சே குவேரா


''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” -சே
  க்யூபாவில் தான் உங்கள் புரட்சி வென்றுவிட்டதே. பிறகு ஏன் பொலிவியாவில் போராடுகிறீர்கள் என்ற கேள்விக்கு சே இப்படி பதிலளித்தார்,
   "உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"


   ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்து ,மருத்துவப் படிப்பையும் முடித்த இளைஞன் அவன். அவனால் தன் வீடு, தன் வாழ்க்கை என்று இருக்க முடியவில்லை. நண்பன் ஒருவனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்கா முழுவதும் சுற்றி வர தொடங்குகிறான். அந்த பயணத்தின் ஆரம்பம், உலக பண முதலைகளின் அழிவுக்கான ஆரம்பம் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது. 1950ல் தொடங்கிய சேவின் பயணம்,1967 ஆம் ஆண்டு பொலிவிய ராணுவத்தால் முடிவுற்றது. இடையில் ஒரு நாள் கூட ஓய்வெடுத்ததில்லை.  இன்றும் சேவைப் பற்றி படிக்கும்போதும், படங்களைப் பார்க்கும் போதும் நட்சத்திர தொப்பி அணிந்து அவரின் உருவம் என் கண் முன்னே வந்து போகிறது. சில நொடிகள் வரும் அந்த சிலிர்ப்பு. அதில் வாழ்கிறார் சே என்கிற எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna)

எந்த நாட்டிற்கெதிராக தன் வாழ்நாள் முழுவது போராடினாரோ, அந்த நாட்டு இளைஞர்களே டீஷர்டிலும், கீ செய்னிலும் சேவின் படத்தோடு திரிகிறார்கள். எந்த வரலாற்றை மறைக்க முயன்றார்களோ அதை அந்த நாட்டிலே படமாக எடுக்கிறார்கள். சேவை வாழும்போது மட்டுமல்ல, அவன் இறந்த பிறகும் ஜெயிக்க முடியவில்லை.
காடுகளிலே பாதி வாழ்க்கை வாழ்ந்த சேவுக்கு சிறுவயதில் இருந்தே ஆஸ்த்மா நோய் இருந்தது. தனது மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது நடந்த விபத்தில் சேவின் கால் சூடான காஸ் சிலிண்டருக்கு அடியில் மாட்டிக் கொண்டது. க்யூபா போராட்டத்தின் போது அவரின் காலில் குண்டும் பாய்ந்தது. ஆனால் எதுவுமே அவரை தடுத்து நிறுத்தவில்லை. விடுதலை,புரட்சி என்று யார் சொன்னாலும் அவர் சேவை நினைத்துத்தான் சொல்லுவார் என்னுமளவுக்கு வாழ்ந்தவன் சே.
சேவைப் பற்றி திரு.மாதவராஜ் அவர்கள் எழுதிய நூலை தன் வலையிலே பதிவிட்டிருக்கிறார். அதை இங்கே சென்று படிக்கலாம்.
சேவின் பேச்சுகள், அரிதான புகைப்படங்கள், மேலும்  பல விதயங்கள் தெரிந்துக் கொள்ளஇங்கே அழுத்துங்கள்.

சேவின் பிரபலமான வசனங்கள்:
“I don't care if I fall as long as someone else picks up my gun and keeps on shooting.”
“I know you are here to kill me. Shoot, coward, you are only going to kill a man.”
”Why does the guerrilla fighter fight? We must come to the inevitable conclusion that the guerrilla fighter is a social reformer, that he takes up arms responding to the angry protest of the people against their oppressors, and that he fights in order to change the social system that keeps all his unarmed brothers in ignominy and misery”
“Better to die standing, than to live on your knees.”
“I don't know if the Cuban revolution will survive or not. It's difficult to say. But [if it doesn't] . . . don't come looking for me among the refugees in the embassies. I've had that experience, and I'm not ever going to repeat it. I will go out with a machine gun in my hand, to the barricades. . . I'll keep fighting to the end.”