நீரழிவு நோயாளிகளுக்கு... தேகப் பயிற்சி...


        நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் தேகப்பயிற்சி.  வெறும் உணவுக் கட்டுப்பாடு மட்டும் பலனைக் கொடுக்காது.  உணவுக் கட்டுப்பாட்டுடன் தேகப் பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தால்தான் உடலில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.  மேலும் உடல் எடை கூடாது.  வலுவான தசைகள் உருவாகும்.  சீரான இரத்த ஓட்டம் கிடைக்கும்.  அதனால் இதயம் மற்றும் சிறுநீரகங்கள் சரியாக செயல்படும்.  இப்படி பல நன்மைகள் அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஏன் தேகப்பயிற்சி?

பொதுவாக உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜன் எப்படி தேவையோ அந்த அளவுக்கு குளுக்கோஸும் தேவை.  இந்த குளுக்கோஸ் இரத்த நாளங்கள் மூலம் திசுக்களுக்கு கிடைக்கிறது.  அந்த திசுக்களின் மேல் இன்சுலின் தாங்கிகள் (டிணண்தடூடிண ணூஞுஞிஞுணீtணிணூண்) ஒருவித விகிதாச்சாரத்தில் இருக்கும்.  திசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதாவது உடல் பருமன் உள்ளவர்களுக்கு, திசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த இன்சுலின் தாங்கிகளின் விகிதாச்சாரம் குறைந்திருக்கும்.

திசுக்கள் என்ற பூட்டுக்கு குளுக்கோஸ் கிளைகோஜனாக மாறி உள்ளே செல்ல இன்சுலின் சாவிபோல் பயன்படுகிறது.  இந்த இன்சுலின் என்ற சாவி இல்லையென்றால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ்  கிளைக்கோஜனாக மாறி திசுக்களுக்கு செல்லாது.  இந்த குளுக்கோஸ் தாங்கி சரிவர வேலை செய்யவில்லை என்றாலும், அல்லது போதிய அளவு  இல்லாவிட்டாலும் எவ்வளவு தான் இன்சுலின் சுரந்தாலும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.

தேகப்பயிற்சி செய்யும்போது அதிக சக்தி தேவைப்படுகிறது.   அந்த சக்தி எங்கிருந்து கிடைக்கிறது?  ஏற்கனவே நாம் சொன்னது போல திசுக்களில் சேமித்துவைக்கப்படும் கிளைகோஜன் மற்றும் கல்லீரலில் சேமித்து வைக்கப்படும் கிளைக்கோஜனால் மட்டும்தான்.  இந்த கிளைகோஜன்தான் தானாகவே குளுக்கோஸாக மாறி இரத்தத்தில் கலந்து இரசாயன மாற்றத்தின் மூலம் (ணிதுதூஞீச்tடிணிண) சக்தியைக் கொடுக்கிறது.  இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைகிறது.  ஏன் என்றால் அதுதான் சக்தியாக மாற்றப்பட்டு விடுகிறதே..

நமது உடலில் உள்ள உள் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்றவை எப்பொழுதும் செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதாகிறது.  இதற்குத் தேவைப்படும் சக்தியை இந்த குளுக்கோஸ் கொடுக்கிறது.  இதன் அளவு 70மி.கி. அளவுக்கு குறையும்போது மூளை செயல்பட முடியாமல் மயக்கம் ஏற்பட ஆரம்பிக்கிறது.

தேகப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வதால் உடல் வலுப்பெறுகிறது.  இன்சுலின் தகுந்த முறையில் வேலை செய்கிறது.  நன்மை பயக்கும் ஏஈஃ கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது.  இரத்த ஓட்டத்தை சீராக இயங்கச் செய்கிறது.   இரத்த நாளங்கள் பலப்படுகிறது.   பிராண வாயு அதிக அளவு நுரையீரலிலிருந்து எல்லா உடல் உறுப்புகளுக்கும் செல்கிறது.  இதயம் சீராக இயங்குகிறது.  சீரான உடற்பயிற்சியில் இதயம் சாதாரண ஓய்வு நிலையில் இருப்பதை விட 5-6 மடங்கு அதிகமாக வேலை செய்து பிராண வாயு இருபது மடங்கு அதிகமாகி தேவையற்ற கலோரி சத்து எரிக்கப்படுகிறது.   இதனால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.  

சாதாரணமாக ஒரு மணி நேரத்திற்கு 4 கிலோ மீட்டர் நடந்தால் சுமார் 200 கலோரி எரிக்கப்படுகிறது.  அதாவது நாம் எடுத்துக் கொள்ளும் 2 இட்லி அளவில் உள்ள கலோரி. சற்றே யோசித்துப் பாருங்கள்.  ஒரு விருந்து சாப்பாட்டில் சாப்பிடும் உணவிற்கு எத்தனை மணி நேரம்  நீங்கள் நடந்தால் நீங்கள் சாப்பிட்ட உணவில் உள்ள கலோரி கரையும் என்பதை.

நடைபயிற்சியின்போது கடைப்பிடிக்க வேண்டியவை

· மூச்சு இரைக்க நடக்கக்கூடாது.

· காலை, மாலை நடந்தால் மிகவும் நல்லது.

· நடக்கும்போது நடையில் மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும். மனம் அமைதியோடு இருக்க வேண்டும்.

· நடக்கும் பொழுது பாதம் முழுக்க ஒரே சீராக அழுத்தம் கொடுத்து நடக்க வேண்டும். நிதானமாக நடக்க வேண்டும்.

· தினசரி நடப்பது அவசியம்.

· நடக்கும்போது நடையைத் தடுக்காதவாறு தொளதொளப்பான ஆடைகளை அணிய வேண்டும்.

· கால்களில் மென்மையான அதிக இறுக்கம் இல்லாத காலணியை அணியவேண்டும்.

உடற்பயிற்சி

நடைப்பயிற்சி செய்ய இயலாதவர்கள் அதாவது உடல் பருமன், மூட்டுகளில் வலி உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்து நீரிழிவு நோயின் கடும் தாக்குதலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு டாக்டரை கலந்து ஆலோசித்து என்ன மாதிரியான உடற்பயிற்சி எவ்வளவு நேரம் செய்யலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு போன்ற எல்லாவற்றையும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கடைப் பிடித்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும்.  இந்த  கட்டுப் பாடுகளுடன் இருந்தால் நீரிழிவு நோய் இருந்தாலும் வெகு நாட்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் சுகமாக வாழலாம். நிதானமான நடை உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

No comments:

Post a Comment