"உங்கள் தொந்தி குறைய வேண்டுமானால் நன்றாக ஓடுங்கள்"
"ஓடுவதா? ?
ஓடத்தான் வேண்டும்..
"ஓடமுடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். உடற்பயிற்சியின் முதல் ஆதாரமே நடைதான். நன்றாக கைவீசி நடந்து சென்றாலே போதும் உங்கள் தொப்பை கரைய ஆரம்பித்துவிடும்"
ஒரே நாளில் கரைய "சாத்தியமே இல்லை.. எப்படி தொப்பையை சிறுக சிறுக சேர்த்தீகளோ அதுபோலவே சிறுக சிறுக தான் கரையும். பத்தாண்டுகளுக்கும் மேலாக வளர்த்த தொப்பையை 10 நிமிடங்களிலா குறைக்க முடியும்? அவ்வாறு குறைக்க முடியும் என்று சொல்லும் விளம்பர மருந்துகள், இயந்திரங்கள் அனைத்தும் பொய்யானதே..! நம்மை முட்டாள்களாக்குவது. வீண் பணவிரயம்.
கொஞ்சம் விவேகமாக நடந்துகொண்டால் உடல் பருமனையும், தொந்தியையும் குறைத்துக்கொள்ளலாம்."
"எப்படி?"
நமது உடம்பில் குறிப்பாக மூன்று இடங்களில் சதைப் பற்று இருக்கிறது..
முதலாவதாக இடுப்பில் அதிகம் இருக்கும்.
இரண்டாவதாக நெஞ்சில் இருக்கும்.
மூன்றாவதாக தலையில் இருக்கும். இவைகள் உடம்பில் செங்குத்தாகச் சீராக இருந்தால் நடக்கும் நபருக்கு அதிகச் சிரமம் இல்லாமல் இருக்கும். நடக்கும்போது கால்கள் கடிகாரத்தின் பெண்டுலத்தைப் போன்ற அசைவு இருக்க வேண்டும்.
வீட்டில் இருந்தாலும் சரி, அலுவலகத்தில் இருந்தாலும் சரி - ஒரேயடியாக உட்கார்ந்துகொண்டு, படுத்துக்கொண்டு இருப்பது தவறு.
ஒரு மணி நேரத்திற்கொரு முறையாவது எழுந்து சற்றே நடக்க வேண்டும். மேல்மாடியிலிருந்து கீழிறங்க லிப்ட்டை உபயோகிக்காமல் நடந்து செல்லலாம்.
இரவு படுக்கப்போகும் முன்பு ஒரு கிலோமீட்டர் வரை காலார நடந்துவிட்டு வரலாம்.
உணவுக் கட்டுப்பாடு
அரிசி, கோதுமை, போன்றி தானிய வகைகளைப் பாதியாக்க் குறைக்க வேண்டும்.
அதற்கு பதிலாக காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
அனாவசியமான கார்போஹைட்ரேட் உணவுப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும்.
எண்ணெய், அல்லது நெய் மிகக் குறைந்த அளவே இருக்க வேண்டும்.
அதிக உப்பிட்ட பொருட்களையோ, அதிக காரமான பொருட்களை குறைக்க வேண்டும். இத்தகைய பொருட்கள் நா வறட்சியை ஏற்படுத்தும். இதன் பயனாக அதிக நீர் பருக வேண்டும். இதனால் உடல் பருமனாக மாற ஏதுவாகும்.
அதிக காய்கறி உண்ணலாம், பழரசம் பருகலாம்.
ஆனால் வாழைப்பழம் சாப்பிட வேண்டாம். இது உடல் பருமனுக்கேற்றது. உருளைக்கிழங்கு, நிலக்கடலை, சர்க்கரை போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.
இரவு உணவு, உறங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே எடுத்துகொள்ள வேண்டும்.
இதையெல்லாம் நீங்கள் கடைப்பிடித்தீர்களேயானால் உங்கள் தொப்பை காணாமல் கரைந்து போயிருக்கும்.