உடல் பருமனால் வருத்தப்படுவோர் சங்கத்தைச் சேர்ந்தவரா நீங்கள்…? இதோ உங்களுக்கு ஓர் ஆரோக்கியமான தகவல்…
குண்டான உடம்பின் எடையை மென்மேலும் குறைக்க வேண்டும் என விழைபவர்கள், தங்களது காலை உணவாக, இரண்டு முட்டைகளை மட்டுமே உட்கொள்வது நன்மை பயக்கும் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு.
இதுதொடர்பான ஆய்வு, அமெரிக்காவிலுள்ள பென்னிங்டன் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவருமான நிகில் வி. துரந்தர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இதில், கலோரி குறைவான உணவுமுறையை பின்பற்றும் வகையில், காலை உணவாக இரு முட்டைகளை மட்டுமே உட்கொண்டு வந்தால், அதிக பருமன் மிக்கவர்களது உடல் எடையானது, வேறுவகை காலை உணவை உட்கொள்பவர்களைக் காட்டிலும் 65 சதவிகித அளவில் குறையக் கூடும் என்பது தெரியவந்துள்ளது.
“இரு முட்டைகளை காலை உணவாக உண்பதால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும் வகையில் புத்துணர்வும் பெறலாம்,” என்றார் துரந்தர்.
இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, முட்டை உணவு தொடர்பான முந்தைய ஆய்வுகளின் முடிவுகளையும் உறுதி செய்துள்ளது.
அன்றாட உணவில் முட்டைகளைச் சேர்த்துக்கொள்ளும் நபர்களுக்கு, இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான சாத்தியமும் குறைவு என்கின்றன, முந்தைய ஆய்வுகள்.
இந்த ஆய்வு தொடர்பான விவரங்கள், இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஒபிசிட்டியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.