேருக்குமுள்ள ஒற்றுமை என்ன?

சர்தார்ஜி: அவங்க மூணு பேருமே, கவர்மென்ட் லீவ் நாள்-ல பிறந்தவங்க சார்.============

சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், “நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்”.

யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், “பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.”============

சர்தார்ஜியிடம் ஒரு பெண்...

“நான் உன்னைக் காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்”

“அது முடியாது. எங்க வீட்டுலே எல்லோரும் சொந்தத்துலேதான் கல்யாணம் பண்ணிக்குவாங்க. எங்க தாத்தா, எங்க பாட்டியைத்தான் கல்யாணம் பண்ணினார்; எங்க மாமா எங்க அத்தையைத்தான் கல்யாணம் பண்ணினார்; எங்க அப்பா எங்க அம்மாவைத்தான் கல்யாணம் பண்ணினார். அதனாலே உன்னை என்னால கல்யாணம் பண்ண முடியாது. மன்னிச்சுடு...”============

சர்தார்ஜி ஒருவர் எலக்ட்ரீசியனாக இருந்தார். அவரிடம் பெண்மணி ஒருவர் வந்து, தனது வீட்டில் அழைப்பு மணி வேலை செய்யவில்லை என்று கூறி, அதை சரி செய்ய அழைத்தார். 

சர்தார்ஜி, “நாளை வருகிறேன்” என்றார். 
ஆனால் நாலைந்து நாட்கள் ஆகியும் அவர் வரவில்லை. அந்தப் பெண்மணி மறுபடியும் கடைக்கு வந்தார். 

“ஏன் வரவில்லை..?” 

“ஐயோ! உங்கள் வீட்டுக்கு நாலு முறை வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் நான் அழைப்பு மணி அழுத்தினேன். யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை”============

நேர்முகத் தேர்வில் சர்தார்ஜியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்...

“எலெக்ட்ரிகல் மோட்டார் எப்படி ஓடும்?”

“ட்ட்ர்ர்ர்ட்ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...”

(கோபமாக) “ஸ்டாப் இட் ஐ ஸே!”

“ட்ப்...ட்ப்..ட்ப்...”============

சர்தார்ஜி அடிக்கடி சமையலறைக்குள் நுழைவதும், சர்க்கரைப் பாட்டிலை எடுத்துப் பார்ப்பதுமாக இருந்தார். இதைக் கவனித்த அவரது மனைவி கேட்டார், “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” 

“டாக்டர் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்.”============

ஒரு பெண்மணியின் கார் தொலைந்து விட்டது. புகார் கொடுக்க சர்தார்ஜி போலிசிடம் வந்தார். சர்தார்ஜி கேட்டார்,

“உங்க கார் பேர் என்ன?”
“பேர் மறந்துவிட்டது. ‘T’லே ஸ்டார்ட் ஆகும்”

“ஓ, வித்தியாசமான காரா இருக்கே! 'டீ'யிலே ஸ்டார்ட் ஆகுது. எனக்கு பெட்ரோல்ல ஸ்டார்ட் ஆகுற கார்தான் தெரியும்============

ஒரு முறை சர்தார் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தார், அப்போது அவருடையை நண்பர் ஒருவர் சந்தைக்குப் போய்விட்டு கையில் ஒரு பையுடன் அவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார். 

சர்தார்: "மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?" 

நன்பர்: "வேறொன்றுமில்லை கோழிதான்.."

சர்தார்: "அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா ?

நண்பர்: "ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீ எடுத்துக் கொள்" 

சர்தார்: "அஞ்சு கோழி , சரியா?.."============

சோகமே உருவாக உட்கார்ந்திருந்த பந்தா சிங்கிடம் அவருடைய நன்பர் அருகில் வந்தமர்ந்து, ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டார். அதற்க்கு பந்தா சிங், தான் பந்தயத்தில் ரூ.800 தோற்று விட்டதாக சொன்னார். நன்பர் எப்படி 800 ரூபாயை தொலைத்தாய் என்றதற்க்கு சர்தார் பந்தா சிங் சொன்னார், 

"நேற்று நடந்த இந்திய-இலங்கை கிரிகெட் மேட்ச்சில் இந்தியா ஜெயிக்கும் என ரூபாய் 400 பந்தயம் கட்டினேன், ஆனால் இந்தியா தோற்று போய் விட்டது.." என்றார். 

நன்பர், "சரி மீதி ரூ.400 எப்படி தொலைந்தது?" என்றதற்க்கு பந்தா சிங் சொன்னார், "அன்றிரவு பார்த்த ஹை-லைட்ட்¢லும் பந்தயம் கட்டினேனே.." என்றார்.============

முதன் முறையாக ஸ்கூலுக்கு சென்று விட்டு திரும்பிய பந்தாசிங் தன் தந்தையிடம் வந்து அன்று ஸ்கூலில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். "அப்பா இன்றைக்கு ஸ்கூலில் ஸ்பெல்லிங் பற்றி கிளாஸ் எடுத்தார்கள், அதில் நான் மட்டும்தான் எல்லா எழுத்தையும் சரியாக சொன்னேன். மற்ற பசங்கள் யாருமே சரியா சொல்லவில்லை. அது ஏன்பா, நான் சர்தார் என்பதாலா?." அதற்க்கு அப்பா சொன்னார், 

"இல்லை மகனே, நீ ஒரு இன்டலிஜென்ட் பாய் அதனால்தான் சரியாக சொல்லி இருக்கிறாய். (அறிவு கொழுந்துங்கிறார்)..""அப்பா, பிறகு கணக்கு கிளாஸ் நடந்தது. அதில் எல்லோரையும் 1-லிருந்து 20-வரைக்கும் சொல்ல சொன்னார்கள். ஆனால் எல்லோரும் 1 லிருந்து 10 வரைக்கும்தான் சொன்னார்கள், நான் மட்டும்தான் ஒழுங்கா 20 வரைக்கும் சொன்னேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?". அப்பா, "நோ.. நோ.. மகனே, நீ ஒரு அறிவு கொழுந்துடா, அதனாலதான்..""அப்பா, இன்று மெடிக்கல் செக்-அப் கூட நடந்தது.. அங்க வந்த எல்லா பசங்களும் என்னைவிட ரொம்ப குட்டையா இருந்தாங்க, ஆனா நான் மட்டும் அவங்களைவிட இரண்டு மடங்கு உயரமாக இருந்தேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?". 
அப்பா சொன்னார், "இல்லை மகனே, உனக்கு வயசு 31 ஆகிறது இல்லையா? அதனாலதான்..". 
============

ஒரு இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம் செய்துக் கொண்டிருந்தனர். திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட் இல்லாததால் விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்தனர். 

முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய டர்பனை பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை பாராசூட் போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக அமெரிக்கர் தன் சட்டையை கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப் போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ் நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு விட்டார்... ============ 

சர்தார்களை அநியாயத்துக்கு ஓட்டுறோம். ஆனா உண்மையிலேயே அவங்க ரொம்ப புத்திச்சாலிங்க, திறமைசாலிங்க. ஒரு சர்தார் பிச்சைக்காரனைக் கூட யாரும் பார்க்க முடியாது.

இப்படித்தான்......,

டெல்லியிலே ஒரு டாக்சிகுள்ளே சர்தார் ஜோக்ஸ் சொல்லி சிரித்துகொண்டிருந்தர்கள். 

இறங்குமிடம் வந்தவுடன் டாக்சி டிரைவருக்கு பணம் கொடுத்தனர். டாக்சி டிரைவர் (ஒரு சர்தார்), இவர்களுக்கு ஒரு ருபாய் திருப்பி கொடுத்தான். 

இவர்கள், இந்த பணம் எதுக்கு என்று கேட்டார்கள். 

டிரைவர் சொன்னான் " இந்த ஒரு ரூபாயை எதாவது ஒரு சர்தார் பிச்சைகாரனுக்கு போட்டு விடுங்கள்".

இவர்களும் அந்த ஒரு ரூபாயை வைத்துக்கொண்டு தேடுகிறார்கள் தேடுகிறார்கள் தேடிக்கொண்டே இருக்கிறர்கள் ஒரு சர்தார் பிச்சைகாரனை ...============ 

வக்கீல்: உங்க பிறந்த தேதி என்ன?

சர்தார்ஜி: ஜூலை 15

வக்கீல்: எந்த வருஷம்?

சர்தார்ஜி: ஒவ்வொரு வருஷமும்!

வக்கீல்: ...! ...! ...!============ 

நம்ம நாராயணசாமி புகை வண்டியிலிருந்து இறங்கி வெளியே வந்தார்.


அவரை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள்.


அவரைப் பார்த்ததும் மனைவி ,


"என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்?" என்று கவலையோடு கேட்டாள்.


அதற்கு நாராயணசாமி,


"ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் 

திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன்.காற்று பலமாக முகத்தில் 

மோதியது எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அது எனக்குத் தலைவலியை 

ஏற்படுத்திவிட்டது" என்றார்.


"அப்படியானால்... நீங்கள் யாரிடமாவது

கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே... உங்களுடைய நிலைமையை 

விளக்கிச்சொல்லி இருக்கலாமே ?" என்றாள் அவர் மனைவி.


மனைவியின் கேள்விக்கு பதில் சொன்னார் நாராயணசாமி,


"அது எனக்கு தெரியாதா...நான் அப்படித்தான் நினைத்தேன்... ஆனால் என் முன் 

சீட்டில் ஒருவரும் இல்லை..காலியாக இருந்தது... அப்படி இருக்கும்போது நான் 

யாரிடம் சென்று இருக்கையை மாற்றிக்கொள்ளக் கேட்பது?"

============ 

சர்தார் லாரி ஓட்டுனர்.. அவர் மகன்தான் கிளீனர்.. ஒரு இரவில் லாரி நடுக்காட்டில் பழுதுபட்டு நின்று விட்டது. காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று படுத்தனர்.. ஆனால் கொசுக்கள் தூங்க விடவில்லை..


அப்பா ; போர்வையை இழுத்து போர்த்திக்கோப்பா..


மகன் ; ஏம்பா..? கொசு கடிக்காதா..?


அப்பா ; ஆமாம்.. போர்வைக்குள்ளே இருட்டா இருக்கும்.. கொசுவுக்கு கண் தெரியாது..!


கொசு கடிக்கவில்லை.. அப்பா தூங்கிவிட்டார்.. மகன் அளவுக்கு மீறி சிந்தித்ததில் தூக்கம் வரவில்லை.. அப்போது மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக வந்தன.. மகன் தூக்கத்தில் இருக்கும் அப்பாவை எழுப்பி சொன்னான்..


" அப்பா... என்னமோ சொன்னியே...கண்ணு தெரியாதுன்னு .. இப்போ பாரு.. எல்லா கொசுவும் டார்ச் லைட் எடுத்துட்டு வருது..!!!

============ 


நம் சர்தார் போக்குவரத்து காவலர்.. வேகமாக வந்த இரு மோட்டார் சைக்கிள்களை மடக்கினார். ஒருவன் மட்டும் பைக்கைப் போட்டுவிட்டு ஓட்டமெடுத்தான்.

விடுவாரா சர்தார். துரத்திப் பிடித்து " எங்கே உரிமம் ?" எனக்கேட்டார். அவனோ அப்பாவியாக எல்லா ஆவணங்களையும் எடுத்துக் காட்டினான்.


சர்தார் ; அடப்பாவி.. எல்லாம்தான் சரியா இருக்கே.. அப்புறம் ஏண்டா என்னை இவ்வளவு தூரம் துரத்த வச்சே..?


பைக்கன் ; அங்க நிக்கிற என் ப்ரெண்டுக்கிட்டே ஒண்ணும் இல்லையே..


சர்தார் ; ???????????????????


============ 


அமைச்சருடைய குடும்பத்தில் நான்காவது பிள்ளை பிறந்தது. சர்தாரை அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னால் பிறந்த மூன்று பையன்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார் சர்தார் .


ஒருவன் ரஹ்மத் இலாஹி (கடவுளின் அன்பு) அடுத்தவன் பர்க்கத் இலாஹி (கடவுளின் கருணை) மூன்றாமவன் ம்ஹ்பூப் இலாஹி (ஆண்டவனின் அன்புக்குரியவன்).


சர்தார் சற்று நேரம் யோசித்துவிட்டு சொன்னார் பஸ்கர் இலாஹி (கடவுளே இது போதும்) என்று பெயரிடுங்கள்...!!!


============ 

சுவற்றில் ஆணி 


ஒரு சர்தார் வீடு கட்டிக் கொண்டிருந்தார்.. அவரே தச்சு வேலையும் செய்தார்.. ஒரு சன்னலைப் பொறுத்துவதற்காக ஆணி அடித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு செய்யும்போது... சில ஆணிகளை அடிப்பார்..சிலவற்றை தூக்கிப் போட்டுவிடுவார்.. இதைக் கவனித்துக் கொண்டிருந்த நண்பர் கேட்டார்..


" இந்த ஆணியெல்லாம் நல்லாதானே இருக்கு.. ஏன் தூக்கிப் போட்டுட்டே..?


" முட்டாள்.. நல்லா பாரு.. கூர் முனை என் பக்கம் இருக்கற ஆணியா இருந்தா எப்படி அடிக்க முடியும்..? கொண்டைப் பக்கம் என்னை நோக்கி இருந்தால் தானே அடிக்க முடியும்..?


" ஹா... ஹா... இதுக்குதாண்டா நாமன்னா எல்லாரும் ஏளனம் பண்றாங்க.. அறிவு கெட்டவனே.. கூர் முனை நம்ம பக்கம் இருந்தா அதெல்லாம் சுவற்றுக்கு அந்தப் பக்கம் அடிக்கிற ஆணி..அதை வீட்டுக்கு உள்பக்கம் அடிக்க வேண்டியது தானே.. ஏன் தூக்கி போடறே..??!!!============ 

மாட்டு கொம்பு 


சர்தார் ஒருநாள் மிருக வைத்தியசாலைக்கு சென்றார்.. ஒரு கிராமத்து ஆளிடம் கேட்டார்.. ஏன் இந்த மாட்டுக்கு கொம்பு இல்லே..?


கிராமத்து ஆள் சொன்னார்..


" சில மாடுகளுக்கு கொம்பை அறுத்து விட்டுடுவோம்.. சில மாடுகளுக்கு தீய்த்து விட்டுடுவோம்.. சில மாடுகளுக்கு கொம்பு தானாவே ஒடஞ்சு போயிடும்.. சில மாடுகளுக்கு கொம்பு வளராது.. ஆனா இதுக்கு ஏன் கொம்பு இல்லேன்னா... இது குதிரை... மாடு இல்லே...!!!============ 

திரை அரங்கில்

ஒரு சர்தார் சினிமா தியேட்டர்லே மூன்று சீட்டுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்.. இந்தப் பக்கத்து சீட்டுல காலையும் அந்தப் பக்கத்து சீட்டுல தலைக்கு கீழே கையையும் வச்சுக்கிட்டு ஹாயா படுத்திருந்தார்.. பக்கத்து சீட்டுல உக்கார வேண்டியவன் இருட்டுல தட்டுத் தடுமாறிக்கிட்டு வந்து சீட்டைப் பார்த்து பயந்துட்டான்.. மெல்ல சர்தார்கிட்ட சொன்னான்..

"அய்யா.. இது என் சீட்டு.. ஏந்துக்கறீங்களா..? "

"ஹ்ம்ம்..?"

" கொஞ்சம் எழுந்துக்கங்க.. நான் உட்காரணும்."

"ஹும்ம்ம்ம்...!!!"

" இந்த மாதிரி கலாட்டா பண்ணா நான் மேனேஜரைக் கூப்பிடுவேன்.."

அதுக்கும் சர்தார் பதில் சொல்லாம உறுமியே மிரட்டி வெரட்டிட்டாரு.. மேலாளர் வந்தும் கதையாகல.. அவருக்கும் உறுமல்தான் பதில்.. அப்புறம் போன் பண்ண போலீஸ் வந்துடிச்சு..

"எலே.. ஏந்திரிடா..? எங்கேருந்துடா வந்துருக்கே..?"

சர்தார் வலியைப் பொறுத்துக்கொண்டு திணறியபடியே சொன்னார்...

"பால்கனியிலேருந்து....இருட்டுல தடுமாறி மேலேருந்து விழுந்துட்டேன்.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா...! "============ 



சர்தார்ஜியும்... தமிழ்நாட்டு கிழவரும்... இரயிலில் ஒன்றாக பயனம் செய்கிறார்கள்...

கிழவர் காற்று வேண்டுமென ஜன்னலை திறக்க முயற்சிக்கிறார்....
முடியவில்லை..

சர்தார்ஜி வருகிறார்.. சலோ, சலோ, என்று சொல்லி கண்ணாடியை இழுத்துவிடுகிறார்... திறந்துவிடுகிறது..

கோதுமை சாப்பிடுங்க உடல் வலுவாகிடும் என பெரியவரை பார்த்து சொல்கிறார்..

பெரியவர் அமைதியாகிறார்..

அடுத்து பாத்ரூம் கதவை திறக்க முயல்கிறார்.. முடியவில்லை..

சர்தார்ஜி வந்து சலோ,சலோ, என வந்து திறந்துவிடுகிறார்... மறுபடியும் பெரியவரை பார்த்து கோதுமை சாப்பிடு உடல்வலுவாகிடும் என்கிறார்..

பெரியவர் அமைதியாகிறார்..
இவனுக்கு பாடம் கற்பிக்க நினைக்கிறார்..
இரயிலின் அபாயசங்கிலியை இழுப்பதை போல பாவனை செய்கிறார்..
உடனே சர்தார்ஜி வந்து சலோ,சலோ என செயினைபிடித்து இழுக்க வண்டி நிற்கவும் டிடிஆர் வந்து சர்தார்ஜியிடம் பைன்வசூலித்துசெல்கிறார்கள்...

அப்போது அந்தபெரியவர் நிதானமாய் சர்தார்ஜியை பார்த்து சொல்கிறார்... உடல் வலிமையானால் மட்டும் போதாது தம்பி.. மூளையும் வளரனும்... பழையசாதம் சாப்பிடு... மூளை வளரும்.. என்றார் சிரித்துக்கொன்டே...

============ 

சர்தார் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவனோ குடும்பத்தில் ப்ரச்னை என்று புலம்பினான்..சர்தார் சொன்னார்..


நண்பா ...இதெல்லாம் பிரச்னையே இல்லே... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்துடுவே..!நான் ஒரு விதவையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளுக்கு வயது வந்த மகள் இருந்தா.. அவள எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார்..!


அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா.. ஆனா ஒரு வகையிலே என் அப்பா எனக்கு மருமகனாயிட்டார்.. அதே சமயத்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு, அதாவது தன் மாமனாருக்கு மாமியாராயிட்டா..!கொஞ்ச காலம் போயி என் மகள், அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க..!எஅந்தப் பொடியன் என்னோட தம்பி முறை.. 


ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லியா..?ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன்.. அதாவது என் மனைவியின் பேரன்..! ஒரு வகையிலே என் தம்பியோட தாத்தா நான்..!அப்புறம் கொஞ்ச நாள் ஒரு பிரச்னையும் இல்லே..எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கும் வரை...இப்போ என் மகனின் சகோதரி.. அதாவது என் சித்தி..ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி.. இல்லியா.?


இன்னொரு குழப்பம் வேறே.. என் அப்பா என் மகனுக்கு மச்சினன் ஆயிட்டார்..!ஏன்னா.. என் மகனின் சகோதரியை.. அதாவது என் மனைவியின் முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா தானே..?அப்படிப் பார்த்தா, என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க மருமகனும், இன்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு மச்சினிஆயிட்டாங்க..


!இப்போ என்னாச்சுன்னா, எனக்கு ஒரு மகன் இருக்கான்..எங்க அப்பாவுக்கும் ஒரு மகன் பிறந்திருக்கான்.. அவங்க ரெண்டு பேரும் மாமனும் மருமகனும்.. ! இல்லியா.?அதாவது எனக்கு சித்தியும் மகளும் மருமகளுமான, என் மனைவிக்கு மகளும் மாமியாருமான, என் தம்பிக்கு அம்மாவும் எனக்கு மகளுமான, என் மனைவியின் மகள் எனக்குப் பிறந்த மகனுக்கு என்ன முறை..?


அத்தையா..? பாட்டியா..? அக்காவா..?============

தொழில் நுட்பத்தின் உச்சம் !


ஒரு முறை, ஒரு அமெரிக்கர், ஒரு ஜப்பானியர் மற்றும் ஒரு சர்தார் ஒரு பொழுதுபோக்கு நிலையத்தில் (Recreation club !) அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென ஒரு 'பீப்,பீப்' ஒலி எழும்பியது. உடனே அந்த அமெரிக்கர் தன் மணிக்கட்டை அழுத்த அந்த ஒலி நின்றது! அவர், "என் பேஜர் எழுப்பிய ஒலி தான் அது. என் மணிக்கட்டின் தோலுக்குக் கீழே ஒரு மைக்ரோ சிப் பதிக்கப்பட்டுள்ளது!" என்று பெருமிதப்பட்டார் !


சில நிமிடங்களுக்குப் பின், ஒரு தொலைபேசி மணியொலி கேட்டது. உடனே அந்த ஜப்பானியர் தன் வெறும் உள்ளங்கையை காதுக்கு அருகே வைத்துப் பேசிவிட்டு பின்னர் பெருமை பொங்க, "அது எனது செல்·போன். அதற்காக, என் உள்ளங்கையில் ஒரு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது!" என்று கூறியவுடன் நமது சர்தாருக்கு அவரது தொழில்நுட்பக் கீழ்நிலை குறித்து மிக்க மனவருத்தம் ஏற்பட்டது.சர்தாருக்கு கழிவறை செல்ல வேண்டியிருந்ததால், அவ்விடத்திலிருந்து அகன்றார். அங்கிருந்து திரும்பியவுடன், அவரது பின்புறத்தில் கழிவறைக் காகிதம் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. மற்ற இருவரும், "என்ன இது ?" என்று கிண்டலாக கேட்டனர்.உடனே நமது புத்திசாலி சர்தார், சமயோஜிதமாக, "ஓ, அதுவா ? எனக்கு ·பேக்ஸில் (FAX) தகவல் வந்திருக்கிறது!!!" என்று ஒரு போடு போட்டார் !!!!!!!!!! மற்ற இருவரும் வாயடைத்து நின்றனர்.============


இரு பாகிஸ்தானியர்கள் வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறி, ஒருவர் ஜன்னலை ஒட்டிய இருக்கையிலும், இன்னொருவர் நடு இருக்கையிலும் அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு பருமனான சர்தாஜி அந்த பாகிஸ்தானியர்கள் பக்கத்தில் இருந்த (நடையை ஒட்டிய) இருக்கையில் அமர்ந்தார்!அமர்ந்தவுடன், தன் கால்களை சற்று இளைப்பாற்ற காலணிகளை களைந்தவுடன், ஜன்னலருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தானி, "நான் சென்று ஒரு கோக் எடுத்து வருகிறேன்" என்றார். உடனே நல்ல மனம் கொண்ட நம் சர்தார்ஜி, "நீங்கள் இருங்கள், நான் போய் எடுத்து வருகிறேன்!" என்று கூறி காலுறைகளுடன் நடந்து சென்றார்.


சர்தார் சென்றவுடன், அந்த பாகிஸ்தானி, சர்தாரின் காலணிக்குள் எச்சில் துப்பி, வைத்து விட்டார். சர்தார் கோக்குடன் வந்தவுடன், இன்னொரு பாகிஸ்தானி, "எனக்கும் கோக் அருந்த வேண்டும் போலுள்ளது" என்றவுடன், சர்தார் தயாள மனதுடன், "கவலைப்படாதீர்கள்! நான் போய் உங்களுக்கும் ஒன்று எடுத்து வருகிறேன்!" என்று மறுபடியும் சென்றார். அந்த நேரத்தில், அதே பாகிஸ்தானி இப்போது சர்தாரின் மற்றொரு காலணியிலும் எச்சில் துப்பி வைத்து விட்டார்!!!


சிறிது நேரத்தில், விமானம் தரை இறங்கத் தொடங்கியது. சர்தார் காலணிகளுக்குள் தன் கால்களை நுழைத்தவுடன், நடந்த நிகழ்வை யூகித்து புரிந்து கொண்டு விட்டார்!!! மிகுந்த வேதனையுடனும் மனவலியுடனும், பாகிஸ்தானியர்களை பார்த்து கூறினர் " இன்னும் எவ்வளவு நாள் இவை நீடிக்க வேண்டும்! நம்மிடையே நிலவும் இந்தப் பகை ... வெறுப்புணர்வு ... தீங்கு செய்ய நினைக்கும் மனோபாவம் ... காலணிகளுக்குள் எச்சில் துப்புதல், கோக்கில் சிறுநீர் கழித்தல் !!!!!!"

============


சர்தாரின் மனைவி இறந்த போது அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். எப்படி தெரியுமா?


சர்தார் B.A (Bachelor Again)


சர்தாருக்கு மறுமணம் நடந்தது. மீண்டும் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். இப்போ அவரோட பேர் என்ன தெரியுமா?


சர்தார் M.A (Married Again)

===========

சர்தார் (கவலையுடன்): வேய்ட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கலையே...

நண்பர்: அப்படி என்ன படிப்பு படிச்சீங்க?

சர்தார்: pre-KG, LKG, UKG எல்லாம் படிச்சு இருக்கோம்ல..

===========

சர்தார்ஜி: மிஸ் , நீங்கள் எனக்கு கால் பண்ணி இருந்தீங்களா?

டீச்சர் : நானா? , இல்லையே ஏன்?

சர்தார்ஜி: நேற்று என்னுடைய மொபைல் ஃபோனில் " 1 மிஸ் கால்" என்று இருந்தது

===========

ஜட்ஜ்:உனக்கு வெட்கமாக இல்ல , இதோடு 3 வது தடவையா நீ கோர்ட்க்கு வருகிறாய்?



சர்தார்ஜி: நீங்கள் தினமும் கோர்ட்க்கு வருகிறீர்கள் , உங்களுக்கு வெட்கமாக இல்ல?

===========

ஆசிரியர்: ஆரஞ்சுக்கும் ஆப்பிலுக்கும் என்ன வித்தியாசம்?



சர்தார்ஜி: ஆரஞ்சோட கலர் ஆரஞ்சு , ஆனால் ஆப்பிளோட கலர் ஆப்பிள் இல்ல

===========

சர்தார்ஜிக்கு 

அவருடைய நண்பியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.

"I MISS YOU "

சர்தார்ஜி

பதில்

"I MR YOU"

===========

சர்தார்ஜியின் நண்பர்: செஸ் விளையாடலாமா?



சர்தார்ஜி: ஓ! நீங்க போய் கிரவுண்ட்லே நில்லுங்க... நான் ஷூ போட்டுட்டு வந்துறேன்!!

===========

இதே சர்தார்ஜி வாழ்க்கை வெறுத்து போய் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு ஆற்றில் குதிக்கப் போனாராம்.

அப்பொழுது ஆற்றில் இருந்த மீனை பார்த்து, ”நான் தான் சாகப் போறேன், நீயாவது பிழைத்துக் கொள்” அப்படின்னு மீனை தூக்கி ஆற்றுக்கு வெளியில் போட்டாராம் ..

===========

மேலாளர் : நீங்கள் எங்கு பிறந்தீர்கள்.

சர்தார் : இந்தியா

மேலாள்ர் :இதியாவில் எந்த பகுதி.

சர்தார் : முழு உடலும்தான் சார்.

===========

ஜட்ஜ்: ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..

சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்...

ஜட்ஜ் : ஷட் அப்..

சர்தார்: இல்ல.. இல்ல.. எனக்கு செவன் அப்..

ஜட்ஜ்: ??????????

===========

ஒரு நாள் திடீரென்று படியாலா ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது சர்தார்ஜீக்கள் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்!


அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜீக்களும் இறந்து விட்டனர் என்று!


அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.


அதற்கு அந்த சர்தார்ஜி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்.


"அப்படியென்ன தவறு" என்று நிருபர்கள் கேட்டதற்கு சர்தார்ஜி சொன்னார்."எல்லோரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார். உடனே அனைத்து சர்தார்களும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.

உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.


அதற்கு அந்த புத்திசாலி சர்தார் "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்.

===========

ஒரு சர்தார்ஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கேப்டனிடம் இருந்து அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பதறியடித்து பயத்தோடு அவரவர் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.


சர்தார்ஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியைப் பார்த்து, “என்னாங்க... எல்லோரும் சாகப் போகிறோமே... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா?” என்று கேட்டார்.


“நான் சாகப் போறதில்லே... நம்ம பல்வீர்சிங்தான் சாகப்போகிறார்...” என்றார் சர்தார்ஜி


பக்கத்து சீட்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. “எப்படி? என்னா சொல்றீங்க நீங்க?” என்றார்.


“உண்மையில் இது பல்வீர்சிங்கோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்... அவ்வளவுதான்!” என்று சிரித்தார் சர்தார்ஜி.
===========

ரயில் விபத்து


நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. அப்படியே அவன் மீது ரயிலை ஏற்றிவிட்டு சென்றிருக்கலாமே என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி ஓட ஆரப்பித்தான் என்றார்.

===========

சர்தார்ஜி ஒருவர் அவருடைய ஆட்டோவின் சக்கரங்களை மிக மும்முரமாக கழட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அவரைப்பார்த்து ஒருவர்,"எதுக்கு ஆட்டோ சக்ககரத்தை கழட்டிக்கிட்டு இருக்கீங்க?"

சர்தார்ஜி: போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க.'Parking for Two Wheelers only!'.அதுக்குதான் 


===========


சர்தார்ஜி ஒருவர் சாப்ட்வேர் கம்பனி நேர்முக தேர்வில்



தேர்வாளர்: "உங்களுக்கு MS Office தெரியுமா?" 

சர்தார்ஜி : "நீங்க அட்ரெஸ் குடுதீங்கனா கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவேன்" 

தேர்வாளர்:?????????????????


===========


ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை "CRICKET MATCH" பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார். மாணவர்களும் உடனே எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வகுப்பில் இருந்த சர்தார்ஜி நீண்ட நேர யோசனைக்குப்பிறகு இப்படி எழுதினார் "DUE TO RAIN, NO MATCH!" 

===========


சர்தார்ஜி ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டிருந்தார். 

அவரைப்பார்த்து அவர் மனைவி " கண்ணாடி முன்னே கண்ண மூடிட்டு என்ன செய்றீங்க" என்று கேட்க, சர்தார்ஜி " நான் தூங்கறப்ப எப்படி இருப்பேன்னு பாத்துகிட்டிருக்கேன்" என்று பதிலளித்தார்!!


===========

சர்தார்ஜி ஒருவர் மிக மிக மெதுவாக கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். அவரைப்பார்த்து அவர் 


நண்பர்: "ஏன் இவ்வளவு மெதுவாக கடிதம் எழுதிகொண்டிருகிறாய். வேகமாக எழுதலாமே"


சர்தார்ஜி: " நான் ஹாஸ்டலில் இருக்கும் ஏன் ஆறு வயது மகனுக்கு கடிதம் எழுதிகிட்டிருகிறேன். அவனால் வேகமாக படிக்க முடியாது. அதனால் தான் மெதுவாக எழுதுறேன்."


நண்பர்:??????????????

===========

நம்ம சர்தார் பெயிண்டர்..( சுண்ணாம்பு அடிக்கறவர்.. ). ஒரு வீட்டுக்காரர் 

அவரைக் கூப்பிட்டு காண்ட்ராக்ட் பேசினார்.. 

"வீட்டுக்குப் பின்னாடி இருக்குற செவர்லே(சுவர்ல) சுண்ணாம்பு அடிக்கணும்.. என்ன 

கேக்கறே..?" 

"நீங்க குடுக்கறதைக் குடுங்க.. நான் வேலையை ஆரம்பிக்கிறேன்.. " 

ரொம்ப சீக்கிரமா வேலை முடிஞ்சுட்டுது.. வீட்டுக்காரர் 100 ரூபாய் 

கொடுத்தார்..சிங்கு திருப்தியுறாமல் கேட்டார்.. 

"பாத்து போட்டுக் குடுங்க முதலாளி.. வேலை அதிகமா செஞசுருக்கேன்.. நீங்க " 

செவர்லே "ன்னு சொன்னீங்க.. அங்க போயி பார்த்தா "குவாலிஸ் " 

நின்னுக்கிட்டுருந்துச்சு..!


===========

சர்தாஜிக்கு அவனது மனைவிக்கும் ஓயாத சண்டை கோபம் தலைக்கேறி சர்தாஜி கடவுளை நோக்கி உரத்த குரலில் ஏ கடவுளே இந்த உலகத்திலிருந்து என்னை அழைத்துக் கொள்... என்று வேண்டினான்.சர்தாஜியின் மனைவியும் இந்த கோரிக்கையை வைத்தாள். ஏய் கடவுளே என்னை உலகத்திலிருந்து முதலில் அழைத்துக் கொள்.



சர்தாஜி யோசித்துவிட்டு மீண்டும் கடவுளிடம் வேண்டினான். கடவுளே, என் மனைவியின் கோரிக்கையை முதலில் நிறைவேற்று.


===========

சர்தார் திரைப்படம் பார்க்க சென்றார்.. தாமதமாகி விட்டதால் போகக் கூடாத 

ஒருவழிப் பாதையில் மகிழ்வுந்தைச் செலுத்தவே, போக்குவரத்துக் காவலரால் மடக்கி 

நிறுத்தப் பட்டார்.. 

காவலர் ; என்னாய்யா சிங்கு.. எந்த ரோட்லே போற தெரியுதா..? 

சர்தார் ; தெரியுமே.. சினிமா கொட்டாய் ரோடு.. ஆனா ஏன் எல்லா காரும் திரும்பி 

வந்துகிட்டு இருக்கு..? டிக்கெட்டு தீந்து போச்சோ..?

===========

நம்ம பானர் சிங் புதிதாகக் கார் வாங்கிக் கொண்டு பஞ்சாப்பிலிருந்து டெல்லிக்குப் போனார். இரண்டாம் நாள் டெல்லியிலிருந்து மனைவிக்கு தொலைபேசினார்.

வந்த அலுவல் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு நாளில் வந்துவிடுவேன் என்றார்.


ஆனால் இரண்டு நாளில் அவர் வந்து சேரவில்லை. 5 ஆவது நாள் தான் வந்து சேர்ந்தார். ஏன் இவ்வளவு நாள் ஆகிவிட்டது என்று மனைவி கேட்டபோது " என்ன செய்வது 

முன்னால் போகும்

போது 5 கியரை வைத்தவர்கள் பின்னால் வரும் போது ஒரே ஒரு கியரை வைத்து விட்டார்களே" என்றாரே பார்க்கலாம்.


ஜக்கு சிங் அழுது கொண்டிருந்தார்.பானர் சிங் என்னவென்று கேட்டார்.


''டொக்டர் போன் பண்ணினார் அம்மா இறந்து விட்டாராம் என்று '' கூறி விட்டு அழுகையைத் தொடர்ந்தார்.

இன்னுமொரு போன் வந்தது. கதைத்து விட்டு விழுந்து விழுந்து கதறத் தொடங்கினார்.

பானர் சிங் கேட்டார். "இப்போ என்ன நடந்தது."


"சகோதரி போன் பண்ணினாள்.அவளுடைய அம்மாவும் இறந்து விட்டாவாம்" என்று விட்டு கதறத் தொடங்கினார்.....

===========


ஒரு சர்தாரின் மரண ஊர்வலம்.. ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றனர்.. வினோதமான இக்காட்சியைக் கண்ட ஒருவர் என்னவென்று விசாரிக்க..

" அடப் போய்யா..! இன்னிக்கு இந்தாளு செத்தாலும் எங்க மேல இருந்த களங்கத்தை துடைச்சு எறிஞ்சுட்டு செத்துருக்கார்..


"அப்படியா..? எப்படி செத்தார்..?" 


" மூளைக் காய்ச்சல்லே...!"


===========


நம்ம சர்தார் கோழிப்பண்ணை வச்சார்.. முதல்ல 100 கோழிக்குஞ்சுகளோட ஆரம்பிச்ச சர்தார் விரைவிலேயே இன்னொரு 100 குஞ்சுகளுக்கு ஆர்டர் குடுத்தாரு..! அடுத்த மாசமே இன்னொரு 100 வாங்கினாரு.. ஆச்சரியப்பட்ட கோழிக்குஞ்சு சப்ளை பண்றவர் கேட்டார்...



"என்ன சிங்கு..? வியாபாரம் எகிறுது போலருக்கு..?"

"எங்கே..? எல்லா குஞ்சும் செத்து செத்து போகுது.."

" என்னது..? செத்துடிச்சா..? தண்ணியெல்லாம் காமிச்சியா..?"

" அதெல்லாம் சரியாதான் செஞ்சேன்..மண்ணு தான் சரியில்லேன்னு நெனைக்கிறேன்.. !"

" என்னது..? மண்ணா..?"

" ஆமாம்.. ரெண்டு அடி ஆழத்துல பொதைச்சாலும் கோழி முளைக்க மாட்டேங்குது.. அரை அடி ஆழத்துல பொதைச்சாலும் முளைக்க மாட்டேங்குது...!!!!!!" 

கடைக்காரன் தலை சுத்தி விழுந்தான் 

என்ன சர்தார் முதலில் வச்சிருந்து விவசாயப் பண்ணை 

===========


கண்டக்டர் சர்தாருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு தொல்லை இருந்தது.. வைத்தியரைப் போயி பாக்க.. அவரும் கொஞ்ச மாத்திரைகளைக் கொடுத்து திங்க சொன்னார்.. இருந்தாலும் பலன் இல்லே..

"என்னாய்யா வைத்தியரு நீ..? ஒண்ணும் குணமாக மாட்டேங்குதே..?"

" மூதேவி.. ஸ்டாப்பிங்குல விசில் ஊதும் போது மெதுவா ஊதித் தொலை.. உசிரக் குடுத்து ஊதிப்புட்டு இங்க வந்து என் உசுர வாங்காதே..!" 

===========


சர்தார்ஜி டர்பன் இல்லாமல் சென்று கடைக்காரரிடம் கேட்டார், "ஏங்க பஞ்சாப் கோதுமை குடுங்க"

கடைக்காரர்: நீங்க பஞ்சாப் சர்தார்ஜியா?

சர்தார்: ஆமாம். ஏன்? ஆந்திரா அரிசி கேட்டா நீங்க ஆந்திரான்னு கேப்பீங்களா?

க.காரர்: இல்லையே.

சர்தார்: பின்ன என்னை மட்டும் ஏன் பஞ்சாப் சர்தார்ஜியான்னு கேட்ட?

===========


ஒரு தடவை 3 சர்தார்ஜிங்க ஆற்றுக்கு அந்தப் பக்கமா மாட்டிக்கிட்டாங்க.. என்ன 

செய்யறதுன்னு தெரியலே.. கடவுளை வேண்டுனாங்க.. கடவுளுக்கு வேறே முக்கியமான ஜோலி 

இருந்ததாலே ஒரு கந்தர்வனை அனுப்பினாரு.. அவன் 3 சிங்கு முன்னால தோன்றி ஆளுக்கு 

ஒரு வரம் கேளுங்க ன்னான்.. 

முதல் சிங்கு, ஆத்துக்கு அந்தப் பக்கம் என்னோட அறிவை பயன்படுத்திப் போகணும்.. 

அதுக்கு வழி சொல்லு" ன்னு கேட்க.. 

அதுக்கு கந்தர்வன்.. "ஆகற வழியப்பாரு.. வேறே ஏதாவது உருப்படியா கேளு" ன்னான்..


சிங்கு," அப்படின்னா என்னை தெலுங்கு காரனா ஆக்கிடு" ன்னாரு. உடனே கை ரெண்டும் 

வலுவா மாறிடுச்சு.. சொய்ங் ன்னு தண்ணியில குதிச்சு நீச்சல் அடிச்சுப் 

போயிட்டான்.. 

ரெண்டாவது ஆள், " என்னை மலையாளத்தானா மாத்திடு" ன்னு சொல்ல உடனே உடம்பு வலுவா 

ஆயிடுச்சு.. பக்கத்தில இருந்த மரத்த ஒடைச்சு தெப்பம் செஞ்சு அதுல ஏறிப் 

போயிட்டாரு.. 

மூணாவது சிங்கு," என்னை தமிழனா ஆக்கிடு... ன்னாரு. உடனே புத்தி வலுவா 

மாறிடுச்சு.. பக்கத்துல இருந்த பாலத்து வழியா அக்கரைக்குப் போயிட்டாரு..

===========

ஒரு சர்தாஜி முதல் தடவை விமானத்தில் பயணம் செய்யதிர்மாணித்தர், அவர் விமானத்தில் ஏறியதும் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் வேறு இருக்கையில் அமர்ந்துகொண்டு லந்து செய்து கொண்டிருந்தார் . 

பணிப்பெண்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. விஷயம் விமானிக்கு சென்றது அவர் நேராக சர்தாஜியிடம் சென்று "நீங்கள் எங்கு செல்ல வேண்டும்" என்றார் , 

அதற்கு சர்தாஜி "டெல்லிக்கு "என்றார். அதற்கு விமானி "இந்த இருக்கை சென்னைக்கு செல்கிறது ,அந்த இருக்கைதான்



(சர்தாஜிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை காட்டி)டெல்லி செல்லும் "என்றதும் சர்தாஜி அவசர அவசரமாக தன இருக்கைக்கு நடையை கட்டினார்.


===========


ஒரு சர்தாஜி (ஜக்கு சிங்) கண்னாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் தெரிந்த முகத்தை அவரால் ஞாபகப் படுத்த முடியவில்லை.


எனவே பக்கத்தில் நின்ற மற்றொரு சர்தாஜி (பானர் சிங்) யிடம் இது யாராயிருக்கும் என்று கேட்டார். பானர் சிங்கும் கண்ணாடியை வாங்கிப் பார்த்து விட்டு "அடச்சீ... அது நான் தான். இது கூடத் தெரியவில்லையா " என்றாரே பார்க்கலாம்..


===========


பானர் சிங் ஒரு முறை இரயிலில் பயணம் செய்தார். அவருக்கு டாய்லெட் போக வேண்டி இருந்தது. அங்கு கதவைத் திறந்தவுடன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து விட்டு கதவைச் சாத்தி விட்டு வந்து விட்டார்.


இப்படியே ஒரு மணித்தியாலமாக கதவைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தார். பின்னர் கார்டிடம் முறைப்பாடு செய்தார்.ஒருவன் டாய்லெட்டில் ஒரு மணித்தியாலமாக இருக்கின்றான். என்னால் போக முடியவில்லை என்று.


அந்தக் கார்டும் ஒரு சர்தாஜி தான் கதவைத் திறந்தவர் படார் என்று மூடி விட்டு வந்து சொன்னார். உள்ளே இருப்பது ரெயில்வே ஸ்ராவ் என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்றாரே பார்க்களாம்.

===========

ஒரு நாள் ஒரு ல‌ண்ட‌ன் பீச்சில் நம்ம சர்தார்ஜி படுத்துக் கொண்டு சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தார். சர்தார்ஜியை கடந்து போன ஒருவ‌ர் நம்மாளை பார்த்து கேட்டார்.


"ஆர் யூ ரிலாக்ஸிங்?"


"ஐ ம் பல்பீந்தர் சிங்" அமைதியாக பதில் வந்தது.


கேட்டவர் ஒன்றும் புரியாமல் நடையை கட்டினார். இன்னும் கொஞ்ச‌ நேர‌த்தில் மற்றொருவர், சர்தார்ஜியிடம் அதே கேள்வி.


"ஆர் யூ ரிலாக்ஸிங்?"


இந்த முறை லேசாக கடுப்பான சர்தார்ஜி, குரலை உயர்த்தி பதில் சொன்னார்,


"நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்"


கேட்டவர் தலையில் அடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய, சில நிமிடங்களில் மற்றொருவர்,


"ஆர் யூ ரிலாக்ஸிங்?"


இந்த முறை உண்மையாகவே கடுப்பான சர்தார்ஜி "நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்".


சே, இந்த‌ இட‌மே ச‌ரியில்லை, 'ஒரே தொல்லையாக‌ இருக்கு'ன்னு த‌ன‌க்குள்ளே நினைச்சுக்கிட்டு, வேற‌ இட‌த்துல‌ போய் ப‌டுக்க‌லாம்ன்னு சர்தார்ஜி கிள‌ம்பினார். போகும் வ‌ழியில் இன்னோரு சர்தார்ஜி ப‌டுத்துக்கொண்டிருப்ப‌தை பார்த்தார்.


"ஆர் யூ ரிலாக்ஸிங்?" இந்த‌ முறை கேள்வி கேட்டது, ந‌‌‌ம்ம‌ சர்தார்ஜி.


"யா..." ப‌டுத்துக்கொண்டிருந்த‌ சர்தார்ஜி.


உடனே, ந‌ம்ம‌ சர்தார்ஜியின் மூளையில் ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்ப் எரிந்த‌து. ப‌டுத்துக்கொண்டிருந்த‌வ‌ரை பார்த்து சொன்னார்,


"தேர், லாட் ஆப் பிப்பிள் ஆர் லுக்கிங் ஃபார் யூ மேன்"


===========


ஒரு நாள் நம்ம சர்தார்ஜி, சின்னாதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை கான்பிச்சு கேட்டார்.


"இந்த டிவி என்ன விலை?"


கடைகாரன் சர்தார்ஜியை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்


"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."


எப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப் மாதிக்கிட்டு வந்து ‌கடைகாரனைப் பார்த்து கேட்டார்,


"இந்த டிவி என்ன விலை?"


"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..." ம‌றுப‌டியும் அதையே க‌டைகார‌ன் சொல்ல‌, டென்ஷனான சர்தார்ஜிக்கு என்ன செய்யததுன்னு தெரியலை. ந‌ம்ம தலை பாகை தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, தலைபாகை கூட இல்லாம, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,


"இந்த டிவி என்ன விலை?"


"ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."


சர்தார்ஜியால‌ பொருக்க‌ முடிய‌லை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,


"டிவி குடுக்க‌லைன்னா ப‌ர‌வாயில்லை, அட்லீஸ்ட், நான் சர்தார்ஜி தான்னு எப்ப‌டி க‌ண்டுபிடிச்சே சொல்லு?"


கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், "இது டிவி இல்லை, மைக்ரோஓவ‌ன் அதான்"

===========

நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்

புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.


எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..


லைசென்ஸா..? அப்படின்னா..?


அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..


ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை

எடுத்து நீட்ட.. )


அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..

முதல்லயே சொல்லப்படாதா..?

===========

நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்

கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்

சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.

அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து

கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே

திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்

என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!

===========
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார். அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு, எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்

பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு.. எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு.. சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு

கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. 

இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு

மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடுன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!

===========


சர்தார்ஜி அடிக்கடி சமையலறைக்குள் நுழைவதும், சர்க்கரைப் பாட்டிலை எடுத்துப் பார்ப்பதுமாக இருந்தார். இதைக் கவனித்த அவரது மனைவி கேட்டார், “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”

“டாக்டர் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்”.

===========


ஏப்ரல் 1ம் தேதி சர்தார்ஜி பேருந்தில் ஏறி, டிக்கெட் ஒன்று கேட்டார். நடத்துனரும் காசு வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுத்தார். உடனே சர்தார்ஜி சொன்னார், “ஏப்ரல் பூல். என்னிடம் பாஸ் இருக்கிறதே!

===========


சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.
அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?
சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?

===========


ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு ‘கொலஸ்ட்ரால் கொடுங்க’ என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
‘சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை’ என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, ‘நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?’ என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், ‘இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது’ என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், “அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் “Colestrol FREE” ன்னு எழுதியிருக்கு..”

===========

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.
பஸ்
ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,
சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்…..
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.
வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.
கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,
என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்………..
சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்
அடுத்த நாளுக்காக………..

===========

பின்லேடனை பிடி‌ச்சா 5 லட்சம் பரிசு என்று போலி‌ஸ் அ‌றி‌வி‌த்தவுட‌ன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலி‌ஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னாரா‌ம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு.

===========

சர்தார்ஜி கடைக்காரரிடம், “உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்லை. நீங்கள் பொய் சொல்லி என்னிடம் அதை விற்றுவிட்டீர்கள்!” “
இல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்”
“அப்ப ஏன், ஆன் பண்ணவுடனே ஆல் இந்தியா ரேடியோன்னு சொல்லுது?”

===========

பழுது பார்க்கும் சர்தார்ஜி: சர்தார்ஜி ஒருவர் எலக்ட்ரீசியனாக இருந்தார். அவரிடம் பெண்மணி ஒருவர் வந்து, தனது வீட்டில் அழைப்பு மணி வேலை செய்யவில்லை என்று கூறி, அதை சரி செய்ய அழைத்தார். சர்தார்ஜி, “நாளை வருகிறேன்” என்றார். ஆனால் நாலைந்து நாட்கள் ஆகியும் அவர் வரவில்லை. அந்தப் பெண்மணி மறுபடியும் கடைக்கு வந்தார். “ஏன் வரவில்லை..? “ஐயோ! உங்கள் வீட்டுக்கு நாலு முறை வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் நான் அழைப்பு மணி அழுத்தினேன். யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை.

===========

வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார்.
” அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?”
” இல்லையே… 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு..”
” யோவ்… அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..
சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படி
பேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?”
” கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்… அதான்….”

===========

நண்பன்: சான்டா உன்னோட பொண்ணு இறந்துவிட்டாள்…
மனம் நொந்த சர்தார்ஜி சிறிதும் தாமதிக்காமல் நூறாவது மாடியில் இருந்து குதித்து விட்டார்!
ஐம்பதாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனுக்கு மகளே இல்லை என்பது!
இருபத்தைந்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையென்று!
பத்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனது பெயர் சான்டா இல்லே பான்டா என்று!