Showing posts with label 01-குழந்தை வளர்ப்பு. Show all posts
Showing posts with label 01-குழந்தை வளர்ப்பு. Show all posts

குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் நோய்




வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, மகிழ்ச்சியில் நனைய வைப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் நோய்களில் பாதிக்கப்படும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும். மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழச்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாமே!!!

குழந்தை சீக்கிரம் பேச வேண்டுமா?




குழந்தைகள் பிறந்த பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பேசுவது. ஏனெனில் அனைத்து குழந்தைகளும் சீக்கிரம் பேசிவிடமாட்டார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும். சொல்லப்போனால் தாமதமான பேச்சு என்றால், எப்போது குழந்தை ஒரு வார்த்தை கூட பேசாமல், ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறதோ, அதைத் தான் சொல்வார்கள்.

பெற்றோர்களே! குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ வேண்டாமே!!!



இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. அவ்வாறு குறும்பு செய்யவில்லையென்றால் வீடே வெறிச்சோடி இருப்பது போல் இருக்கும். ஆனால் நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை அதிகம் எதையும் செய்யவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் எதாவது செய்ய போய், உடல் நலத்திற்கு ஏதேனும் நோய் வந்துவிடுமோ என்ற பயம் தான். அதற்காக சிறுவயதிலிருந்தே அவர்களை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, அவர்கள் ஏதேனும் குறும்போ அல்லது தவறு செய்து விட்டால், உடனே அவர்களை அடிப்பார்கள். ஏனெனில் அவர்கள் இன்னும் நமது முன்னோர்கள் சொன்ன பழமொழியான “ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது” என்பது தான்.

தாய்ப்பால்

குழந்தை பெற்றுக் கொண்டதும் பெரும்பாலான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை.தங்கள் அழகு கெட்டுவிடும் என்றும், இன்னும் பிற காரணங்களாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தாயையும் குழந்தையையும் எவ்வாறு பாதுகாத்து மேம்படச் செய்கிறது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது:
 
தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர் கொழுப்பு புரதம் சர்க்கரை தாதுப்பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கால்சியம் விட்டமின்கள் ஆகியவற்றை மார்பகச் சிற்றறைகள் பிரித்து பாலாக மாற்றுகின்றன. ஆகவே எல்லாவித சத்துக்களும் அடங்கிய பால் குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. தாய்ப்பால் குடிக்கின்ற குழந்தை களுக்கு தனியாக வேறு எந்தவிதமான சத்துணவையும் தரவேண்டிய அவசியமே இல்லை. பச்சிளங்குழந்தைக்கு கட்டாயமாக தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது அவசியம்.
 
உடல்நலம் காக்கும் தாய்ப்பால்
 
தாய்ப் பாலில் அதிசயிக்கத்தக்க ஆற்றல் படைத்த இரசாயனப் பொருள் இருக்கிறது. அது பிறந்த குழந்தையின் செரிமான உறுப்புக்களை பாதுகாக்கவும் குறைகளைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது. இந்த தாதுப் பொருள் குழந்தை பிறந்தவுடன் சில நாட்களுக்குச் சுரக்கின்ற சீம்பாலில் மிக அதிக அளவில் இருக் கிறது. இது குழந்தையின் குடல் பகுதிகளை மற்ற அமிலச்சுரப்பினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் குழந்தை இனிமேல் சாப்பிடப்போகும் உணவுகளை ஏற்றுக் கொள்ளும் விதமாக பக்குவப்படுத்துகிறது. தாய்ப்பால் மற்ற உணவுகளைப் போல் அல்லாமல் முழுவதும் ஜீரணம் ஆகிவிடும்.
 
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு வலுப்படுகிறது.; மனஅமைதி மகிழ்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. கையில் எடுத்து மார்போடு அணைத்து பால் கொடுப்பதன் மூலமாக குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட்டு அது மனநிறைவோடு காணப்படுகிறது. குழந்தைகள் தாயின் மார்பில் சப்பி பாலைக் குடிப்பதால் அதன் கன்னம் மற்றும் தாடை எலும்புகள் வலுவடைகின்றன. அதிக கால்சியம் சத்து நிறைந்த தாயின் பால் பல் மற்றும் எலும்பு வளர்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் ஆகியவை அரிதாகவே ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் தொற்றுநோய்கள் எளிதில் ஏற்படுவதில்லை.
 
தாய்ப்பாலில் மட்டுமே பொலி அன்சேசுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பசும்பாலில் இல்லாத இந்த அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. 
 
தாய்க்கும் நன்மை உண்டு
 
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள் இருப்பதைப் போல தாய்க்கும் நன்மைகள் இருக்கின்றன. முதலாவது தாய் கருத்தரிப்பதை இயற்கையாக பெரும்பாலானவர்களுக்கு தள்ளி வைக்கிறது. மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் வருவதை தவிர்க்கமுடியும்.
 
கர்ப்பகாலங்களில் அதிகமாக சாப்பிட்ட தாயின் உடல் பருமனை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகிறது. கர்ப்பபையை சுருங்கச் செய்து மீண்டும் இயல்பான நிலைமைக்கு கொண்டு வருகிறது.
 
பசும்பாலைவிட தாய்ப்பால் பலவிதங்களில் சிறந்தது. இதைக் காய்ச்ச வேண்டிய தேவையில்லை. எப்போதும் பயன்படுத்தலாம். குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் சரியான விகிதத்தில் அமைந்திருக்கின்றன. புட்டிப்பாலுக்கு ஆகும் செலவைவிட ஒரு தாய் நல்ல சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட்டு அதன்மூலம் குழந்தைக்குப் பால் கொடுக்கின்றபோது ஆகும் செலவு குறைவானதுதான். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மனவளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் மிகவும் நன்றாக இருக்கிறது. இவை அனைத்தையும் விட குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் பாசப்பிணைப்பு அதிகமாகிறது. 
 
பால் கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் பால் அதிகமாக சுரக்கும். ஒவ்வொரு மாதமும் குழந்தையின் தேவைக்கேற்ப பாலில் சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உற்பத்தியாகின்றன. 
 
தாய்ப்பால் அதிகமாக சுரக்க:
 
பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுக்க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர்; அருந்தி விட்டு கொடுக்க வேண்டும்.
 
இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது... அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும்
 
வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
 
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது. 
 
மேலும் தாய் தினமும் பசும் பால் உட்கொண்டால் தாய்ப்பால் பற்றாக் குறையே இருக்காது. 
 
அதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கான டயாபர் உபயோகிப்பதினால் கெடுதிகள் அதிகம்! மருத்துவர்கள் அறிவிப்பு!!

குழந்தை பிறந்த உடனே சில நாட்களிலேயே அவர்களுக்கு டயாபர்களை மாட்டி விடுகின்றனர். அடிக்கடி சிறுநீர், மலம் கழிப்பதால் குழந்தையின் பெட், துணி போன்றவைகளை துவைக்க சிரமப்படும் பெற்றோர்கள் டயாபர்களை மாட்டிவிட்டு பின்னர் தூக்கி எறிந்து விடுகின்றனர். இந்த டயாபர்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, சுற்றுச் சூழலும் மாசடைகிறது. எனவே குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் பெற்றோர்கள் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைகளுக்கு துணியினாலான, 'டயாபர்'களே பயன்படுத்தப்பட்டன. பின்னர், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும், 'டயாபர்'கள் வரத் துவங்கின. இதன் பிரபலத்தால், துணி, 'டயாபர்'களின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து விட்டது.

சரும நோய்கள்

'டிஸ்போசபிள்' டயாபர்களால், குழந்தைகளுக்கு ரேஷஸ் எனப்படும் புண்கள், பின்பகுதியில் உராய்வு உட்பட சில பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால், குழந்தைகள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர்.
தூக்கி எறியப்படும் டயாபர்களில் உள்ள டயாக்ஸின் என்னும் ரசாயனம் ப்ளீச் செய்யும் போது உபயோகப்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டதை அடுத்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இதனை உபயோகிக்க தடை விதித்துள்ளன.

ஹார்மோன் பிரச்சினை

டிஸ்போசபில் டயாபர்களில் டிரிபுயூடில்-டின் ( TBT) கூட்டுப் பொருட்கள் உள்ளன. இதனை உபயோகிப்பதால் மனிதர்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உபயோகித்த பின்னர் தூக்கி எறியப்படுவதால் மண்ணில் மட்கிப்போகாமல் அதை உண்ணும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், துணி 'டயாபர்'களால், பல்வேறு நன்மைகள் உள்ளன. துணி டயாபர்கள் பயன்படுத்தினால், குழந்தைகளுக்கு ரேஷஸ் போன்றவை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
டிஸ்போசபில் டயாபர்கள் சோடியம் பாலிக்ரைசலேட் என்னும் கரிம பலபடி பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறிவதனால் மண்ணில் மட்டுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன.

பிளாஸ்டிக் வடிவத்திலான இந்த ரசாயனம், சிதைவடைய 500 ஆண்டுகாலம் தேவை. துணி டயாபர்கள், சிதைவுற 100 ஆண்டுகளே ஆகின்றன. இதே போன்று, சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்தப்படும் டயாபர்களும் உள்ளன. இந்த டயாபர்கள் ஈரமானதும், அவற்றின் உள்ளே இருப்பவற்றை தூக்கி எறிந்து விட்டு, துவைத்த பின், மீண்டும் பயன்படுத்தலாம். முதல் குழந்தைக்கு பயன்படுத்திய, இந்த வகை டயாபர்களை, மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு பயன்படுத்துவதால், உலகம் வெப்பமயமாதல் 40 சதவீதம் குறையும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ரீயூசபிள் டயாபர்'கள் சிதைவடைய, ஆறு மாத காலமே ஆகின்றன.
வெட்டப்படும் மரங்கள்
உலகில் தயாரிக்கப்படும் டயாபர்களில் 70 சதவீதம், காகிதங்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. இதனால், உலகளவில், ஆண்டுக்கு 100 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரத்தை உருவாக்க, உரங்கள், பூச்சி மருந்துகள், தண்ணீ­ர் என ஏராளமானவை தேவைப்படுகிறது. டயாபர்கள் தயாரிப்பதற்காக, அதிகளவில் மரங்கள் வெட்டப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

செலவு குறைவு
'டிஸ்போசபிள்' டயாபர்களுக்கு மக்கள் ஏராளமான அளவில் பணம் செலவழிக்கின்றனர். ஆனால், 'ரீயூசபிள் டயாபர்'கள், மீண்டும் பயன்படுத்தப்படுவதால், அதற்கான செலவு குறைகிறது. எனவே, 'டிஸ்போசபிள்' டயாபர்களுடன் ஒப்பிடும் போது, 'ரீயூசபிள்' டயாபர்களால் அதிகளவு பணம் சேமிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பேஷனாக அணிவிக்க விரும்பினால், அதற்காகவே, துணி டயாபர்களில், பல்வேறு வண்ணங்கள் மற்றும் பேஷன்களில் வருகின்றன. எனவே அதிக அளவு பணம் செலவு வைக்காத சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பில்லாத டயாபர்களை வாங்கி உபயோகிக்கவேண்டும் என்பது குழந்தை நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.
Thanks: oneindia

குழந்தைகள் சரியான முடிவுகளை எடுக்கும் திறமை படைத்தவர்கள்: ஆய்வில் தகவல்

எது சரி, எது தவறு என்பதெல்லாம் பெரியவர்களுக்குத்தான் தெரியும். குழந்தைகளுக்குத் தெரியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.ஒரு விளையாட்டில் எவ்வாறு நியாயமாக நடக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வை ஒரு சர்வதேச ஆய்வுக் குழு மேற்கொண்டது. இதில் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு முயற்சியில் வெற்றி பெற்றால் சில பரிசுப் பொருட்களைப் பெறுமாறு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பரிசுப் பொருட்களை எல்லாவற்றையும் ஒரே குழந்தை வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம். ஏற்கனவே சிம்பன்சி குரங்குகளிடம் இது மாதிரியான ஆய்வை மேற்கொண்ட போது அவற்றிடையே ஒற்றுமையின்மை வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளும் அதே மாதிரி செயல்படுகிறார்களா? என்று நாங்கள் பார்த்தோம் என ஆய்வாளர்களில் ஒருவரான ஹார்வர்ட் பல்கலைக்கழகதைச் சேர்ந்த பெலிக்ஸ் வார்ன்கென கூறுகிறார்.
கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு கயிறைப் பிடித்து இழுத்தால் இனிப்பு, ஸ்டிகர் போன்ற பரிசுப் பொருட்கள் கிட்டும். ஒரு குழந்தை மட்டும் தனியாகக் கயிறை இழுக்க முடியாது.
எனவே ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று குழந்தைகளும் சேர்ந்து கயிறை இழுத்தார்கள். சிறு சண்டை, சச்சரவும் இன்றி கிடைத்த பொருட்களை நியாயமாகப் பகிர்ந்து கொண்டார்கள். அந்தக் குழந்தைகளுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம் என்கிறார் ஆய்வாளர் வார்ன்கென்.

வேகமாகப் படிக்கவும் எழுதவும் பயிற்சிகள்!

நீங்கள் சிறப்பாகப் படிக்க வேண்டுமானால் கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. அறிவுக்கூர்மையுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். பாடங்களை உங்களால் வேகமாக படிக்க முடிந்தால், நேரத்தையும், ஆற்றலையும் அதிக அளவில் சேமிக்க முடியும். உங்களுடைய தற்போதைய படிக்கும் வேகத்தை முதலில் அறிந்துக் கொண்டபின்தான் அதை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.
Exam Preparation Tips: How to Study and Write Fast? - Child Care Tips and Informations in Tamilநீங்கள் படிக்கும் வேகத்தை அறிவது எப்படி?
நிமிடத்திற்கு 250 முதல் 300 வார்த்தைகளை படிக்கும் திறமை நல்ல வேகம் எனலாம். ஆனால், அந்த வேகத்தைக் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும்.
ஒரு புத்தகத்தில் உள்ள பக்கம் ஒன்றை எடுத்து அமைதியாகவும், வேகமாகவும் படிக்கவும். அதன் பொருளை புரிந்துகொள்ள அக்கறை காட்ட வேண்டாம். படிக்கத் தொடங்கும் முன் நேரத்தை குறித்துக்கொள்ளவும். 5 நிமிடங்கள் கழித்து நீங்கள் படித்திருக்கும் வார்த்தைகளை கூட்டிப் பார்க்கவும். அந்த எண்ணிக்கையை ஐந்தால் வகுத்தால் ஒரு நிமிடத்திற்கு நீங்கள் படிக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை கிடைக்கும். அதுவே உங்கள் தற்போதைய வேகம். உதாரணமாக, நீங்கள் 5 நிமிடத்தில் 1000 வார்த்தைகள் படித்தீர்களானால் உங்களுடைய படிக்கும் வேகம் நிமிடத்திற்கு 200 வார்த்தைகள் ஆகும்.
கீழேகொடுக்கப்பட்டிருக்கும் முறைகளின் மூலம் இந்த படிக்கும் வேகத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கலாம். இவை நல்ல பலன்களைத் தரும்.
* கண்ணாடி முறை (Mirror Technique)
* தலைகீழாகப் படிக்கும் முறை (Upside-down Technique)
* வார்த்தை ஓட்ட முறை (Run-through Technique)
1. கண்ணாடி முறை (Mirror Technique)
ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து வேகமாகப் படிக்கவும். அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இப்போது அந்த பக்கத்தை கண்ணாடியில் காண்பிக்கவும். கண்ணாடியில் பிரதிபலிப்பதை படிக்கவும். அந்த பிரதிபலிக்கும் பக்கத்தை படிப்பதற்கு கடினமாக இருந்தாலும் உங்களால் அதை படிக்க முடியும். இந்த பயிற்சியை தினமும் காலையில் 10 நிமிடமும், மாலையில் 10 நிமிடமும் செய்யவும். ஐந்து முதல் ஆறே வாரங்களில் (கிட்டத்தட்ட 40 நாட்களில்) உங்கள் வேகம் நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்கும்.
2. தலைகீழாகப் படிக்கும் முறை
வேகமாக ஒரு பக்கத்தை படிக்கவும். அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. பின் அந்த பக்கத்தைத் தலைகீழாக மாற்றி மீண்டும் அந்த வரிகளின் மேல் ஆள்காட்டி விரலை (Index finger) வைத்துப் படிக்கவும். இந்த முறையில் படிக்கும் போது காலையில் 10 நிமிடமும், மாலையில் 10 நிமிடமும் குறைந்தது 40 நாட்கள் படிக்கவும்.
இந்த இரண்டு முறைகளால் நீங்கள் படிக்கும் வேகம் ஒரு மாதத்திற்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
படிக்கும் வேகம் எப்படி அதிகரிக்கிறது?
கண்ணாடியில் பிரதிபலிக்கும் பக்கத்தை படிக்கும் போதும், தலைகீழாகப் படிக்கும் போதும், அது புது அனுபவம். மேலும், படிப்பதற்குக் கடினமாக இருப்பதால் அவற்றைப் படிக்கின்ற போது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.
இப்படி 10 நிமிடங்கள் படித்த பின், அதிக கவனம் செலுத்தி படிக்க உங்கள் மனம் பழக்கமாகி விடும். அதன் மூலம் உங்களால் படிப்பில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும்.
பின்னர் அந்த பாடப்பகுதியை நீங்கள் நேராக படிக்கும் போது நன்றாகப் பழக்கப்பட்ட நிலையில் அமைந்திருப்பதால் படிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இதன் மூலம், உங்களால் அதிவேகமாகப் படிக்க முடியும்.
இம்முறைகளில் பயிற்சியெடுக்கும் போது, படிக்கும் வேகமே முக்கியம். அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், பாடத்தைப் புரிந்துகொள்ளாமல், படிக்கும் வேகம் அதிகரிக்கும் போது, நீங்கள் பாடத்தைப் புரிந்துகொண்டு படிக்கும் வேகமும் தானாகவே அதிகரிக்கும்.
3. வார்த்தை ஓட்ட முறை (Run-through Technique)
எளிமையான இப்பயிற்சியை சுலபமாக பின்பற்றலாம். இப்பயிற்சியை மேற்கொள்ளும் போது படிக்கும் பகுதியின் வார்த்தைகளை மட்டுமே வேகமாகப் படிக்க வேண்டுமெயொழிய அப்பகுதியின் அர்த்தத்தை புரிந்துகொள்ளத் தேவையில்லை. அதாவது, ஒவ்வொரு வார்த்தையை மட்டுமே பார்த்து அடையாளங்கண்டு பின் அடுத்த வார்த்தையைப் பார்க்க வேண்டும்.
இந்த பயிற்சி முறையில், நீங்கள் படிக்கும் பகுதியை சரியாகப் படிப்பதில்லை. ஆனால் உங்கள் விரைவான கண்ணோட்டத்தால் ஒவ்வொரு வார்த்தையையும் உடனடியாக அடையாளங்கண்டு அடுத்த வார்த்தைக்குச் செல்கிறீர்கள்.
இது எப்படி வேலை செய்கிறது!
நீங்கள் அடையாளம் காணும் வார்த்தைகள் உங்களுடைய மூளையில் காட்சியாகப் பதிவாகிறது. அதாவது, அந்த பாடப்பகுதியை படங்களாக படித்திருக்கிறீர்கள். அப்படி முறையாகப் பயிற்சி செய்யும்போது, ஒரு நிலையில் 'நீடுவாழ்கநிறைமகிழ்வெய்துக' போன்ற மிகப்பெரிய வார்த்தையையும் உங்களால் உடனடியாக அடையாளம் காண முடியும். இந்த திறமை இயல்பாகவே உங்களுடைய படிக்கும் ஆற்றலை மிகவும் அதிகரிக்கும்.
இப்பயிற்சிகள் ஆதாரபூர்வமானதா?
முன்பு விளக்கப்பட்டது போல், முதலில், உங்கள் படிக்கும் வேகத்தை கண்டுபிடிக்கவும். பின்னர் கண்ணாடி முறை, தலைகீழாகப் படிக்கும் முறை, மற்றும் வார்த்தை ஓட்டமுறை ஆகிய பயிற்சி முறைகள் ஒவ்வொன்றையும் 10 நிமிடங்கள் செய்யவும். இப்போது மீண்டும் உங்கள் படிக்கும் வேகத்தை கண்டுபிடிக்கவும். உங்களால் நம்பமுடியாத அளவு படிக்கும் வேகம் அதிகரித்திருக்கும். இதுவே நீங்கள் பயன் அடைந்ததற்கான ஆதாரம். இந்த பயிற்சி முறைகளுக்கு மிகமுக்கியத்துவம் கொடுத்து 40 நாட்கள் பயிற்சி செய்யவும். அதனால், உங்களுடைய நேரமும், சக்தியும் பெருமளவு மிச்சமாகும். தேர்வு நேரத்தில் ஏற்படும் பரபரப்பும், மன அழுத்தமும் நிச்சயமாகக் குறையும். மேலும், இரவும் பகலும் புத்தகங்களோடு போராட வேண்டிய அவசியமும் இருக்காது.
வேகமாக எழுதும் முறை:
ஒரு மாணவர் அறிவு கூர்மையுடன், தேர்வுக்குத் தன்னை நன்றாகத் தயார்படுத்தி இருக்கலாம். தேர்வில் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் நன்றாக தெரிந்தும் இருக்கலாம். ஆனாலும், வினாத்தாளில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் 2-3 மணிநேரத்திற்குள் விடைகளை வேகமாக எழுதி முடிக்கவில்லை என்றால், அவர் குறைந்த மதிப்பெண்களையே பெறுவார். எனவே, ஒரு மாணவருக்கு வேகமாக எழுதும் திறன் மிக அவசியமாகிறது.
இந்த பயிற்சியின் விளைவு!
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பயிற்சி முறை மிகவும் பயனளிப்பதாகும். தேர்வு நாட்களுக்கு 2 முதல் 3 வாரங்களுக்கு முன் பயிற்சியை செய்யத் தொடங்கினால்கூட நல்ல பலன்களை காண முடியும். இருப்பினும், மிகச்சிறந்த பலன்களைப் பெற 40 நாட்கள் பயிற்சி செய்யுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
பயிற்சி முறை:
இப்பயிற்சிக்கு ஏதாவது ஒரு பகுதியை உங்களுடைய இயல்பான வேகத்தில் 5 நிமிட நேரம் எழுதவும். அதே பகுதியை 4 நிமிடங்களுக்குள்ளும், மீண்டும் 3 நிமிடங்களுக்குள்ளும் எழுதவும். மொத்தமாக 12 நிமிடங்கள் எழுதியிருக்கிறீர்கள். இப்படி தினமும் இருமுறை எழுதிப் பயிற்சி செய்யவும். இவ்விதம் தேர்வுக்கு 40 நாட்கள் முன்பே பயிற்சி செய்தால், உறுதியாக பெரும் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.
இது எப்படி செயல்படுகிறது!
5 நிமிட நேரத்தில் எழுத வேண்டிய பகுதியை 4 நிமிடத்திற்குள் எழுதி முடிப்பது மிகவும் கடினமான ஒரு செயல் அல்ல. அதே பகுதியை 3 நிமிடத்திற்குள் முடிப்பது கொஞ்சம் சவாலானது. ஆனாலும், 3 நிமிடம் மட்டுமே என்பதால் உங்களால் அந்த நேரத்திற்குள் எழுதி முடிக்க முடியும். இப்படி பல நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்களுடைய எழுதும் வேகம் படிப்படியாக அதிகரிக்கும்.

தேர்வு நாளன்று....

நீங்கள் தேர்விற்குத் தயார் செய்வதோடு, அறிவை மேம்படுத்துவதற்கும் ஒரு வருடமாக உழைத்திருக்கிறீர்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பல மாணவர்கள் தேர்விற்காக மட்டுமே படிக்கிறார்கள். தங்கள் அறிவை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், தேர்வு நடத்துவதின் நோக்கம் தான் என்ன? ஒரு மாணவரின் அறிவு எந்த அளவு பாடங்களில் மேம்பட்டிருக்கிறது என்பதை மதிப்பிடுவதற்குத் தானே!
How to Prepare For Exams? - Child Care Tips and Informations in Tamilஅதே சமயம், திறமைமிக்க எந்த ஒரு மாணவரும் தேர்வு நாளன்று எப்படி செயல்புரிகிறார் என்பதைப் பொறுத்தே அவர் மதிப்பெண்களும், எதிர்காலமும் நிர்ணயிக்கப்படுகின்றன. மதிப்பீட்டாளர் உங்கள் அறிவிற்கு மதிப்பெண்கள் வழங்குவதில்லை. ஆனால், அந்த அறிவை எப்படிச் சரியாகத் தேர்வில் வெளிப்படுத்துகிறீர்களோ அதற்கே மதிப்பெண்கள் அளிக்கிறார்.
எனவே, சிறந்த மதிப்பெண்களை பெறுவதற்கு நீங்கள் சகலகலா வல்லவனாக முன்னேற வேண்டும். இந்த பகுதியில் கூறப்பட்டிருக்கும் செய்திகளை கவனத்தில் கொண்டு பின்பற்றவும்.
1. தூக்கம்
தேர்வு நேரத்தில், உங்கள் தூக்கத்தின் அளவு 8.00 மணி நேரத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும். தூங்குவதற்கு உகந்த நேரம் இரவு 9.00 - 9.30 மணியிலிருந்நு காலை 5.00 - 5.30 வரை.
2. தியானம்
தேர்வு நாளன்று சிறிது நேரம் தியானம் செய்யவும். அதனால் உங்கள் மனம் புத்துணர்ச்சிப் பெற்று, தேர்வினை சிறப்பாக எழுத முடியும். தேர்வு நேரத்தில் தியானத்திற்காக 15-30 நிமிடங்கள் செலவு செய்து விட்டால், தேர்வு என்னாவது என்று சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மையில் தியானமே, உங்களை தேர்வில் மிகச் சிறப்பாக செயல்பட வைக்கும். கூர்மைபடுத்தப்பட்ட கோடாரியால் தான் அதிக மரங்களை வெட்ட முடிவதை போல, தியானத்தால் மனம் அமைதியாகவும், கூர்மையாகவும், விழிப்புணர்வுடனும் இருந்தால் மிகச்சிறப்பாக எழுத முடியும்.
3. கையெழுத்துப் பயிற்சி
நீங்கள் தேர்வு எழுதுவதற்கு வீட்டை விட்டு செல்வதற்கு முன், உங்கள் பாடப்பகுதியை 5 நிமிடம் எழுதி பயிற்சி செய்யவும். அந்த பயிற்சியின் போது, தேர்விற்குப் பயன்படுத்தும் அதே பேனாவையே பயன்படுத்த வேண்டும்.
மேலும், மணிக்கட்டுப் பயிற்சி 2 நிமிடம் செய்யவும். அதாவது, உங்கள் வலது மணிக்கட்டினை (வலது கை பழக்கம் உடையவர்க்கு) இடது கையால் பிடித்துக்கொண்டு மணிக்கட்டினை வலது புறமும், இடது புறமும் 2-3 முறைகள் மாற்றி மாற்றி சுழற்றவும். மேலும், 5-6 முறைகள் கைவிரல்களை மடக்கியும், நீட்டியும் செய்யவும். இது கை மணிக்கட்டிற்கும் விரல்களுக்கும் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகப்படுத்தி தேர்வு முழுவதும் நன்றாக எழுதத் துணைபுரியும்.
முக்கியக் குறிப்பு
மணிக்கட்டு மற்றும் விரல்களுக்கான பயிற்சி, வருடம் முழுவதும் அடிக்கடி செய்து கொண்டிருக்க வேண்டும். அப்போது தான், தேர்வு நேரத்திலும் அந்த பயிற்சியை செய்ய இயலும். இல்லையேல் செய்ய வேண்டாம். கை பிசகிக் (சுளுக்கிக்)கொள்ள வாய்ப்பிருக்கிறது.
4. காலைச் சிற்றுண்டி
மாணவர்கள் யாரும் காலை உணவை பொருட்படுத்துவதே இல்லை. ஏதோ ஒன்றை சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். ஆனால், தவறாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலை உணவு, தேர்வில் உங்கள் செயல்திறனை பாதிக்கும் என்பதை அறிவீர்களா?
தேர்வின்போது மூளை முழுவீச்சுடன் செயல்படவும் அதன் முழு பங்கினையும் அளிக்கவும், வயிறு நிறைய உண்ணக்கூடாது. வயிறு காலியாக இருக்கவும் கூடாது. வயிறு காலியாக இருக்கும் போது பசி உண்டாகும். பசியினால் அட்ரினலின் ஹார்மோன் இரத்தத்தினுள் அதிகமாகச் சேர்ந்து உங்களை பொறுமை இழக்கச் செய்யும். பொறுமையின்றி, நீங்கள் தேர்வை எழுதும்போது பதிலை முழுமையாக எழுத இயலாமல் மதிப்பெண்கள் குறையும் நிலை ஏற்படுகிறது.
மற்றொரு புறம், நீங்கள் வயிறு நிறைய சாப்பிட்டால், உணவை செரிப்பதற்காக மூளையிலிருந்து நிறைய இரத்தம் வயிற்றுக்குச் செலுத்தப்படும். அதனால் மந்தமான நிலை ஏற்படும். எனவே, தேர்வு நாளன்று காலை உணவு மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இல்லாமல் அளவுடன் உண்பது நலம்.
பரிந்துரைக்கப்படும் சிற்றுண்டிகள்:
காய்கறி கலந்த-இட்லி
காய்கறி கலந்த-அரிசி பொங்கல்
காய்கறி கலந்த-இடியாப்பம்
பிரெட், வெண்ணெய், ஜாம்
சுவையூட்டும் இயற்கை உணவுக் கலவை
நாம் பிரெட் ஜாமுடன் வெண்ணெய் சேர்த்துக் கொண்டால் செரிமானம் சற்றே மெதுவாக நடைபெறும். காய்கறிகள் செரிமானத்தைத் தாமதப்படுத்துவதுடன் சக்தியையும், சுவையையும் கூட்டுகிறது.
சுவையூட்டும் இயற்கை உணவுக் கலவை:
பழங்கள், காய்கறிகள், முளைக்கட்டிய தானியங்கள், பேரீச்சம்பழம், கொட்டைகள் (Nuts), உலர் திராட்சை மற்றும் தேன் ஆகியவற்றின் கலவையே இயற்கை உணவுக் கலவை. இதில், பழங்கள் காய்கறிகள் அதிகமாகவும் கொட்டை வகைகளை சிறிதளவு மட்டுமே சேர்க்க வேண்டும். இது போன்ற உணவே ஊக்கத்தை அளிக்கும் சமச்சீரான காலை உணவு.
தவிர்க்க வேண்டிய காலைச் சிற்றுண்டி:
தோசை, பூரி, சப்பாத்தி, இனிப்புகள், புலாவ், பிரியாணி, முட்டை ஆம்லட், பீட்சா போன்ற உணவுகளில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருட்கள் செரிமானத்தின் வேகத்தை மிகவும் தாமதமாக்கி உண்ட மயக்கம் ஏற்படுத்தும். காலைச் சிற்றுண்டி எதுவாகினும், வயிறு நிறைய உண்ண வேண்டாம். நான்கு மணிநேரப் பசியை தாங்கினால் போதும்.
5. ஆடை அணிதல்
இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கவும். தளர்வான ஆடைகள் உங்கள் கவனத்திற்கு எந்த இடையூறும் செய்யாது. காலில் ஷூ அணிவதை வற்புறுத்தினாலன்றி தவிர்க்கவும். கால் சட்டைக்குள் சட்டையை திணித்து இறுக்கிக்கொள்ள வேண்டாம். தேர்வு எழுதும் பொழுது, உங்கள் காலணிகளை கழற்றி பாதங்களைத் தளர்த்திக்கொள்ளவும்.
6. தேர்விற்கான தேவைகள்
* இரண்டு போனா (மையால் எழுதும் பேனாக்களாயிருப்பின், நீங்கள் பயன்படுத்தி பழகியவையாக இருக்க வேண்டும்)
* பென்சில்
* ரப்பர்
* ஷார்ப்னர்
* ஸ்கெட்ச் பேனாக்கள்
* தண்­ணீர்
* கைக்கடிகாரம்
* எழுதுவதற்கான அட்டை (அனுமதிக்கப்பட்டால்)
* நுழைவுச்சீட்டு (பொதுத் தேர்வுகளின் போது)
* கைக்குட்டை
மேற்கூறியவற்றில் அனுமதிக்கப்பட்ட அனைத்தையும் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
7. உரையாடலைத் தவிர்க்கவும்
தேர்வு அறையினும் பல மாணவர்கள் பாடத்தில் உள்ள குறிப்புகளை உரையாடி, விவாதித்துக் குழப்பிக்கொள்வார்கள். கடைசி நேர உரையாடல் யாவும், ஏற்கனவே படித்தவற்றில் தேவையற்ற செய்திகள், உங்களைக் குழப்பவே செய்யும், அவற்றைத் தவிர்க்கவும்.
20 நிமிடம் முன்னதாக தேர்வு அறையினுள் சென்று பதற்றமில்லாமல், நண்பர்களிடம் ஹலோ மட்டுமே சொல்லி உங்கள் இருக்கையில் அமரவும்.
8. தேர்வு பயத்தை முறியடிப்பது எப்படி?
பெரும்பாலான மாணவர்களைத் தேர்வு பயம் துன்புறுத்துகிறது. தேர்வறையில் பல சமயங்களிலும் பதிலை அவர்களால் நினைவுபடுத்த முடியவில்லை என்று பயப்படுகின்றனர். சில சமயங்களில் எதுவுமே நினைவுக்கு வராமல் வெறுமையாக உணர்வார்கள். அவர்கள் படித்தவை ஆழ்மனதில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நீங்கள் அதை ஒரு சாவியால் திறக்காதவரை அதை நினைவிலிருந்து வெளியில் எடுக்க முடியாது. தேர்வு அறையில், உங்கள் கவனமே அந்த சாவி. இருப்பினும், உஙகள் தேர்வு பயத்தைப் போக்க மூச்சை ஆழமாகவும், வேகமாகவும் பலமுறை இழுத்துவிடவும். இப்படி செய்வதனால் நீங்கள் தேர்வு பயத்திலிருந்து உடனே மீள முடியும்.
9. தேர்வு எழுதும் பொழுது உங்களின் மனநிலை
தேர்வு எழுதும் பொழுது உள்ள நிலைமையே வேறானது. உங்கள் மனம் பாடத்தை நினைவுப்படுத்துவதற்கு அமைதி நிலையிலும், சரியான நேரத்திற்குள் தேர்வு எழுதி முடிப்பதற்கு சுறுசுறுப்பான நிலையிலும் இருக்க வேண்டும். இங்கே இரண்டு நிலைகளான கலவையும் தேவைப்படுகிறது. அதாவது அமைதி நிலைக்கும், விறுவிறுப்பான நிலைக்கும் இடைப்பட்ட நிலையே மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
பொதுவாக, ஆல்ஃபா சுவாசத்தின் பொழுது, சுறுசுறுப்பான நிலையிலிருந்து அமைதி நிலைக்கு வருவதற்கு 3-4 நிமிடங்கள் ஆகிறதென்றால், பின்னர் ஆல்ஃபா சுவாசத்தின் அளவை 2 நிமிடமாக குறைத்துக்கொள்ளவும். இதுவே தேர்வு எழுதுவதற்கு மனதை தயார் செய்யும் சிறந்த முறையாகும்.
10. தேர்வு நாள் பழக்க முறை
* காலையில் 5.30 மணிக்கு எழுதல் (8 மணி நேர தூக்கத்திற்கு பின்)
* தேர்வை சிறப்பாக செய்வதற்கு சுய மனோவசியம் செய்துகொள்ளவும்.
* காலை கடமைகள்
* உடற்பயிற்சி
* குளியல்
* ஒரு கப் நீர் அல்லது 1/2 கப் பழச்சாறு
* தியானம்
* படிப்பு (கவனக் குறிப்புகள், நினைவுபடுத்தும் வரைபடங்கள் மட்டும்)
* காலைச் சிற்றுண்டி
* கையெழுத்துப் பயிற்சி
* தேர்விற்கு வேண்டிய பொருள்களை எடுத்துக்கொள்ளல்
* முன்னதாகவே பள்ளிக்கு புறப்பட வேண்டும். (தேர்வறையில் 20 நிமிடம் முன்னதாக இருக்க வேண்டும்).
முக்கிய குறிப்பு:
படிக்கும்போது, முதலில், முதல் நாள் இரவு படித்த பாடப் பகுதியை திருப்புதல் செய்யவும். தேர்விற்கு 1 மணிநேரம் முன்னதாகவே படிப்பதை நிறுத்திவிட வேண்டும்.
11. தேர்வு அறை இரகசியங்கள்
* 20 நிமிடம் முன்னதாக தேர்வறைக்குச் செல்லவும் (மிகவும் முன்னதாக போய் அமர்ந்துகொள்வதை தவிர்க்கவும்.)
* மேசையின் மீது 2-3 நிமிடம், இடது புறமாக சாய்ந்து கொண்டு இடது மூளையை ஊக்குவிக்கவும்.
* ஆல்ஃபா சுவாசம் 2 நிமிடம் மட்டுமே செய்யவும். அதனால் மனம் ஆல்ஃபா மற்றும் பீட்டா ஆகிய இரண்டு நிலை சுவாசத்திலும் ஊக்குவிக்கப்படும். மேலும் உங்கள் சுவாசத்தை கவனிக்கவும்.
* மூச்சை ஆழமாகவும், வேகமாகவும் இழுத்து விடவும்.
* தண்ணீ­ர் குடிக்கவும்.
* சிறப்பாக தேர்வு எழுத மனதில் உறுதி ஏற்கவும். விளைவுகளை கடவுளிடம் சமர்ப்பித்து, தேர்வினை தொடங்கவும்.
* விடைத்தாளில், உங்கள் பதிவு எண்ணை முதலிலும் மற்ற விவரங்களை பிறகும் எழுதவும்.
* வினாத்தாளை கவனமாகப் படிக்கவும்.
* தேர்வு செய்யும் கேள்விகளை பென்சிலில் மெல்லியதாக குறித்துக்கொள்ளவும். (தேர்வாளர்கள் அனுமதித்தால்)
* ஒவ்வொரு கேள்விக்கும், 10-15 வினாடிகள் திட்டமிட்ட பின் எழுதவும்.
* இப்பொழுது எழுதத் தொடங்கவும்.
* எழுதும்போது, விடைகளை விரிவாக எழுதவும். அதே நேரத்தில், சரியான நேரத்திற்குள் முடிக்கவும்.
* விடையளித்தபின், கேள்வி எண்ணை வட்டமிட்டு குறித்துக்கொள்ளவும்.
* நீங்கள் முன்னதாகவே விடைகளை எழுதி முடித்து விட்டாலும், தேர்வறையை விட்டுப்போகாமல், விடைகளை மீண்டும் படித்து சரிபார்க்கவும்.
12. தேர்விற்குப் பின்
தேர்வு முடிந்த பின்னர் எந்த ஒரு பதிலையும் சரிபார்க்க வேண்டாம். நண்பர்களிடம் உரையாடவும் வேண்டாம். அது பள்ளி / கல்லூரி இடைத்தேர்வுகளாக இருந்தால், அனைத்துத் தேர்வுகளையும் முடித்த பின்னர் உங்கள் சந்தேகங்களை தெரிந்துகொள்ளுங்கள். அது முழு ஆண்டு அல்லது பொதுத் தேர்வாக இருந்தால், தேர்வு முடிவு வரும் வரை விடைகளை சரி பார்க்கக்கூடாது. ஒரு தேர்வு முடிந்தவுடன் பதில்களை சரிபார்க்கும் பொழுது, ஒரு வேளை ஏதேனும் நீங்கள் தவறாக எழுதியிருந்தால், அது ஏமாற்றத்தை அளிக்கும். இதனால் அடுத்த தேர்விற்கான தயாரிப்பு பாதிக்கப்படும்; எனவே இதை தவிர்க்கவும்.
தேர்வு முடித்து வீட்டிற்கு வந்தவுடன், மதிய உணவுக்குப் பின், ஒன்றரை மணி நேரம் நன்றாகத் தூங்கவும். இதனால் தேர்வில் எழுதிய செய்திகள் நினைவிலிருந்து பின் தள்ளப்படும். தூங்கி எழுந்தவுடன், புத்துணர்வுடன் அடுத்த தேர்விற்கான தயாரிப்பைத் தொடங்கவும்.

ஜெயித்தால் பாராட்டுங்கள்; தோற்றால் தட்டிக்கொடுங்கள்!

விரல் சப்புவது என்பது குழந்தைகளின் தவிர்க்க முடியாத ஒரு செயலாக உள்ளது. அப்படி விரல் சப்பினால் குழந்தையின் பல் உயர்ந்துவிடும் என்று பயப்படும் பெற்றோர், அக்குழந்தையை அடிக்காத குறையாக கண்டிக்கும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.
How to Stop a Child From Sucking Fingers? - Child Care Tips and Informations in Tamilசமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 58.3 சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் விரல் சப்பினால் கோபத்தில் சட்டென்று பிடித்து இழுத்துவிடுவதாக கூறினார்கள். அதே ஆய்வில், 18.8 சதவீத பெற்றோர், குழந்தையின் கை சப்பும் பழக்கத்தை தவிர்க்க, அக்குழந்தையின் கை விரல்களில் கசப்பு மருந்தை தடவி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். 9.6 சதவீதம் பேர் விரல் சப்பும் தங்கள் குழந்தையை அடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மீதமுள்ள 13.3 சதவீதம் பேர்தான், விரல் சப்புவது குழந்தையின் வளர்ச்சியின் ஒரு கட்டம் என்பதை உணர்ந்துள்ளனர்.
ஒரு குழந்தையிடம் விரல் சப்பும் பழக்கம் ஆரம்பத்தில் இருந்தாலும், படிப்படியாக அதில் இருந்து அதை விடுபட வைத்துவிடலாம். அதுவரை பெற்றோர்தான் கம்பை தூக்காமல் இருக்க வேண்டும், குழந்தையை அடிக்க!
பொதுவாக 3 வயதுக்குமேல் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6 வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுப்புது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதனால், குழந்தையை சரியாக ஹேண்டில் செய்வது அவசியமாகிறது.
பெற்றோருக்கு பக்குவமான பத்து டிப்ஸ்:
* ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.
* அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக 'மெய்ன்டெய்ன்' செய்து வரவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது.
* மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.
* அடுத்து முக்கியமானது பணம். பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. 'பாக்கெட் மணி' கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.
* குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.
* குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் 'வாக்கிங்' அழைத்துச் செல்வதும் அவசியம்.
* குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். இதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, 'இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்' என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும்.
* பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினை எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு என்ன தீர்வு? - இந்த மூன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
* குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.
* கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது.
மொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு - இந்த மூன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். உங்கள் குழந்தையும் நல்ல குழந்தைதான்!

குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா?

நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள சந்தேகம், நம் குழந்தைகளை எந்த வயதில் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதுதான். பல பெற்றோர்களிடம் குழந்தைகள் வளர்ந்து ஏழு, எட்டு வயதான பின்னர்தான் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற தவறான கருத்து நிலவுகின்றது. இதனால் பல குழந்தைகளின் பார்வை சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலமே பாழாகி விடுகின்றது. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் செல்லும் முன்பாகவே கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெற்றோற்களின் கவனத்திற்க்கு...
Have You Had Your Child's Vision Checked? - Child Care Tips and Informations in Tamilபார்வைக் குறைபாடுகள் (Refractive Errors)
பள்ளி செல்லும் குழந்தைகளில் 4 முதல் 5 சதவீதம் வரை பார்வைக் குறைபாடுகள் இருக்கின்றன. பார்வைக் குறைபாட்டை மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. தூரப்பார்வை (Long sight), கிட்டப்பார்வை (Short sight) மற்றும் சமச்சீரற்ற பார்வை (Astigmatism).
பார்வைக்குறைபாடுகளின் அறிகுறிகள்:
* கரும்பலகை, தொலைக்காட்சி ஆகியவற்றை அருகில் சென்று பார்த்தல்.
* புத்தகத்தை முகத்துக்கு அருகில் வைத்துப் படித்தல்.
* கண்களை சுருக்கிப் படித்தல்.
* தலைவலி அல்லது கண்வலி.
* மாறுகண்
- போன்றவை பார்வைக் குறைபாடுகளின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் தெரிந்தால் உடனே கண் மருத்துவரிடம் செல்வது நல்லது.
  
மாறுகண் (Squint)
மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு குறைபாடு. இது குழந்தையின் பார்வை மற்றும் தோற்றத்தை பாதிக்கும். இந்த குறைபாடு உள்ளவர்களை எட்டு அல்லது ஒன்பது வயதுக்குள் உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே குணமாகும். இல்லாவிட்டால் மாறுகண் நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
சோம்பலுற்ற கண் (Amblyopia)
சாதாரணமாக இரண்டு கண்களும் இணைந்து ஒரு பொருளை பார்க்கும்போது, ஒரே மாதிரியான உருவம் மூளையைச் சென்றடையும். அப்படி இல்லாமல், இரண்டு வேறுபட்ட உருவங்கள் தெரிந்தால் இதை சோம்பலுற்ற கண் என்று மருத்துவ அறிஞர்கள் அழைக்கின்றனர். குழந்தையின் மூளை, நல்ல பார்வையுள்ள கண்ணிலிருந்து வரும் உருவத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு, பாதிக்கப்பட்ட கண்ணிலிருந்து வரும் உருவத்தை ஒதுக்கக் கற்றுக் கொள்கிறது. இதனால் அந்த கண்களில் நாளடைவில் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.
சோம்பலுற்ற கண் ஏற்படக் காரணங்கள்:
* மாறுகண்
* பிறவியிலேயே ஏற்படும் கண்புரை
* கருவிழியில் தழும்பு
* குறைமாதக் குழந்தை
* இரண்டு கண்களிலும் வேறுபட்ட பார்வைத் திறன் இருந்தும், ஆரம்பத்திலேயே உரிய கண்ணாடி அணியாமல் இருத்தல்.
  
நோய் கண்டவுடன் செய்ய வேண்டியது
இந்த குறையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். இல்லாவிட்டால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும். தாமதமாக சிகிச்சை பெறும்போது இருக்கும் பார்வையை பாதுகாக்கலாம்.
கண்புரை (Cataract)
கண்புரை என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, பிறந்த குழந்தைக்கும் ஏற்படலாம்! கண்களில் அடிபடும்போதும் கண்புரை ஏற்படும். கண்புரையை கண்டறிந்தால், உடனே அறுவை சிகிச்சை செய்வது அவசியம். இல்லாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே குழந்தைகளை பள்ளி செல்வதற்கு முன்பு, ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்.