30 முதல் 60 கோடி ரூபாய் இழப்பு: கமலஹாசன் பேட்டிவி்ஸ்வரூபம் திரைப்பட விவகாரத்திற்கு தீர்வு காண தமிழக அரசு உதவும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி கூறியுள்ளார்.
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர், விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையில் தனது ரசிகர்களும், திரைப்படத்துறையினரும், ஊடகங்களும் அளித்த ஆதரவைக் கண்டு தான் நெகிழ்ந்து போனதாக தெரிவித்தார்.
இந்தப் பிரச்னையில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் கமல்ஹாசன் நன்றி கூறினார்.
விஸ்வரூபம் படப் பிரச்னைகளுக்கு பின்னால் அரசியல் உள்ளது என்றும், படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாததால், 30 முதல் 60 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.