முரண்பாடுகள்

முரண்பாடுகள்

சேவை எனும் நம்பிக்கையில் வாக்களித்துவிட்டு....
நம் கண்ணெதிரே........
அரசாட்சி ஒரு வர்த்தகம் ஆவதை காண்பது......ஓர்
ரசியல் முரண்பாடு !

படைத்த இறைவன் ஒருவன் என்றாலும்.......
மனிதனே நாள்தோறும் புதிய கடவுள்களை
படைத்துக்கொண்டிருக்கும் விந்தையானது.....ஓர்
ன்மீக முரண்பாடு !




நம் இயக்கங்கள் எளிதாவதற்கு.........
வடிவமைக்கப்பட்ட காலம் போய்.....
இயந்திரங்களின் கட்டுப்பாட்டில் நாம் இயங்கும்....
கலிகாலத்தில் வாழ்ந்துக்கொண்டிருப்பது.......ஓர்
யந்திர முரண்பாடு !

ஈன்றெடுத்த பெற்றோர்களின் பாசம் மறந்துபோவதால்......
நம் இதய கதவினை அடைத்து ........முதியோர் இல்லத்தின்
வாசல் திறந்து விடுவது.....ஓர்
ரமில்லா முரண்பாடு !



முல்லைக்கு தேர்கொடுத்த பாரியின் .....
கொடைத்தன்மை பற்றி கற்பிக்கும் அதே நேரத்தில்......
ஒட்டு போட்ட சீருடை அணிந்துவரும் பள்ளி
பிள்ளைக்கு மனமிறங்காத மனித மனம்.......ஓர்
ள்ளத்தின் முரண்பாடு !

அங்கங்கள் யாவும் சீராக பெற்ற பின்பும்.......
உழைக்க மறந்து கையேந்தும் பிறவிகள்......
தங்கு தடையின்றி உழைக்க எத்தனிக்கும்
மாற்று திறணாளியை கண்டு நகைப்பது.......ஓர்
னத்தின் முரண்பாடு !




கொள்கையில் தாய்மொழி பற்றுக்கொண்டு.....
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழங்கிடும்
சீமான்களின் வாரிசுகள்.......
முனைப்புடன் ஆங்கிலப்பள்ளியின் ஆதிக்கம் கொண்டு......
முன்னேற துடிப்பது......ஓர்
திர்காலத்தின் முரண்பாடு !

கல்வியின் சிறப்புணர்த்தும் நல்- ஆசிரியரின் .....
பெருமை உணராமல், செல்வத்தால் கல்வியை....
பெற நினைக்கும் மாணவன்......
துரோணரிடமே கட்டைவிரல் கேட்கும்....ஓர்
கலைவன் முரண்பாடு !





காலங்கள் மாறினாலும்....நம்
பூமியின் சுற்றுப்பாதை மாறவில்லை !
தூரங்கள் சுருங்கினாலும்....நம் வாழ்க்கையின்
பயணங்கள் ஓயவில்லை !

இப்படி......

எல்லாம் தெரிந்துகொண்டோம் என்ற இறுமாப்பில்......
எதையும் புரிந்துகொள்ளாமல் நம் மனது காட்டும் ....
மாய மமதையில் ஜீவித்திருப்பது மட்டும்
முரண்பாடில்லாத ஒற்றுமை !

No comments:

Post a Comment