உலகத்திலேயே உயரமான ரெயில் பாலம்


உலகத்திலேயே உயரமான ரெயில் பாலம் ஜம்மு- காஷ்மீரில் உள்ள சென்பாக் ஆற்றின் குறுக்கே அமைய உள்ளது. இந்த ரெயில் பாலம் 2016-ம் நிறைவடையும் என்று இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்த பாலம் ரீசி மாவட்டத்தில் உள்ள சென்பாக் ஆற்றின் மேல் 359 மீட்டர் உயரத்தில் 'வளைவு வடிவில்' கட்டப்பட உள்ளது. இது குதுப்மினாரின் உயரத்தைப்போல் 5 மடங்கு அதிகமாகும். இந்தப் பாலம் பாரமுல்லா மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களை ஜம்முவுடன் இணைக்கும்.

1315 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலம் நிலநடுக்கத்தையும் குண்டு வெடிப்புகளையும் தாங்கும் விதத்தில் கட்டப்பட உள்ளது. இந்தப் பாலத்தில் காற்றின் வேகத்தை அளக்கும் அணிமொ மீட்டர் பொருத்தப்பட உள்ளது. இது குறிபிட்ட அளவை விட, காற்றின் வேகம் அதிகரிக்கும்போது பாலத்தின் மீது செல்லும் ரெயில்களை இறுகப்பிடிக்கும்  இணைப்பை செயல்படுத்தும். இந்தப் பாலத்தின் மீது 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் செல்ல முடியும்.

இந்த பாலத்தை கட்டுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று இந்தப் பணியை மேற்கொள்ள இருக்கும் கொங்கன் ரெயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது. பல தடைகளை தாண்டி இதன் கட்டுமானப் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.