சாதாரணமாக கீரைத்தண்டு தோட்டங்களில் விளைகிறது. இதில் செங்கீரை, வெண்கீரை என்று இரண்டு வகை உண்டு. கீரைத்தண்டின் இலை, தண்டு, வேர் அனைத்தையும் சமைத்து உண்ணலாம். இக்கீரைத் தண்டு இனிப்புச் சுவை உடையது.கீரைத்தண்டை சமைத்து உண்டால் சிறுநீர் வெளியேறும் போது உண்டாகும் எரிச்சல், வெள்ளை ஒழுக்கு, இரத்த பேதி போன்றவை குணமாகும். வயிற்று வலிக்கும் நல்லது.
வாய்வுத் தொல்லையும் மாறும்.செங்கீரைத் தண்டு தேகச்சூட்டை மாற்றும். காய்ச்சலுக்கு நல்லது. தீராத பித்தத்தைக் குணமாக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக இரத்தப் போக்கைக் கட்டுபடுத்தும்.கீரைத்தண்டு நார்ச்சத்து மிகுந்தது. எனவே மலத்தை இளக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மலம் கழிக்கும் போது ஆசனவாயில் உண்டாகும் எரிச்சலைத் தணிக்கும். மூலநோயைக் குணப்படுத்தும்.கீரைத்தண்டை வெறுமனே தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்தாலும் நிரம்ப பலன் உண்டு. தேகம் குளிர்ச்சி பெறும். சமைத்தும் உண்ணலாம்.
No comments:
Post a Comment