புதுச்சேரி அரசுப் பணி இடங்கள்

இந்தியாவின் வரைபட அமைப்பில் தமிழக எல்லைக்குள் அமைந்துள்ள புதுச்சேரியில் பெரும்பான்மையான மக்கள் தமிழையே பேசுவது நாம் அறிந்ததுதான். தற்போது இந்த பிரதேசத்தில் அரசுப் பணி இடங்களான 119 அப்பர் டிவிஷன் கிளர்க் மற்றும் 35 சீனியர் கிளர்க் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியில் வசிப்பராகவோ அல்லது நிரந்தர புதுச்சேரி இருப்பிடம் கொண்டவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான நேட்டிவிட்டி சான்றிதழைப் பெற்றிருப்பது மிக மிக அடிப்படைத் தேவையாகும்.

என்ன தேவை: புதுச்சேரி அரசின் அரசுப் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 2.2.2012 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் சலுகைகள் அரசு நிபந்தனைகளுக்கு ஏற்றபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் அறிய இணையதளத்தைப் பார்க்கவும். யூ.டி.சி., பிரிவுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதே போல் சீனியர் கிளர்க் பதவிக்கு விண்ணப்பிக்க கலை அல்லது அறிவியல் புலங்கள் ஏதாவது ஒன்றில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பொது எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற தகவல்கள்: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் பெற்றவர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை எடுத்து பின்வரும் முகவரிக்கு 15.06.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தை கட்டாயம் பார்க்கவும்.

முகவரி:
The Undersecretary to Government,
Department of Personnel and Administrative Reforms,
Chief Secretariat,
Puducherry 605001.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 31.05.2012

விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 15.06.2012

இணையதள முகவரி : www.pon.nic.in/recruitment/DPAR&UDC&2012/notification&udc&200412.pdf

No comments:

Post a Comment