பெட்ரோலிய ரிபைனரிகள் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் இன்ஜினியரிங் மற்றும் டெக்னிகல் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 1965ல் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் எனப்படும் இ.ஐ.எல்., நிறுவனம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்தத் துறைகளைத் தாண்டி பல்வேறு துறைகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. பல்வேறு துறைகளில் கருத்துருவாக்கம், திட்டமிடல், வடிவமைப்பு போன்ற பணிகளில் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் உள்ள மேனேஜ்மெண்ட் டிரெய்னி காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள்: இ.ஐ.எல்., நிறுவனத்தில் மெக்கானிகல், கெமிக்கல், சிவில், எலக்ட்ரிகல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க 01.07.2012 அடிப்படையில் அதிக பட்ச வயது 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.இ., அல்லது பி.டெக்., அல்லது பி.எஸ்சி., (இன்ஜினியரிங்) ஆகிய ஏதாவது ஒரு படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக மேலே குறிப்பிடப்பட்ட பிரிவுகள் ஒன்றில் முடித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதித் தேர்வை எழுதி முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னையில் நடத்தப்பட உள்ளது.
மற்ற தகவல்கள்: இ.ஐ.எல்., நிறுவனத்தின் நிர்வாகப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.350/-ஐ சலான் வாயிலாக ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் 32298420483 என்ற அக்கவுண்ட் எண்ணில் (கிளைக் கோடு 09996 ) செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இந்த நிறுவனத்தின் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 25.05.2012
எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை 2012
இணையதள முகவரி: http://recruitment&eil.co.in/hrdnew/mt/Detailed%20Advertisement.pdf

No comments:
Post a Comment