CHENNAI
சென்னை சிறப்பு
இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர். இந்தியாவின் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்று. 2000 ஆண்டுகள் பழமையானது. சிறந்த கலை, கலாசார மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகிறது. உலகின் இரண்டாவது நீண்ட, அழகிய கடற்கரை (மெரினா) உள்ள நகரம். இந்திய நகரங்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளுடனும் சிறந்த போக்குவரத்துத் தொடர்பு.
COIMBATORE

பரப்பளவு : 174 சதுர கிலோ மீட்டர்
மக்கள் தொகை : 70 லட்சம்.
உயரம் : கடல் மட்டம்
மழை அளவு : 1272 மி.மீட்டர் (ஆண்டு சராசரி).
பேசப்படும் மொழிகள் : தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது, ஆங்கிலம்.
சென்னை நகரம் தென் இந்தியாவின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ( சோழமண்டல கடற்கரை) ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி இந்த நகரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த வெங்கடபதி சகோதரர்கள் இந்த பகுதியைத் தங்களுடைய தந்தையின் பெயரால் சென்னப்பட்டணம் என்று அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆரம்பத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் 4வது மெட்ரோபாலிடன் நகராக இது விளங்குகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழும் சென்னை, ஒரு மாவட்டமாகவும் இருக்கிறது. பல்வேறு மொழிகளைப் பேசும் நவீன காஸ்மோபாலிடன் நகராக சென்னை விளங்குகிறது. பரந்த மணற்பரப்புடன் கூடிய கடற்களை, பூங்காக்கள் மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாக சென்னை விளங்குகிறது. சென்னை நகர மக்கள், இசை, நடனம் மற்றும் இதர தென் இந்திய கலைகளில் நாட்டம் உள்ளவர்கள்.
தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் 2006ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6 கோடியே 96 லட்சமாக உள்ளது. திராவிட நாகரிகத்தின் உறைவிடமாக திகழும் சென்னை, தென் இந்திய கட்டிட வேலைப்பாடு, இசை, நடனம், நாடகம் மற்றும் இதர கலைகளின் ஊற்றாகவும் காட்சி அளிக்கிறது. மிகப்பெரிய வர்த்தக, தொழிற்துறை நகரமாகவும் சென்னை விளங்குகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, இந்திய வாகன உற்பத்தி தலைநகராக விளங்கும் சென்னையில்தான் உள்ளன. சென்னையில் உள்ள 12 கிலோமீட்டர் நீள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக திகழ்கிறது. புதுமையும் பழமையும் கலந்த நகராக இது இருக்கிறது. 200 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த நகரம் மேலும் விரிவடைந்து வருகிறது.
சென்னைக்கு செல்லும் வழி: இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் பெரிய சர்வதேச நகரங்களிலிருந்து சென்னைக்கு விமான சர்வீஸ் உள்ளது. இந்தியன், ஜெட் ஏர்வேஸ், சகாரா ஏர்லயன்ஸ், ஸ்பைஸ் ஜெட், கிங்பிஷர் போன்ற உள்நாட்டு விமான நிறுவனங்கள் சென்னைக்கு விமானங்களை இயக்குகின்றன. உள்நாட்டு விமான நிலையம் சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து 20 கி.மீ., தொலைவில் மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்து சென்னைக்கு சாலை வசதி உள்ளது. சென்னை பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் நிலையம் ஆசியாவிலேயே பெரிய பஸ் நிலையமாக கருதப்படுகிறது. கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலையில் இது அமைந்துள்ளது.
சென்னையில் சென்னை சென்டரல், எழும்பூர் என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் இந்த இரு ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சர்வீஸ் உள்ளது. சென்னையிலிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேருக்கு கப்பல் போக்குவரத்து இயங்கி வருகிறது.
செனனை நகரில் அரசு நகர பஸ்கள் இயங்குகின்றன. சுற்றுலா மற்றும் இதர தேவைக்கு வாடகைக்கார்களும் கிடைக்கும். விமான நிலையத்திலும் ரயில் நிலையங்களிலும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பயணம் செய்யத்தக்க டாக்சிகள் கிடைக்கும். அதி விரைவு உள்ளூர் ரயில் போக்குவரத்தும் உள்ளது.
1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.
ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.
1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள உயரமான மற்றும் பெரிய பூங்கா கோபுரம். அண்ணாநகர் பூங்காவில் அமைந்துள்ள இந்த கோபுரம் வட்ட வடிவில் சுற்றி சுற்றிச் செல்லும் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது. இதன் உச்சியில் இருந்து சென்னையை முழுமையாக கண்டு ரசிக்க முடியும். அண்ணாநகர் ரவுன்டானா அருகே அமைந்துள்ள இதற்கு நுழைவு கட்டணம் ரூ.1; காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தில் 7 நாட்களும் இது திறந்திருக்கும்.
இந்த நவீன கோளரங்கம் அரை வட்ட வடிவிலான உருண்டையான கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர் மய கருவிகள் மூலம் வானில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் காண முடியும். கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அருகே பெரியார் அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையத்தில் அமைந்துள்ள இந் கோளரங்கத்தில் ஆங்கிலம் ( காலை 10-45; பகல் 01-15; 03-45) தமிழ் ( பகல் 12; 02-30) மொழிகளில் விளக்கம் தரப்படுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20; சிறியவர்களுக்கு ரூ.10.
தேசிய நூலகங்களில் ஒன்று. இங்கு ஏராளமான நூல்களும் இதழ்களும் உள்ளன. கம்பூயட்டரில் இயங்கும் தொடுதிரை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள இது காலை 9 மணி முதல் இரவு 07- 30 வரை திறந்திருக்கும். தேசிய விடுமுறை நாட்களில் இது செயல்படாது. அனுமதி இலவசம்.
பாந்தியன் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் தற்கால கலைப் பொருட்கள் முதல் வரலாற்று காலத்துக்கு முற்பட்ட கலைப் பொருட்கள் வரை இடம் பெற்றுள்ளன. இங்கு பிரதான தென் இந்திய ராஜ பரம்பரைகளின் நினைவுச் சின்னங்கள் பெருவாரியாக உள்ளன. இங்குள்ள பல்வேறு கால வெண்கல மற்றும் இதர உலோக சிற்பங்கள், விலங்கியல் மற்றும் புவியியல் பகுதிகள் பார்வையாளர்களின் கருத்தைக் கவர்வதாக உள்ளன. அமராவதி பகதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், அவரது வாழ்க்கையைச் சித்தரிப்பதாக உள்ளன. இங்குள்ள தேசிய கலைப் பொருள் பகுதியில் 10 முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்த வெண்கலப் பொருட்கள், 16, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த முகலாய ஓவியங்கள், ராஜஸ்தானி மற்றும் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிண கலைப் பொருட்கள், பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள் ஆகியவை கண்ணைக் கவர்வதாக அமைந்துள்ளன தேசிய கலைப்பொருள் பகுதி அமைந்துள்ள கட்டிடம் சிவப்பு கற்களால் கட்டப்பட்டது. இங்குள் பொருட்கள் மட்டுமல்லாமல் இந்த கட்டிடமே ஒரு கலைப்பொருளாக திகழ்கிறது.
தென்சென்னையில் அமைந்துள்ள அழகான சிற்றுலா தலம். இந்த அழகான கடற்கரைக்கு இங்கு அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது. 8 முகங்களுடன் கூடிய லட்சுமி விக்ரகங்கள் தனித்தன் கருவறையில் அமைந்துள்ளன. இந்த கடற்கரைப் பகுதியில் ஆரோக்கிய மாதா மடோனாவின் தேவாலயமும் உள்ளது.
அழகான மெரினா கடற்கரையில் நடந்து கொண்டே வங்க கடலையும் அதில் மோதும் அலைகளையும் ரசிக்கலாம். இனிமையான கடற்காற்றை சுவாசிக்கலாம். உலகிலேயே 2வது நீண்ட கடற்கரையாக மெரினா கடற்கரை திகழ்கிறது. இந்த கடற்கரைப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடங்கள் அமைந்துள்ளன. மேலும் தமிழ் அறிஞர்கள், தியாகிகள் சிலைகள் இங்கு அமைந்துள்ளன. இந்த பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை கலை நுணுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த கடற்கரைச் சாலையில் சென்னை பல்கலைக்கழகம், செனட் ஹவுஸ், சேப்பாக்கம் மாளிகை, அரசு கலைக் கல்லூரி, ஐஸ் ஹவுஸ் ஆகியவை அமைந்துள்ளன.
தலைமை செயலகத்திலிருந்து மெரினா கடற்கரை செல்லும் சாலையில் கூவம் நதி மீது அமைந்துள்ள நேப்பியர் பாலம் 1869ல் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் பொறியியல் தொழில் நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.
சென்னையின் பிரதான வரலாற்றுச் சின்னமாக கருதப்படும் இந்த கோட்டை இங்கிலாந்தின் மத குருவான செயின்ட் ஜார்ஜ் பெயரில் அமைந்துள்ளது. இந்த கோட்டை பகுதியில் தற்போது தமிழக சட்டசபை, தலைமைச் செயலகம், தொல்பொருள் துறை அலுவலகங்கள், ராணுவ முகாம்கள் உள்ளன.
தலைமை செயலகத்திற்கு அருகே அமைந்துள்ள கோட்டை அருங்காட்சியகம் முதலில் கோட்டை ராணுவ அதிகாரிகளின் உணவருந்தும் இடமாக இருந்தது. பின்னர் அது பாங்காக உருவெடுத்தது. தற்போதைய ஸ்டேட் பாங்கின் முன்னோடி இதுதான். 1796ல் இது கலங்கரை விளக்கமாவும் செயல்பட்டது. 1948 முதல் கோட்டை அருங்காட்சியகமாக இயங்கி வரும் இதில் சென்னை நகரை உருவாக்கியவர்களின் மூல கையெழுத்து பிரதிகள், பழங்கால காசுகள், வெள்ளிப் பொருட்கள், சீருடைகள் ஆகியவை உள்ளன.
சென்னை நகரின் மற்றொரு பிரதான கட்டிடமாக கருதப்படும் சென்னை ஐகோர்ட் கட்டிடம் 1892ல் கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள கோர்ட் கட்டிடங்களில் இது இரண்டாவது பெரிய கட்டிடமாகும். சென்னை சட்டக் கல்லூரியும் இதன் வளாகத்தில் அமைந்துள்ளது
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வாழ்ந்த ஆற்காடு சாலையில் உள்ள இல்லம் எம்.ஜி.ஆர்., நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது..
வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத் துறையின் தாயகமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உறைவிடமான இங்கு பல்வேறு நவீன வசதிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களாக பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகளும் இங்கு உள்ளன.
இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான் செயின்ட் தாமஸ் கல்லறை அமைந்துள்ள இடத்தில் சாந்தோம் பாசிலிகா உள்ளது. மெரினா கடற்கரையின் தெற்கு மூலையில் அமைந்துள்ள இதில் இந்த பகுதிக்கான கத்தோலிக்கர்களின் தலைமை மதகுருவான சென்னை ஆர்ச் பிஷப்பின் தேவாலயம் அமைந்துள்ளது.
ஐஸ் ஹவுஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட இடம் 1963 முதல் சுவாமி விவேகானந்தர் நினைவாக விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. 1842 முதல் 1874 வரை ஐஸ் கட்டிகளைச் சேமித்து வøக்கும் இடமாக இது விளங்கியது. தற்போது இதில் விவேகானந்தர் தொடர்பான அரிய படங்கள் இடம் பெற்றுள்ளன.
உலகிலேயே நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஒரே தேசிய பூங்கா கிண்டி தேசிய பூங்காதான். சென்னை நகரின் நுரையீரலாக கருதப்படும் மரங்கள் அடர்ந்த நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில் பல்வேறு மரங்களும் புள்ளி மான் போன்ற அரிய ரக விலங்குகளும், பறவைகளும் உள்ளன.
எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோயிலில் மகாலட்சுமியின் 8 வடிவங்கள் விக்ரகங்களாக உள்ளன. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில். சிவபெருமாøன் மயில் வடிவில் பார்வதி தேவி வழிபட்டதால் இந்த பகுதி மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞான சம்பந்தர் பதிகம் பாடி ஒரு சிறுவனை உயிர்ப்பித்ததாகவும் புராணம் கூறுகிறது. மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் அறுபத்து மூவர் திருவிழா குறிப்பிடத்தக்கது.
மக்கள் தொகை : 70 லட்சம்.
உயரம் : கடல் மட்டம்
மழை அளவு : 1272 மி.மீட்டர் (ஆண்டு சராசரி).
பேசப்படும் மொழிகள் : தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது, ஆங்கிலம்.
வரலாறு
ஆரம்பத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் 4வது மெட்ரோபாலிடன் நகராக இது விளங்குகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழும் சென்னை, ஒரு மாவட்டமாகவும் இருக்கிறது. பல்வேறு மொழிகளைப் பேசும் நவீன காஸ்மோபாலிடன் நகராக சென்னை விளங்குகிறது. பரந்த மணற்பரப்புடன் கூடிய கடற்களை, பூங்காக்கள் மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாக சென்னை விளங்குகிறது. சென்னை நகர மக்கள், இசை, நடனம் மற்றும் இதர தென் இந்திய கலைகளில் நாட்டம் உள்ளவர்கள்.
தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் 2006ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6 கோடியே 96 லட்சமாக உள்ளது. திராவிட நாகரிகத்தின் உறைவிடமாக திகழும் சென்னை, தென் இந்திய கட்டிட வேலைப்பாடு, இசை, நடனம், நாடகம் மற்றும் இதர கலைகளின் ஊற்றாகவும் காட்சி அளிக்கிறது. மிகப்பெரிய வர்த்தக, தொழிற்துறை நகரமாகவும் சென்னை விளங்குகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, இந்திய வாகன உற்பத்தி தலைநகராக விளங்கும் சென்னையில்தான் உள்ளன. சென்னையில் உள்ள 12 கிலோமீட்டர் நீள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக திகழ்கிறது. புதுமையும் பழமையும் கலந்த நகராக இது இருக்கிறது. 200 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த நகரம் மேலும் விரிவடைந்து வருகிறது.
சென்னைக்கு செல்லும் வழி: இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் பெரிய சர்வதேச நகரங்களிலிருந்து சென்னைக்கு விமான சர்வீஸ் உள்ளது. இந்தியன், ஜெட் ஏர்வேஸ், சகாரா ஏர்லயன்ஸ், ஸ்பைஸ் ஜெட், கிங்பிஷர் போன்ற உள்நாட்டு விமான நிறுவனங்கள் சென்னைக்கு விமானங்களை இயக்குகின்றன. உள்நாட்டு விமான நிலையம் சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து 20 கி.மீ., தொலைவில் மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்து சென்னைக்கு சாலை வசதி உள்ளது. சென்னை பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் நிலையம் ஆசியாவிலேயே பெரிய பஸ் நிலையமாக கருதப்படுகிறது. கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலையில் இது அமைந்துள்ளது.
சென்னையில் சென்னை சென்டரல், எழும்பூர் என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் இந்த இரு ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சர்வீஸ் உள்ளது. சென்னையிலிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேருக்கு கப்பல் போக்குவரத்து இயங்கி வருகிறது.
செனனை நகரில் அரசு நகர பஸ்கள் இயங்குகின்றன. சுற்றுலா மற்றும் இதர தேவைக்கு வாடகைக்கார்களும் கிடைக்கும். விமான நிலையத்திலும் ரயில் நிலையங்களிலும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பயணம் செய்யத்தக்க டாக்சிகள் கிடைக்கும். அதி விரைவு உள்ளூர் ரயில் போக்குவரத்தும் உள்ளது.
வரலாற்றில் சென்னை
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் இப்பகுதியில் ஆட்சி புரிந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.
1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.
ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.
1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.
சென்னையின் பூகோள மற்றும் சீதோஷ்ண நிலை:
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரின் வெப்ப நிலை சாதாரணமாக கடுமையாகவே இருக்கும். இருப்பினும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் கடற்காற்று காரணமாக வெப்பம் சற்றே தணிந்து காணப்படும். கோடை காலத்தில் பகல் நேர வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 பாரன் ஹீட்) முதல் 42 டிகிரி செல்சியஸ் (107.6 டிகிரி பார்ன்ஹீட்) வரை இருக்கும். சென்னையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். நகரில் கூவம், அடையாறு இரண்டு ஆறுகள் ஓடுகின்றன.

இன்று சாக்கடை ஆறாக ஓடும் கூவம் நதி முதலில் திரவல்லிக்கேணி ஆறு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த ஆற்ற�ப் பற்றி தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரில் புழல்ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உட்பட பல ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
மக்கள் தொகை
சென்னை நகரின் மக்கள் தொகை 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42 லட்சமாக இருந்தது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்தால் மக்கள் தொகை 64 லட்சத்தைத் தொடுகிறது. சென்னையில் ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரள மாநில மக்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள அனைவருக்கும் தமிழும் பெரும்பலோருக்கு ஆங்கிலமும் பேசத் தெரியும்.
சென்னை பொருளாதாரம்
சென்னையில் வளம் கொழிக்கும் பொருளாதார நிலை நிலவுகிறது. கார்த் தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர் சேவை, பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் நிதி சேவைகள் உட்பட பல துறைகளிலும் சென்னை பொருளாதாரம் சிறந்து விளங்குகிறது. இந்திய பொருளாதாரத்தில் தடைகள் அகற்றப்பட்டபின் கம்ப்யூட்டர் துறை, வர்த்தகம் மற்றும் அவுட்சோர்சிங் துறைகள் பெரிய வளர்ச்சி காண ஆரம்பித்தன.
டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுசன்ஸ், சத்யம், ஐ.பி.எம்., ஆக்சன்சர், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், எச்.சி.எல்., மற்றும் இதர கம்ப்யூட்டர் நிறவனங்கள் சென்னையில் காலூன்றின. டெல், நோக்கியா, மோட்டோரோலா, சிஸ்கோ, சாம்சங், சைமன்ஸ், பிளெக்ஸ்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகின்றன.
இவற்றில சில நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தங்கள் கிளைகளைத் துவக்க உள்ளன. சென்னை நகரில் தற்போது 2 உயிரியல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன.
சென்னையில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு கார்த் தொழிற்சாலைகள் உள்ளன. ஹுண்டாய், மிட்சுபி, போர்டு, டி.வி.எஸ்., அசோக் லேலேண்டு, ராயல் என்பீல்டு, டாபே, டன்லப், எம்.ஆர்.எப்., போன்ற தொழிற்சாலைகள் சென்�யை ஒட்டி அமைந்துள்ளன. ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கான டாங்குகள் தயாரிக்கப்படுகினறன.
பாங்கிங் மற்றும் நிதித் துறையிலும் இந்தியாவில் முக்கிய நகரமாக சென்னை விளங்குகிறது. பணம் கொழிக்கும் தமிழ்த் திரைப்படத் தலைநகராகவும் சென்னை திகழ்கிறது.
சென்னை சுற்றுலா
அண்ணா நகர் கோபுரம்:
பிர்லா கோளரங்கம்:
கன்னிமாரா பொது நூலகம்:
அரசு அருங்காட்சியகம்:
எலியட்ஸ் கடற்கரை:
மெரினா கடற்கரை:
நேப்பியர் பாலம்:
செயின்ட் ஜார்ஜ் கோட்டை:
கோட்டை அருங்காட்சியகம்:
ஐகோர்ட்:
எம்.ஜி.ஆர்., நினைவு இல்லம்:
டைடல் பார்க்:
சாந்தோம் பாசிலிகா:
விவேகானந்தர் இல்லம்:
கிண்டி தேசிய பூங்கா:
அஷ்டலட்சுமி கோயில்:
கபாலீஸ்வரர் கோயில்:
COIMBATORE
இன்று தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய நகராக காட்சியளிக்கும் கோவை நகரம், ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒருபகுதியாக இருந்தது.
வடக்கே தலைமலை என்றழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம், தெற்கே பழநி, கிழக்கே கொல்லிமலை, மேற்கே நீலகிரி என நான்கு பக்கமும் மலை சூழ்ந்த கொங்கு மண்டலத்தில் கோவையும் ஒருபகுதியாகும்.
வடக்கே தலைமலை என்றழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம், தெற்கே பழநி, கிழக்கே கொல்லிமலை, மேற்கே நீலகிரி என நான்கு பக்கமும் மலை சூழ்ந்த கொங்கு மண்டலத்தில் கோவையும் ஒருபகுதியாகும்.
கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை ஆண்டது கன்னடம் பேசும் கங்க மன்னர்கள். பின்னர் கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளும் கோவையை ஆட்சி செய்துள்ளனர்.
வஞ்சித்துறைமுகம் என அழைக்கப்படும் இப்போதைய கேரள கடற்கரையில் வந்திறங்கிய ரோமானிய வியாபாரிகள், கோவை வழியாக முட்டம் மற்றும் கொடுமணல் வந்து ரத்தின கற்களை வாங்கி சென்றுள்ளனர். திருப்பூரில் இருந்து 20 கி.மீ., தூரமுள்ள கொடுமணலில் நடந்த அகழ்வாராய்ச்சியில் இங்கு ரோமானியர்கள் வந்து சென்றதின் அடையாளமாக ஏராளாமான பொருட்கள் கிடைத்துள்ளன.
நொய்யல் நதி: கோவை நகரம் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளாக காட்சியளித்தது. கிடைத்த சில இடங்களில் நெல், கரும்பு, வாழை என பயிரிடப்பட்டது. இதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது காஞ்சிமாநதி என அழைக்கப்பட்ட நொய்யல் நதியாகும்.
நொய்யல் ஆற்றின் குறுக்கே 700 ஆண்டுகளுக்கு முன்பே 23 தடுப்பணைகள் கட்டி, 100 கி.மீ., தூரத்திற்கு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 36 குளங்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
கோவையின் நிலத்தடி நீர்மட்டம் இன்றும் சீராக இருக்க நொய்யல் ஆறும், இதன் குளங்களுமே முக்கிய காரணங்களாகும். நொய்யல் ஆற்றின் கரையில் திருப்பேரூர் என்று அழைக்கப்படும் இடத்தில் இப்போது பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
லிங்க வடிவத்தில் இங்கு இருந்த சிவபெருமானுக்கு காமதேனு தினமும் பால் வார்த்து வந்தது. இதை அறியாத கன்று, காலால் இந்த இடத்தை இடறவே, இங்கு ரத்தம் வெளிவந்தது. இதை கண்டு காமதேனு வருந்தவே, சிவபெருமான் அங்கு தோன்றி, காமதேனுவுக்கு அருள்பாலித்தார். இந்த இடமே பேரூர் பட்டீஸ்வரர் கோயிலானது.
சிவபெருமானின் பக்தரான சுந்தரர் இங்கு வரவேண்டும் என்பதற்காக, இறைவனும் சக்தியும், சாதாரண உழவர் வேடத்தில் விவசாயம் செய்து, சுந்தரரை இங்கு அழைத்து வந்ததாக பாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கோயிலுக்கு அப்பர் பெருமானும் வந்து சென்றதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
பேரூர் கோயிலில் விஜயநகர பேரசின் காலத்தில் மாதையன் என்ற மன்னர் கட்டிய தெப்பக்குளம் இன்றும் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. பேரூர் கோயிலின் கனகசபை மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றவை. கி.பி. 17 ம் நூற்றாண்டில் அழகாத்திரி நாயக்கரால் இந்த மண்டபம் கட்டப்பட்டது. அற்புதமான நடன அசைவுகளுடன் காணப்படும் இந்த சிலைகள் பேரூர் கோயிலுக்கு பெருமை சேர்க்கிறது.
18ம் நூற்றாண்டின் பாதிவரை, மைசூர் அரசர்களின் கைகளிலும் பின்னர் ஆங்கிலேயர்கள் கைகளிலும் கோவை வந்தது. 1799ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் முழு அளவில் கோவையை கைப்பற்றி பல்வேறு சீர்திருத்தங்களை செய்தனர். கோவை மாவட்டம் முழுவதும் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற கரிசல் நிலம் உள்ள பகுதியாகும். எனவே, இங்கு வெளிநாட்டு பருத்தியை விதைக்க திட்டமிடப்பட்டது. 1819ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் வியாபார அதிகாரியாக இருந்த ராபர்ட்ஹீத் என்பவர், போர்போன் என்ற பருத்தியை கோவைக்கு கொண்டுவந்து விவசாயிகளை விதைக்க வைத்தார். அப்போது முதல் பருத்தி உற்பத்தியும் இதை நூலாக மாற்றும் தொழிற்சாலைகளும் கோவையில் உதயமானது. இதுவே காலப்போக்கில் கோவையில் மிகப் பெரிய தொழிற்புரட்சியை உருவாக்கி, தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' என்ற பெயரை கோவைக்கு உருவாக்கி தந்தது.
வியாபாரம் பெருகுவதற்காக, 1856 ம் ஆண்டு, கோவையில் இருந்து போத்தனூர் வழியாக சென்னைக்கு இருப்பு பாதை போடப்பட்டது. பிறகு மேட்டுப்பாளையத்திற்கும், பின்னர் கோவை- ஈரோட்டிற்கு மற்றொரு இருப்பு பாதைகள் போடப்பட்டது.
அப்போதைய கோவை நகரின் வெளியே, 1862ம் ஆண்டு 190 ஏக்கரில் மிகப் பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டது. இது ஆறு ஆண்டுகள் கட்டப்பட்டு 1868 ம் ஆண்டு முடிக்கப்பட்டது. செக்கிழுத்த செம்மல் விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அடைக்கப்பட்டது இந்த சிறையில்தான். இவர் இழுத்த செக்கு இன்றும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கோவை நகரை நிர்வகிக்க 1865 ம் ஆண்டு முதல் நகரசபை அமைக்கப்பட்டது. அது இப்போது மாநகராட்சியாக உயர்ந்துள்ளது.
SALEM
கோவை நகரை நிர்வகிக்க 1865 ம் ஆண்டு முதல் நகரசபை அமைக்கப்பட்டது. அது இப்போது மாநகராட்சியாக உயர்ந்துள்ளது.
SALEM
சேலம் சிறப்பு
சேலம் மலைகள் சூழ்ந்து காணப்பட்டதால் சைலம் என்று அழைக்கப்பட்டு அது சேலம் என மருவியதாகவும், சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு, சேலம் என மருவியதாகவும், சமண சமயத்தின் முக்கிய தளமாக இருந்ததால், சைலம் என அழைக்கப்பட்டு சேலம் என மருவியதாகவும் என பல்வேறு காரணங்கள் சேலத்தின் பெயருக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. இந்நகரைச் சுற்றி முழுவதும் மலைகள் அமைந்துள்ளது. இந்த ஊரின் வடக்குப் பகுதியில் நாகர்மலையும், மேற்குப் பகுதியில் காஞ்சனமலையும் அமைந்துள்ளது.
சேலத்திற்கு மாம்பழ நகரம் என்ற பெயரும் உண்டு. இந்நகரில் லாரி கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு, பாக்ஸைட் தயாரிப்பு, நெசவுத் தொழில் போன்ற தொழில்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.வணிகத்துறையில் சிறந்து விளங்கும் சேலம் தமிழ்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதி வியாபாரத்தில் உயிர்நாடியாக விளங்குகிறது. புகழ்பெற்ற சேலம் உருக்காலை தற்போது தனியாரிடம் ஒப்படைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சேலத்தில் சாயத்தொழிற்சாலை, உணவுப்பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளும் உள்ளன.
பரப்பளவு : 91.34 ச.கி.மீ
மக்கள் தொகை : 6,39,236
உயரம் : கடல் மட்டத்தில் இருந்து 278 மீ
இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் ராஜகோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆகஸ்டு-செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் நுழைவு வாயில் கோபுரத்தின் வழியாக மாலை நேர வெயில் நுழைந்து கருவறையில் இருக்கும் சிவகாமி சமேதராக வீற்றிருக்கும் கைலாசநாதர் சிலை மீது விழும்.
சிறப்புகள் :மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண அன்றைய தேதிகளில் கோயிலில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதும். ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது.இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில் உள்ளது.பாதாள லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்து பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன. ஜூரகேஸ்வரர் : இத்தலத்தில் உள்ள ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் குணமடைகின்றன.
ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை ஊராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
19ம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காபி செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு அருவியில் குளித்து மகிழ கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எனும் அருவி ஒன்றும் உள்ளது. ஏற்காடு ஏரியில் நிரம்பினால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இங்குள்ள பக்கோடா முனை எனுமிடத்திலிருந்து பார்த்தால் கீழுள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் இங்கு மலர்க்கண்காட்சி நடைபெறும். ஏற்காடு அடிவாரத்தில் குருவம்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. ஏற்காடு செல்வோர் இங்கும் சென்று வரலாம். ஏற்காடு செல்வோர் பஸ் அல்லது ரயில் மூலம் சேலம் வந்து அங்கிருந்து மலைக்குச் செல்லும் விசேஷப் பேருந்தில் பயணம் செய்யலாம்.
ஊட்டி, கொடைக்கானல் சென்று கோடைக் காலத்தை கழிக்க வசதியில்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் ஏற்காட்டில் மிகக் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம்.ஏற்காடு
தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய அணைகளில் இதுவும் ஒன்று. 1934 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணைக்கட்டின் மொத்த நீளம் 1700 மீட்டர்கள் ஆகும். இங்குள்ள மேட்டுர் நீர்மின் உற்பத்தி நிலையம் மிகவும் பெரியதாகும். இங்குள்ள பூங்கா, மலைப்பகுதி மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.
மக்கள் தொகை : 6,39,236
உயரம் : கடல் மட்டத்தில் இருந்து 278 மீ
வரலாறு
சேலம் மலைகள் சூழ்ந்து காணப்பட்டதால் சைலம் என்று அழைக்கப்பட்டு அது சேலம் என மருவியதாகவும், சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு, சேலம் என மருவியதாகவும், சமண சமயத்தின் முக்கிய தளமாக இருந்ததால், சைலம் என அழைக்கப்பட்டு சேலம் என மருவியதாகவும் என பல்வேறு காரணங்கள் சேலத்தின் பெயருக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட காலத்தின்போது, சேலம் வளர்ச்சியடைந்த கிராமமாக இருந்தது. 1801ல் சேலத்தின் மக்கள் தொகை 10 ஆயிரம். சேலத்தின் சுகாதார பணிகளை கவனிக்க, ஆங்கிலேயர்களால் 1857ல் சுகாதார சபை என்ற 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த அமைப்பின் மூலம் சுகாதார பணிகள் மட்டும் கவனிக்கப்பட்டன.
அதன்பின் 1886 நவ., முதல் தேதியன்று நகராட்சியாக, சேலம் அறிவிக்கப்பட்டது. சேலம் நகராட்சியின் முதல் கூட்டம், ஆங்கிலேயே கலெக்டர் அர்பத்நட் தலைமையில் நடந்தது. அவர் உட்பட 12 பேர் கலந்து கொண்ட நகராட்சி கூட்டம், 'கமிஷனர்கள் கூட்டம்' எனப்பட்டது. நகராட்சியின் முதல் தலைவராக, கலெக்டர் அர்பத்நட் இருந்தார். அப்போது சேலம் நகராட்சி ஒன்பது வார்டுகளை மட்டுமே கொண்டிருந்தது. சுதந்திர போராட்ட தலைவர்களில் முக்கியமானவரான ராஜாஜி, 1917- 1919ல் சேலம் நகராட்சி தலைவராக இருந்தார்.
சேலம் நகராட்சி படிப்படியாக விரிவடைந்து, பெரிய நகராட்சியாக மாறியது. 1972 ஏப்., முதல் தேதியன்று சேலம், சிறப்பு நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. மொத்தம் 20.02 ச.கி.மீ., பரப்பளவு கொண்டிருந்த சேலம் நகராட்சி 44 வார்டுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி சேலம் நகராட்சியில் மூன்று லட்சத்து 66 ஆயிரத்து 712 பேர் வசித்தனர். சேலம் நகராட்சியின் கடைசி நகர மன்ற தலைவராகவும், மக்களால் முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி தலைவராகவும் இருந்தவர் தி.மு.க.,வை சேர்ந்த டாக்டர் சூடாமணி.
நகராட்சியாக இருந்த சேலம், 1994 ஜூன் முதல் தேதியன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்படி சேலம் மாநகராட்சியின் பரப்பளவு 91.34 ச.கி.மீ., மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. சேலம் மாநகராட்சி சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி என மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
* சேலத்தில் இரண்டாயிரத்து 168 வீதிகள், நான்கு வாரச்சந்தைகள், 10 தினசரி மார்க்கெட்டுகள் உள்ளன. தாதாகாப்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் உழவர் சந்தைகள் உள்ளன. சேலம் மாநகராட்சியில், 'ஏ' கிரேடு அந்தஸ்துடன் வெளியூர் பஸ்களுக்கான புதிய பஸ் நிலையமும், 'பி' கிரேடு அந்தஸ்துடன் டவுன் பஸ்களுக்கான பழைய பஸ் நிலையமும் உள்ளன.
* மாநகராட்சிக்கு சொந்தமாக பொதுக்கூட்டம் நடத்த வசதியான போஸ் மைதானமும், கலைநிகழ்ச்சிகளை நடத்த வசதியாக நேரு கலையரங்கம், தொங்கும் பூங்கா ஆகியவையும், கோட்டை பகுதியில் மாநகராட்சி கலைஞர் திருமண மண்டபமும் உள்ளன. மக்களின் பொழுது போக்கு வசதிக்காக அண்ணா பூங்கா, ராமகிருஷ்ணா பூங்கா, ஃபேர்லேன்ட்ஸ் சிறுவர் பூங்கா, குரும்பப்பட்டி உயிரியியல் பூங்கா ஆகியவை உள்ளன.
* சேலத்தில் ஏழு மாநகராட்சி மேல்நிலை பள்ளிகள், மூன்று மாநகராட்சி உயர்நிலை பள்ளிகள், ஒன்பது நகராட்சி நடுநிலை பள்ளிகள், 41 நகராட்சி துவக்க பள்ளிகள், 60 மாநகராட்சி சத்துணவு மையங்கள் ஆகியவை உள்ளன.
* சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் அலோபதி மருத்துவமனைகள் நான்கு, ஆயுர்வேத மருத்துவமனைகள் மூன்று, சித்தா மருத்துவமனைகள் ஒன்று, யுனானி மருத்துவமனை ஒன்று, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல இல்லம் ஒன்பது ஆகியவை உள்ளன.
* சேலம் மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சேலம்- மேட்டூர் பழைய குடிநீர் திட்டம் மூலம் 1 கோடியே 20 லட்சம் லிட்டர் குடிநீரும், மேட்டூர்- ஆத்தூர் குடிநீர் திட்டம் மூலம் 8 கோடி லிட்டர் குடிநீரும் வினியோகிக்கப்படுகிறது. அதில் வழியோர கிராமங்களுக்கு 80 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
* மாநகராட்சியின் முதல் மேயராக, தி.மு.க.,வை சேர்ந்த டாக்டர் சூடாமணி, துணை மேயராக சுபாசு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநகராட்சியின் இரண்டாவது மேயராக அ.தி.மு.க.,வை சேர்ந்த சுரேஷ்குமார், துணை மேயர் சவுண்டப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
* 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாநகராட்சி மேயர் பதவி தாழ்த்தப்பட்டவர் (பெண்) என ஒதுக்கப்பட்டது. மாநகராட்சியின் 60 வார்டுகளில், 36 வார்டுகள் பொது பிரிவினருக்கும், பெண் (பொது) 17 வார்டுகளும், எஸ்.ஸி., (பொது) நான்கு, எஸ்.ஸி., (பெண்) மூன்று என ஒதுக்கப்பட்டது.
* அத்தேர்தலில் தி.மு.க.,வை சேர்ந்த ரேகா பிரியதர்ஷிணி சேலம் மேயராக தேர்வு செய்யப்பட்டார். அவர் சேலம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. துணை மேயராக தி.மு.க.,வின் பன்னீர்செல்வம் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது சேலம் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை (2007ல்) ஏழு லட்சத்து 77 ஆயிரத்து 820. அதில் ஆண்கள் மூன்று லட்சத்து 95 ஆயிரத்து 133 பேர், பெண்கள் மூன்று லட்சத்து 82 ஆயிரத்து 687 பேர்.
சேலம் சுற்றுலா
தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில்:
சிறப்புகள் :மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண அன்றைய தேதிகளில் கோயிலில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதும். ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது.இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில் உள்ளது.பாதாள லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்து பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன. ஜூரகேஸ்வரர் : இத்தலத்தில் உள்ள ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் குணமடைகின்றன.
ஏற்காடு
19ம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காபி செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு அருவியில் குளித்து மகிழ கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எனும் அருவி ஒன்றும் உள்ளது. ஏற்காடு ஏரியில் நிரம்பினால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இங்குள்ள பக்கோடா முனை எனுமிடத்திலிருந்து பார்த்தால் கீழுள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் இங்கு மலர்க்கண்காட்சி நடைபெறும். ஏற்காடு அடிவாரத்தில் குருவம்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. ஏற்காடு செல்வோர் இங்கும் சென்று வரலாம். ஏற்காடு செல்வோர் பஸ் அல்லது ரயில் மூலம் சேலம் வந்து அங்கிருந்து மலைக்குச் செல்லும் விசேஷப் பேருந்தில் பயணம் செய்யலாம்.
ஊட்டி, கொடைக்கானல் சென்று கோடைக் காலத்தை கழிக்க வசதியில்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் ஏற்காட்டில் மிகக் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம்.ஏற்காடு
மேட்டூர் அணைக்கட்டு: