உடல் அசதியை போக்க இந்த சிம்பிள் யோகாவை செய்யுங்க!

ஊருக்கு போறப்போ கூட தெரியாது. எல்லா வேலையும் முடிச்சுட்டு திரும்பி வந்தவுடன் இருக்குமே பாருங்க ஒரு அசதி. நாள் பூராவும் படுத்துக் கொண்டேயிருக்கலாம் என்றிருக்கும். ஆனல் என்ன செய்வது வந்தவுடன் வேலைக்கும் போக வேண்டும். அந்த மாதிரியான சமயங்களில் சிலர் உடல் அசதி போக மாத்திரை அல்லது சத்து மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இது தேவையில்லாதது. வேறு என்ன பண்ணலாம் என நீங்கள் யோசித்தால் உங்களுக்கு அறிவுறுத்துவது என்ன தெரியுமா? யோகா.

யோகா : 
யோகா உடல் அசதியை போக்கி புத்துணர்வு தருவது கியாரண்டி. அதிலும் உர்த்வ முக ஸ்வனாசனா என்ற யோகா உங்கள் உடல் மற்றும் மனச் சோர்வை கூட போக்கி, புத்துணர்வை தருகிறது. 

உர்த்வ முக ஸ்வனாசனா : உர்த்வ என்றால் மேல் நோக்கி, முக என்றால் முகம் ஸ்வன என்றால் நாய். மேல்னோக்கி நாய் பார்ப்பது போல் செய்யப்படும் இந்த யோகாவிற்கு இந்த பெயர் பெற்றுள்ளது.எப்படி செய்வது என பார்க்கலாம். 

செய்முறை : 
முதலில் நேராக நின்று ஆழ்ந்து ஒருமுறை மூச்சை இழுத்து விட்டபின், தரையில் குப்புற படுங்கள். உங்கள் கைகள் பக்க வாட்டில் வைத்து, கால்களை நேராக வைத்திருங்கள்.
 
செய்முறை : 
பின்னர் உள்ளங்கைகளால் ஊன்றி உடலை வளையுங்கள். முகம் மேலே பார்த்தபடி எவ்வளவும் முடியுமோ அவ்வளவு வளைக்க வேண்டும். கை மற்றும் கால்கள் நேராக இருக்க வேண்டும். உடல் மட்டும் வளைந்தபடி சில நொடிகள் இருக்க வேண்டும். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும். இது போல் 5 முறை செய்யலாம்.
  

பலன் : 
உடல் வலி தீரும். கை, கால்கள் பலம் பெறும். மார்புக் கூடு விரிவடையும். சுவாசப் பாதை சீராகும். தசை, சுளுக்கு , இடுப்பு வலி ஆகியவை குணமாகும். 

குறிப்பு : 
முதுகில் காயம்பட்டவர்கள், கை மூட்டுகளில் அடிப்படவர்கள் இந்த யோகாவை தவிர்க்கவும்.


2 comments: