கருச்சிதைவும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளும்


கருச்சிதைவு/ குறைப்பிரசவம்
ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான் ‘அபார்ஷன்’ என்கிறோம்.
கருச்சிதைவு பொதுவாக 26 வாரங்களுக்கு முன்னதாகவே ஏற்படுகிறது. சில வேளைகளில் மகப்பேறு காலங்களை இடையிலேயே அறுவைச்சிகிச்சையின் மூலம் இடையிலேயே முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை தூண்டுதலின் பேரில் செய்யப்படும் கருச்சிதைவு எனப்படுகிறது.
அபார்ஷனை வகைப்படுத்த முடியுமா?
முடியும். அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவை...
1. தானாக ஆகும் அபார்ஷன் (Spontaneous)
2. எம்.டி.பி. (Medical Termination Pregnancy)
3. செப்டிக் அபார்ஷன்

அடுத்து வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy பற்றிப் பார்ப்போமா?
ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபார்ஷன் செய்வதைத்தான் வி.ஜி.றி. என்கிறோம். சில_பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்ற சூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி. சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்த முறையில் அபார்ஷன் செய்யப்படுகிறது. அவை...

1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை தாக்கப்பட்டிருக்கும்போது...
2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்...
3. பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது...
4. ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது...
5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய் தாக்கப்படும்போது...
6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய் பீடிக்கப்படும்போது...
7. மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும்போது...

செப்டிக் அபார்ஷன் 
சுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். உதாரணமாக திருமணமாகும் முன்பே தவறான பழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள், மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியை கருக்கலைக்க பயன்படுத்துவார்கள். இதுபோன்ற சுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால் உண்டாவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். இப்பழக்கம் கிராமங்களில மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய.
1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப் பின்பு குழந்தையில்லாமை,
2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,
3. உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மை உண்டாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
குறைப்பிரசவம்/கருச்சிதைவு - தன்னிச்சையாக ஏற்படும் கருச்சிதைவு
கருவில் குழந்தை உயிர்வாழும் சாத்தியம் உள்ள போதும் ஏற்படும் கருச்சிதைவை குறைப்பிரசவம் என்பர். இது முதல் 12 வாரங்களில் ஏற்படுகிறது.

கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?

பெரும்பாலும் கருவுற்ற முட்டையில் கோளாறு இருப்பின் கருச்சிதைவு ஏற்படுகிறது, அவ்வாறு குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது உருக்குலைந்த ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தையாக வளர நேரிடுகிறது. எனவே கருச்சிதைவு என்பது மேற்கூறிய குறைபாடுள்ள பிறப்பை தடுக்கும். மலேரியா, சிபிலிஸ், கர்ப்பவதி கீழே விழுவதினால், இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள பிரச்சினை போன்ற காரணங்களினாலும் ஏற்படக்கூடும்.
சில நேரங்களில், கருப்பையில் வளர வேண்டிய கரு, கருவகத்தின்று கருப்பைக்கு கருமுட்டையினை எடுத்துச் செல்லும் மிருதுவான குழலான பெல்லோப்பியன் டியூப் எனப்படும் பகுதியில் வளர்ச்சியடைவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. அதே போன்று கருப்பை அல்லாத பகுதிகளில் வளர்ச்சியடையும் கருமுட்டையினாலும ஏற்படும் கர்ப்பமானது பாதியிலேயே கருச்சிதைவு அடைகிறது. இம்மாதிரி கருச்சிதைவு ஆபத்தானதும் கூட.

கருச்சிதைவுக்கான அடையாளங்கள்
கருச்சிதைவுக்கு இரண்டு முக்கிய அடையாளங்கள் உண்டு. ஒன்று பெண்குறியில் இரத்தப்போக்கு மற்றொன்று அடிவயிற்றில் ஏற்படும் வலி. இரத்தப் போக்கு முதலில் குறைவாக இருக்கும் பின் அதிகரிக்கும். பின்னர், வெகு விரைவாக இரத்தம் கட்டிகட்டியாக வெளிப்படும். கருச்சிதைவு, கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும்போது, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போல இருக்கும்.
தானாக ஆகும் Spontaneous அபார்ஷனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பார்ப்போம்...
பொய்த்தோற்ற அபார்ஷன் (Therater abortion):
உண்மையில் இது அபார்ஷன் இல்லை. ஆனால் அபார்ஷன் போன்று தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் அபார்ஷன் நடந்திருக்காது. காரணம், கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்ற சமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு சரியாகிவிடும்.

முழுமையான கருச்சிதைவு
கருப்பையில் வளர்கின்ற கரு சிதைவடைந்து, அக்கரு மற்றும் அதனை சூழ்ந்துள்ள திசுக்களும் முழுவதுமாக பெண்குறியின் வழியாக வெளியேற்றப்படுவது முழுமையான கருச்சிதைவு எனப்படும். இப்படி முழுமையான கருச்சிதைவு எற்படும்போது, இரத்தப் போக்கு கருச்சிதைவுக்குப் பின் சில நாட்களில் நின்றுவிடுகிறது. இவ்வாறு கருச்சிதைவடைந்த பெண்கள், 2-4 வாரங்களுக்குக் கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது. இவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மேலும் இந்நாட்களில் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

முற்றுப் பெறாத கருச்சிதைவு
சிதைவுற்ற கருவின் சில பகுதி அல்லது ப்ளாசண்டாவின் ஒருபகுதி கருப்பையிலேயே தங்கியிருப்பதை முழுமையடையாத கருச்சிதைவு/முற்றுப் பெறாத கருச்சிதைவு என்பதாகும்.

இப்படிப்பட்ட முற்றுப்பெறாத கருச்சிதைவு என்பது 10 முதல் 20 வாரங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரத்தப்போக்கு தொடர்ந்து இருக்கும். கருப்பையில் தங்கியுள்ள சிதைவுற்ற கரு, மிஞ்சியுள்ள இறந்த திசுக்கள் நோய் கண்டு, இதன் விளைவாக காய்ச்சல் மற்றும் அடிவயிற்றில் வலியினை தோற்றுவிக்கும். கருச்சிதைவு முழுமையற்ற  நிலையில் காணப்படும்போது நன்கு பயிற்சி பெற்ற சுகாதார பணியாளரைக் கொண்டு எவ்வளவு விரைவாக எஞ்சியுள்ள திசுக்களை வெளிக்கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய வேண்டும்.

முற்றுப் பெறாத கருச்சிதைவினால் எற்படும் நோய்த்தொற்றினை சரியாக கவனிக்காவிட்டால் பெல்லோபியன் டியூபில் பாதிப்புகளை ஏற்படுத்தி பெண்ணானவள் கருவுறும் தன்மையை இழக்கச்செய்யும். இவ்வாறு முழுமைபெறாத கருச்சிதைவினால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் காணப்படின் அப்பெண் அவசியம் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்.
கருச்சிதவுற்ற பெண்கள், குறிப்பாக முற்றுப் பெறாத கருச்சிதவுற்ற பெண்கள் அடுத்த குழந்தையைக் கருத்தரிக்க சில மாதங்கள் காத்திருத்தல் அவசியம். இந்நாட்களில் கருவுருவதைத் தடுக்க, கருத்தடை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
அடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual Abortion):
இது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும். இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால். 
2. கரு, சரியான வளர்ச்சி பெறாததால்.
3. கருப்பையின் வாய் திறந்திருந்தால்.

இதுபோன்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.
சில பெண்களில் கருச்சிதைவானது திரும்பபத்திரும்ப ஏற்படும். ஒன்று அல்லது இரண்டுமுறை ஆரம்பநிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டாம். ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு கர்ப்ப காலத்தின் பின்பகுதிகளில் ஏற்பட்டால் அப்பெண்ணானவள் மருத்துவ பரிசோதனைகளைச் செய்து அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டியது அவசியம்.

தூண்டுதலின் பேரில் கருச்சிதைவு அடையச்செய்தல்

சில நேரங்களில் கருவுற்ற பெண் தானாக முன்வந்து கருச்சிதைவு செய்து கொள்வதுண்டு. இதனை, கர்ப்பமுற்ற ஆரம்ப நாட்களிலேயே செய்ய வேண்டும். முதலில் கருவுற்ற பெண்ணிற்கு வலி ஏற்படாமல் இருக்க, வலியை குறைக்கக்கூடிய ஊசியினைப் போட வேண்டும். பின்னர் மருத்துவர் தகுந்த உபரணங்களைப் பெண்குறியின் வழியாகச் செலுத்தி கருப்பையிலுள்ள கருவினைச் சுத்தம் செய்வார்.

இவ்வகை அறுவைச்சிகிச்சை 15 நிமிடங்கள் வரை நடக்கும். இவ்வகை சிகிச்சை முறை, நன்கு பயிற்சி பெற்ற நபரால், தகுந்த உபகரணங்களைக் கொண்டு, சுத்தமான சூழலில் செய்தால் ஆபத்தானது அல்ல. இவ்வகை சிகிச்சைக்குப் பின், குளிர் ஜுரம், வயிற்று வலி, இடுப்பு வலி, ரத்தப் போக்கு அல்லது துர்நாற்றம் கலந்த வெள்ளைப் போக்கு ஏற்பட்டால், அப்பெண் உடனடியாக சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். கால தாமதம் மரணத்தை விளைவிக்கக் கூடும்.

அபார்ஷன் ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன?
1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் அபார்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.
2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் அபார்ஷன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் அபார்ஷன் அவசியம்ஏற்பட்டு விடுகிறது.
4. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் அபார்ஷன் வலியுறுத்தப்படுகிறது.
5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது அபார்ஷன் கட்டாயமாகிறது.
6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனை அதிகப்படுத்துகின்றன.
7. மனநலக் கோளாறுகள் அபார்ஷனில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் அபார்ஷனை வலிந்து அழைக்கும் காரணிகள்.

அபார்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
1. கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன்_மனைவி இருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.
2. அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
3. கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.
4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.
5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
6. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
7. முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபார்ஷனை முடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது

No comments:

Post a Comment