கர்ணன் தர்மத்தின் தலைவன்

மகாபாரதத்தின் மகதுவம் பலருக்கு புரிவதில்லை. இன்று நடப்பதைதான் அன்று ராமாயனத்திலும் மகாபாரதத்திலும் சொல்லபட்டிருகிறது. என்ன அன்று கடவுள் மனித ரூபம் எடுத்திருந்தார் இன்று இன்னவும் அவதாரம் எடுத்தாரா இல்லையா என்பது தெரியவில்லை.நீங்கள் பார்க்கும் ஒவ்வரு படமும் என்ன சொல்கிறது, கெட்டவன் அழிந்து அல்லது திருந்தி நல்லவனாவது. முன்பு ஒருவன் பாவம் செய்வதும் பிறகு அவனை கண்டிக ஒருவன் வருவதும்தானே கதை. அதுவே மகாபாரத்திலும் காட்டபடுகிறது.
"தர்மத்தை அதர்மம் சூது கவ்வும் இறுதியில் தர்மம் வெல்லும்"
              எந்த காலத்திலும் தர்மம் அதர்மம் என்று கண்டிப்பாய் இருக்கும்.ஆனால் கர்ணனை போல் தர்மத்தில் ஒரு கால் அதர்மத்தில் ஒரு கால் வைத்துகொண்டு சித்திரவதைபடும் குணம் தான் மிக கொடுமையானது.
எனக்கு  மகாபாரதத்தில் மிகவும் பிடித்த கதாபாத்திரம் கர்ணன்தான் காரணம் யார் எது கேட்டாலும் கொடுத்துவிடும் வள்ளல் அவன் ஆனால் அதுவே அவன் சாக காரணமாய் அமைந்தது.
         *கர்ணனை  பெற்ற தாய் குந்தியால் புறகணிக்கபட்டபோதே இறப்பின் துவக்கம் ஆரம்பமாகிவிட்டது.
         * ஒவ்வரு முறையும் கர்ணனின் பிறப்பை பற்றிய சர்ச்சை ஏற்படும் போதெல்லாம் அவமானத்தால் துடித்து போனான்.
         * பரசுராமரிடம் அந்தணன் என்று பொய் சொல்லி வித்தை கற்றதால் குருவிடம் சாகும் தருவாயில் பிரமாஸ்திரம் மறந்துபோகட்டும் என்ற சாபம் கர்ணனின் மரணத்தை உறுதிபடுத்தியது.
         * இந்திரன் மாறுவேடத்தில் வந்து கவசகுண்டலத்தை பெற்றுக்கொண்டது.
         * துரியோதனன் நட்பு தன் உயிரைவிட பெரியதாய் நினைத்தான் ஆனாலும் போர்களத்திலும் புறகணிக்கபட்டன்.
         * தாய் குந்திதேவி போருக்கு முன்பு அர்ஜுனனை தவிர யாரையும் கொல்லகூடாது,அர்ஜூனன மீது ஒரு முறைதான் பிரமாஸ்திரம் பயண் படுத்தவேண்டும் என்று வரம் பெற்றது.
         * அர்ஜுனனோடு   போர் புரியும்போது கர்ணன் விட்ட பிரமாஸ்திரம்  கண்ணன் தேர்காலிட்டு அர்ஜுனன்தலைக்கு வந்ததை தலைபாகை போகும்படி செய்தது.
       


*இறுதியாக கர்ணனை தேர்சக்கரம் குழிக்குள் மாட்ட செய்து அர்ஜுனனால் வஞ்சனையாக அம்புவிடப்படும்போது
கிரிக்கெட்டில் வெளிநாட்டவர் இந்திய தோற்கவேண்டும் ஆனால் சச்சின் அவுட் ஆககூடாது என்பதை போன்ற
மனநிலை ஏற்படுத்துகிறது.



இறுதியாக கர்ணனின் உயிரை தர்மம் காத்துநின்றது. அப்போது கண்ணன் அந்தண உருவு எடுத்து கர்ணனுடைய புண்ணியங்கள் தானம் கேட்கும்போதும்
கூட "நான் இதுவரை பெற்ற புண்ணியங்கள் பெறப்போகும் புண்ணியங்கள் அனைத்தும் தானமளிகிறேன்" என்று கர்ணன் தன் குருதியால் தாரை வார்துகொடுகும்போது அதை
பெற்றுக்கொண்ட கண்ணன் கடவுளின் கைகள் கீலே இறங்கிவிட்டது.தானம் கொடுக்கும் கர்ணன் கைகள் உயர்ந்துவிட்டது. கர்ணன் குருதி கண்ணன் கைகளில் பட்டவுடன் தானம் கேட்கவந்த கண்ணன் வரம் கொடுக்க முன்வந்தான்.
கர்ணனை கொன்றது விதி என்றாலும். கர்ணன் செய்த தானம்தான் இன்று என்னை எழுதவைதிருகிறது.

கர்ணனை போல் நாம்  உயிரை தானம் கொடுகவேண்டம். நம்மால் முடிந்த தானத்தை பிறர்க்கு செய்வோமே. அப்படி செய்தல் அது கடவுளுகே போய் சேரும்.கர்ணன் செய்த தானத்தால் அன்று இறந்திருக்கலாம் ஆனால் இன்றும் நம்மால் பேசபடுகிறது.