அகத்திக்கீரை சூப்



தேவையான பொருட்கள்
அகத்திக்கீரை - 1 கப்
கார்ன் ப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
பால் - 1 கப்
நெய் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை
அகத்திக்கீரையை கழுவிச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய்யை ஊற்றி உருக்கவும். உருக்கிய நெய்யில் மாவைக் கொட்டிக் கிளறி வறுக்கவும். பின்பு தண்ணீர் சேர்த்து கீரையைக் கொட்டி பத்து நிமிடம வேக வைக்கவும். கீரை வெந்தவுடன் மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து சூடாக்க வேண்டும். கடைசியாக பால் சேர்த்து ஒரு கொதி விட்டு பரிமாறவும்.

No comments:

Post a Comment