மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே !மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே !

பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே!

வணங்கினோம் உன்னையே…
{மலர்போல் } 
ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே,

நதி காய நேராமல் நீரூற்று தாயே

இந்நிலம் பார்த்து நீயே..!

எளியோரை மகிழ்வாக்க வழிகாட்டு தாயே!

வலியோர்கள் வாழ்த்தாமல் வசைக்காட்டு தாயே!

என் வளமான தாயே!

பசிதாகம் காணாமல் வயிறாக்கு தாயே…

இசைப்போர்கள் செவிதேடி இசைஊட்டு தாயே!                
{மலர் போல }

புகழ் செல்வம் நலம் கல்வி குறவின்றி வாழ

புவி மீதில் இறைஞானம் எமை என்றும் நாட

ஒரு குறையாமல் வாழ

அருளோடு பொருள் வேத அறிவோடு ஞானம்,

தெளிவோடு தினம் காண நிலை வேண்டும்

வேண்டுமது அது திரளாக வேண்டும்,

பல வீடு பல நாடு பல தேசம் என்று

உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே…

உறவோடுமகிழ்வோடுஎன்னைமாற்று தாயே!                           
 {மலர்போல}

No comments:

Post a Comment