கால் நகங்களைப் பாதுகாக்க...


நகங்களின் அழகு பெரும்பாலும் அவைகளை வடிவத்திலும், சீராகவும், சுத்தமாகவும் வைத்திருப்பதிலும் அமைந்துள்ளது. நகங்களின் பாதுகாப்புக்கு அவற்றை பளபளப்பாகவும், தூய்மையாகவும், ஒரு சிறந்த மேற்பூச்சுடனும் வைத்திருத்தல் அவசியமாகும். மற்றபடி, நகங்களின் நீளம் அவரவர் பின்பற்றும் அன்றாட வாழ்க்கை முறையை சார்ந்தது.

அழுக்குடன் நகங்களை பேணுதல் சுகாதார கண்ணோட்டத்தில் மட்டுமில்லாமல், நம் பழக்கங்களின் அறிகுறியாகவும் கருதப்படுகின்றது.

கைகளின் பாதுகாப்பு, அவைகளை தூய்மையாகவும், நகங்களை நன்று பராமரிப்பதிலும் தான் அமைந்துள்ளது.

நகங்களை அழகாக வைத்திருக்க, அழகியலில் "மேனிக்யுர்" என்கிற முறை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றது. அதிலும் "ஃப்ரெஞ்ச் மேனிக்யுர்" முறை நளினமான உத்தியாகும். ஏனென்றால் இம்முறையால் நம் நகங்கள் பொலிவோடும், அழகோடும், சுகாதாரமாகவும் எப்போதும் காணப்படும்.

கால் நகங்களை பொறுத்தவரை, "பெடிக்யுர்" முறை சாலச்சிறந்ததாகும். இம்முறைகளை மேற்கொள்ள நீங்கள் அடிக்கடி அழகு நிலையம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இல்லத்தில் இருந்தபடியே, மிகவும் எளிதாக இந்த அழகியல் முறைகளை நீங்கள் மேற்கொள்ளலாம். கை மற்றும் கால் நகங்களை பேண, குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த முறைகளை பின்பற்றுதல் அவசியமாகும்.

நகங்களை அழகாக வைத்திருக்க சில ஆலோசனைகள் :

நகங்களை மென்மையாக பாதுகாக்க, நீங்கள் பயன்படுத்தும் "ஹேண்ட் க்ரீம்"- கைகளில் மட்டுமில்லாமல் நகங்களிலும் தடவிகொண்டு, பின்பு சுத்தமான துணியால் துடைத்து எடுங்கள். நகத்தின் பளபளப்பிற்கு, அவற்றில் "பெட்ரோலியம் ஜெல்லி" தடவி கொள்ளலாம்.

ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து 20 நிமிடங்கள் நகங்களை அதில் ஊற வைத்தால், நகங்கள் மேலும் மென்மையாக மாறும்.

தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், மற்றும் பாதாம் எண்ணெய், இம்மூன்றும் நகங்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அதீதமாக உதவுகின்றன. வீட்டில் இருந்தபடி, எதேனும் ஒரு எண்ணெயையை நகத்தில் தடவி மென்மையாக மஸாஜ் செய்யுங்கள். பின்பு, ஒரு சுத்தமான துணியால் உபரி எண்ணெய்யை துடைத்து எடுங்கள். நீரினால் கழுவ வேண்டாம்.

நகங்களின் உள்ளே இருக்கும் அழுக்குகளை நீக்க, அவற்றை நோண்டி எடுக்காமல், நீர்த்த "ஹ்ட்ரோஜன் பெராக்ஸைடு" - பயன்படுத்தவும். இதை நகங்களின் மீது தடவி சிறிது நேரம் காத்திருந்தால், நகங்களில் உள்ள அழுக்குகள் இளகிவிடும். அதன்பின், வெதுவெதுப்பான வெந்நீரால் கழுவி சுத்தப்படுத்தலாம்.

நகங்களில் காணும் கறைகளை நீக்க எலுமிச்சை சாறு ஒரு நல்ல தீர்வாகும். எதேனும் சாயத்தினாலோ, பூச்சினாலோ நகத்தில் கறை படிந்துவிட்டால், எலுமிச்சை சாறை அதில் ஊறி சிறிது நேரத்திற்கு பின், ஒரு மென்மையான துணியால் () டிஷ்யு பேப்பரால் துடைத்து எடுக்கவும்.நகத்தை வலுவாக ஆக்க ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை வெந்நீரில் கலந்து, உங்கள் நகத்தை 20 நிமிடங்கள் அதில் ஊற வைக்கவும். அதன் பிறகு "மாய்ஸ்ச்சரைஸர்" பயன்படுத்தி நகத்தில் உள்ள கீறல்களை நீக்கலாம்.

வெண்மை தரும் பற்பசையை பயன்படுத்தி, உங்கள் நகத்தின் நிறத்தை மேம்படுத்தலாம். நகத்தின் மீது சிறிது பற்பசையை தடவி, சிறிது நேரத்திற்கு பின், மென்மையான ப்ரஷ்ஷால் துடைத்து எடுக்கவும்.

அசிட்டோன் என்கிற ரசாயனம் கலந்த நகப்பூச்சையோ, நகப்பூச்சு நீக்கியையோ பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

நகத்தை எப்போதும் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருங்கள். நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் அல்லது அதன் பயன்பாட்டை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் வைத்துகொள்ளுங்கள்.

நகங்களுக்கு ஊறு விளைவித்து, அதில் புண்ணாகும் வாய்ப்பு உள்ளதால், நகத்தின் புறத்தோலை உறிப்பதை தவிர்க்கவும்.கால் நகங்களுக்கும் இது பொருந்தும்.

நகப்பூச்சு பயன்படுத்தும் முறைகள் :

நகப்பூச்சு இடுவதற்கு முன்பு, கைகளை பழைய பூச்சு நீங்கும் வண்ணமும், அழுக்குகள் நீங்கும் வண்ணமும் சுத்தமாகவும் கழுவி விடவும்.

நகச்சாயம் இடும் முன், துண்டால் கைகளில் உள்ள அதீத எண்ணெய் மற்றும் க்ரீம் களை துடைத்து எடுத்து விடவும்.

நகத்தின் நுனிகளை நன்கு தேய்த்து வடிவாக்கி, அதன் மீது 2 முறை சாயத்தை பூசினால் சாயம் சம நிலையாக பரவும்.

சாயத்தின் நிறம் சற்று மந்தமாக இருந்தால், 3 முறை பூசவும். நகத்தின் மையத்தில் தொடங்கி, பின்பு அடிநகத்திலிருந்து நுனிநகம் வரை பூசிவிட்டு, பிறகு நகத்தின் ஒரங்களில் பூசவும்.

சாயம் பூசிய பின் சிறிது நேரம் நன்கு உலரவைத்தால், அழகான நகமும், நளினமான கரமும் உங்கள் கண்முன்னால்.

நகங்களின் நுனியில் சிறிது பஞ்சு வைத்துவிட்டு சாயம் பூசினால், அது அழகான தோற்றத்தை கொடுக்கும்.

வெவ்வேறு டிஸைன்களில் நகப்பூச்சு அணிய சில ஆலோசனைகள் :

பல்வேறு தருணங்களில் அணியும் உடைகளுக்கேற்ப, நகத்தின் நிறத்தை தேர்ந்தெடுங்கள்.

பலவித நிறங்களை கலந்தும் பூச முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் முதலில் பூசிய நிறம் நன்றாக காய்ந்த பின் அடுத்த நிறத்தை பூசவும்.

வெள்ளி மற்றும் உலோக நிற சாயங்கள் கறுப்பு நிற உடைகளுக்கு மிகவும் பொருந்தி பொகும்.

முத்துக்கள் போல குணாதிசயம் கொண்ட ஒளி ஊடுறுவாத வண்ணங்களும்  கறுப்பு உடைகளுக்கு அட்டகாசமாக பொருந்தும்.

மாறுபட்ட தோற்றத்தை உருவாக்க மையத்தில் கறுப்பும் ஒரங்களில் சிவப்பாலும் அலங்கரிக்கலாம்.


கால் நகங்களையும் முதலில் சுத்தப்படுத்தவும், பிறகு ஷேப் செய்யவும்.
வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர், சிறிது ஷாம்பு, சிறிது டெட்டாய்ல், சிறிது கல் உப்பு, சில துளிகள் கிளிசரின் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, கால் களை அதில் ஊற விடவும், பதினைந்து நிமிடங்கள் கழித்து, பழைய பல் துலக்கும் பிரஷ்ஷால் கால் முழுவதும் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.

கால்களை நன்றாகத் துடைத்து க்யூட்டிகிள் க்ரீம் போட்டு மசாஜ் செய்யவும். சிறிதுநேரம் ஊறியதும், பஞ்சால் துடைத்து, நக இடுக்குகளைச் சுத்தப் படுத்திவிட்டு, நெயில் பாலிஷ் போடவும்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் கைகளையும், பாதங்களையும் ஆலிவ் எண்ணெயால் மசாஜ் செய்து வரலாம்.

பீஸ் வாக்ஸ் கலந்த ஆயின்மென்ட்டுகளை, பாதங்களில் வெடிப்பு உள் ளோர் பயன்படுத்தலாம்.

உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி, கை மற்றும் கால் முட்டிகளில் தேய்த்து வர, அந்த இடங்களில் உள்ள கருமை மறையும். நக வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிப்பது சைனாகிராஸ். எனவே, தினமும் இரவு பாலிலோ, சுடு தண்ணீரிலோ சிறிதளவு சைனாகிராஸ் கலந்து சாப்பிடுவது நக வளர்ச்சியை சீராக் கும்.

No comments:

Post a Comment