இரத்தத்தை சுத்தம் செய்ய சாப்பிட வேண்டிய உணவுகள்!

உடலுறுப்புக்களின் சீரான இயக்கத்திற்கு தேவையான சத்துக்களை வழங்குவது இரத்தம் தான். இத்தகைய இரத்தம் நாம் தற்போது உட்கொண்டு வரும் ஜங்க் உணவுகளால் அசுத்தமாக உள்ளது. இதன் காரணமாக உடலுறுப்புக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகக்கூடும்.

எனவே ஒவ்வொருவரும் தினமும் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து சாப்பிட்டு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கீரைகள்
கீரைகள் இரத்தத்தையும், கல்லீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே அடிக்கடி கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பசலைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது மிகவும் நல்லது.
  
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதோடு, பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவையும் உள்ளது. இவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இரத்தத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.
 
அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸ் என்னும் கீரையும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தின் தரத்தை அதிகரிக்கும். மேலும் அஸ்பாரகஸை அடிக்கடி உட்கொடு வந்தால், இரத்த நாளங்களின் ஆரோக்கியமும் மேம்படும்.
  
மாதுளை
மாதுளை இதய நோயாளிகளுக்கு நல்லது என்று சொல்வார்கள். ஏனெனில் அது இதயத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, இரத்த நாளங்களுக்கு பாதுகாப்பை வழங்கி, இரத்த நாளம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.
 

பெர்ரிப் பழங்கள்
பெர்ரிப் பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புதிய செல்களின் வளர்ச்சியைத் தூண்டி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே பெர்ரிப் பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.
 
மஞ்சள் தூள்
மஞ்சளில் உள்ள குர்குமின், தமனிகளின் சுவர்களில் உள்ள அழற்சி மற்றும் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கும். மேலும் உணவில் மஞ்சள் சேர்ப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, இரத்தம் சுத்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment