நினைவு இழப்பைத் தடுக்க உதவும் தூக்க ஹோர்மோன்

நினைவு இழப்பைத் தடுக்க தூக்க ஹோர்மோன்கள் உதவுகிறது என புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வை கிளாக்சோவை மையமாகக் கொண்ட சி.பி.எஸ் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வு குழு அல்சீமர் நோய் திட்டம் குறித்த 6 மாத ஆய்வை மேற்கொள்கிறது.
இதற்கு அல்சீமர் எனப்படும் நினைவுத்திறன் பாதிப்பு உள்ள 50 நோயாளிகளை தேர்வு செய்தது. இவர்களுக்கு மெலட்டோனின் ஹோர்மோன் கொண்ட மருந்து அளிக்கப்பட்டு அவர்களது நினைவு இழப்பு தடுப்பு ஆய்வு செய்யப்படுகிறது. உலக அளவில் இந்த தூக்க ஹோர்மோன் கொண்டு நடத்தப்படும் முதல் ஆராய்ச்சி இது என நம்பப்படுகிறது.
இந்த ஆய்வை மேற்கொள்ளும் சி.பி.எஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் கார்டன் கிராபோர்டு கூறியதாவது: நினைவு இழப்பு நோயாளிகளுக்கும் மட்டுமல்லாது இவர்களது குடும்பத்தினர், நண்பர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆய்வின் துவக்கக் கட்டப் பணியில் இயற்கை கூட்டுப் பொருளான மெலட்டோனின் முலம் நோயாளிகள் பகல் நேரத்தில் சிறந்த வழியில் செயல்பட முடிகிறது. இரவு நேரத்தில் நல்ல தூக்கம் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது என்றார்.
நினைவு இழப்புக்கு மெலட்டோனின் சிகிச்சை தற்போது இல்லை. ஆனால் ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் தூக்கப் பிரச்சனையில் அவதிப்படும் முதியோர்களுக்கு பயன்படுத்த பதிவு செய்யப்பட்டுள்ளது. மெலட்டோனின் மருந்து பாதுகாப்பானது. பக்க விளைவுகள் இல்லாதது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
நினைவு இழப்பை குறைக்கும் ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் மருந்து சிர்காடின் என அழைக்கப்படுகிறது. இந்த ஆய்வுக்கு ஸ்காட்லாந்து ஆர்வலர்கள் உதவி செய்கிறார்கள்.

No comments:

Post a Comment