கருப்பை கட்டிகள்


http://amman.fatcow.com/panippulam/pan_summer2010/multiple_uterine_fibroids.jpg
கருப்பை கட்டிகள் ! எல்லாப் பெண்களும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியது.
கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ (cancer)என்றுதான். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் , எந்தவொரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப் படுத்திக் கொள்வது கட்டாயம்.
கருப்பையிலே புற்று நோய் கட்டியாக வளரலாம். ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் பற்றி அநேகம் பேரானோர் கேள்விப் பட்டு இருப்பீர்கள்.
இந்த பைவ்ரோயிட்(fibroid) எனப்படும் கட்டிகள் என்றால் என்ன?
இது கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும்.இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.
இது அரிதாக ஏற்படுகின்ற நோயா?
இல்லை .இது மிகவும் பொதுவாக அதாவது 45 வயதிலே இருக்கும் 100 பெண்களை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த கட்டிகள் இருக்கலாம். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் இது அறிகுறிகளை வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய் விடுகின்றது.

No comments:

Post a Comment