நீரிழிவு நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழக்கும் அளவு அதிகமாகியுள்ளது.சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்க்கு ஆளானவர்களில் 70 சதவீதம் பேர் எந்தவித சூழலும் இல்லாமல் கல்லீரல் நோய்க்கு ஆளாகி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தக்கூடிய நோயாக நீரிழிவு நோய் உருவெடுத்துள்ளது. இந்த நோய்த்தாக்கம் சில வித கல்லீரல் நோய்களை ஏற்படுத்தும் என்பது தெரியும். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் குறைபாடு உள்ள நிலையில் பல வித அபாயங்கள் ஏற்படுகின்றன.
நீரிழிவு நோயால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு சிரோசிஸ் எனப்படும் செல்களின் அழிவை ஏற்படுத்தும். அதேபோன்று கல்லீரல் திசுக்களில் தடிப்பை ஏற்படுத்தும். அதேபோன்று புற்றுநோய் வருவதற்கும் காரணமாக இருக்கும்.
இது தொடர்பாக எடின்பரோ ஆய்வாளர்கள் 35 வயது முதல் 84 வயது வரை உள்ளவர்களை 6 ஆண்டு காலத்திற்கு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு 2007 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இந்த ஆய்வில் நீரிழிவில் பாதிக்கப்பட்ட மக்களில் நான்கில் ஒருவர் கல்லீரல் புற்றுநோய் தாக்கத்திற்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர்.
நீரிழிவால் பாதிக்கப்படாத 10 ல் ஒருவருக்கு ஏற்படும் கல்லீரல் புற்றுநோயை ஒப்பிடுகையில் இந்த உண்மை தெரிய வந்தது. நீரிழிவு நோய்தாக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நீரிழிவு நோயால் ஏற்படும் கல்லீரல் புற்றுநோயைக் காட்டிலும், மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

No comments:
Post a Comment