நாம் தினமும் உட்கொள்ளும் வெள்ளை நிற நஞ்சுப் பொருட்கள் - உப்பு, சீனி


நிறத்தில் வெள்ளையான உப்பும், சீனியும் குணத்தில் நஞ்சாகின்றது:
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் மற்றொரு வெள்ளை அபாயம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது அது – உப்பு. எவ்வளவு ருசியாகச் சமைத்தாலும் உப்பில்லாவிட்டால் அதை வாயில் வைக்க முடியாது என்பது உண்மைதான். அதே நேரம், உப்பு அளவுக்கு அதிகமாகும்போதும் பல உபத்திரவங்களை அளித்துவிடும்.
உங்கள் உடம்பில் உப்பு அதிகரித்தால், அதிகமான தண்ணீரை உடம்பு சேர்த்து வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினைகள், சிறுநீரகக்கற்கள் ஏன் பக்கவாத பாதிப்பு கூட ஏற்படும். அதிகமான உப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து, சீரான ரத்த ஓட்டத்துக்குத் தடையை ஏற்படுத்துவதே முக்கிய காரணம்.

இந்த அடைப்பு நீடிக்கும் போது இதய நோய்கள், மாரடைப்பு போன்ற ஆபத்துகள் அடுத்து வரும். 32 நாடுகளில் 10 ஆயிரம் பேர் அன்றாடம் உணவின் மூலம் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அன்றாடம் 6 கிராம் உப்பு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதைக் கண்டுபிடித்தனர். அது இதய நோய்களின் அடித்தளமாகவும் அமைகிறது என்பதை அறிந்தனர். பரம்பரை ரீதியாக இதய நோய் பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் அன்றாட உப்பு அளவில் கவனம் வைப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

salt_370உணவில் அதிகமாக உப்புப் போட்டுக் கொள்ளும் வழக்கம் எனக்கில்லையே என்று நீங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் உப்பு அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு அடிக்கடி குடும்பத்துடன் துரித உணவகங்களில் சாப்பிடும் வழக்கம் இருந்தால் அதன் மூலமும் கூடுதல் உப்பு உங்களுக்குள் செல் கிறது. உடனடி உணவுகளிலும் பேக்கிங் செய்யப் பட்டு வரும் உணவுகளிலும் அவற்றைக் கெடாது பாதுகாக்கும் ‘பிரிசர்வேட்டிவ்’ ஆக உப்பு பயன் படுத்தப்படுகிறது.

பாக்கெட் பாப்கார்ன், ஊறுகாய், சாஸ் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் உப்பு அதிகம். கடைகளில் கிடைக்கும் பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற வற்றில் கூட உப்பு இருக்கிறது. இப்படி பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படு வதற்குக் காரணம் அது எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் பாதுகாப்புப் பொருள் என்பதுதான். சரி, உப்பினால் ஏற்படும் உபத்திரவங்களைத் தவிர்ப்பது எப்படி? உடம்பிலிருந்து நச்சுக் கழிவுகளை எல்லாம் வெளியேற்றும் வகையில் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

• காரசாரமான நொறுக்குத் தீனிகள், ஊறுகாய் போன்றவற்றைத் தவிருங்கள்.
• துரித உணவுகளைத் தவிர்த்து, வீட்டு உணவை விரும்புங்கள்.
• நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்தை அவை அளிக்கும்.
• உடம்பில் தண்ணீர் தேக்கம் ஏற்படுவதால் நச்சுகளின் அதிகரிப்பை நீராவிக் குளியல் போன்றவை மூலம் போக்கலாம்.
• பேக்கிங் உணவுகளில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். சோடியம் குளோரைடு என்று குறிப்பிட்டிருப்பதால் நாம் அதைக் கவனிக்காமல் போகலாம்.
• உப்பைக் குறைத்து சுவையைக் குறைக்காமல் சமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுங்கள். அதற்கேற்ப நறுமணப் பொருட்கள் போன்றவற்றைச் சேருங்கள்.
உணவில் உப்பை கூடிய வரையில் குறைத்துக்கொள்ள வேண்டும்ஏன்?
இலங்கையில் தற்போது இருதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. தினமும் மாரடைப்பினாலும், பாரிசவாதத்தினாலும் பலர் மரணிக்கிறார்கள். இவர்களைவிட மாரடைப்புத் தொடர்பான திடீர் தாக்கங்களினால், அனேகம்பேர் பாரிசவாதத்தினால் எழுந்து நடமாட முடியாமல் கட்டிலிலேயே இருக்கவேண்டிய அவலநிலையும் தோன்றுகிறது. 
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் வயதுவந்த ஒவ்வொரு 100 பேரில் ஒருவர் பாரிசவாதத்தினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். அதியுயர் இரத்த அழுத்தமே ஒருவர் பாரிசவாத நோயாளியாக மாறுவதற்கு பிரதான காரணமாகும்.
இந்த நோய்த் தாக்கங்களுக்கு ஏற்புடைய வகையில் பொதுமக்களுக்கு வழிகாட்டல்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கான பாரிசவாத வாரத்தை மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் ஏப்ரல் 1ஆம் திகதிவரை தேசிய பாரிசவாத சங்கம் வெற்றிகர மாக நாடெங்கிலும் நடத்தியது. 
பொதுவாக பாரிசவாதத்தினால் பாதிக்கப்படும் நோயாளி ஒருவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றால் இரண்டு மணி நேரத்துக் குள் அவருக்கான சிகிச்சையை வைத்தியர்கள் ஆரம்பிப்பார்கள். சில பாரிசவாத தாக்குதல்கள் கடுமையாக இருக்காத பட்சத்தில் நோயாளி ஓரிரு வாரங்களில் பாரிசவாதத்திலிருந்து முற்றாக குணமாகுவதற்கான வாய்ப்புக்களும் இருப்பதாக வைத்தியர்கள் நம்பிக்கை வைத்துள்ளார் கள். 
ஆயினும், பாரிசவாதத்தினால் பாதிக்கப்படுபவர்களில் நூற்றுக்கு எண்பது சதவீதத்தினர் ஒருகால் அல்லது ஒருகை வலுவிழந்த நிலை யில் இருப்பதுடன், மேலும் சிலர் பாரிசவாதத்தினால் படுத்த படுக்கை யாக பல்லாண்டு காலமிருந்து இறுதியில் மாண்டுவிடும் அவலநிலை யையும் எதிர்நோக்குகிறார்கள். 
உணவுடன் அதிகமாக உப்பை சேர்த்துக்கொள்ளுதல் இருதநோய்க்கு பிரதான காரணியாக அமைகின்றது. அத்துடன் மக்கள் பாண், சோஸ், கேக், பிஸ்கட் உடனடியாகத் தயாரிக்கக்கூடிய உணவு வகைகளை பெரும்பாலும் உண்பதும் இருதநோய் மற்றும் பாரிசவாதத்துக்கு இன்னு மொரு காரணமாகும். 
சீன உணவில் அதிகமாக உப்பு கலக்கப்படுவதனால் அது இரத்த ஓட்டத்தில் கலந்து நாடி நாளங்களை அடைப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள். 
எனவே மக்கள் பாரிசவாதத்தை தவிர்க்க வேண்டுமாயின் கூடியவரை உப்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று இருதயநோய் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். 
உப்பில்லா பண்டம் குப்பையில் வீசப்படவேண்டுமென்ற கீழைத்தேய மக் களின் பழக்கத்தை நாம் கைவிடுவது அவசியம். பொதுவாக எந்த வொரு உணவிலும் உப்பு சேர்க்கப்படும்போது அது உண்மையான சுவையை ஏற்படுத்துகிறது. 
ஏதோவொரு உணவில் உப்புக் குறைவாக இருந்தால்கூட அதன் சுவை குறைந்துவிடும். இது ஒரு யதார்த்த பூர்வமான வாதம் தான். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப உப்பை சாதாரண மக்கள் கூட மிகக் குறை வாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். 
கீழைத்தேய மக்கள் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பதத்தை நன்றி உணர்வை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தினாலும் ஒரு மனி தன் தனது வீட்டில் ஒருவருக்கு விருந்துபசாரம் ஒன்றைச் செய்யும் போது அவர் அந்த உணவில் உப்பை கலந்திருப்பதே மனித பண்புக ளுக்கு ஏற்புடைய பழக்கமாகும். 
நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் அந்த நாடு பொருளாதார ரீயி லும் மற்றெல்லா விதத்திலும் வளர்ச்சியடையும். அதற்கேற்ப நம் நாட் டிலும் நோய்களைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் இப்போது தக்க நடவ டிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. நோய்களைத் தடுப்பதனால் நோயாளிகளுக்கு அரசாங்கம் ஆஸ்பத்திரிகளில் செலவிடும் பண த்தை பெருமளவில் மீதப்படுத்தி அதனை அபிவிருத்திப் பணிகளு க்கு பயன்படுத்தலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரி விக்கிறார்கள். 
இது போன்று மது அருந்துதல், சிகரெட் புகைத்தலும் இருதய நோயை ஏற் படுத்துவதற்கு இன்னுமொரு பிரதான காரணமாகும். இவ்விரண்டு தீய பழக்கங்களை கணிசமான அளவு குறைப்பதற்காக அரசாங்கம் சமீபத் தில் மது மற்றும் சிகரெட்களின் விலையை உயர்த்தியிருப்பதும் ஒரு வர வேற்கத்தக்க செயலாகும். 
பாக்கியவான்களே மனித பிறப்பெடுப்பார்கள் என்ற ஒரு ஐதீகம் இருக்கி றது. அவ்விதம் மனிதப் பிறப்பெடுத்த நாம் எங்கள் வாழ்க்கையின் போது நாட்டிற்கும் மனித குலத்திற்கும் நற்பணிகளை செய்து முடித்த பின்னர் இவ்வுலக வாழ்க்கையை விட்டு விடைபெற வேண்டும். இதுவே வாழ்க்கையின் யதார்த்தம். 
மனிதப் பிறப்பெடுத்த பாக்கியவான்களாகிய மக்கள் பாரிசவாதம் போன்ற நோய்களினால் பல்லாண்டு காலம் படுத்த படுக்கையாக இருந்து தனக்கும், தனது சுற்றத்தாருக்கும் பிரச்சினையாக இருப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயின் மனிதர்களாகிய நாம் மிகவும் அவதானமாக உட்கொண்டு மதுபானம் அருந்துதல், சிகரெட் புகைத்தல் போன்ற தீய பழக்கங்களை தவிர்த்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை நட த்துவது அவசியமாகும்.

சீனி
சீனி உட்கொள்ளும்பொழுது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய உள்ளுறுப்புக்களின் இயக்கத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கிறது. வில்லியம் டப்டி 1975ல் எழுதிய சுகர் ப்ளுஸ் (Sugar Blues) என்ற புத்தகம் அனைவராலும் படிக்கப்பட வேண்டியது. அவர் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் வருமாறு:-
கரும்பிலிருந்து எடுக்கப்படும் சீனியில், கரும்புச் சாறில் உள்ளதைப் போன்று எந்த சத்துக்களும் இல்லை.
அளவுக்கு அதிகமான சீனி, உடலின் சீரான இயக்கத்தில் தடுமாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்தத் தடுமாற்றத்தைச் சரிப்படுத்தும் முயற்சியில் உடல் சோடியம், பொட்டேஸியம், மெக்னீஸியம், கால்சியம் போன்ற தாதுப்பொருட்களை ஈர்த்துக் கொள்கிறது. இரத்தத்தில் உள்ள அமில-கார தன்மையைச் சரிப்படுத்தும் முயற்சியே இது. 
தினந்தோறும் சீனி உட்கொள்ளும்பொழுது பிரச்னை தீவிரமடைகிறது. உடலில் அமிலத்தன்மை தொடர்ச்சியாக அதிகரிக்கும்பொழுது அதனைச் சரிப்படுத்துவதற்காக இன்னும் நிறைய தாதுப்பொருட்களும் வைட்டமின்களும் ஈர்த்துக்கொள்ளப்படுகின்றன. இந்த நேரத்தில் பற்களிலிருந்தும் எலும்பிலிருந்தும் நிறைய கால்சியம் அபகரிக்கப்படுகிறது. மொத்தத்தில் உடல் பலவீனமடைகிறது.
அளவுக்கு அதிகமான சீனி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. ஆரம்பத்தில் சீனி குளுக்கோஸ் (கிளைக்கோஜன்) வடிவத்தில் ஈரலில் சேமித்து வைக்கப்படுகிறது. ஈரலின் சேமிப்புத் தன்மைக்கு ஒரு வரையறை இருப்பதால், தினந்தோறும் சீனி உட்கொள்ளும் பட்சத்தில் ஈரல் பலூன் மாதிரி விரிகிறது. ஈரலில் இடமில்லாத பட்சத்தில், கூடுதல் கிளைக்கோஜன் கொழுப்பு அமிலங்களாக இரத்தத்தில் சேமித்து வைக்கப்படுகின்றது. இவை எல்லா உறுப்புகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அதிகம் இயங்காத பாகத்தில் (வயிறு, பிட்டம், மார்பகம், தொடை) சேமித்து வைக்கப்படுகின்றன.
இந்தப் பாகங்களிலும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துபோகும்பொழுது, அவை இருதயம், சிறுநீரகம் போன்றவற்றிலும் சேமித்து வைக்கப்படுகின்றன. இதனால் அவற்றின் இயக்கம் குறைந்துவிடுகிறது. அதீத இரத்த அழுத்தம் உருவாக்கப்படுகிறது. 
இதனால் இணைப்பரிவு நரம்பு மண்டலமும் (parasympathetic nervous system) அதன் கண்காணிப்பில் இருக்கும் சிறுமூளை போன்ற உறுப்புக்கள் சுறுசுறுப்பை இழக்கின்றன அல்லது செயலிழக்கின்றன. வெள்ளை செல்கள் பெருகுகின்றன. திசு உருவாக்கம் தாமதமாகிறது.
நம்முடைய எதிர்ப்புச் சக்தி குறைந்துபோய் சூடு, குளிர்ச்சி, கொசுக்கடி, கிருமிகள் பாதிப்பு என்று எதுவாக இருந்தாலும் நம்மை விரைவில் பாதிக்கிறது.
அளவுக்கு அதிகமான சீனி, மூளை இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கும். பெரும்பாலான காய்கறிகளில் உள்ள குளுட்டமிக் அமிலம்தான் சீரான மூளை இயக்கத்திற்குத் துணை புரிகிறது. அவற்றில் உள்ள 'பி' வைட்டமின்கள்தான் இந்த வேலையைச் செய்கின்றன.
சிம்பையோட்டிக் பாக்டீரியாக்களால் உருவாக்கப்பட்ட 'பி' வைட்டமின்கள் நம்முடைய குடலில் வாழ்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சீனியை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளும் பொழுது இந்த பாக்டீரியாக்கள் வாடி இறந்துபோகின்றன. நம் உடலில் உள்ள 'பி' வைட்டமின்களின் அளவு குறைகிறது.
அளவுக்கு அதிகமான சீனி தூக்கத்தை ஏற்படுத்துகிறது. கணிதத் திறனும் நினைவாற்றலும் குறைய ஆரம்பிக்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட சீனி வாயிலோ அல்லது வயிற்றிலோ ஜீரணிக்கப்படுவதில்லை. மாறாக நேரடியாக கீழ் குடலுக்குச் சென்று நம் இரத்தத்தில் கலக்கிறது. இதனால்தான் சீனி உட்கொண்ட பிறகு "திடீர் சக்தி" ஏற்படுகிறது.
இரத்த நாளங்களில் இப்படித் திடுமென சுக்ரோஸ் சேருவது நன்மையைவிட தீமையையே அதிகம் விளைவிக்கிறது. சீனி வயிற்றில் நிகழும் இயல்பான இயக்கத்தில் ஊறு விளைவிக்கும் ஆற்றல் கொண்டது. ரொட்டி, இறைச்சி, கோக் பானங்கள் போன்ற வேறு உணவுகளோடு சீனியைச் சேர்த்து உண்ணும் பொழுது வயிறு சீனியைச் சிறிது நேரம் தக்க வைத்துக்கொள்கிறது. 
இறைச்சி ஜீரணம் ஆகும் வரைக்கும் ரொட்டி மற்றும் கோக் பானத்தில் உள்ள சீனி அங்கு தங்கிவிடுகிறது. இறைச்சியில் உள்ள புரதம் செரிக்கும் வரை சீனி அங்கேயே புளித்துப்போய்விடுகிறது. புரதத்தைச் சீனியோடு சேர்க்கும்பொழுது அவை நொதித்துப்போய் விஷமாகின்றன.

சீனியில் 5 விதமான கோளாறுகள்
1. சீனி செயற்கையான இரசாயனம். சீனி தயாரிப்பின்பொழுது அதில் உள்ள வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், புரதம், செரிபொருள் மற்றும் இதர எல்லா சத்துக்களும் அழிக்கப்பட்டு விடுகின்றன.
மாறாக, சீனியாக மாற்றம் செய்யப்படும் கரும்பில் நிறைய வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உள்ளன. கரும்பில் 14% தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், பச்சையம் எல்லாம் இருக்கின்றன. இந்தச் சத்துக்கள் உடலை வளப்படுத்துகின்றன.
ஆனால் இந்த சத்துக்கள் எல்லாம் முற்றிலும் அகற்றப்பட்ட சீனி, ஒரு போதைப்பொருளாகவும் வெள்ளை நஞ்சாகவும் செயல்படுகிறது.
2. ஹெரோயின் போதைப்பொருளைப் போன்றுதான் சீனி தயாரிக்கப்படுகிறது. சீனி தயாரிப்பிலும் ஹெரோயின் போதைப்பொருள் தயாரிப்பிலும் கிட்டத்தட்ட ஒரே முறையைக் கையாளுகிறார்கள். 
ஹெரோயின் போதைப்பொருள் தயாரிப்பின்பொழுது அதன் விதையில் இருந்து ஓப்பியம் எடுக்கப்படுகிறது. பிறகு ஓப்பியத்தைச் சுத்திகரித்து மோர்பினாக மாற்றுகிறார்கள். இந்த மோர்பினில் சில இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்டு ஹெரோயின் போதைப்பொருளாக தயாரிக்கப்படுகிறது.
இதே முறையைத்தான் சீனி தயாரிப்பிலும் பயன்படுத்துகிறார்கள். கரும்பிலிருந்து சாறைப் பிழிந்து எடுக்கிறார்கள். பிறகு அது கருப்புச் சீனியாக மாறுகிறது. பிறகு அதனை இரசாயன மாற்றம் செய்து வெள்ளை சீனியாக மாற்றுகிறார்கள். சீனிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இரசாயனப் பெயர் வருமாறு : C12H22O11
3. சீனி மதுவுக்கு ஒப்பானது. ஒரே ஒரு இரசாயன மூலக்கூறைத் தவிர்த்து சீனியில் இருக்கும் மற்ற எல்லா இரசாயனங்களும் மதுவிலும் இருக்கின்றன.
4. சீனி அடிமையாக்கும். பயனீட்டாளர்கள் ஆக அதிகமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் பொருளில் சீனியும் ஒன்றாகும். சிலர் சீனி ஹெரோயின் போதைப் பொருளைப் போன்று அடிமைப்படுத்தும் என்று கூறுகிறார்கள். மது குடிப்பவர்கள் திடீரென அந்தப் பழக்கத்தை நிறுத்தினால் நடுக்கம், தலைவலி, எரிச்சல் ஏற்படும். இதே மாதிரியான பாதிப்புக்கள்தாம் சீனி உட்கொள்வதை நிறுத்தும் பட்சத்தில் ஏற்படுகின்றன.
5. சீனி அமைதியாகவும் சாதூரியமான வகையிலும் உடலைச் சேதப்படுத்துகிறது. சீனி உட்கொண்ட பிறகு, உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களில் இருந்து முக்கியமான சத்துக்கள் சீனியின் செரிமானத்திற்காக ஈர்த்துக்கொள்ளப்படுகின்றன. உடலின் பல பாகங்களில் இருந்து கால்சியம், சோடியம், பொட்டேஸியம், மெக்னீஸியம் போன்றவை எடுக்கப்படுகின்றன.
இப்படிக் கால்சியம் நிறைய வெளியாக்கப்படுவதால் எலும்புகளில் கால்சிய இழப்பு ஏற்பட்டு எலும்புச் சிதைவு ஏற்படுகிறது. பற்சிதைவும் இதே முறையில்தான் ஏற்படுகிறது. சீனி சுத்திகரிப்பில் எல்லா சத்துக்களும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்ட காரணத்தால், சீனியைத் தொடர்ந்து சாப்பிடும்பொழுது உடலில் அமிலத்தன்மை அதிகமாகிறது. இந்த அமிலத்தன்மையைச் சரிகட்டுவதற்கு இன்னும் நிறைய சத்துக்கள் உடலிலிருந்து ஈர்த்துக்கொள்ளப்படுகின்றன.

சீனி - போதைப்பொருள் இரண்டுமே விஷம்தான்
உடலுக்குள் செலுத்தப்பட்ட எந்த வஸ்துவும் நோயை வரவழைக்கும் என்றால் அது நஞ்சாகக் கருதப்படும். இப்படிப் பார்க்கும் பட்சத்தில் போதைப்பொருள் ஒரு நஞ்சு. அப்படியானால் சீனியும் நஞ்சுதான். போதைப்பொருளைப் போன்று சீனியும் அடிமைப்படுத்துகிறது. (மிகை துறுதுறுப்பிலிருந்து மன அழுத்தம் வரைக்கும் இட்டுச் செல்கிறது). போதைப்பொருளைப் போன்றே சீனியும், அதனை உட்கொள்வதை நிறுத்தும் பட்சத்தில் பல விதமான தடுமாற்றங்களை, உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
சுத்திகரிக்கப்பட்ட சீனி ஓர் உணவு அல்ல. தாவரங்களிலிருந்து பெறப்படும் ஒரு வகை இரசாயனம்தான் சீனி. கொகைனுக்கு உள்ள தன்மைகள் இதற்கும் உள்ளன.
டாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சீனியைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். "சீனியின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11. சீனியில் 12 கார்பன் அணு (atom), 22 ஹைட்ரோஜன் அணு, 1 ஆக்ஸீஜன் அணு உள்ளது. இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சீனியில் கிடையாது. கொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4. இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது. சீனியில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு.

சீனி ஏற்படுத்தும் பக்க விளைவுகள்
இரத்தத்தில் சீனியின் அளவை அதிகரிக்கிறது
l உடல் கட்டுப்பாட்டை இழத்தல் (நீரிழிவு நோய்)
l நோய் எதிர்ப்பாற்றல் குறைதல்
l விரைவில் முதுமைத் தோற்றம்
l உடல் பருமனை ஏற்படுத்தும்
l மூட்டு வலி, ஆஸ்துமா போன்ற நோய்களோடு தொடர்புடையது
l தலைவலி, ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தலாம்
l மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்
l மதுவைப் போன்று அடிமைப்படுத்தும்
l பல்லீறு நோய்களை ஏற்படுத்தும்
l கழிவை வெளியேற்றும் குடல்களின் செயல்திறனைக் குறைக்கும்
l பார்வைக் கோளாறுகளை ஏற்படுத்தும்
l புற்றுநோய் செல்கள் உருவாக்கத்தைத் துரிதப்படுத்துகிறது
l குழந்தைகளுக்கு படை நோயை ஏற்படுத்தும்

ஒருவருடைய மொத்த உணவில் சீனியின் அளவு 20-25% இருக்கும் பட்சத்தில் அவருக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆகையால் சீனிக்குப் மாற்றுப்பொருள் நிறையவே இருக்கின்றன. கருப்பட்டி, வெல்லம், பனங்கல்கண்டு போன்ற இனிப்புகளை உங்கள் பானங்களுக்கு சுவையூட்டப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றில் சத்துக்களும் நிறைந்துள்ளன.

No comments:

Post a Comment