கர்ணனின் கொடைத்தன்மையைச் சொன்ன ஒரு கதை.
சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்ணனிடம் யாசகத்திற்குப் போனார் ஒரு அந்தணர். பக்கத்தில் இருந்த தங்கக்காசுகளை இடது கையில் எடுத்து அவரிடம் கொடுத்தானாம் கர்ணன். ‘‘இது அவமரியாதையில்லையோ? இடது கையில் யாசகம் தரலாமா?’’ என்கிறார், அந்தணர்.
பணிவோடு கர்ணன் சொல்கிறான்: ‘‘கொடுக்க வேண்டும் என்று தோன்றியவுடன்
கொடுத்துவிடவேண்டும். சாப்பிட்டு கை கழுவிப் பின் வலது கையால் கொடுக்கலாம்
என்பதற்குள் சில சமயம் மனம் மாறிவிடும். அதனால்தான் உடனே இடக்கையில்
கொடுத்தேன்.’’
சத்திய
வாக்கு இது. ஏழைக் குழந்தைகளின் படிப்பு என்று டொனேஷன் கொடுக்க நினைத்தால்
நினைத்த அதே வினாடி பணத்தைக் கொடுத்து விட வேண்டும். ‘வீட்டுக்குப் போயிட்டு, செக்கைப் போட்டு, மனைவி கிட்டயும் கலந்து பேசிட்டு....’ என்று தள்ளிப் போட்டால் முதலில் ஆயிரம் ரூபாய் என்று நினைத்த மனசு, ‘நானே எல்லாத்தையும் கொடுத்து முடியுமா? இருநூறு போதும்’ என்று மாறிவிடும்.