பொன்நகை அணிபவர்களின் உடல் அந்த நகையோடு சேர்ந்து பளபளப்பாக மின்னுவதைப் போல தினம் ஒரு கரட் உண்பவர்களின் உடலும் தகதகவென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு கரட் அழைக்கப்படுகிறது.
காய்கறிகள் அதிகமான சத்துகளும், விட்டமின்களும் நிறைந்தவை என்பது நமக்கு எல்லோருக்கும் தெரிந்ததே, காய்கறி வகைகளில் ஒன்றான கரட் எல்லோரும் சாப்பிடுவதுண்டு. பச்சையாகவும் சாப்பிடுவர். மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் காணப்படும். எந்த வகை நோயாளர்களுக்கும் உகந்தது
இது ஒரு கிழங்கு வகையாகும். மஞ்சள் முள்ளங்கி என்றும் கரட்டை அழைப்பர். தென்மேற்கு ஆசியா, ஐரோப்பாவில் காணப்பட்டக காட்டுக் கரட்டிலிருந்தே மஞ்சள் முள்ளங்கி தோன்றியது என்கிறார்கள் . கரட்டை பச்சையாகவும் உண்ணலாம் . கரட்டை சம்பல் போட்டும் உண்ணலாம். வறை வறுத்தும் சாப்பிடலாம். கோவாவுடன் சேர்த்து கரட்டை வெள்ளை கறியாக சமைத்தும் உண்ணலாம் .
கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் கரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச் சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும் உள்ளது. நாம் உண்ணும் உணவில் வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு கரட்டிற்கு மட்டுமே உள்ளது.
இதில் உள்ள கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்றுநோய் செல்களை கட்டுப் படுத்துகிறது.
கரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற சத்து நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது.
வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் ஏற்படும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினமும் கரட்டினை சாப்பிட்டால் அவர்களுக்கு மாலைக்கண் நோய் எளிதில் குணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சக்தி கரட்டிற்கு உள்ளதால் இதயம் தொடர்புடைய நோய்களை அண்டவே விடாது. வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் கரட்டினை பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது.
ஏனெனில் கரட்டில் உள்ள நார்ச்சத்து மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது.
பக்கவாதத்தை அண்டவிடாது, கரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். தினமும் கரட்டினை உண்பவர்களை ஸ்ட்ராக் எனப்படும் பக்கவாத நோய் எட்டிப் பார்ப்பதில்லை. கரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக கரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கறைகள் போய்விடும். தாங்க முடியாத பசியையும் ஒரே ஒரு கரட் போக்கிவிடும்.
பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகின்ற சக்தி கொண்டது. அல்சர் நோய் உள்ளவர்கள் வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் கரட் ஜூஸ் சாப்பிட்டால் வயிறு மற்றும் குடல் தொடர்புடைய நோய்கள் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் வராது.
No comments:
Post a Comment