Top 10 Yoga Asanas To Reduce Abdomen Fat And Have A Toned Belly


Stomach fat or belly fat is one of the most adamant areas of the body to treat. Many people who wish to have a sculpted and toned body face the belly fat issue as the main and a big problem. The broader your abdomen, higher is the level of eliminating fat. Others may find very easy to reduce fat from the other parts of the body but there is no known shortcut for cutting down the lower tummy fat.


Then there comes Yoga, which plays a vital role along with the proper diet and a healthy fitness regime. Let's know the best-known yoga asanas which will definitely help you in controlling your body health.


1. Tadasana (Mountain Pose)

Tadasana is the foremost warm-up pose for all the beginners. For this asana, you need to stand on your toes with stretched arms above your head. Then make sure your eyes are looking towards the ceiling. Keep this pose for 20 seconds and inhale and exhale during this period. This asana firms the abdomen.


2. Surya Namaskar (Sun Salutation)



Surya Namaskar is a assemblage of total 12 positions like Pranamasan (Prayer Pose), Hasta Uttanasana (Raised Arm Pose), Pada Hastasana (Hand To Foot Pose), Ashwa-Sanchalan Asana (Equestrian Pose), Parvatasana (Mountain Pose), Ashtanga Namaskar (Salute With Eight Parts), Bhujangasana (Cobra Pose), Parvatasana, Ashwa Sanchaln- Asana, Pada Hastasana, Hasta Uttanansana, Pranamasan. It is recommended to 12 rounds of this Suryanamaskar to get the effective results. To get maximum benefits, practice this asana in the morning facing towards the sun.


3. Pada Hasthasana (Standing Forward Bend, Or Hand To Foot Pose)



This asana helps in shrinking abdomen leading to burning of fat. To start with this pose, you need to stand in Tadasana pose, keeping spine cocked up. Inhale while lifting your hands skyward and exhale when you bend your hands touching the floor. Meanwhile, your head must touch your knees. In such a case, your body should be aligned to the floor. Keep this pose for a minute with the tummy tucked in.


4. Paschimottanasana (Seated Forward Bend)



This is the basic tummy toning pose which gives a regular stretch to your stomach. This pose is beneficial for all those people who suffer from digestive and constipation issues. For this, you have to stretch your legs in such a way that the toes should face towards the ceiling. Now bend your body from hips so that your hand touches the toes and head touches the knees. Initially, you may not be able to touch toes but gradually u will. Continue being in this position for about a minute in starting and later till 5 minutes. Inhale and exhale each time you bend and come to the original position.


5. Pavanamuktasana (Wind Relieving Pose)





This asana is very important one for assuaging the gastric and constipation problems. For this, you have to lie in the supine position with the face facing upwards. Inhale and then exhale as you bring the knees simultaneously towards chest and chin to knees. The thighs will apply pressure to your abdomen and hence will lessen its fat.


6. Naukasana (Boat Pose)




This is the most needed yoga posture that helps in charming belly with its regular practice. It includes boat-like movement that tones your abs. To practice it you need to lift your body in such a way that the toes face the ceiling and your arms get stretched in parallel to the legs. Repeat this posture after every 15 seconds.


7. Ushtrasana (Camel Pose)



This pose is opposite to Naukasana as in this posture you will experience the backward stretch that tones the muscles of the abdomen. For this, you have to sit in Vajrasana and arch your back in order to touch the ankles by your hands. Meanwhile, tilt your head also towards back till you sense a strain your belly. This will help in contracting belly fat.


8. Uttanpadasana (Raised Foot Pose)



It is the most powerful yoga posture that helps in alleviating the flab that gets compiled around belly and hips. Firstly you need to lie straight on the floor, then stretch and raise your legs to a 45-degree angle position. Exhale slowly and hold it for few seconds. Later raise your legs further making a 90-degree angle with the ground and hold on in that pose only for 30 seconds. Redo this asana for 10 times.


9. Dhanurasana (Bow Pose)



For this asana, you will have to sit in prone situation, bend your head backwards and lift your legs and knees upwards. Now stretch your hands backward and try holding your ankles with your hands. By this your body will get supported by abdomen and it will sense a stretch which will play a wonderful job in abdominal toning.


10. Bhujangasana (Cobra Pose)



For this asana, you will have to lie upside down with the chest facing downwards. Keep the palms underneath your shoulders and lift your shoulders keeping head off the floor. Then lift your body towards backward as much as possible. Hold this posture for 30 to 50 seconds and exhale while bringing body to the normal position.


உங்கள் ஆண்ராய்டில், ஜியோ 4ஜி சிம் பொருத்த 8 எளிய வழிமுறைகள்..!

உங்கள் ஆண்ராய்டில் ஜியோ 4ஜி சிம் பொருத்த 8 எளிய வழிமுறைகள் இதோ..!


வழிமுறை #01 உங்களிடம் ஒரு ஜியோ சிம் கார்ட், பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ எண், 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்ட, எக்ஸ்போஸ்டு ஐஎம்இஐ சேஞ்சர் ஆப் கொண்ட, ரூட் செய்யப்பட்ட ஆண்ராய்டு கருவி இருக்க வேண்டும்.

வழிமுறை #02 உங்களிடம் இருக்கும் ஆண்ராய்டு ஆனது ரூட் செய்யப்பட்டு இருக்க வேண்டும் உடன் அது 4ஜி எல்டிஇ இணைப்பை ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஜியோவின் வேகமான 4ஜி இலவச சேவையை அனுபவிக்க முடியும்.

வழிமுறை #03 உங்கள் சாதனம் ரூட் செய்யப்பட்டதும் நீங்கள் எக்ஸ்போஸ்டு ஆப் மற்றும் ஐஎம்இஐ சேஞ்சர் ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வழிமுறை #04 பின்னர், எக்ஸ்போஸ்டு இன்ஸ்டாலர் அண்ட் ஆக்டிவேட் பிரேம்வெர்க் (Xposed Installer and Activate Framework) சென்று மாடூல்ஸ் (Modules) தனை கிளிக் செய்யவும். அங்கு, நீங்கள் ஐஎம்இஐ சேஞ்சர் ப்ரோ ஆப்பை எனேபிள் செய்ய வேண்டும்.
வழிமுறை #05 பின்னர், அந்த ஆப்பை ஜியோ சிம் பயன்படுத்த விரும்பும் மொபைலில் திறந்து ஐஎம்இஐ எண்ணை பதிந்து அப்ளை கொடுக்கவும். உடன் நீங்கள் அளித்த ஐஎம்இஐ நம்பரின் கடைசி மூன்று எண்களை, உங்கள் விருப்பமான எண்கள் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.

வழிமுறை #06 இப்போது உங்கள் தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்து, சிம் கார்ட் ஸ்லாட் ஒன்றில் ஜியோ சிம் கார்டை பொருத்தவும் பின் சுவிட்ச் ஆன் செய்யவும்.இப்போது உங்கள் ஜியோ சிம் ஆக்டிவேட் ஆகியுள்ளதை காண முடியும்.

வழிமுறை #07 ஒருவேளை உங்களுக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்றால் இதை பின்பற்றவும். செட்டிங்ஸ் - மொபைல் நெட்வெர்க் - நெட்வெர்க் ஆப்ரேட்டர்ஸ் - சர்ச் மேனுவலி - ரிலையன்ஸ் ஜியோ. செட்டிங்ஸ் - மோர் - மொபைல் நெட்வெர்க்ஸ் - அக்கசஸ் பாயிண்ட் நேம்ஸ் - புதிய ஏபிஎன் ஒன்றை உருவாக்கவும், முக்கியமாக ஏபிஎன் ஆனது ஜியோநெட் ஆக இருக்க வேண்டும். மீதமுள்ளவைகளை காலியாக விடவும்.

வழிமுறை #08 பின்னர் இறுதியாக மொபைல் நெட்வொர்க்ஸ் சென்று எல்டிஇ ஒன்லி தேர்வு செய்யவும் உடன் உங்கள் டேட்டாவை ஆன் செய்யவும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் எந்த ஆண்ராய்டுமொபைலிலும் ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற 4ஜி டேட்டாவை உங்களால் அனுபவிக்க முடியும்.


வாசகர்களின் கவனத்திற்கு: 

இந்த வழிமுறையானது ஒரு அதிகாரப்ப்பூர்வமான ஒன்றல்ல என்பதும், இந்த பணியின் போது ஏதேனும் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டால்அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, 

இதை உங்கள் சொந்த விருப்பத்தின் கீழ் செயல்படுத்தி பார்த்துக் கொள்ளவும்






ஜியோவிடம் ஏர்டெல் 'அடிவாங்குறது' ஒருபக்கம் இருக்க, ஏர்செல் நிலை என்ன..?



இலவச குரல் அழைப்புகள், ரோமிங் மற்றும் சாத்தியமான உலகின் மலிவான தரவு திட்டங்கள் என போட்டியாளர்களே இல்லாத வண்ணம் தனது அதிரடி சலுகைகளை வெளியிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியா முழுக்க ஜியோ அலைகளை பரப்பி ஏர்டெல், ஐடியா போன்ற முன்னணி நெட்வெர்க் நிறுவனங்களை மூச்சுப்பிடித்து போராட வைக்கும் நிலைக்குள் தள்ளியுள்ளது என்றே கூற வேண்டும். 

அப்படியாக, ரிலையன்ஸ் ஜியோவிடம் ஏர்டெல் 'அடிவாங்குறது' ஒருபக்கம் இருக்க, ஏர்செல் போன்ற நிறுவனங்களின் நிலை என்ன..?

நிலைபாடு : பெருநிறுவனங்களே ஜியோவை சமாளிக்க முடியாது போராடிக் கொண்டிருக்க ஏர்செல், டெலினார் இந்தியா, டாடா டெலிசர்வீசஸ் போன்ற (ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் சேவை உட்பட) சிறிய மொபைல் சேவை வழங்குநர்கள் எல்லாம் இன்னும் முற்றிலும் வெளியேறாத ஒரு நிலைபாட்டுக்குள் தான் இருக்கின்றன என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

உறுதி : நடுத்தர கால அளவில், ரிலையன்ஸ் ஜியோவானது ஏர்செல், டெலினார் இந்தியா , டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய சேவைகள் வெளியேறுவதை உறுதி செய்யும்" என்கிறது ஒரு யூபிஎஸ் குறிப்பு.

உறுதி : நடுத்தர கால அளவில், ரிலையன்ஸ் ஜியோவானது ஏர்செல், டெலினார் இந்தியா , டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய சேவைகள் வெளியேறுவதை உறுதி செய்யும்" என்கிறது ஒரு யூபிஎஸ் குறிப்பு.

டேட்டா நெட்வொர்க் : அந்த குறிப்பில் ஜியோவின் மலிவான குரல் அழைப்புகள் மற்றும் தரவு சலுகைகள் ஆனது பலவீனமான ஆபரேட்டர்களை முக்கியமாக டேட்டா நெட்வொர்க்குகளில் முதலீடு செய்யாதவர்களை வெளியேற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
25% தொழில் வருமானம் : அம்மாதிரியான பலவீனமான ஆபரேட்டர்கள் 25% தொழில் வருமானத்திற்காக போராடுகிறது என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலவீனம் : கட்டுக்குட்பட்ட நிதிநிலை கொண்ட பலவீனமான ஆப்ரேட்டர்கள் ரிலையன்ஸ் ஜியோவிற்கு நிகரான ஆக்கிரமிப்பு மிகுந்த சலுகைகளை வழங்க இயலாது என்பது நிதர்சனம்.

டெர்மினேஷன் ரேட் : மறுபக்கம் இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கத்தின் ( COAI) கீழ் உள்ள சிறிய (டெலினார் , ஏர்செல் மற்றும் வீடியோகான்) ஆப்ரேட்டர்கள் 'டெர்மினேஷன் ரேட்'களை குறைக்ககோரி வலியுறுத்தி வருகின்றன.

மொபைல் வேலெட் : ஏர்செல் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிக் கேஷன்ஸ் உடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது என்பது சமீபத்தில் மொபைல் வேலெட் சேவைக்குள் நுழைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை : பிற வேலெட் சேவைகளை போலின்றி புதிய வாடிக்கையாளர்களை ஐந்தே சேவை மூலம் பெறுவோம் மற்றும் ஒரு நாள் 80 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டிருப்போம் என்றும் ஏர்செல் நம்பிக்கை அளித்துள்ளது.

ஜியோ சவால் : ஏற்றுக்கொள்ளும் பிஎஸ்என்எல், சாதிக்குமா..?



இந்திய அரசின்கீழ் இயங்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது ரிலையன்ஸ் ஜியோ சேவையானது, பிற அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் ஒரு "சவால்" ஆகும். இருப்பினும் ரிலையன்ஸ் ஜியோவின் சலுகைக்கு நிகரனான சலுகைகளை வழங்கி தீவிரமான போட்டியை பிஎஸ்என்எல் நிலைநிறுத்தும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது. 

அப்படியாக ஜியோவிற்கு நிகரான நிலையை அடைய பிஎஸ்என்எல் என்னென்ன எதிர்கால திட்டங்கள் வகுக்கின்றது, என்னென்ன வியூகங்கள் கொண்டுள்ளது என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஆக்கிரோஷம் : அதாவது ஒரு ஆக்கிரோஷமான நிலைப்பாடு கொண்ட சலுகைகளை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் பிஎஸ்என்எல் மாற இருக்கிறது என்று அதன் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனரும் ஆன அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

1 ரூபாய் : ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் வெளியான மறுநாளே மிக அதிக பயன்பாடு சந்தாதாரர்களுக்கு 1 ஜிபி பதிவிறக்கத்திற்கான செலவு 1 ரூபாய்க்கும் குறைவான விலையில் என்ற தனது அதிரடி திட்டத்தை பிஎஸ்என்எல் வெளியிட்டது.

உறுதி : அந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் ஆனது வெற்றிகரமாக ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு நிகராக பொருந்திக்கொள்ளும் நிலைப்பாட்டை உறுதி செய்து கொண்டதாக நம்பியது.

உண்மை நிலை : "ஆனால், தற்போதைய உண்மை நிலை என்னவென்றால் ஜியோ சலுகைக்கு நிகரனான (டரிஃப்-டு-டரிஃப்) சலுகைகள் சந்தையில் வழங்கப் படவில்லை எனில் ஜியோ உடனான போட்டியில் நிலைத்திருக்க இயலாது."

ஆக்கிரமிப்பு : அப்படியான ஜியோ கட்டண சலுகைகள் மிகவும் ஆக்கிரமிப்பு மிகுந்ததாக இருந்தால், பிஎஸ்என்எல் மற்றும் பிற அனைத்து ஆபரேட்டர்களின் கட்டண சலுகைகளும் ஆக்கிரமிப்பு மிக்கதாய் இருக்க வேண்டும்" என்று ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

சிறப்பான சலுகை : ரிலையன்ஸ் ஜியோவின் வருகையானது அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் கடுமையான போட்டிதான் என்பதுடன் இந்த போட்டி மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான சலுகைகளை வழங்க முடியும் என்பதையும் சேர்த்தே ஒற்றுக்கொள்ளவேண்டும்.

சொந்த நெட்வொர்க் : லேண்ட்லைன் மற்றும் ஒளியிழை ஆப்ரேட்டர் இருப்பதால் பிஎஸ்என்எல் அதன் சொந்த நெட்வொர்க்கில் பிராட்பேண்ட் சேவையை வழங்கும், ஆக கொள்முதல் தொடங்க, முதலீடு செய்ய வேண்டிய நிலை பிஎஸ்என்எல்-க்கு கிடையாது.

இலவச இரவு நேர அழைப்பு : ஏற்கனவே பிஎஸ்என்எல் இரவு 9 மணி தொடங்கி காலை 7 மணி வரையிலான வரம்பற்ற இலவச இரவு நேர அழைப்புகளை அதன் அனைத்து லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குகிறது.

3ஜி : மேலும் பிஎஸ்என்எல் வரம்பற்ற 3ஜி மொபைல் டேட்டாவை ரூ.1099-க்கு வழங்கும் திட்டத்தை அறிவித்து சந்தையில் போட்டியை எதிர்கொள்ள துவங்கியது, மற்றும் சில ஏற்கனவே இருக்கும் திட்டங்களில் தரவு பயன்பாட்டு வரம்பை இரண்டு மடங்காக உயர்த்தியது.

இலவச வாய்ஸ் கால் சேவை : சந்தையில் உள்ள நிலைமையை பொறுத்து 2 அல்லது 3 மாதங்களில் இலவச வாய்ஸ் கால் சேவையை பிஎஸ்என்எல் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ 5ஜி: ரிலையன்ஸின் வியாபாரமும், ராஜ தந்திரமும்..!



இந்திய 4ஜி இணைய சந்தையில், ரிலையன்ஸ் ஒரு புரட்சியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதா என்று கேட்டால் என்று கேட்டதால், அதற்கு பதில் - கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது. ஏனெனில், ரிலையன்ஸின் இந்த முயற்சி தான் உலகிலேயே பெரிய அளவிலான டிஜிட்டல் மய முயற்சியாகும் மற்றும் நாள் ஒன்றில் இருந்தே 70% மக்களை சென்றடைய ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. பிற ஆப்ரேட்டர்களை கலக்கத்தில் மூழ்கடித்த ரிலையன்ஸ்க்கு ஜியோ திட்டம் மட்டுமே துணை அல்ல, இந்திய இணைய சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் ரிலையன்ஸ்க்கு பிற ஆப்ரேட்டர்களுக்கு இல்லாத பல துணைகள் உண்டு, அதில் பல வியாபார யுக்திகளும், ராஜ தந்திரங்களும் உண்டு..!

மிகப்பெரிய : ரிலையன்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய ஒளியிழை நெட்வொர்க் (fiber optic network) கொண்டது.

உயர் தரம் : மொத்தம், 250,000-க்கும் அதிகமான கிமீ நீள உயர் தரமான கண்ணாடி இழை கேபிள், மற்றும் 90,000 சூழல்-நட்பு 4ஜி கோபுரங்கள் வரை ரிலையன்ஸ் நிறுவியுள்ளது.

இணைய அணுகல் : அதில் 288 கேபிள்களை ஜியோ பயன்படுத்திக் கொள்கிறது, அதிக இழைகள் என்றால் அதிக அலைக்கற்றை மற்றும் அதிவேக இணைய அணுகல் என்று அர்த்தம்.

ஒப்பந்தம் : பெரும்பாலான மற்ற நிறுவனங்களிடம், ரிலையன்ஸ் அளவிலான பைபர் நெட்வொர்க்குகளில் சொந்தமாக கிடையாது. ஒப்பந்தம் மூலமே பிற பைபர் நெட்வெர்க்களை பயன்படுத்தி சேவைகளை வழங்குகின்றன.

ஜியோ 4ஜி : ஆனால் ஜியோ 4ஜிக்கு அந்த அவசியமே கிடையாது. ஜியோ அதன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கேபிள்களை அணுகிக் கொள்ளும்.

பெரிய வை-பை : முதலில் மொபைல் டவர்கள் என்றால் என்ன என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். மொபைல் கோபுரங்கள் ஒரு பெரிய அளவிலான வை-பை போன்றது.

இணைய சேவை : உங்கள் வீட்டில் வைஃபை கருவியானது உங்களுக்கு இணைய சேவையை வழங்குவது போலத்தான் பைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு பெரிய ஐஎஸ்பி-களாக திகழும் மொபைல் கோபுரங்கள் மூலம் இணைய சேவையை வழங்குகிறது.

வயர்லெஸ் : அப்படியாக நீங்கள் 3ஜி அல்லது 4ஜி பயன்படுத்தும் போது ஒரு வயர்லெஸ் வழிமுறையில் நீங்கள் உங்களுக்கான மொபைல் டவர்களை தொடர்பு கொள்கிறீர்கள், டேட்டா கோபுரத்தை அடைந்ததும், அதன் முழு டேட்டாவும் பைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் அனுப்பப்படும்.

சங்கடம் : இப்படியாகத்தான் வேகமான 4ஜி சேவையை வழங்க ஃபைபர் பிணைய கேபிள்கள் மிக அத்தியாவசியமான ஒன்றாக திகழ்கிறது, இந்த விடயத்தில் பிற சேவை வழங்குநர்கள் ஒரு பெரிய சங்கடமான சூழலில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

2ஜி மற்றும் 3ஜி : ரிலையன்ஸ் நிறுவனத்திற்கோ பழைய 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளை கொண்டுள்ளது இப்பொது அவைகளை 4ஜி சேவைக்காக மேம்படுத்தினால் மட்டுமே போதும்.

ஒரே கவலை : கடந்த முறை 3ஜிக்காக டவர்கள் மேம்படுத்தப்பட்ட போது அவர்கள் எதிர்பார்த்த 3ஜி வருமானம் உருவாக்கப்படவில்லை, முதலீடுகளில் பல்லாயிரம் கோடி இழந்தது, ஆக இம்முறை நல்ல உள்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரே கவலை.

ஜியோ : மறுபக்கம் ரிலையன்ஸ் நிறுவன வியாபாரத்தின் தொலைநோக்கு பார்வையையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது இந்த ஜியோ திட்டமானது வெறும் 4ஜி சேவைக்கானது மட்டுமல்ல என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

5ஜி : ஜியோவிற்கு அடுத்தது 5ஜி தான் வெளிவரும், அடுத்த கட்டம் 5ஜி தான் என்பது நன்றாக தெரியும். அதனால் ரிலையன்ஸ் நிறுவன ஒளியிழை பிணையமானது 4ஜி உடன் சேர்த்து வருங்கால 5ஜிக்கு அப்கிரேட்'தனிற்கு ஏற்றது போல தன்னை மேம்படுத்திக் கொள்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்கள் இவை தான்.!!

எங்குச் சென்றாலும் யாரைப் பார்த்தாலும், ஜியோ சிம் வாங்கிட்டீங்களா, என் போன்லையும் அது வேலை செய்யுமானு தான் எல்லோரும் கேட்கின்றார்கள்.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டு விட்டது. விநாயகர் சதுர்த்தி விசேஷமாக வெளியிடப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ 4ஜி எந்தெந்த கருவிகளில் வேலை செய்யும் என்ற குழப்பம் எல்லோரிடமும் காணப்படுகின்றது. ஜியோவை சமாளிக்க ரூ.249க்கு அன்-லிமிட்டெட் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!! உங்களது கேள்விகளுக்கு பதிலாக இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வேலை செய்யும் அனைத்துக் கருவிகளின் பட்டியலை இங்குப் பாருங்கள்..

சியோமி ரெட்மி நோட் 3

சியோமி எம்ஐ 5

சியோமி ரெட்மி 2 பிரைம்

மோட்டோரோலா மோட்டோ ஜி4

மோட்டோ ஜி4 பிளஸ்

மோட்டோ ஜி டர்போ எடிஷன்

ஒப்போ எஃப்1

ஒப்போ எஃப்1 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி எஸ்7

சாம்சங் கேலக்ஸி ஏ8

சாம்சங் கேலக்ஸி ஏ5 2016

சாம்சங் கேலக்ஸி நோட்5

சாம்சங் கேலக்ஸி ஜெ2 2016

சாம்சங் கேலக்ஸி ஆன்5

சாம்சங் கேலக்ஸி ஆன்7

சாம்சங் கேலக்ஸி ஜெ7

சாம்சங் கேலக்ஸி ஜெ5

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் பிளஸ்

சாம்சங் கேலக்ஸி நோட் 5 டூயோஸ்

சாம்சங் கேலக்ஸி ஜெ2 ப்ரோ 2016

சாம்சங் கேலக்ஸி நோட் எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி நோட் 4

சாம்சங் கேலக்ஸி ஏ7 2016

சாம்சங் கேலக்ஸி கோர் பிரைம்

பிளாக்பெரி ப்ரிவ்

ஜியோணி இலைஃப் எஸ்6

ஜியோணி எம்5 பிளஸ்

ஜியோணி பாயனீர் பி5எல் 2016

இன்ஃபோகஸ் எம்370

இன்ஃபோகஸ் எம்370ஐ

இன்டெக்ஸ் அக்வா ரேஸ்

இன்டெக்ஸ் அக்வா 4ஜி ஸ்ட்ராங்

இன்டெக்ஸ் அக்வா 4ஜி பிளஸ்

கார்பன் ஔரா பவர்

எல்ஜி கே7

எல்ஜி கே10

எல்தி ஸ்பிரிட்

எல்ஜி ஜி4 ஸ்டைலஸ்

எல்ஜி நெக்சஸ் 5எக்ஸ்

எல்ஜி ஜி3

லைஃப் வாட்டர் 1

லைஃப் வாட்டர் 2

லைஃப் ஃபிளேம் 3

சோனி எக்ஸ்பீரியா இசட் 5 பிரீமியம்

சோனி எக்ஸ்பீரியா இசட் 5

மைக்ரோமேக்ஸ் யு யுஃபோரியா

யு யுனிக்

மெய்ஸூ எம்3 நோட்

லாவா ஏ88

லாவா ஏ71

லெனோவோ வைப் ஷாட்

லெனோவோ ஏ6000 பிளஸ்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் 4ஜி க்யூ491

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5

பானாசோனிக் எலுகா ஆர்க்

பானாசோனிக் எலுகா ஐ2

பானாசோனிக் எலுகா ஐ3

பானாசோனிக் எலுகா ஐகான்

RJIOஆர்ஜியோ : ஒவ்வொரு சலுகையிலும் 25% அதிக டேட்டா பெறுவது எப்படி..?



ரிலையன்ஸ் ஜியோ சேவையானது வணிக ரீதியாக செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. ரிலையன்ஸ் சேவைகள் தான் நாட்டின் மிகவும் மலிவான டேட்டா சலுகைகள் என்பது ஒருபக்கமிருக்க, மறுபக்கம் ஒவ்வொரு சலுகைகளிலும் கூடுதலாக 25 சதவீத தரவு பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா.? ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் படி, செப்டம்பர் 5 முதல் டிசம்பர் 31 வரையிலாக சேவை பெறும் பயனர்கள் வரம்பற்ற மற்றும் இலவச தரவு, குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை அனுபவிக்க முடியும்.

சிறப்பு சலுகை : அசத்தலான சலுகைகளுக்கு மத்தியில் ரிலையன்ஸ் 
நிறுவனம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வளமான வாய்ப்பை கொண்டு வரும் நோக்கத்தில் சிறப்பு சலுகை ஒன்றை வழங்குகிறது.

மாணவர் அடையாள அட்டை : அதாவது சரியான மாணவர் அடையாள அட்டை வழங்கும் பயனர்கள் அனைவரும் ஒவ்வொரு கட்டண திட்டத்தின் மீதும் 25 சதவீத கூடுதல் தரவை பெற முடியும்.

விவரங்கள் : அவைகள் என்னென்ன கட்டண திட்டங்கள், அத்திட்டங்கள் மூலம் கிடைக்கப்பெறும் சலுகைகள் என்னென்ன என்ற விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

திட்டம் ரூ. 149 : இந்த திட்டம் மூலம் ரிலையன்ஸ் இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் வாய்ஸ் கால்களை நிகழ்த்தலாம், உடன் வழங்கப்படும் 0.3 ஜிபி டேட்டா 28 நாட்கள் வரை செல்லுபடியாகும். இத்துடன் 100 இலவச உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ்களும் இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.

திட்டம் ரூ.499 : இந்த திட்டத்தில் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 4 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 8 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.999 : இந்த கட்டண திட்டம் படி, ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 10 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 20 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.1499 : இந்தத் திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 20 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 40 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.2499 : இந்தத் திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 35 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 70 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.3999 : இந்தத் திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 60 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 120 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.4999 : இந்தத் திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 75 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 150 ஜிபி தரவு வழங்கப்படும்.

3ஜி போன்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துவது எப்படி..?



Jio 4G LTE Network - Experience High Speed 4G Mobile Internet


நீங்கள் எந்த நெட்வெர்க்கை பயன்படுத்துபவராக இருப்பினும் சரி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜியின் 90 நாட்களுக்கான இலவச டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்களின் முன்னோட்ட சலுகையை பற்றி அறிந்தால் நிச்சயம் உங்கள் நெட்வெர்க்கை ரிலையன்ஸ்க்கு மாற்ற விரும்புவீர்கள். அப்படியாக, உங்கள் 4ஜி போன்களில் எப்படி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம்மை பொருத்துவது என்பதை முன்பு விளக்கி இருந்தோம். இப்போது உங்கள் 3ஜி ஸ்மார்ட்போன்களில் ரிலையன்ஸ் ஜியோ சிம்மை பயன்படுத்துவைத்து எப்படி என்பதை இங்கு விளக்கியுள்ளோம். (வாசகர்களின் கவனத்திற்கு, இந்த வழிமுறையானது ஒரு அதிகாரப்ப்பூர்வமான ஒன்றல்ல என்பதும், இந்த பணியின் போது ஏதேனும் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அதற்கு தமிழ் கிஸ்பாட் பொறுப்பல்ல, இதை உங்கள் சொந்த விருப்பத்தின் கீழ் செயல்படுத்தி பார்த்துக் கொள்ளவும்)


தந்திரம் : உங்கள் 3ஜி ஸ்மார்ட்போன்களில் சில குறிப்பிட்ட தந்திரங்களை பயன்படுத்தி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம்மை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

4ஜி, 3ஜி : அத்துடன் உங்கள் 3ஜி போனில் ஜியோ சிம் கார்ட் இணைய அணுகலை வழங்கினாலும் கூட உங்களால் 3ஜி சேவையைத்தான் பெற முடியுமே தவி, 4ஜி சேவையை பெற இயலாது என்பதும், மற்றும் பிற ஆப்ரேட்டர்களை விட கணிசமாக வேகத்தில் அணுகல் இருக்கும் குறிப்பிடத்தக்கது

தேவைகள் : உங்கள் 3ஹாய் போனில் 4ஜி பயன்படுத்த சில தேவைகள் அவசியமாகிறது முக்கியமாக ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் அல்லது மீடியாடெக் சிப்செட்.

கவனம் : உங்களின் 3ஜி போனில் ஜியோ சிம் கார்டை பயன்படுத்தும் போது நீங்கள் பின்பற்றும் வழிமுறைகளில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

வழிமுறை #01 முதலில், இங்கு வழங்கப்பட்டுள்ள லின்க்கை பயன்படுத்தி எம்டிகே என்ஜினீயரிங் மோட் ஆப்பை பதிவிறக்கம் செய்யவும்
https://play.google.com/store/apps/details?id=com.themonsterit.EngineerStarter&hl=en

வழிமுறை #02 அந்த ஆப் ஆனது எம்டிகே போன்களுக்கான என்ஜினீயரிங் மோட் மெனு விற்கான அட்வான்ஸ்டு செட் அப்-பை ரன் செய்யும், அதை சர்விஸ் மோட் என்றும் கூறலாம்.

வழிமுறை #03 நிறுவப்பட்ட ஆப்பை திறந்து அதில் என்ஜினீயரிங் மோட்'கான குறிப்பிட்ட மொபைல் குறியீட்டை பதிவு செய்யவும்.

வழிமுறை #04 பின்பு எம்டிகே செட்டிங்ஸ் சென்று பிரபர்டு நெட்வெர்க்கை தேர்வு செய்யவும்.

வழிமுறை #05 பின்னர், நீங்கள் 4ஜி, எல்டிஇ, டபுள்யூசிடிஎம்ஏ அல்லது ஜிஎஸ்எம் ஆகிய நெட்வொர்க்க்குகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின் அதை சேவ் செய்து விட்டு உங்கள் போனை ரீஸ்டார்ட் செய்யவும்.

வாசகர்களின் கவனத்திற்கு: 

இந்த வழிமுறையானது ஒரு அதிகாரப்ப்பூர்வமான ஒன்றல்ல என்பதும், இந்த பணியின் போது ஏதேனும் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, 

இதை உங்கள் சொந்த விருப்பத்தின் கீழ் செயல்படுத்தி பார்த்துக் கொள்ளவும்