கர்ப்பத்திற்கான அறிகுறிகள்


கர்ப்பத்திற்கான அறிகுறிகள் திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்த நேரத்தில் தோன்றும்? என்பது பற்றி பார்ப்போம்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.
இவை கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.
இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :
* மாத விலக்கு தள்ளிப்போகுதல்
* குமட்டல்
* இரவிலும் பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* புண்ணோ அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்
* வாசனையைக் கண்டால் அருவருப்பு (ஒவ்வாமை)
* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்
* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு
* புளி, ஐஸ் மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை

No comments:

Post a Comment