சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்...!
1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.
3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.
4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.
6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.
7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே
8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/
9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471
10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241
================================
பெரியகுளம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி.
நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.சௌந்தரபாண்டியன் பிறந்த
ஊர். முன்னாள் முதல்வர் காமராசருக்கு இருமுடி கட்டி பாதை யாத்திரை நடத்தும்
ஊர். அந்த ஊரில் கூடைப்பந்தாட்ட போட்டியில் சாதனை படைத்திருக்கிறான்
சிறுவன் விஸ்ணுராம்.
இந்த சிறுவன் மற்ற மாணவர்களை போல் அல்ல, ஒரு மாற்றுத்திறனாளி. அவனுடைய
தாயாரும் மாற்றுத்திறனாளி.
பட்டிவீரன்பட்டியில் என்.எஸ்.வி.வி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறான் பிறவிலேயே வாய் பேச முடியாத செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்த அந்த சிறுவன் தன் குறைகளை நிறைவாக்கும் வகையில் கூடைப்பந்தாட்டப்போட்டியில் சாதனை படைத்திருக்கிறான். கடந்த ஆண்டு சத்தீஸகர் மாநிலத்தில் 14 வயதுக்குற்பட்டோருக்கான தேசிய அளவிலான கூடைப்பந்தாட்டப்போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி இருக்கிறார். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சராசரி மாணவர்கள் விளையாடும் இந்த போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
விஸ்ணுராமின் அனைத்து சாதனைகளும் பக்கபலமாக இருக்கிறார் இவரது தந்தை ரமேஸ்பாபு. முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரரான ரமேஸ்பாபு தன் மகனுக்கு தானே பயிற்சியளித்து அவரை பட்டை தீட்டி மெருகேற்றியுள்ளார். தன் மகனின் திறமை கூறிய ரமேஷ்பாபு, கூடைப்பந்தாட்ட மைதானத்திற்கு செல்லும்போது, விஸ்ணுராமையும் அழைத்துச்செல்வேன். முதலில் என் விளையாட்டை வேடிக்கை பார்த்து வந்த அவனுக்கு, பின்னர் கூடைப்பந்து விளையாட்டில் மெல்ல மெல்ல ஈடுபாடு வந்தது.
விளையாட்டில் பயன்படுத்தும் சங்கேத வார்த்தைகளை சைகைகளால் புரிந்து கொண்டான்.அவனுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளித்தேன். தீவிர பயிற்சிக்குப் பின் மற்ற மாணவர்களுடன் சகஜமாக விளையாட ஆரம்பித்தான் என்கிறார் அவரது தந்தை ரமேஸ். யோகாசனத்தில் பட்டயப்படிப்பு முடித்திருக்கும் ரமேஸ்பாபுவின் தீவிர சிகிச்சையால், விஸ்ணுராமின் கேட்கும் திறன் ஓரளவிற்கு மேம்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் யார் கூப்பிட்டாலும் திரும்பி பார்க்காத விஸ்ணுராம். தற்போது அருகில் சென்று அழைத்தால் திரும்பி பார்க்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். பட்டிவீரன்பட்டிகும், வத்தலக்குண்டு அணிக்கும் இடையே நடைபெற்ற கூடைப்பந்தாட்டப்போட்டியில் பட்டிவீரன் பட்டி அணிக்கு கிடைத்த புள்ளிகள் 41 இதில் விஸ்ணுராமிற்கு கிடைத்த புள்ளிகள் 37. இந்த போட்டிக்கு பிறகு தான் அவனது திறமை, வெளி உலகத்திற்கு தெரியவந்தது. பின்னர் படிப்படியாக முன்னேறி, தமிழக அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டான்.
சத்தீஸ்கரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணி தோல்வி அடைந்தாலும், சிறப்பாக செயல்பட்ட விஸ்ணுராமிற்கு அந்தப் போட்டியின் சிறந்த வீரர் என்ற பரிசு கிடைத்தது. பொதுப்பிரிவு மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக வரும் ஏப்ரல் மாதம் ஏற்காடு செல்லவிருக்கிறார். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். விஸ்ணுராமின் தாய் சர்மிளா. மூளை முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டவர். அவரால் சரிவர நடக்கவோ, பேசவோ முடியாது. ஏழ்மை காரணமாக விஸ்ணுராமை மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பள்ளியில் சேர்ககவில்லை. என்றுகூறும் அவரது தந்தை, அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கத் தன்னிடம் போதிய வருமானம் இல்லை என கவலையடைந்துள்ளதார்.
யாராவது உதவி செய்ய விரும்பினால் 9626754105 எண்ணில் தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளி மாணவரான விஷ்ணுராமிற்குத் தேவையான உதவிகளை செய்யலாம்.
======
Thanks to
http://idlyvadai.blogspot.sg/2012/07/blog-post_24.html
இவர் யார் ? என்ற விடைக்கு கீழே படியுங்கள்...
ஒரு சோக நிகழ்வின் தொடர்ச்சியாகத் தான் பாண்டி எனக்கு அறிமுகமானார். அன்பு நண்பர் அந்தோணி 2 ஆண்டுகளுக்கு முன் திடீரென்று காலமானபோது தான். அந்தோணிக்கு தமிழ் வலையுலக நண்பர்கள் உதவியுடன் வாங்கிக் கொடுத்து இருந்த தானியங்கி சக்கர நாற்காலியை என்ன செய்யலாம் என்று யோசித்த போது, அந்தோணிக்குத் தெரிந்த பாண்டிக்கு அதை வழங்க, நண்பர்கள் சம்மதத்துடன் முடிவு செய்தேன். பாண்டி பிறந்து சில ஆண்டுகளிலேயே அவரது கால்கள் செயலிழந்து விட்டன என்று கேள்விப்பட்டேன். சற்றே பழுதடைந்திருந்த சக்கர நாற்காலியை பழுது பார்த்து பாண்டிக்கு கொடுத்தேன். பாண்டிக்கு மிகவும் சந்தோஷம்.
பாண்டியின் கால்கள் செயல் இழந்திருந்தாலும், அவரது கைகளில் அற்புதமான திறமை ஒளிந்திருக்கிறது. மிக நேர்த்தியாக ஓவியங்கள் வரைகிறார்.
அவரது சில ஓவியங்களை சில அன்பர்கள் வாங்கி அவருக்கு பொருளுதவி செய்திருக்கின்றனர் என்று அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கேமராவில் படம் பிடித்த சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு.
அவ்வப்போது, பாண்டிக்கு முடிந்த அளவில் உதவிகள் செய்து வருகிறேன். ஆனால், அவராக எதுவும் என்னிடம் கேட்டதில்லை. கை தொலைபேசி பழுது பார்ப்பதற்குரிய தகுதி கிடைக்கும் (தமிழக அரசு நடத்திய) இலவச பயிற்சி வகுப்பில் பாண்டி சேர்ந்து தேர்ச்சியும் பெற்றார். வீட்டில் இருந்தபடியே சுயவேலை பார்த்து கொஞ்சம் சம்பாதித்து வந்தார். தனது சுய சம்பாத்தியம், கொஞ்சம் கடன் என்று ஒரு சிறு கைதொலைபேசி பழுது பார்க்கும் கடையை தனது வீட்டுக்கு (ரெட் ஹில்ஸ்) அருகில் சமீபத்தில் அமைத்திருக்கிறார். அவரது தன்னம்பிக்கை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பாண்டிக்கு ஏதாவது வகையில் உதவ விரும்பினால், அவரை/என்னை தொடர்பு கொள்ளும்படி இட்லிவடை வாசகர்களை வேண்டுகிறேன்.
M.SENTHUR PANDIAN
NO,5/269 VEERAMAMUNIVAR STREET M.A NAGAR STREEET
REDHILLS CH-52
PHONE NO - 9940512774
அவரது வங்கிக்கணக்கு எண்:
M.SENTHUR PANDIAN
INDIAN BANK ACCOUNT NO -977780556
RED HILLS BRANCH
பிகு: பணம் அனுப்பும் நண்பர்கள், விவரங்களை (தொகை, தேதி, பெயர்) successcbe@gmail.com என்ற முகவரிக்கு தெரிவிக்கலாம்.
தன்னம்பிக்கை !