கணனியில் அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள் ?


http://caroljcarter.com/wp-content/uploads/2010/11/student-computer-test.jpg

இப்போது எல்லோர் வீட்டிலும் கணணி இருக்கும் . இது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது . நாம் நீண்ட நேரம் கணணியில் இருந்து வேலை செய்யும் பொது ஒரே இடத்தில் இருந்து கொண்டு வேலை செய்கின்றோம் . இதனால் கழுத்து வலி உண்டாகின்றது . 
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதினால் உடலின் இயக்கங்களும் குறைகின்றன . கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது . கண்கள் ஒரே நேரத்தில் வேலை செய்வதால் கண்கள் சோர்வு அடைகின்றன . கண்களில் கருவளையம் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு . 

இளம் வயதினர் பலருக்கு தலைவலி அதிகம் ஏற்படுகிறது . அதற்க்கு காரணம் அதிக நேரம் கணனியின் முன்னால் உட்காந்து இருப்பது தான் காரணம் . இடைக்கிடை கண்களை அசைத்து கொள்ள வேண்டும் . ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்காமல் கொஞ்ச  நேரம் நடந்து விட்டு கணணி முன்பு உட்காருங்கள் . இந்த தலைவலியை குறைக்கலாம் . 
முதுகு வலி கூட ஏற்படுகிறது . நாம் கதிரையில் உட்காரும் போது நிமிர்ந்து உட்கார வேண்டும் . கூனி இருக்க கூடாது . இதனால் முதுகு கூனுகிறது . முதுகு வலி கூட ஏற்படுகிறது . கைகளுக்கும் சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும் . 

எனவே கணணியில் வேலை செய்பவரா நீங்கள் . கவனம் . ஓய்வு எடுங்கள் . தலைவலி , முதுகுவலி போன்றன வராமல் பாதுகாத்து கொள்ளுங்கள் .