மூக்கில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கா? ஈஸியா போக்கலாம்!!!




சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கரும்புள்ளிகள். பொதுவாக கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால் ஏற்படுகிறது. எண்ணெய் சுரப்பியானது அதிகப்படியான எண்ணெய் சுரக்கும் போது, சருமத்தில் அழுக்குகள், தூசிகள் போன்றவை படும் போது, அவை சருமத்துளைகளில் தங்கிவிடுகின்றன. சிலசமயங்களில் அந்த அழுக்குகள் நீண்ட நேரம் தங்குவதால், அவை கருப்பு நிறத்தில் மாறிவிடுகின்றன. இத்தகையது கரும்புள்ளிகளாக முகத்தில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இந்த பிரச்சனையால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இத்தகைய பிரச்சனையே போக்குவதற்கு நிறைய அழகுப் பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன. இருப்பினும், அவற்றால் எந்த ஒரு பலனும் இல்லை. ஆகவே இந்த பிரச்சனைக்கு இயற்கை முறை தான் ஒரே வழி. அதுமட்டுமின்றி ஒருசில செயல்களை அவ்வப்போது செய்து வர வேண்டும். சரி, இப்போது மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு



ஆவி பிடிப்பது: வாரத்திற்கு இரண்டு முறை முகத்திற்கு ஆவி பிடிக்க வேண்டும். அதுவும் 10-15 நிமிடம் ஆவி பிடித்து, பின்னர் அதன் மேல் சிறிது ஆயில் க்ரீம் தடவி, 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, பின்னர் கடையில் விற்கும் கரும்புள்ளிகளை நீக்கும் கருவியை (Blackheads remover pin) பயன்படுத்தி, கரும்புள்ளிகளை நீக்க வேண்டும். நீக்கியதும், எண்ணெய் இல்லாத க்ரீமை தடவ வேண்டும். இதனால் கரும்புள்ளிகளை நீக்கலாம்.

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை அரைத்து அதனை மூக்கின் மேலே கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதற்கு எலுமிச்சை சாற்றினை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து வர, கரும்புள்ளிகள் அகலும்.

வேப்பிலை: வேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள். எனவே வேப்பிலையை அரைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால், எளிதில் கரும்புள்ளிகள் போய்விடும்.

ஃபேஸ் வாஷ்: வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்ததும், எப்போதும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும், அதிலும் கெமிக்கல் அதிகம் இல்லாத ஃபேஸ் வாஷை பயன்படுத்தி கழுவுவது நல்லது.

பால்: பால் ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். அதற்கு ஒரு காட்டனை பாலில் நனைத்து, முகத்தில் தேய்த்து துடைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி விடுவதோடு, கரும்புள்ளிகளும் நீங்கும்.

தண்ணீர்: உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தாலும், கரும்புள்ளிகள் வரும். எனவே தினமும் அதிகப்படியான தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, உடல் நன்கு பொலிவோடு, கரும்புள்ளிகள் வராமல் தடுக்கும்.

எண்ணெய் உணவுகள்: எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை அதிகம் சாப்பிடுவதை, தவிர்க்க வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.

ஆயில் ஃபேஸ் க்ரீம் (Oily Face Cream): எண்ணெய் பசையுள்ள ஃபேஸ் கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏற்கனவே கரும்புள்ளிகள் அதிகப்படியான எண்ணெய் பசையின் காரணமாகத் தான் ஏற்படுகிறது. ஆகவே இதனை மேலும் பயன்படுத்தினால், கரும்புள்ளிகள் நீங்காமல் இருக்கும்.

No comments:

Post a Comment