இதயத்தின் இயக்கமும் இரத்த ஓட்டமும்


இதயம்:
இதயத்தின் அழகிய துடிப்புகளே உயிருக்கு அடையாளம்.
துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் அறிகுறி.
துடிப்புகளின் மவுனம் அதுவே மரணம்.
இறைவனின் படைப்புகளில்  ஓர் அற்புதத் தொழிற்சாலை.
ஹார்ட் அட்டாக், இரத்த அழுத்தம், நெஞ்சு வலி மற்றும் படபடப்பு இன்னும் இது போன்ற வியாதிகளின் கதாநாயகனே இந்த இதயம் தான்.
உடல் உறுப்புகளில் முக்கியமானவை இதயம், சிறுகுடல், நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர் பை, பித்தப் பை, கல்லீரல் போன்றவை. இவைகள் மிக முக்கியமானவை. மற்றவைகள் எல்லாம் இந்த உறுப்புகளைச் சார்ந்தவையே.
நாம் உட்கொண்ட உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் உணவு சமிபாடு அடைந்து; சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது.  இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.
இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது
இரத்தஓட்டம்:
இதயம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் அதில் உள்ள உயிர் தரும் அமைப்புகளும், கழிவுகளை அகற்றும் அமைப்புகளும் நன்றாகச் செயல்பட வேண்டும். தமனிகள்தான் உயிர் தரும் அமைப்புகள் (LIFE GIVERS) என குறிப்பிடப்படுகின்றன. ஏனென்றால் இந்த வகை ரத்தக் குழாய்கள்தான் நமது உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உயிர்வளி, உயிர்சத்துகள், ஹார்மோன்கள், உணவு ஆகியவற்றை இடைவிடாது 24 மணி நேரமும் அளிக்கின்றன.
பயன்படுத்தப்பட்ட அசுத்தமான ரத்தம், நமது உடலின் பல பகுதிகளில் இருந்து பலவகையான சிறிய சிரைகளின் (Veins) வழியாக இதயத்தின் வலப்பக்க மேல் அறைக்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வலப்பக்க கீழ் அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு இந்த ரத்தமானது நுரையீரல் தமனியின் வழியாக நுரையீரல்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
நுரையீரல்களில் என்ன நடக்கிறது?
நுரையீரல்களில் ரத்தமானது தூயமையாக்கப்பட்டு உயிர்வளி (அ) பிராண வாவு (அ) ஆக்ஸிஜன் (oxygen) சேர்க்கப்படுகிறது. பிறகு சுத்தம் செய்யப்பட்ட ரத்தமானது நுரையீரல் சிரையின் வழியாக இதயத்தின் இடப்புறம் உள்ள மேல் அறையை அடைந்து அடுத்து இதயத்தின் கீழ் அறையை அடைகிறது, இதயம் சுருங்கும்போது கீழ் அறையில் இருந்து ரத்தம் வெளியேறி மகா தமனியின் வழியாக ஆங்காங்கே உள்ள பலவகையான கிளைகளின் வழியாக உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

சிரைகள்தான் கழிவுப் பொருள்கள் அகற்றும் அமைப்புகள் (GARBAGE DISPOSAL PARTS) எனப்படுகின்றன. இந்த வகை ரத்தக் குழாய்களும் நன்றாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால் இந்த அமைப்புகள்தான் உடலில் உள்ள பல கோடிக்கணக்கான திசுக்களில் தேங்கியிருக்கும்
கழிவுப் பொருள்களை ரத்தத்தின் மூலமாக இதயத்துக்குக் கொண்டு வருகின்றன. இந்த இரண்டு அமைப்புகள் மட்டுமல்லாது. இதயத்தின் வால்வுகளும் நன்றாகச் செயல்பட வேண்டும், அப்போதுதான் இதயத்தின் பணி சிறப்பாக நடக்கும்.
இருதயத்தின் ஓய்வும் இயக்கமும்:
மேலோட்டமாகப் பார்த்தால் ஒற்றை விசை அமைப்புபோல் இதயத்தின் இரண்டு பக்கங்களையும் சுருங்கி விரிந்து ரத்தத்தைப்பெறும் வேலையையும், அனுப்பும் வேலையையும் செய்வதுபோல் தோன்றும். ஆனால் இதயத்தின் வலப்பக்கம் தனி விசையாகவும், இடப்பக்கம் தனி விசை அமைப்பைக் கொண்டதாகவே கருதப்படுகிறது.

இதயம் துடித்துக் கொண்டிருப்பது ஒன்று. அப்படியானால் இதயம் எந்நேரமும் இயங்கிக் கொண்டேதான் இருக்குமா? அதற்கு ஓய்வு என்பதே கிடையாதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பொதுவாக நம் இதயம் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து செயல்படுவதுபோல் தோன்றும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல.

எந்த உறுப்பாக இருந்தாலும் அது நீண்ட நாள்களுக்கு நன்றாகச் செயல்பட சற்று ஓய்வு தேவை. இதயத்துக்கும் இந்த விதி பொருந்தும். ஆனால் மற்ற உறுப்புகளைப்போல் இதயம் ஓய்வு எடுத்தால் நமது நிலை என்னவாகும்?

இதயம் இயங்கிக் கொண்டே ஓய்வு எடுத்துக் கொள்ள இயற்கையே சில விந்தையான வழி முறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொரு முறையும் சுருங்கி விரியும்போது கிடைக்கும். அரை நொடிப் பொழுதை (Half a second) இதயம் ஓய்வுக்காக பயன்படுத்திக் கொள்கிறது.

இதுபோல் இரவில் தூங்கும் போது நம் உடலில் உள் மிகவும் நுண்ணிய ரத்தக் குழாய்களுக்குத் தேவையான ரத்தத்தை அனுப்புவதை ஓரளவு குறைத்துக் கொள்வதன் மூலமாகவும், இதயமானது தன்னுடைய வேலைத்திறனை குறைத்து ஓய்வு எடுத்துக் கொள்கிறது. லப், டப்& இவை இதயத்தின் துடிப்பைக் குறிக்கும் சொற்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இதயத்தில் இருந்து எழும் இந்த ஒலிதான் அது இயங்குவதற்கான அறிகுறி.

அமைதியான நேரத்தில் மற்றவரின் நெஞ்சுப் பகுதியில் கூர்மையாக உங்கள் காதை வைத்தோ அல்லது மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப் என்ற கருவியை உங்கள் மார்பில் இடப்பக்கத்தில் வைத்தோ உன்னிப்பாகக் கவனித்தால் இதயத்தின் லப், டப் சத்தத்தை கேட்கலாம்.

முதலில் ஏற்படுவது லப் என்ற ஒலியாகும். இந்த ஒலி ஒரு நொடியில் 10&ல் ஒரு பங்கு நேரம் கேட்கும். இந்த ஒலியை கதவை மூடும் சத்தத்துக்கு ஒப்பிடலாம். இந்த ஒலியானது இதயத்தின் மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் இடையே உள்ள இரண்டு வால்வுகள் மூடுவதாலும் இந்த அறைகளில் உள்ள தசைகள் சுருங்குவதாலும் ஏற்படுகிறது. 
இரண்டாவது ஒலியான டப் இதயத் தமனிகளில் உள்ள வால்வுகள் மூடுவதால் ஏற்படுகிறது. 

இதயம் தொடர்பாக இன்னோர் ஆச்சரியமான தகவலைச் சொல்லட்டுமா? இதயம் என்பது மின் ஆற்றலால் இயக்கப்படும் ஓர் உறுப்பு. இன்னும் டெக்னிக்கலாகச் சொல்லப்போனால் மின்சாரத்தால் இயக்கப்படும் பம்பிங் (pump) எந்திரம். நம் உடலுக்குள் ஏது மின்சாரம் என நீங்கள் நம்ப முடியாமல் கேட்பது புரிகிறது.
இதயம் இயங்குவது மின்சாரத்தில்?:
இதயம் தனக்குத் தேவையான மின் ஆற்றலை (Electric power) தானே உற்பத்தி செய்து தன்னைத் தானே தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மின் ஆற்றலை இதயம் எப்படி உற்பத்தி செய்கிறது? அதற்காகவே ஒரு சிறப்பு அமைப்பு இதயத்துக்குள் அமைந்துள்ளது. இதயத்தின் வலது பக்க மேல் அறையின் மேற்பகுதியில் நரம்புகளாலும், தசை நார்களாலும் உருவாக்கப்பட்டுள்ள முடிச்சு போன்ற அமைப்பு உள்ளது. இந்த நரம்புத் தசை முடிச்சை ஆங்கிலத்தில் சைனோ ஆக்டீரியல் நோடு (Sino Arterial Node) என்று சொல்வார்கள். சுருக்கமாக எஸ்.ஏ.நோடு (S.A.Node) என்றும் சொல்வார்கள். இந்த அமைப்பை மோட்டார்களில் உள்ள மின் ஆற்றலை உற்பத்தி செய்யும் அமைப்போடு ஒப்படலாம்.

இதயத்துக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறிய மின் உற்பத்தி அமைப்பானது நிமிடத்துக்கு 72 முறை என்ற எண்ணிக்கையில் மின்பொறியை அல்லது மின் ஆற்றலை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இதய மேல் அறையில் தொடங்கும் மின் ஆற்றலானது. மேல் அறைக்கும் கீழ் அறைக்கும் இடையே அமைந்துள்ள மற்றொரு நரம்பு முடிச்சு அமைப்புவரை (NODE) ஒரே சீராகப் பரவுகிறது. இங்கிருந்து இந்த மின் ஆற்றல், ஒரே சீராக இதயத்தின் இடப்பக்கம் உள்ள கீழ் அறையின் கடைசிப் பகுதிவரை பரவுகிறது.

இவ்வாறு மின் ஆற்றல் ஒவ்வொரு முறையும் சீராக இதயம் முழுவதும் பரவுவதால் இதயம் இயக்கப்படுகிறது. மின் ஆற்றலால் இதயம் நிமிடத்துககு 72 முறை என்ற அளவில் துடிக்கிறது. உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் இயங்குவதற்கு ரத்தமும், அதன்மூலம் கடத்தப்படும் பிராண வாயுவும் தேவை என்பது எல்லோரும் அறிந்ததே. அப்படியானால் இதயம் இயங்கவும் ரத்தம் தேலை இல்லையா, அந்த ரத்தத்தை இதயம் எப்படி பெறுகிறது?

ஒரு வங்கியில் சாதாரணமாகப் பணிபுரியும் ஒருவர் தன்னுடைய வங்கியில் அலுவலக நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளைக் கையாண்டாலும், தன்னுடைய சொந்தத் தேவைக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியாது. மாறாக வங்கியில் இருந்து மாத ஊதியமாகப் பெறும் பணத்தை மட்டும்தான் தன்னுடைய சொந்தத் தேவைக்காகவும், தன்னுடைய குடும்பச் செலவுக்காகவும் பயன்படுத்த இயலும்.

இதுபோல் இதயம் தன்னுடைய அறைகளில் கரை புரண்டு ஓடும் தூய்மையான ரத்தத்தை தான் இயங்குவதற்காக நேரிமையாகப் பயன்படுத்துவதில்லை. மாறாக உடலின் மிகப்பெரிய ரத்தக் குழாயாகிய மகா தமனியில் (Aorta) இருந்து முதல் கிளைகளாகப் பிரியும் இதயத் தமனிகள் (CORONARY ARTERIES) மூலமாகத் தனக்குத் தேவையான ரத்தத்தை இதயம் பெறுகிறது. மகா தமனியின் இருந்து முதல் கிளைகளாக மூன்று தமனிகள் பிரிகின்றன. இந்த மூன்று ரத்தக் குழாய்கள்தான் இதயம் இயங்குவதற்குத் தேவையான உயிர்வளி, ரத்தம், ஊட்டச் சத்துகள் ஆகியவற்றை வழங்குகின்றன.
 

குளிர்பானங்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தும் உறிஞ்சும் குழல்களின் (STRAWS) அளவில்தான இதயத்தமனிகள் இருக்கும். மனிதனின் மொத் எடையில் இதயமானது 200&ல் ஒரு பங்கு என்ற அளவில்தான் இருக்கிறது. அளவு சிறயதாக இருந்தாலும், மனிதனின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் மொத்த அளவில் 200&ல் ஒரு பங்கு அளவுள்ள ரத்தத்தை இதயம் பயன்படுத்திக் கொள்கிறது.

இதயத்துக்கு ரத்தம் அளிக்கும் ரத்தக் குழாய்களை ஆங்கிலத்தில் (CORONARY ARTERIES) என்று அழைப்பார்கள். இந்த ரத்ததக் குழாய்கள் அனைத்தும் இன்னும் பல சிறு கிளைகளாகப் பிரிந்து இதயத்தை ஒருவலைபோல் போர்த்தியுள்ளன. (CORONARY ARTERIES) என்ற பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. லத்தீன் மொழியில் கொரானா (CORONA) என்றால் மகுடம் அல்லது மணிமுடி என்பது பொருள். பல நூறு ஆண்டுகளுக்கு முன், மேலை நாடுகளில் முட்கள் போன்ற அமைப்புடைய கிரீடத்தை மன்னர்கள் தங்கள் மகுடமாக அணிந்து கொள்வது வழக்கம். எனவேதான் இதய ரத்தக் குழாய்களுக்கு இந்தப் பெயர் வந்தது.

இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களுக்கும் உடலின் மற்ற பகுதியில் உள்ள ரத்தக் குழாய்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதயத்தமனிகள், இதயத்தின் இடைவிடாத இயக்கத்துக்கு ஏற்றவாறு இயற்கையாகவே நெகிழ்ந்து விரிந்து கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதயம் விரிவடையும்போது இந்த ரத்தக் குழாய்கள் நன்கு விரிவடைந்து, தங்களுக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக்கொள்கின்றன.இதுபோல் இதயம் சுருங்கும் போது இதயத்தின் ரத்தக் குழாய்கள் நன்றாகச் சுருங்கி ரத்தத்தை வெளியேற்றுகின்றன. இதயம் & சில ஆச்சரியமான உண்மைகள் மனிதன் உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று இதயம்.இதயமானது தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டு 6 டன் எடையுள்ள பொருளை தரையில இருந்து 2 அடி உயரத்துக்கு தூக்க முடியும்.

இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் உடலில் உள்ள மொத்தம் சுமார் பத்தாயிரம் மைல் நீளம் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தத்தை அனுப்புகிறது. இந்த ரத்தக் குழாய்களின் மொத்த நீளமானது நம் நாட்டில் உள்ள ரயில்வே இரும்புப் பாதையன் மொத்த நீளத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

மருத்துவர்களால் புரிந்துகொள்ள முடியாத சில புதிரான ஆற்றல்களை இதயம் பெற்றுள்ளது. இதயத்தைப் பிணைத்திருக்கும் பலவகையான ரம்பு அமைப்புகளை முழுமையாகத் துண்டித்துவிட்டால் கூட, இதயம் எந்தவிதமான பாதிப்புக்கும் ஆளாகாமல், தானாகவே இயங்கும் ஆற்றல் பெற்றது.

ஒவ்வொரு நாளும் இதயமானது ஒரு லட்சம் முறை விரிந்து சுருங்குகிறது. இந்தக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 70 ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது 25 ஆயிரம் கோடி முறை சுருங்கி விரிகிறது. ஒரு நாளில் இதயமாவது 1800 காலன் (7200 லிட்டர்) அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. இந்த அளவில் கணக்கிட்டால் இதயமானது ஒரு மனிதனின் வாழ்நாளில் சுமார் 4.6 கோடி காலன அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகிறது. இதயத்தின் ஆற்றலானது (Power) ஒரு குதிரையின் ஆற்றலில் (Horse Power) 240&ல் ஒரு பங்கு.

இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் சுமார் 11 பிண்ட் (PINT) அளவுள்ள ரத்தத்தை ரத்தக் குழாய்களின் மூலமாக உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகிறது. இதயமானது ஓர் ஆண்டில் வெளியேற்றும் ரத்தத்தின் அளவானது 6.5 லட்சம் காலன்கள். இந்த அளவு ரத்தத்தைக் கொண்டு 900 காலன் கொள்ளளவு கொண்ட 72 லாரிகளை நிரப்பலாம்.

ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது வெளிப்படுத்தும் ஆற்றலை ஒன்றாகத் திரட்டினால் அந்த ஆற்றலால் ஒரு டன் எடையுள்ள பொருளைத் தரையில் இருந்து சுமார் 150 மைல்
உயரத்துக்குத் தூக்க முடியும்
இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது.  இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.  ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது.  இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை,  இரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.
இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?
எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும்.  இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.
இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை.  கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.  இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.
இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
இரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம்.  ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
இரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு.  இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “வலை’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும்.  டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?
இரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
இரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
இரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.
இரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
உடலில் இரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராசரி வேகத்தைவிட அதிகம்.
மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
இரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.
24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா?24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.
தலசீமியா என்பது தொற்று நோயா?இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் வர வாய்ப்பில்லை.
மூளையின் செல்களுக்கு இரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?
மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
இரத்தம் உறைவதற்கு எது அவசியம்?ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.
இரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?இரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. “‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.
இரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?
இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.
ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?
செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.
ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.
கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?
கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.
ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ்.  இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி?நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.
இரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?
வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.
யார் இரத்த தானம் செய்யக்கூடாது?
உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.
மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு இரத்தம் கிடைக்கிறதா?
இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.
தானம் கொடுத்த பிறகு இரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?
புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.
இரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?
நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.
இரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?இரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.
இருதய நோய்:
இன்று உலகளாவிய ரீதியில் மரணங்களை ஏற்படுத்தும் முதன்மைக் காரணியாக இருதய நோய் திகழ்கிறது. ஆண்டுதோறும் இந்நோயால் 17.2 மில்லியன் மக்கள் மரணமடைகின்றனர்.

ஒரு காலத்தில் பணக்காரர்களின் நோய் எனக் கருதப்பட்ட இந்நோய் இன்று வறியவர்களையும் பாதித்துள்ளது. முன்பு முதியோரையே தாக்கிய இந்நோய் இன்று சிறுவர்களையும், இளம் வயதினரையும் பாதித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் ஏற்படும் மர ணங்கள் 75 சதவீதம் இருதய நோயால் ஏற்படுகிறது. ஒவ்வொரு வினாடியும் ஒன்றுக்கு மேற்பட்டோர் இந்நோயால் மரணமடைகின்றனர்.

2020 ஆம் ஆண்டளவில் இந்நோய் ஒரு கொள்ளை நோயாகப் பரிமாணமடையும் அபாயம் உள்ளதென மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. நவீனகால வாழ்க்கை முறை, உணவுமுறை, சூழல் மாசு அடைந்தமை, நீண்ட நேரம் கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் இருத்தல், கையடக்கத் தொலைபேசி பாவனை, போதிய உடற்பயிற்சியின்மை ஓய்வின்மை, மன உளைச்சல் போன்றவையே இதற்குக் காரணமாகும்.

இருதயம் சீராகச் செயலாற்ற பிராண வாயு இரத்தம் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இருதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் முடிவுறு நாடிகளில் (Coronary Arteries) அடைப்பு ஏற்பட்டு இரத்தோட்டம் தடைப்படும்போது போதிய பிராணவாயு இருதயத்தின் தசைகளுக்குக் கிடைக்காதபோது தான் மார்பு வலி (Angina) ஏற்படுகிறது.

இது இருதய இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையாகும். இக்குழாய்கள் அடைபட்டு இருதயத்திற்கான இரத்தோட்டம் முழுமையாகத் தடைப்படும் போதுதான் மாரடைப்பு (Heart Attack) ஏற்படுகிறது.

பல்வேறு காரணிகளால் மேற்படி முடிவுறுநாடிகளில் கொழுப்பு படிந்து தடித்து விடுவதால் அவற்றின் விட்டம் குறைந்து விடுகிறது. இதனால் அதனூடாகச் செல்லும் இரத்தோட்டம் பாதிக்கப்படுகிறது. போதிய பிராணவாயு கிடைக்காததால் மார்புவலி ஏற்படுகிறது.

சிலவேலைகளில் இக்கொழுப்புப் படிவம் இரத்தக் குழாயிலிருந்து விடுபட்டு இரத்தத்துடன் கலந்து மிக மெல்லிய முடிவுறு நாடிகளுக்குள் புகுந்து அடைப்பை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் இருதயத்திற்குச் செல்லும் இரத்தோட்டம் பூரணமாகத் தடைப்படுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.

மேற்படி இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து தடிப்பு ஏற்படுதல் தடுக்க முடியாத மற்றும் தடுக்கக் கூடிய இருவகைக் காரணிகளால் நடைபெறுகிறது. முதுமை, ஆண்பால், பரம்பரை, கறுப்பு இனம் போன்றவை தடுக்க முடியாத காரணிகளாகும்.

சீரற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்க வழக்கம், போதிய ஒட்சிசனெதிரி கள்(Antioxidants) அடங்கிய உணவை உட்கொள்ளாமை, மன உளைச்சல், உடற் பயிற்சியின்மை, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் உயர்ந்த அளவு கொழுப்பு (Cholesterol) மற்றும் ரைகிளிசெனரட் (Triclycexide)என்ற கொழுப்பு, குறைந்த அளவு நல்ல கொழுப்பு (HDL) , கூடிய அளவு கெட்ட கொழுப்பு (LDL) நீரிழிவு நோய், உடல் பருமன் எரிந்து விழுதல், தனிமை, பகமை, பேராசை, புகைத் தல், அதிக அளவு மதுப்பாவனை, நீண்டகால மருந்து பாவனை போன்றவை தடுக்கக்கூடிய காரணிகளாகும்.

இவற்றில் மிக முக்கியமானது உயர் இரத்த அழுத்தமாகும். தற்போது உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டோரை இந்த உயர் இரத்த அழுத்தம் நோய், பாதித்து ள்ளது. இந்நோய் தங்களிடம் இருப்பது பற்றி தெரியாமல் பெரும்பாலானோர் வாழ்கின்றனர். இதனால்தான் திடீரென எவ்வித அறிகுறிகளுமின்றி மாரடைப்பு ஏற்பட்டுப் பலர் மரண மடையும் பரிதாபகரமான நிலை ஏற்படுகிறது.

மேலும், சிலர் மேற்படி தடுக்கக்கூடிய காரணிகளைக் கிரமமான பரிசோதனைகளை மேற்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்து தங்களுக்கு இரு தய நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை என இருக்கும்போது அவர்களுக்கு எவ்வித அறிகுறிகளுமின்றி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடையும் சந்தர்ப்பம் உண்டு.

மருத்துவர்களால் மேற் கொள்ளப்படும் பிரேதப் பரிசோதனையில் தான் அவர்களின் இருதயத்தில் ஏற்பட்ட ஒருவகை தொற்று நோயால்தான் மரணமடைந்தனர் என்பது தெரியவரும். இதுபோன்று இரத்தத்தில் கோமிசைடின் (Homoecystine) என்ற பொருள் அதிகரிக்கும் போதும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. தினமும் விட்டமின் சி அடங்கிய தோடம்பழச்சாறு அல்லது தேசிக்காய் சாறு பருகி விட்டமின் ஈ 200 iu எடுப்ப தன் மூலம் இது ஏற்படாது தடுக்க முடியும்.

இருதயத்திற்கு இரத்தத்தை விநியோகிக்கும் முடிவுறு நாடிகளில் (Coronary Arteries) ஏற்படும் அடைப்பு காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. இந்நாடிகளில் கல்சியம் உப்பு மற்றும் இரத்தக் கொழுப்பு படிப்படியாகப் படிந்து அதன் விட்ட த்தைக் குறைக்கும்.

சிறு நீரகத்தின் (Kidney) மேல் இருக்கும் அட்ரீனல் சுரப்பி (Adrenal Gland) சுரக்கும் அட்ரீனாலின் (Adrenaline) என்ற சுரப்பு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள படிவத்தை உடைத்து எடுத்து இரத்தத்துடன் கலக்கச் செய்யும். இவ்வாறு இடம்பெயர்ந்த படிவம், இருதயத்திலுள்ள மிகக் குறுகிய முடிவுறு நாடிக்குள் புகும்போது அதை அடைத்து இரத்தோட்டத்தைத் தடுத்து மாரடைப்பு ஏற்பட வழி வகுக்கும்.

மேற்படி சுரப்பு அதிகாலை மூன்று மணியளவில்தான் அதிகமாகக் சுரக்கப்படும். இதனால்தான் அதிகமான மாரடைப்பு அதிகாலையில் ஏற்படுகிறது.

இரத்தோட்டத்தில் இரத்த உறைகட்டிகள் (Blood Clots) தோன்றுவதற்கு உயர் கொலொஸ்ரோல் (Cholesterol) அளவு வழி வகுக்கிறது. இரத்தோட்டத்தில் கலந்து செல்லும் இவ் இரத்த உறை கட்டிகளும் மேல் கூறியவாறு முடிவுறு நாடிகளில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்தும்.

மேற்படி முடிவுறு நாடிகளில் ஏற்படும் கொழுப்புக்கட்டி படிமானம் திடீரென ஏற்படுவதில்லை. இது ஒன்பது வயதிலிருந்தே படிப்படியாக ஏற்படுகிறது எனச் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இளம் வயதிலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இது ஏற்படாது தடுக்க முடியும்.

அன்ஜைனா எனப்படும் மார்பு வலி ஒரு கிரேக்க மொழிச் சொல்லா கும். ‘உதவி கேட்டு இருதயம் அழுகிறது’ என்பது இதன் பொருளாகும். ஒரு மெல்லிய வலி நெஞ்சின் மத்தி யில் ஏதாவது கடினமான வேலைகள் செய்யும்போது ஏற்படும்.

அளவிற்கு மீறி உணவு உண்டபோதும், இவ்வலி ஏற்படும் உணர்ச்சிவசப்படும்போதும் மன உளைச்சல் அதிகரிக்கும்போதும் பயம், கோபம், ஏமாற்றம் ஏற்படும் போதும் இவ்வலி ஏற்படும். மேற் படி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் முன் குறிப்பிட்ட அட்ரீனல் சுரப்பி Catecholamine என்ற சுரப்பை அதிகமாக சுரப்பதால் இருதயம் விரை வாகத் துடிப்பதால் மார்பு வலி ஏற்படும். இவ்வாறாக ஏற்படும் மார்பு வலியை அலட்சியம் செய்யாது தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் மாரடைப்பு ஏற்படாது தடுக்கலாம்.

ஆரோக்கியமான உணவுடன் உடற் பயிற்சி, மற்றும் யோகா போன்றவற்றை இளம் வயதிலிருந்தே மேற் கொண்டால் இருதய நோய் ஏற்படாது தடுக்க முடியும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

இதனால் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். கடந்த நான்கு வருடங்களில் இளம் வயதினருக்கு ஏற்படும் இருதய நோய் 25 சதவீதம் அதிகரித்துள்ளது என அறியக்கிடக்கிறது.

மார்பின் மத்தியில் ஏற்பட்ட மெல்லிய வலி தீவிரமடைந்து இடது கைக்கு சில வேலைகளில் வலது கைக்கும், கீழத் தாடைக்கும் பரவுதல், குமட்டல் அல்லது வாந்தி, நெஞ்சில் முட்டு, மூச்சு நின்று விடுதல் அல்லது மெல்லிய மூச்சு, அதிக வியர்வை, பலவீனம், மயக்கம், தலைச்சுற்று, தொண்டைக்குள் அடைப்பு போன்றவை அன்ஜைனாவின் அறிகுறிகளாகும்.

சிலவேளைகளில் வாய்வுக் கோளாறுகளினாலும் மேற்படி அறிகுறிகள் தென்படும். வாய்வுக் கோளாறு என கை மருத்துவம் பார்க்காது உடனடியாக மருத்துவமனைக்குப் போய் பரிசோதனைகளை மேற்கொண்டு அன்ஜைனா ஏற்பட்டுள்ளதா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மேற்படி அறிகுறிகள் தென்பட்டதும் முதல் உதவியாக GTN என்ற நாக்குக் கீழ் வைக்கும் மாத்திரை, ஆஸ்பிரின் எடுத்தால் இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு அகலும். இவை கிடைக்காதபோது கடும் சாயத்துடன் சுடச் சுடப் பாலில்லாத தேனீர் பருக அடைப்பு ஓரளவு அகலும் என சமீபத்தில் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு ஏற்பட்டதும் பதற்றமடையாது நோயாளியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாரடைப்பு ஏற்பட்ட அடுத்த ஒரு மணித்தியாலத்தை மருத்துவர்கள் தங்கமான நேரம் (Golden Hour) என்பர். இந்த ஒரு மணித்தியாலத்திற்குள் நோயாளிக்கு சிகிச்சை அளித்தால் உயிராபத்து ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

சில சமயம் தனிமையில் ஒருவர் வெளியூருக்குக் காரோட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்படலாம். பக்கத்து மருத்துவமனைக்குப் போக ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பிடிக்கலாம் என்ற நிலையில் அவர் சில முதலுதவிகளைத் தானே செய்யமுடியும்.

நன்கு உட்கார்ந்துகொண்டு நெற்றியைக் கையால் தாங்கிக்கொண்டு வாந்தி எடுப்பது போல் ஆழமாக சிறிது நேரம் ஒலி எழுப்பிவிட்டு நிற்பாட்டி விட்டுச் சிறிது நேரம் ஆழமாகச் சுவாசம் எடுக்கவேண்டும். இதனால் இருதயம் பிடித்துவிடப்படுவதால் (Massagin) அது மீண்டும் துடிக்கும் சாத்தியம் ஏற்படும்.

மேலும், ஆழ்ந்த சுவாசத்தின்போது அதிகபட்ச பிராணவாயு உட்செல்வதால் இருதயத்திற்கு போதிய பிராணவாயு கிடைத்து மீண்டும் இயங்கும் வாய்ப்பு உண்டு. இதனால் காலம் பிந்தி மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றாலும் அவர் உயிர்பிழைக்க முடியும்.

பண்டிகைக் காலங்களில் தான் அதிகமான மாரடைப்பு ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அக்காலங்களில் அளவுக்கு மீறிய மதுபாவனை, புகைத்தல், கொழுப்பு, உப்பு அதிக மடங்கிய உணவுகளை அளவிற்கு மீறி உட்கொள்ளல், போதிய ஓய்வின்றி இரவு முழுவம் நடனமாடுதல் போன்றவை மாரடைப்பை வரவழைக்கும் எனவே, இருதய நோயாளர்கள் இரவு விருந்துகளுக்குப் போகும்போது மறக்காது GNT மாத்திரையை எடுத்துச் செல்ல வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு, கிரமமான உடற் பயிற்சி மற்றும் யோகா, மன உளைச்சலைத் தவிர்த்தல், புகைத்தலை விட்டுவிடல், மிதமான மதுப்பாவனை, அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளல் போன்றவை மூலம் அன்ஜைனா ஏற்படாது தடுக்கலாம்.

பாலூட்டும் பெண்களுக்கு இவ் ஆபத்து 19 சதவீதம் குறைவு என்றும், அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் தம்பதிகளுக்கு, மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவு எனவும் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, கொழுப்பு நிறைந்த பெரிய மீன்கள், நெய், பட்டர், கொழுப்பு அடங்கிய பால், வித்துகள், உலர் பழங்கள் போன்றவை இரத்தத்தில் கொலொஸ்ரோலின் அளவை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்கவேண்டும்.

தானிய உணவு வகைகள் இருதய நோய் மருந்து போல் செயல்பட்டு மாரடைப்பு ஏற்படாது தடுக்கும் வல்லமை கொண்டவை என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் நார்ச்சத்து (Fibres) அடங்கிய உணவு வகைகளை உண்ண மாரடைப்பு 29 சதவீதம் குறையும் எனக் கூறப்படுகிறது.

தானிய உணவுகளுடன் கிரமமான யோகாவில் ஈடுபட்டால் இருதய ஆரோக்கியம் மேம்படும். இவற்றிலுள்ள நார்ப் பொருட்களும், விட்டமின்களும் ஆரோக்கியத்தைப் பேணும்.

மத்தியத்தரை நாடுகளில் (Mediterranean) உள்ள மக்களுக்கு இருதய நோய் ஏற்படுதல் மிகக் குறைவு. அவர்களின் உணவில் மீன், ஒலிவ் எண்ணெய், வைன் அடங்கியிருப்பதே இதற்குக் காரணமாகும். இருதய நோய் ஏற்படாது தடுக்கும் பல்வேறு ஒட்சிடனெதிரிகள் (antioxidants) இவற்றில் அபரிமிதமாக அடங்கியுள்ளன.

புகைத்தலைத் தவிர்த்து அதிக அளவு மரக்கறிவகைகள், பழங்கள் ஒட்ஸ் பயறு வகைகள், முழுத் தானிய வகைகள், மீன் போன்ற உணவுகளை உட்கொண்டு நடத்தல், துவிச்சக்கர வண்டி பதிதல், யோகா போன்றவற்றில் ஈடுபட்டால் இருதய நோய் ஏற்படாது தடுக்கமுடியும்.

மேல் குறிப்பிட்டவாறு 2020 ஆம் ஆண்டு ஒரு கொள்ளை நோயாக இருதய நோய் பரிமாணமடைவதைத் தடுக்க இப்போதே வாழ்க்கை முறை, உணவு, உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இருதய நோயின் தாற்பரியத்தைக் கவனத்தில் கொண்டு இந்நோய் பற்றிய அறிவையும், விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு உலக இருதய நோய் தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிறு தினத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.

விடுதலை நாளான இத்தினத்தில் பெரும்பாலான மக்கள் இத்தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயனடைய முடியும். இவ்வருடம் இத்தினம் செப்டெம்பர் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. ‘இதயத்திற்கு இணக்கமான வேலைத்தளம்’ என்பதே இவ்வருட தொனிப்பொருளாகும்.

தொழில் புரிவோர் தங்களின் நேரத்தின் அதிக அளவை வேலைத்தளத்தில் செலவிடுகின்றனர். குடும்பத்தோடு செலவிடும் நேரம் மிகக் குறைவு. வேலைத்தளத்திற்குப் பயணிக்கும்போது ஏற்படும் சனநெரிசல், காலதாமதம், மன உளைச்சலை அதிகரிக்கின்றன.

வேலை செய்யும் இடமும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். சிகரட் புகை அடங்கிய சூழல், காற்றோட்டமில்லாத குளிரூட்டியின் (Air Conditioner) கீழ் வேலை செய்தல், காலக்கெடுவுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற கடினமான உத்தரவு, கொழுப்பு, உப்பு அதிகம் அடங்கிய சிற்றுண்டிகளைக் கொண்ட சிற்றுண்டிச்சாலை போன்றவை மன உளைச்சலை ஏற்படுத்துவதால் இருதய நோய் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவே தான் இத்தொனிப் பொருள் இந்த வருடம் கொடுக்கப்பட்டது.

நவீன மருத்துவமுறையில் இருதய நோயாளர்கள் பல்வேறு தேவையற்ற பரிசோதனைகளுக்கும், செய்த பரிசோதனைகளைத் திரும்பவும் செய்தல் போன்றவற்றிற்க்கும் உட்படுத்தப்படுவதால் பெரும் பணம் செலவழிக்க நேரிடுகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகள் பெரும்பணம் சம்பாதிக்கின்றன. இருதய வைத்திய நிபுணர்களும் இலட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

ஆரோக்கியமான உணவை உட்கொண்டு கிரமமான யோகா பயிற்சியில் ஈடுபட்டால் பரம்பரை காரணிகள் உட்பட இருதய நோயை ஏற்படுத்தும் காரணிகள் அகன்று இருதயநோய் ஏற்படாது தடுக்க முடியும்.
உயர் இரத்த அழுத்தம் - ஓர் அமைதிக் கூற்றுவன்
ஓர் ஆண் அல்லது பெண்ணுக்கு அவருடைய வயதுக் கேற்ப இருக்க வேண்டிய இயல்பான அளவைவிடக் கூடுதலாக இருக்கும் இரத்த அழுத்தமே, உயர் இரத்த அழுத்தம் எனப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர், இரத்த அழுத்தம் என்றால் என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம். தமனிக் குழாயில் (artery) பாய்ந்து செல்லும் இரத்தம், குழாயின் சுவர்ப்புறப் பரப்பின் ஓர் அலகில் ஏற்படுத்தும் அழுத்தமே (pressure in unit area) இரத்த அழுத்தம் எனப்படுகிறது.
இரத்த அழுத்தம் இரண்டு எண்களால் ஒன்றின் கீழ் ஒன்றாக ஒரு வகுத்தல் போல பதிவு செய்யப்படுகிறது. மேலிருக்கும் எண் இரத்த ஓட்டத்தின் போது இதயச் சுருங்கியக்கத்தின் காரணமாக ஏற்படும் இரத்த அழுத்த (systolic pressure) அளவாகும்; கீழே இருக்கும் எண் இதய விரிவியக்கத்தின் காரணமாக (diastolic pressure) உண்டாகும் இரத்த அழுத்த அளவாகும். எடுத்துக்காட்டாக ஒருவரின் இரத்த அழுத்த அளவு 120/80 (மில்லி மீட்டர் பாதரச அளவு - mm Hg) எனக் கொள்வோம். இதயச் சுருங்கியக்கத்தின் போது அவருடைய இரத்த அழுத்தம் உயரளவான 120மி.மீ. பாதரச அளவும், விரிவியக்கத்தின் போது 80 மி.மீ பாதரச அளவும், உள்ளது எனப் பொருள்படும். ஒருவருடைய வயது, நாள்தோறும் அவர் மேற்கொள்ளும் உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி, கடைபிடிக்கும் உணவுப் பழக்கம் ஆகியவையே அவரது இரத்த அழுத்ததில் தாக்கத்தை ஏற்படுத்துவனவாகும்.
இரத்த அழுத்தத்தை அளவிடும் முறை
இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு குருதி அழுத்தமானி (sphygmomanometer) என்னும் கருவி பயன்படுத்தப்படுகிறது. பாதரச அழுத்தமானியுடன் (Mercury Manometer) இணைக்கப்பெற்ற காற்றினால் உப்பும் ஒரு கச்சையை (inflatable cuff) நோயாளியின் தோளுக்குக் கிழே மேற்புறக் கையைச் சுற்றி நன்கு கட்டுவர். இதனால் கையிலுள்ள தமனிக் குழாய் அழுத்தப் பெற்று இரத்த ஓட்டம் தற்காலிமாகத் தடைபடுகிறது. அடுத்து உப்பிய கச்சையிலுள்ள காற்று வெளியேற்றப்படும். இதே வேளையில் இரத்த அழுத்தத்தை அளவிடுபவர், ஸ்டெதெஸ்கோப் எனப்படும் மார்பாய்வியை முழங்கையிலுள்ள மேற்கைத் தமனியில் வைத்து, அத்தமனி வழியே இரத்தம் செல்லத் துவங்கும் போது ஏற்படும் நாடித் துடிப்பு ஒலிகளைக் கூர்ந்து கவனிப்பார். தமனியில் ஏற்படும் அழுத்தம், கச்சையின் அழுத்ததை விட அதிகமாகும் வரை துடிப்பு ஒலிகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். முதல் ஒலியின் போது ஏற்படும் அழுத்த அளவு, இதயச் சுருங்கியக்க அழுத்தமாகும்; இறுதியாகக் கேட்கும் ஒலியின் போது உண்டாகும் அழுத்த அளவு, இதய விரிவியக்க அழுத்தமாகும். நோயாளியின் உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில் இரத்த அழுத்தம் மும்முறை அளவிடப்படுதல் வேண்டும்; கடைசி அளவைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு குறைந்தது அரை மணி முன்பு வரை, புகை பிடித்தல், காஃபி அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நம் அனைவருக்கும் ஏதோ ஒரு காரணத்திற்காக இரத்த அழுத்த அளவீடு மருத்துவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும்; எனவே இதைப்பற்றி நாம் அனைவரும் அறிந்துள்ளோம் என்பதில் ஐயமில்லை.
உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன ?
இரத்த அழுத்தம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உயரளவிலேயே நிலையாக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தமாகக் கருதப்படுகிறது. இதனை ஹைப்பர்டென்ஷன் என ஆங்கிலத்தில் கூறுவர். இதயச் சுருங்கியக்க அழுத்தம் 160 மி.மீ பாதரச அளவுக்கும், இதய விரிவியக்க அழுத்தம் 95 மி.மீ. பாதரச அளவுக்கும் சமமாகவோ அல்லது கூடவோ இருந்தால் அந்நிலையை உயர் இரத்த அழுத்த நிலை எனக் கூறலாம் என்று உலக நல்வாழ்வு நிறுவனத்தின் (World Health Organization - WHO) நிபுணர் குழு கருதுகிறது. ஆனால் மருத்துவ அறிஞர்களிடையே, உயர் இரத்த அழுத்தத்தின் துவக்க நிலையை அறுதியிடுவதில் பலவகைக் கருத்துகள் நிலவுகின்றன என்றே கூற வேண்டும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோரிடையே உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டுபிடித்தல், தடுத்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் சிகிச்சை அளித்தலுக்கான அமெரிக்கத் தேசிய இணைப்புக் குழுவினரின் ஆறாவது பொது அறிக்கை, இரத்த அழுத்தத்தைக் கீழ்க்கண்டவறு வகைப் படுத்துகிறது:
இரத்த அழுத்த வகைப்பாடு இதயச் சுருங்கியக்க அழுத்தம் (மி.மீ. பாதரச அளவு) இதய விரிவியக்க அழுத்தம் (மி.மீ. பாதரச அளவு) 
உகந்த நிலை <120 <80
இயல்பு நிலை <130 <85
இயல்புக்கு மேற்பட்ட நிலை130 - 139 85 - 89
உயர் இரத்தஅழுத்தம் நிலை 1: 140 - 159 90 - 99 
உயர் இரத்தஅழுத்தம் நிலை 2: 160 - 179 100 - 109 
உயர் இரத்தஅழுத்தம் நிலை 3: 180 - 209 110 - 119 

உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டுபிடித்தல்
உயர் இரத்த அழுத்தத்துக்கு ஆட்பட்ட ஒருவர், வாழ்நாள் முழுதும் அதனோடு வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். மேலும் உயர் இரத்த அழுத்தம் எவ்வித அறிகுறியும் இன்றி, உள்ளுறை நோயாகவே பெரும்பாலோரிடம் இருந்து வருகிறது; மிகச் சிலரிடம் மட்டுமே அதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே ஒவ்வொருவருக்கும் உயர் இரத்த அழுத்தச் சோதனை நடத்துவது இன்றியமையாததாகும்.
இதயத்துக்குக் கடுமையான கூடுதல் பணிச் சுமையை அளிப்பதால் உயர் இரத்த அழுத்தம் மிகவும் அபாயமானதாகக் கருதப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் தொடர்ந்து இருக்குமானால், உடலின் பல பகுதிகள் செயற்பாட்டை இழந்து, இறுதியில் இறப்பு தவிர்க்க முடியாததாகி விடும். எனவே துவக்க நிலயிலேயே இந்நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம்.
முன்பு இதய விரிவியக்க அழுத்தமே, உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய காரணியாகக் கருதப்பட்டது; ஆனால் தற்போதைய ஆய்வுகளின்படி இதய சுருங்கியக்க அழுத்தமே, இதயக் குருதி நாளம் சார்ந்த நோய்களுக்கு (cardiovascular morbidity) முக்கிய காரணமாகக் கருதப் படுகிறது. தகுதியான மருத்துவரிடம் முறையான சிகிச்சையைப் பெறுவதன் வாயிலாக இந்நோயின் இன்னல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள இயலும். 
உலக நல்வாழ்வுக் கழகப் புள்ளிவிவரப்படி நகரத்தில் வாழும் ஆண்களில் 1000 க்கு 60 பேரும், பெண்களில் 70 பேரும் உயர் இரத்த அழுத்த நோய்க்கு ஆளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது; கிராமப் புறங்களில் இதன் தாக்கம் குறைவாகவே உள்ளது. வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகளில் தமனி உயர் இரத்த அழுத்த நோய் (arterial hypertension) பொது மக்களின் நல்வாழ்வில் பெரும் பிரச்சினைகளை உருவாக்குவதாக உள்ளது எனலாம்.
இந்த நோயானது, புவியியல் சார்ந்தும், மரபு வழிப்பட்ட பண்புகளைச் சார்ந்தும் இருப்பதாக ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன. மேலும் குடும்பத்தில் வழிவழியாக இந்நோய் தாக்கும் என்றும் கருதப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்
அடிப்படை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension): சாதாரணமாக 95% மக்களுக்கு இந்த வகையான உயர் இரத்த அழுத்தமே காணப்படுகிறது. இது வருவதற்கான அடிப்படைக் காரணமாக எதையும் கூறுவதற்கில்லை.
துணைநிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary hypertension): ஏறக்குறைய 5% உயர் இரத்த நோயாளிகள் இவ்வகையில் அடங்குவர். இதற்கான சில அடிப்படைக் காரணங்கள் இருப்பதுண்டு. சிறுநீரகம் தொடர்பான நோய்கள், நாளமில் சுரப்பிக் குறைபாடுகள், சில கருத்தடை மாத்திரைகள் ஆகியன உடலில் குருதிச் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படக்கூடும்; கருவுற்ற நிலையில், பெண்களுக்கு இரத்த அழுத்தம் உயர்வதும் உண்டு.
வெள்ளாடை உயர் இரத்த அழுத்தம் (White coat hypertension): மருத்துவரை வெள்ளை ஆடையில் கண்டவுடனே, தற்காலிகமாகத் திடாரென்று சிலருக்குத் தோன்றும் இரத்த அழுத்தம் இது. மருத்துவ மனையை அடைந்தவுடனே, அச்சம் காரணமாக உண்டாவது இவ்வகை இரத்த அழுத்தம். சுமார் 20% நோயாளிகளுக்கு இவ்வகை இரத்த அழுத்தம் உண்டாவதாகக் கண்டறிந்துள்ளனர்.
தீவிர உயர் இரத்த அழுத்தம் (Accelerated hypertension): அண்மையில் இருந்த உயர் இரத்த அழுத்தத்தைவிட, கூடுதலாகத் தற்போது ஏற்பட்டிருக்கும் உயர் இரத்த அழுத்த அளவாகும் இது. கண்களுக்குப் பின்புறம் அமைந்துள்ள ஒளி நரம்பின் இரத்த நாளம் சிதைவுற்று அதனால் உண்டாகும் கண்குமிழ் அழற்சியினோடு (papilledema) தொடர்புடையது இவ்வகைத் தீவிர உயர் இரத்த அழுத்தமாகும்.
அபாயநிலை உயர் இரத்த அழுத்தம் (Malignant hypertension): கட்டுப்படுத்த முடியாத, கடுமையான சிக்கல் நிறைந்த உயர் இரத்த அழுத்த வகையாகும் இது. இந்நிலையில் இரத்த அழுத்தம் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிடும் (இதயச் சுருங்கியக்க அழுத்தம் 200 மி.மீ. பாதரச அளவுக்கும், 
இதய விரிவியக்க அழுத்தம் 130 மி.மீ. பாதரச அளவுக்கும் கூடுதலான நிலையை அடைவதுண்டு.) அபாயநிலை உயர் இரத்த அழுத்தமானது, உடலுறுப்புகள் சிதைந்து சேதமடைதல், விழித்திரைக் குருதிப்போக்கு ஆகியவற்றிற்கு வழி வகுக்கும். எனவே இவ்வகை உயர் இரத்த அழுத்தத்திற்கு, நெருக்கடி நிலை மருத்துவச் சிகிச்சை அளிப்பது இன்றியமையாதது. 
இடர்க் காரணிகள் (Risk factors)
உயர் இரத்த அழுத்தமே பல்வேறு நோய்களுக்கான இடர்க்காரணியாக அமைகிறது. இருப்பினும் உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான இடர்க் காரணிகளை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று தடுக்கக் கூடிய அல்லது மாற்றக் கூடிய இடர்க் காரணிகள்; மற்றொன்று தடுக்க இயலா இடர்க் காரணிகள்.
தடுக்க இயலா இடர்க் காரணிகள் (Non-modifiable Risk Factors)
அ) வயது: ஆண், பெண் இரு பாலருக்கும் வயது கூடக் கூட, இரத்தம் அழுத்தம் கூடுவதும் தவிர்க்க இயலாததாகிறது. 
ஆ) மரபு வழிக் காரணங்கள்: ஆய்வு முடிவுகளின்படி, இயல்பான இரத்தம் அழுத்தம் உள்ள பெற்றோருக்குப் பிறப்பவர்களில், 3% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது என்றால், உயர் இரத்தம் உள்ள பெற்றோருக்குப் பிறப்பவர்களில் 45% பேருக்கு அது உண்டாகிறது. 
தடுக்கக் கூடிய இடர்க் காரணிகள் (Modifiable Risk Factors):
அ) உடற் பருமன்: உடலின் எடை கூடக் கூட, உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆளாவதும் தவிர்க்க இயலாததாகிறது.
ஆ) உணவில் உப்பின் அளவு: உணவில் உப்பை மிகுதியாகச் சேர்த்துக் கொள்ளுவதாலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆட்பட வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 7 - 8 கிராம் உப்பு என்பது உயர்ந்த அளவாகும். மிகப் பழங்காலத்தில் குறைந்த அளவு உப்பினை உட்கொண்ட நமது சமூகத்தில் உயர் இரத்த அழுத்தம் என்பது கேள்விப்படாத நோயாக இருந்தது. 
இ) அன்றாட உணவுப் பழக்கம்: கொழுப்புப் பொருட்கள், குடிப்பழக்கம் ஆகியன உயர் இரத்த அழுத்தை ஊக்குவிக்கும் உணவுப் பழக்கங்களாகும்.
ஈ) உடலுழைப்பு: தொடர்ந்த உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சியினால் உடலின் எடை குறைவதோடு, இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். 
உ) பதற்ற நிலை: உளவியல் காரணங்களும், மன உளைச்சலும், மூளைக்குத் தரும் கடுமையான உழைப்பும் கூட உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணங்களாக அமைகின்றன; எனவே அமைதி, மனக் கட்டுப்பாடு, ஆகியன மிகவும் இன்றியமையாதவை.
உயர் இரத்த அழுத்தத்தினால் விளையும் சிக்கல்கள்:
மூளை வாத நோய் (Stroke): உயர் இரத்த அழுத்தத்தால், குருதிக் குழாயில் சேதமேற்பட்டு, மூளையில் குருதிப் போக்கு ஏற்படுவதால் இந்நோய் உண்டாகிறது. இது உயிருக்கே உலை வைக்கக்கூடிய நோயாகும்.
உயர் இரத்த அழுத்த மூளை நலிவு நோய் (Hypertensive Encephalopathy): பேச்சுக் கோளாறு, பார்வைக் கோளாறு, அசாதாரணப் புலனுணர்வு, வலிப்பு நோய், மனநிலை மாற்றம் ஆகிய நோய்களும், நரம்புத் தொடர்பான நோய்களும் இதன் காரணமாக உண்டாகும்.
உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் (Hypertensive Retinopathy): விழித்திரை அருகிலுள்ள இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் குறைவதோடு, இரத்தக் கசிவும் ஏற்படும் வாய்ப்பு உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உண்டாகிறது.
இதயக் கோளாறுகள் (Cardiac Complications): உயர் இரத்த அழுத்தம் என்பதே, இதயத்திற்குச் செல்லும் குருதி குறைபாட்டுக்கு வழிவகுக்கும் நோயாகும். உயர் இரத்த அழுத்தம் இதயத்திற்கு மிகுந்த அழுத்தத்தைத் தருகிறது. இதனால் இடது வென்ட்ரிகல் விரிவடைந்து, இறுதியாக அது தன் பணியைச் செய்ய இயலாமல் இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் நின்றுவிடும். 
சிறுநீரகப் பிரச்சினைகள் (Kidney Problems): நீண்ட கால உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகம் தனது பணியைச் செய்ய இயலாமல் பழுதடைந்து போவதற்கு வழி வகுக்கும். 
உயர் இரத்த அழுத்தத்திற்குச் சிகிச்சை அளித்தல்:
உயர் இரத்த அழுத்த நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பதன் முக்கிய நோக்கம், நோய்க்கு உரிய இடர்க் காரணிகளைக் கண்டறிந்து, அவற்றிற்கு உரிய மருத்துவ முறைகளை மேற்கொண்டு, நோயாளி நீண்ட நாள் வாழ வழி வகுத்தலே ஆகும். துணைநிலை உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு, உரிய மருந்துகளைத் தருவதோடு, நோய்க்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றிற்கும் உரிய சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். உயர் இரத்த அழுத்த நோய் வராமலே தடுப்பதற்கான வருமுன் காக்கும் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றுதல் நலம்.
உணவு முறை: குடிப் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல், சரியான உணவை உட்கொள்ளுதல் ஆகிய இரண்டும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உகந்த உணவுப் பழக்கமாகும். கொழுப்புப் பொருட்களை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். நார்ச் சத்து நிறைந்த உணவு மிகவும் நல்லது. குறைந்த அளவு உப்பையே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த, உப்பு மிகுந்த, தின்பண்டங்களையும் தவிர்க்க வேண்டும். 
புகை பிடித்தல்: புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே தவிர்த்தல் இன்றியமையாதது.
உடற்பயிற்சியும், ஓய்வும்: (குறைந்தது வாரத்திற்கு மூன்று நாட்கள், சுமார் 20 நிமிட நேரம்) தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மிகவும் தேவையான ஒன்று; விரைந்து நடத்தல், நீச்சல் போன்றவை உடலைத் தகுதியாக வைத்துக்கொள்வதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்க வழி வகுக்கும்.
ஆழ்நிலைத் தியானம், மூச்சுப் பயிற்சி, யோகப் பயிற்சி ஆகியவையும் இரத்த அழுத்ததைக் குறைக்கப் பயன்படுகின்றன. இவற்றால் உடலுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும். ஆனால் இப்பயிற்சிகளின் வாயிலாக மருந்து எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க இயலாது; ஓரளவு மருந்தின் அளவையும், வீரியத்தையும் குறைக்கலாம். 
உயர் இரத்த அழுத்தத்திற்கான மருத்துவமனைச் சோதனைகள்:
உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக மருத்துவரால் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, தொடர்ந்து சில மருத்துவ நோயியல் ஆய்வுகளை அவ்வபோது நடத்துவது இன்றியமையாதது. அவை பின்வருமாறு:
குளுகோஸ், புரோட்டின், சிறுநீர்க் குருதி ஆகியவற்றிற்கான சிறுநீர் பகுப்பாய்வு
பிளாஸ்மா யூரியா மற்றும் கிரியேட்டினைன் ஆகியவற்றைத் தீர்மானித்தல்
பிளாஸ்மா கொழுவியம்/டிரைகிளிசரைட் ஆகியவற்றைத் தீர்மானித்தல்
மார்பின் எக்ஸ் ரே படம்
இதய மின்னியக்கப் பதிவு (Electrocardiograph - ECG)
பிளாஸ்மா எலெக்ட்ரோலைட்கள்
உயர் இரத்த அழுத்தம் துவக்க காலத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் அமைதியாக இருப்பதால், அதனைக் கண்டுபிடிப்பது சற்றுக் கடினம். மிகுந்த சினம் கொள்வதும், அடிக்கடி தலைவலி வருவதும் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் என்பது உறுதி செய்யப்படாத நம்பிக்கை. ஆனால் சிகிச்சை பெறாத நிலையில், உயர் இரத்த அழுத்தம் பல்வேறு சிக்கல்களுக்கு வழியுண்டாக்கி, உடனிருந்து உயிரையே வாங்கிவிடும் என்பது மட்டும் உறுதி.
தேவையான மருத்துவச் சிகிச்சை, முறையான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை, தகுந்த உடற்பயிற்சி ஆகியவை வாயிலாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இயல்பாக நீண்ட காலம் வாழ இயலும் என்பதில் ஐயமேதுமில்லை.

இரத்த அழுத்தம்
வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில், இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு, ரத்த அழுத்த நோய் முக்கியமான காரணமாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்க மருத்துவத்துறையால் வெளியிடப்படும் ஹைப்பர் டென்சன் என்ற மருத்துவ இதழ் இரத்த அழுத்தம் குறித்த கடந்த 1976ம் ஆண்டு முதல் அவ்வப்போது விரிவான அறிக்கையினை வெளியிட்டு வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு கடைசியாக இந்த இதழில் வெளியிட்டுள்ள உயர் ரத்த அழுத்த நோய் தடுப்பு, ஆய்வு, பரிணாமம் மற்றும் சிகிச்சை குறித்து வெளியிடப்பட்ட 7 வது அறிக்கையில் (The seventh report of the joint national committee on prevention, detection, evaluation and treatment of high blood pressure – JNC)  மருந்தை விட, அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
உடல் எடையைக் குறைப்பது, உணவுக் கட்டுப்பாடு, தேவையான கலோரிகளை உட் கொள்வது போன்ற நடைமுறைகளையே, ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழி முறைகளாக இந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது.
இவற்றுடன் சீரான உடல் இயக்கத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. அதாவது ஒரே இடத்தில நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் உடலுக்கு அவ்வப்போது அசைவும், வேலையும் கொடுத்து வந்தால், ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதேபோன்று பிரிட்டிஷ் உயர்ரத்த அழுத்த கழகமும், சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கைகள் தெரிவிக்கும் வழிமுறைகள் குறித்து இங்கே பார்ப்போம். ரத்த அழுத்த நோயால் பாதிக்கப் பட்டவர்களும், தங்களது முன்னோர்களுக்கு ரத்த அழுத்த நோய் உள்வர்களும் இந்த பரிந்துரைகளைக் கவனத்தில் கொள்வது நல்லது.
அவ்வப்போது குறித்த கால இடைவெளியில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்து கொள்வது மிக முக்கியம். இதன் மூலம் உடலில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்துகொள்ள இயலும்.
உடல் எடைக்கும், ரத்த அழுத்த நோய்க்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமான உடல் எடையைக் குறைப்பதில் கவனம் தேவை. தேவையான எடையைக் குறைத்துவிடக் கூடாது.
சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கிய உப்புக்கும், உடல் பருமனடைவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உடல் பருமனடைந்தால் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு 6 கிராம் அளவுக்கும் குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.
ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்று ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுக்கட்டுப்பாடு ஆய்வில் (Dietary approach to stop hypertension study – DASH)  கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக உட் கொள்ளும் கொழுப்புச் சத்தைவிட 35 சதவீதம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வேகவைக்கப்படாத காய்கறிகளும், பழங்களும் உணவில் அதிகம் இடம்பெற வேண்டும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பால், நெய், தயிர், மோரைக் குறைத்தல் அல்லது தவிர்த்தல் நல்லது. முன்பே தயாரித்து, குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்து பின்னர் எடுத்துச் சாப்பிடுவது போன்ற பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
பொருத்தமான, தொடர்ச்சியான உடற் பயிற்சியை செய்துவர வேண்டியது அவசியம். பிராணயாமம் என்று சொல்லப்படுகின்ற மூச்சுப்பயிற்சி, ரத்த அழுத்த நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் சிறப்பு வாய்ந்தது. இந்த எளிய பயிற்சியைச் செய்து வந்தாலே ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் நம்மை அணுகாது.
மது, புகையிலை, கோகெய்ன் போன்ற புகையிலைப் பொருட்களை அறவே ஒதுக்க வேண்டும். ரத்த அழுத்த நோய்க்கான முழு முதல் காரணிகள் மது உள்ளிட்ட போதைப் பொருட்கள்தான். எனவே போதைப் பழக்கத்தை வைத்துக்கொண்டு, ரத்த அழுத்த நோயை நிச்சயமாக குணப்படுத்த முடியாது.
பெண்களைப் பொறுத்தவரையில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உணவில் அதிகம் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டாலே ரத்த அழுத்த நோயைத் தவிர்க்க முடியும் என்று பெல்ஜியத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவினர் மக்னீசியம், மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும், மற்ற பிரிவினர் அது இல்லாத உணவினையும் இரண்டு வாரங்கள் உண்ணவைக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்கள் கழித்து பரிசோதனை செய்து பார்க்கும்போது கால்சியம், மக்னீசியம் சத்துள்ள உணவை உட்கொண்ட பெண்களின் ரத்தழுத்த அளவு மிகவும் சீராக இருந்தது கண்டறியப் பட்டுள்ளது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் மற்றவற்றை விட ஆலிவ் எண்ணெயே சிறந்தது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக மீன் எண்ணெயையும் சமையலில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ரத்த அழுத்த நோய் தொடர்பான ஆய்வுகள் கூறுகின்றன. இவை இரண்டும் அறவே கொழுப்புச் சத்து இல்லாதவை என்பதே இதற்குக் காரணம்.
சி வைட்டமின் சத்துள்ள பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தலாம். ஏ மற்றும் ஈ வைட்டமின்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்தும் குணம் இல்லை.
ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவ சிகிச்சைகளை விட, மனதை இலகுவாக்க உதவும் தியானப் பயிற்சியே சிறந்த மருந்து என்பதை சர்வதேச மருத்துவ ஆய்வுகள் உறுதியாகக் கூறுகின்றன.
ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த மருந்துகளைவிட அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்துகொள்வதும் உணவுக் கட்டுப்பாடும், உடல் மன பயிற்சியும் அவசியம் என்பதை, மேலே உள்ள பரிந்துரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

1 comment: