தினம் ஒரு அப்பிள் சாப்பிடுங்க



நாம் எல்லோரும் சாப்பிட்டவுடன் ஏதாவது பழவகைகள் சாப்பிடுவதுண்டு . பப்பாப் பழம், மாம் பழம் , வாழை பழம் , தோடம் பழம் , அப்பிள் பழம் என நாம் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவதுண்டு . காய்கறிகள், பழங்கள் மூலம் தான் எமக்கு போதியளவு சத்துக்கள் கிடைக்கின்றன . விட்டமின்கள் , கனியுப்புகள் என்பன எமக்கு எல்லோருக்கும் அவசியம் . 

குறிப்பாக பெண்கள் அதிகமாக பழங்கள் சாப்பிட வேண்டும் .நாம் சாப்பிடும் உணவுகளைப் பொறுத்து வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவும் மாறுபடும். இந்த அமிலத்தின் அளவு உயருமானால் எலும்புகளின் அடர்த்தி பாதிக்கப்படும். ஆக, அமிலத்தின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளக் கூடிய சரி விகித சத்தான உணவு என்பது மிக முக்கிய மானது. இதில் பழ வகைகள் அமிலத்தின் அளவை நிலைப்படுத்துவதுடன் எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரித்து வலுவாக்குகிறது. பழங்கள் சாப்பிடுவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல அபாயகரமான நோய்களை தடுக்க முடியும் .
பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் . சிறு பிள்ளைகளில் இருந்தே பிள்ளைகளுக்கு பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை பழக்க வேண்டும் . வாழ் நாள் முழுக்க அவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் . தினம் ஒரு அப்பிளும் , கரட்டும் சாப்பிட்டாலே போதும் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்க்கு . நீண்ட நாட்களுக்கு சுக தேகியாக வாழலாம் . 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0x2uPeCHoJ0WkWYRhyL6HtC5NWeM_G867eVC1hp03iVkGWSpIdWCDakOJi7Jb4KQFdJLC-qYmHPn4GdYNtJPtsOA5HuqpQobWvAUlNhDWDaptqjFVdWwGt6JYvpyNs1rBlMeWxd_RfqI/s400/green_apple.jpg
நாள் தோறும் ஒரு அப்பிள் சாப்பிட்டால் நோய், நொடி இன்றி வாழலாம் . உலகம் முழுவதிலும் அப்பிள் மதிப்பு வாய்ந்த பழமாக மதிக்கப்படுகிறது. அப்பிள் உடல் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் பெருகுவதற்குரிய பயன்களைத் தருகிறது. விற்றமின் குறைவினால் ஏற்படுகின்ற நோய்களைக் குணப்படுத்தும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு கூட அப்பிளை ஜூஸ் போன்று அடித்து கொடுக்கலாம் . 
http://www.edupic.net/Images/Plants/red_apple621.jpg
அழகிய சிவப்பு நிறத்தில், பளபளப்பாக, கண்ணைப் பறிக்கும் விதத்தில் காணப்படும் அழகான பழம் அப்பிள் பழமாகும். அழகு இனிமை, மென்மை என்பவற்றிற்கும் அப்பிளுக்கும் நிறைய தொடர்பு இருக்கின்றது. தங்கப் பழம் என்று புகழப்படும் அப்பிள் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் மிகவும் விரும்பும் பழமாகும். அப்பிள் பெண்ணே என்று சும்மாவா சொல்கிறார்கள் .ம்ம்ம்ம்ம்ம்ம் . உலகம் முழுவதிலும் 6500க்கும் மேற்பட்ட வகைகளில் அப்பிள்கள் காணப்படுகின்றன என்றால் பாருங்களேன் .
http://i40.tinypic.com/30js4mf.png






நீங்கள் தினம் ஒரு அப்பிள் சாப்பிட்டு வந்தால் வைத்தியரை நாட வேண்டிய அவசியமே இல்லை என்கிறது ஆய்வு . என்ன புரிகிறதா நண்பர்களே நீங்க நீண்ட காலம் வாழ அப்பிளை விரும்பி சாப்பிடுங்கள் .