ஆசை! பேராசை!

ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்யாசம் என்னவென்றால்

         "ஆசை என்பது ஒரு துவக்கத்தின் முடிவு.பேராசை என்பது ஒரு முடிவின் துவக்கம்".


                 இதை அறிந்துதான் சத்குரு "அத்தனைக்கும் ஆசைபடு" என்றார்.பேராசைபடு என்று சொல்லவில்லை.


                 திரு.அப்துல் கலாம் அவர்கள் இதை மையமாக வைத்துதான் "கனவு காணுங்கள்"
என்றார்.

                  இதை விவேகனந்தர் "நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்" என்கிறார்.


               ஆசை படாமல் இருந்தால் மனிதன் ஆகாய விமானம் கண்டுபிடித்திருக்கமாட்டன். அந்த ஆசை அதிகமாகி பேராசையாக உருமாறிய பின்புதான் அனைத்தையும்  அழிக்கும் ஆயுதத்தை கண்டுபிடித்தான்.


            ஆசை அழிவை தருவதில்லை பேராசைதான் அழிவை தருகிறது. உனக்கு என்ன கிடைக்குமோ அதுதான் கிடைக்கும். உனக்கு என்ன வந்து சேருமோ அதுதான் வந்து சேரும். அதை பெற நினைதல் அது ஒரு நல்ல துவக்கத்தின் முடிவு. அடுத்தவர்க்கு போய் சேருவதை தனக்கானது என்று அதை தன்வசப்படுத்த நினைத்தால் அது பேராசை அது ஒரு முடிவின் துவக்கம்.


  ஒரு  துவக்கத்தின் முடிவை அல்லது ஒரு முடிவின் துவக்கத்தை எடுப்பது அவரவர் வாழ்கையில் உள்ளது.