தசைகள் விரிவுபடுத்தும் பயிற்சி


தசைகள் விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இந்த கருத்து தவறானது. இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும்.

உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும் போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும்.

ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும். உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தான்.

தினமும் 30 நிமிடம் செய்யும் உடற்பயிற்சி நம் உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. தினமும் பயிற்சி செய்ய முடியாதவர்கள் வாரம் 5 நாட்கள் மட்டும் செய்து வந்தால் போதுமானது. இளமையில் செய்யும் உடற்பயிற்சி தான் முதுமையில் நோயின்றி வாழ வழிவகுக்கம்.