மூலிகைகள்
பழங்கள், காய்கறிகளை விட மூலிகைகள் நோய் எதிர்ப்பாற்றல் கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக மிளகு உணவின் சுவையைக் கூட்டுவதற்காகச் சேர்த்தாலும் மருத்துவக் குணத்தையும் உள்ளடக்கியுள்ளது. உணவின் சத்தைக் கூடுதலாக்குவதோடு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும் மூலிகைகளுக்கு உண்டு.
பழங்கள், காய்கறிகளை விட மூலிகைகள் நோய் எதிர்ப்பாற்றல் கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக மிளகு உணவின் சுவையைக் கூட்டுவதற்காகச் சேர்த்தாலும் மருத்துவக் குணத்தையும் உள்ளடக்கியுள்ளது. உணவின் சத்தைக் கூடுதலாக்குவதோடு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும் மூலிகைகளுக்கு உண்டு.
பெண்களுக்கு சிறுநீர் பிரிய நெரிஞ்சில் சகாயம் நல்லது.
செம்பருத்திப்பூ (செவ்வரத்தம்பூ) வயிற்றுப் புண்ணை ஆற்றும். நிழலில் உலர்த்தி பாலில் உண்ண வேண்டும்.
துவர்ப்பு சுவை உடைய காய்கள், கனிகள் வயிற்றுப் புண்ணை ஆற்றும். (விளாம்பழம், சப்போட்டா, வில்வம், மாதுளைப் பிஞ்சு போன்றவை)
அத்தி விதை ஆண்மையைப் பெருக்கும்
நொச்சி இலையை வென்நீரில் போட்டுக் குளித்தால் உடல்வலி நீங்கும்.
ஓடு ஒடுக்கி இலை ஆட்டுப்பாலுடன் சேர்த்துக் குடித்தால் கழுத்துவலி, மூட்டுவலி நீங்கும்.
பழங்களின் நன்மை: எல்லாவகை மூலங்களும் நீங்கும். வயிறு தொடர்பான காற்று உப்புசம், ஏப்பம், பொருமல் நீங்கும். பித்தம் நீங்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
அவுரி நீலிவேர் கசாயம் நஞ்சு முறிவுக்குச் சிறந்தது. (18 நஞ்சுகளையும் நீக்கும் ஆற்றல் உள்ளது)
வாதநாராயணன் இலையை விளக்கெண்ணையில் வதக்கி உண்டால் வாதநோய் நீங்கும். மலமிளக்கியாகப் பயந்தரும்.
குங்குலியம் பெரும்பாடு வெள்ளை படுதலை நீக்கும்.
அமுக்கிரா கிழங்கு பாலுடன் சேர்த்து உண்டால் நரன்புத் தளர்ச்சி நீங்கும். ஆண்மை பெருக்கி, வீக்கம் நீக்கியாகவும் பயன்படும்.
சோற்றுக் கற்றாளை – குமரவாழை கொதிக்க வைத்து பற்றுப் போட வலி, வீக்கம், அடிபட்ட வலி நீங்கும்.
கற்றளைச் சோற்றுடன் கடுக்காத் தூளைச்யும் சேர்த்துப் பிசைந்தால் நீராகும். அது மாதவிடாய் கோளாறை நீக்கும். உடல் குளிர்ச்சிக்கு நல்லது.சிறுநீர் தொல்லைகள் நீங்கும்.
முடக்கற்றான்: சிறுநீர் பெருகும், மலத்தை இளக்கும், கீள்வாயுவை நீக்கும். நல்லெண்ணையுடன் சேர்த்துக் காச்சி தடவினால் வலிகள் நீங்கும்.
No comments:
Post a Comment