இ.சி.ஐ.எல்., எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய அணுசக்தித் துறையின் கீழ் 1967ல் உருவாக்கப்பப்பட்டது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் தன்னிறைவு பெறும் நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனம் கம்ப்யூட்டர், கட்டுப்பாட்டு அமைப்புகள், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் வர்த்தகம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவுகளில் உள்ள 107 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது.
தேவைகள்: இ.சி.ஐ.எல்., நிறுவனத்தின் இன்ஜினியரிங் காலி இடங்கள் இ.சி.இ., இ.இ.இ., இ அண்டு ஐ., சி.எஸ்.இ., சிவில் மற்றும் மெக்கானிகல் ஆகிய இன்ஜினியரிங் பிரிவுகளில் உள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30.04.2012 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இன்ஜினியரிங் பிரிவு ஏதாவது ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 65 மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த காலி இடங்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. தற்போது இறுதித் தேர்வை முடித்துவிட்டு தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருப்பவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். முது நிலை பட்டப் படிப்பை முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கக் கூடாது.
இதர விபரங்கள்: மேலே கூறப்பட்டுள்ள இன்ஜினியரிங் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை சலான் மூலமாக ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கியில் 31102144119 என்ற அக்கவுண்ட் எண்ணில் செலுத்தவேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். தேர்வு செய்யப்பட்டவர்கள் முதலில் மாதம் ரூ. 25 ஆயிரத்து 790 ஸ்டைபண்டுடன் பணியில் சேரலாம்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 21.05.2012
இணையதள முகவரி: www.ecil.co.in

No comments:
Post a Comment