சைவ உணவு மாரடைப்பை குறைக்கும்


ஜாதகம் பார்த்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிப்பார்கள் ஜோதிடர்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம் அல்லது அவர்கள் சொல்வது பொய்த்தும் போகலாம்.
ஆனால் ஒரு மனிதனின் உடலில் உள்ள மரபணுவில் (ஜீன்) பதிவாகி இருக்கும் தகவல்கள் பொய்த்துப்போகாது என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்து.
அதாவது, ஒருவரின் மரபணுக்கள் அவரது பெற்றோர் மூலம் தலைமுறை தலைமுறையாக வருவதாகும். தாத்தா - தந்தை - மகன் என்று தலைமுறை தகவல்கள் மரபணுக்களில் தொடர்ந்து பதிவாகிக்கொண்டே இருக்கும். தந்தைக்கு இருதய நோய் இருந்தால் அது மகனுக்கும் வரும் வாய்ப்புகள் மிக அதிகம்.
இவ்வாறு ஒருவரின் மரபணு மூலம் அவருக்கு வரும் நோய்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிந்தபோதிலும், அந்த மரபணுவின் தன்மையை மாற்ற முடியாத நிலை காணப்பட்டது. இப்போது, நடந்த ஆய்வின் மூலம் இதற்கு ஒரு தீர்வை கண்டுள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள்.
ஒருவருக்கு இருதய நோய் அல்லது மாரடைப்பு வரும் ஆபத்தை குறிக்கும் வகையில் உள்ள மரபணுவின் பெயர் 9பி21 (9ஜீ21) என்பதாகும். ஒருவரின் மரபணுவில் இந்த 9பி21 இருந்தால் அவருக்கு மாரடைப்பு வரும் ஆபத்து மிக அதிகம் என்பார்கள்.
ஆனால், இதை உணவுப்பழக்கம் மூலம் மாற்ற முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் மெக்கில் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் ஜாமி என்கர்ட் மற்றும் மெக் மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானி சோனியா ஆனந்த்.
இந்த ஆய்வுக்காக இவர்கள் 9பி21 மரபணு உள்ள ஐரோப்பா, தெற்கு ஆசியா, சீனா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த 22 ஆயிரம் பேர்களை சோதனைக்கு எடுத்துக்கொண்டனர்.
இவர்களுக்கு முழுக்க முழுக்க சைவ உணவுகள் மற்றும் பழங்கள் கொண்ட உணவுகளை கொடுத்தனர். இவர்களது உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். இது தவிர அவர்களுக்கு வேறு எந்த மருந்துகளும் கொடுக்கப்படவில்லை. வழக்கமான தங்கள் வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கச் செய்தனர்.
வித்தியாசமாக இந்த முறையின் மூலம் சைவ உணவுகளை சாப்பிட்டவர்களின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இவர்களின் உடலில் மாரடைப்பை ஏற்படுத்தும் மரபணுவின் தன்மை படிப்படியாக மாறியது. இவர்களுக்கு மாரடைப்பு ஆபத்து குறைந்தது. அல்லது முற்றிலுமாக நீங்கியது என்று சொல்லும் அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டன.
இந்த மாற்றங்கள் ஏற்பட சைவ உணவுகள் முக்கிய காரணம் என்பதும் இவர்கள் ஆய்வில் தெரியவந்தது.

No comments:

Post a Comment