தத்துவ கதைகள்-2

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..


 கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....


நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.

தமிழ் தத்துவங்கள் -1


மிகவும் வேதனையான விஷயம்..
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது....
மிகவும் சந்தோஷமான விஷயம்
உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது...

ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.



குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்.
குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்...
யாருக்கு அதை வழங்குவது என்பதை ....பணம் முடிவு செய்கிறது..!!!
-கவிச்சக்ரவர்த்தி கண்ணதாசன்..


நம்முடைய உண்மை நிலையை மறைப்பது,
நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாக முடியும்.....


தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்கு தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும். தனக்குள் தான் நிலையாகாதவன் தான்
பிறர் செய்கை சரி, தவறு என்று விவாதம் செய்வான்.


எவ்வளவு தான் நன்றாக பழகினாலும் ஒரு சிலரின் உண்மை குணம் சில சந்தர்ப்பங்களில் தான் நமக்கு தெரிகிறது.....
இவ்வளவு நாட்கள் அவர்களின் உண்மை குணத்தை மறைத்து வைத்திருந்தது அவர்களின் திறமையா...? அல்லது அறியாமல் இருந்தது நமது அறியாமையா....???

"இது என்னுடையது" என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.
"எதுவும் என்னுடையது அல்ல" என்கிற பக்குவம் வரும்போது, விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை..

தேவையில்லாததையெல்லாம் வாங்கிக் கொண்டிருந்தால்....தேவையானதையெல்லாம் விற்க வேண்டி வரும்.......

உதிர்ந்த மலருக்கு ஒரு நாளில் மரணம்.
பேசாத உறவுக்கு தினம் தினம் மரணம்..
உரியவர்களிடம் உரிமையோடு பேசுங்கள்.
உறவுகளை அன்புடன் நேசியுங்கள்.. அன்பை மட்டுமே சுவாசியுங்கள்...

அறிவுடையார் நிகழக்கூடியதையும் அறிவர்.
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுடைமை.
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாதிருத்தல் அறிவின்மை.

வெற்றி - உனக்கு கொண்டாட மகிழ்ச்சியை தரும். தோல்வி - போராட உனக்கு போதுமான வெறியை தரும்.
வெற்றி - உன்னை யாரென்று இந்த உலகத்திற்கு காட்டும்.
தோல்வி - நீ யாரென்று உனக்கே காட்டும்...


நமது  மனஉறுதி எந்த அளவிற்கு வலுப்பெற்று உள்ளதோ,
அதற்கு தக்கபடிதான் நமது வெற்றியின் அளவும் இருக்கும்....


துயரங்களை ஒருபோதும் நேராக நோக்காதவன்,
மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்...

பொறுமையும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும்,
சகிப்புத் தன்மையும், தெளிவான சிந்தனையும் இருந்தால்...... வாழ்க்கையில் வெற்றிகள் பல குவிக்கலாம்....!

ஒருவர் தன்னை தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும்
அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால இணையில்லாத இன்பநிலையை அடையலாம்..

உலகத்தில் வாழ வேண்டும். சாகும் வரை அல்ல..... நம்மை வெறுத்தவர்கள் வாழ்த்தும் வரை....

உன்னை நேசிக்கும் இதயத்தை, சாகும் வரை மறக்காதே...
உன்னை மறந்த இதயத்தை, வாழும் வரை நினைக்காதே....

உதிர்ந்த பூக்களுக்காக கண்ணீர் விடாதே.
மலர்கின்ற பூக்களுக்கு தண்ணீர் விடு…

முடிந்த பிரச்சினைகளுக்காக வருந்தாமல்,
வரும் காலத்தை துணிந்து எதிர்கொள்....

உலகில் எந்த ஒரு மனிதரையும் கண்மூடித்தனமாக நம்பவேண்டாம்.....
நாளை நீ கண் மூடிவிட்டால்...
அவர்கள் உன்னையும், உண்மையையும் மூடி விடக்கூடும்...... [20] உழைக்கும்போதே வெற்றியைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்காமல்,
உழைப்பை கடமையாக கொள்ளுங்கள்.. இயற்கை நியதிப்படி, வெற்றி விளைந்தே தீரும்

கடவுளிடம் சொல்லாதோ, உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று..
உன் பிரச்சனைகளிடம் சொல், உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று..

எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்.
அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.....!!

 உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்.ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்..நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள்...இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது......

புது உடைகளும்,பழைய நண்பர்களும் இனிப்பவர்கள்.....

பேராசை இல்லாதிருக்க "கிடைத்தது போதும்" என்ற பொன்மனம் வேண்டும்.

நீ தேர்ந்தெடுக்கும் பொருள் கூட, உன் குணத்தை காட்டும்....ஆனால் நீ தேர்ந்தெடுக்கும் நட்போ, உன்னையே காட்டும்.....

வாழ்க்கையில் தோல்வியை சந்திக்காத மனிதர்களே இல்லை.. ஆனால், தோல்வியை ஒப்புக்கொள்ளாமல்
இன்னொருவரை காரணம் காட்ட கூடாது... அப்படி செய்வதனால், அவர்கள் மேலும் பல வெற்றிகளை இழக்க நேரிடும்... தனது தவறுகளை உணர்த்து, திருத்திக்கொண்டு மீண்டும் முயற்சித்தால்.... பல வெற்றிகளை குவிக்கலாம்...

நேர்மையும்,நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின்...உதவியும் உள்ளது.

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும்.

செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு, அதைத் தேடி, உண்மையாக உழைப்பவனே....."வெற்றி" என்னும் நற்கனிகளை பெற தகுதியானவன்

துன்பம் வரும் போதும், இன்பம் வரும் போதும் கூடவே இருக்கும் ஒரே நண்பன் நமது உழைப்பு மட்டும் தான்

ஒரு மனிதனின் உயர்வும், தாழ்வும் அவரவருடைய எண்ணத்தின் இயக்கத்தை பொறுத்தே அமைகிறது. எண்ணம், செயல், நடத்தை ஆகிய அம்சங்கள் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மனதை மேம்படுத்தவேண்டும். இல்லையேல் நமது வாழ்க்கை ஒரு செல்லரித்த வாழ்க்கையே..

படகு கரை சேர்வதுக்கு துடுப்பு மட்டுமே உதவும்....
அது போல்
நம் வாழ்வில் கரை சேர்வதுக்கு உழைப்பு மட்டுமே உதவும்....


வெற்றி : இதுவரை நான் பெறாதது...!
தோல்வி : அடிக்கடி சந்திப்பது...!
பாசம் : அவ்அப்போது வந்து போவது...!
கோபம் : கேட்காமல் வருவது...!
பாராட்டு : கிடைத்தும் நிலைக்காதது...!
சொந்தங்கள் : எதுவும் எனக்காக இல்லை...!
கனவுகள் : எப்போதும் இருப்பது...!
சிரிப்பு : சிலரால் வருவது...!
நிழல் : என்னோடு கூடவே வருவது...!
மகிழ்ச்சி : வெளி உலகிற்கு மட்டும்...!
பொறுமை : நானாக உருவாக்கியது...!
ஓய்வு : தற்போது இருப்பது...!


சிலரது அக்கறை..... சிலருக்கு அரியண்டம்!
சிலரது காதல்..... சிலருக்கு காமடி
சிலரது அழுகை..... சிலருக்கு சிரிப்பு!
சிலரது துக்கம்..... சிலருக்கு சந்தோஷம்!
சிலரது ஆதங்கம்..... சிலருக்கு ஆனந்தம்!
என்ன செய்ய? சிலவேளைகளில் “உண்மை ஊமையாகும் போது கண்ணீர் மொழியாகின்றது”......

ஒவ்வொருவருக்கும் மற்றவரின் குறைகள் "பளிச்"சென்று தெரிகிறது.
ஆனால்... அவரவரின் குறைகள்
மங்கலாகக் கூடத்தெரிவதில்லை....

மேலோட்டமாக பார்த்தாலே அடுத்தவர்களுடைய  குறைகளைக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால்...
நம் குறைகளைப் பார்க்க, தெளிந்த பார்வை இருந்தால் மட்டுமே முடியும்..

 
நேற்று ஜெயித்தவர் இன்றும் ஜெயிக்கலாம்...
ஆனால்....
நேற்று தோற்றவர் தினமும் தோற்பதில்லை...

பல துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் சந்தித்தால் தான் வாழ்க்கையில் உயரமுடியும்...

எதையும், எல்லாவற்றையும் உங்களால் செய்ய இயலும்... அதற்குண்டான அனைத்து சக்தியும் உங்களிடம் உள்ளது
என்பதை நீங்கள் முழுமையாக நம்புங்கள்......

சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகமாக சோதிக்கபடுகிறான். பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகமாக காயப்படுகிறான்.

பிறப்பது ஒரு முறை, வாழ்வதும் ஒரு முறை,  பிறகு எதற்கு "கோபம்" என்னும் "வன்முறை".

நம்பிக்கை என்பது ஜாடி போன்றது. உடைந்த பின் ஒட்டி வைக்கலாம். ஆனால் முன்பு போல் இருக்காது...

உன் மீது பிரியம் உள்ளவர்கள் நீ பொய்யை சொன்னாலும் நம்பிவிடுவார்கள்..
உன் மீது பிரியம் இல்லாதவர்கள் நீ உண்மையை சொன்னாலும் நம்பமாட்டார்கள்..

அலைகள் ஓய்ந்த பிறகு தான், கடலில் குளிப்பதென்பது முடியாது.
நீந்தத் தெரிந்த பிறகே,
நீரில் இறங்குவது என்பதும் இயலாது.
வாழ்க்கையும் அப்படித்தான்......

ஏழைகள்...... "உணவு இல்லை" என்பதால் உண்ணவில்லை...
பணக்காரர்கள்... "பசியில்லை"என்பதால் உண்ணமுடிவதில்லை


 நன்மை தரும் ஏழு விஷயங்கள்.

1) பதவியிலும் பணிவு.
2) துன்பத்திலும் துணிவு.
3) ஏழ்மையிலும் நேர்மை.
4) செல்வத்திலும் எளிமை.
5) கோபத்திலும் பொறுமை.
6) தோல்வியிலும் விடாமுயற்சி.
7) வறுமையிலும் உதவி செய்யும் மனம்.

.அரசியல்வாதிகள்.....
இலட்சங்களுக்காகவும், இருக்கைகளுக்காகவும்
இலட்சியத்தை அலட்சியம் செய்பவர்கள்......


காகிதம் மேலே பறப்பது காற்றடிப்பதால்.... ஆனால்...
பறவை மேலே பறப்பது அதன் முயற்சியால்...
அதனால்...
உழைப்பை நம்புங்கள்.... அது மட்டுமே வெற்றியை கொண்டு வரும்...


குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகின்றான்.
குறைகளை பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்.....

நீங்கள் நல்லவராக இல்லை என்றாலும் பரவாயில்லை..
நல்லவரை போல நடியுங்கள்....
நல்லதையே செய்வது போல நடியுங்கள்...
நல்லதையே பேசுவது போல நடியுங்கள்....
நாளடைவில் அந்த சூழலே உங்களை நல்லவராக்கி விடும்.....

பிரச்சனைகள் அனைத்தும் தற்காலிமானவையே.... உங்களின் பழைய பிரச்சினைகள் எத்தனை நாட்கள் உங்களை வாட்டியது, எப்படி தீர்ந்தது.
என்று சற்றே சிந்தித்து பாருங்கள்......

பொறுமையும், துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம்....


நம் கையை விட்டு போன இறந்த காலம்.... இன்னும் நம் கைக்கே வராத எதிர்காலம்....
ஆகியவற்றைபற்றி கவலைப்படுவதால் தான்,
நிகழ்காலத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது..

"நீங்கள் இப்போது என்னவாக இருக்கிறீர்கள்" என்பது
"எதிர் காலத்தில் என்னவாக இருக்கப்போகிறீர்கள்"
என்பதைக் காட்டிலும் முக்கியமானது...

இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை.
அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள்.
சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை.
நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்....
பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை...
பகலுக்காக மகிழ்வதுமில்லை...

வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது.
நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.
ஒவ்வொரு மனிதனின் கையிலும்  அழகான வாழ்க்கை இருக்கிறது.
அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில் தான் தோன்ற மறுக்கிறது.

ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்,உன் விழிகளை கண்ணீரால் நிரப்பாதே...
அது உன் முன் உள்ள மற்றொரு  வாய்ப்பை மறைத்துவிடும்......
புன்னகையோடு முயற்சித்துப்பார்...... அது உன் கஷ்டங்களை மாற்றிவிடும்..

ஒருவன், "தான் பெரியவன்" என்னும் தன்முனைப்போடு இருக்கும் வரை அவனுள் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. தன்னலமற்ற தன்மையுடன் உலகத்திற்கு பயனுள்ளவனாக மாறும்போதே அவன் தன்னிலையிலிருந்து உயர்வடைகிறான்.

அவமானம், தோல்வி, வறுமை இவை எல்லாம்
நம்மை நல்ல சிலையாக மாற்றும் சிற்பிகள்...
அதனால், அவற்றை எண்ணி வருந்தாதீர்கள்.. இது தான் அனுபவ பாடம்.....

உழைப்பை தேடி ஓடு...  உதவியை தேடி ஓடாதே....

விண்ணை தொடும் போதோ, எனது "மதி" என்கிறான்...
மண்ணில் விழும் போதோ,  எனது "விதி" என்கிறான்...
வெற்றியை தனதாக்கி கொள்ளும் மானிடன்,
தோல்வியை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்வதில்லை.

"முடியாது" என்று நீங்கள் சொல்வதையெல்லாம்.....
 யாரோ ஒருவன்.... எங்கோ... செய்து கொண்டு தான் இருக்கின்றான்...

"தேவை" என்பது பலவீனமானவரையும் பலசாலியாக்கி விடும்.

வாய்மை வாசலிலேயே தடுக்கப்பட்டு நின்று விடும்...
         பொய்மை இடுக்கு வழியாகக் கூட உள்ளே நுழைந்து விடும்.

உண்மையை சொல்.. உறுதியாக சொல்... அதை தைரியமாக சொல்......

சவால்களுக்காக சந்தோஷப்படுங்கள்.... அவை தான்...
உங்களுக்குள்ளே ஒளிந்து கிடக்கும்  திறமைகளை வெளிப்படுத்துகிறது...

எந்த நிலை வந்தாலும், வந்த நிலை மறவாதே....

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல..         உன்னைப்போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...

படிப்படியாய் மேல்நோக்கி செல்வதே வாழ்க்கை.
இன்பம் மேலே மட்டுமல்ல, ஒவ்வொரு படியிலும் கூட இருக்கிறது....

உலகத்தில் உயர்ந்த செயல்கள் அனைத்தையும் சாதித்தவர்கள் உங்களையும், என்னையும்         போன்று மனிதர்களே..
வீரமும், விவேகமும் இருந்தால்.. நம்மைப் போன்ற மனிதர்கள்  எதையும் செய்து முடிக்க முடியும்......

நினைப்பதெல்லாம் நடந்து விடாது....
ஆனால்... நினைக்காமல் எதுவுமே நடக்காது...

எதிலும் பரபரப்பு தேவையில்லை.. ஆனால், சுறுசுறுப்பு எப்போதும் தேவை....

வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்.        வெற்றி சிரித்து மகிழ வைக்கும்........!        தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்....!!

நேர்மறை எண்ணங்களுக்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும், இடையிலான போராட்டம்    தான், நம் வாழ்க்கை......

நீங்கள் பெரிய காரியங்கள் செய்ய தேவை இல்லை. சிறு காரியங்களை கூட முழு அன்புடன் செய்யுங்கள். அதுவே பெரிய செயலாகும்...

உன்னை வழிநடத்த, அறிவை பயன்படுத்து...!!! மற்றவர்களை வழிநடத்த, இதயத்தை (அன்பை) பயன்படுத்து...!!

ரகசியத்தை காப்பாற்றினால், அது உன் அடிமை.....
வெளியிட்டால், அது உன் எஜமான்....

மண்டியிட்டு வாழ்வதை விட, எதிர்த்து நின்று மரணிப்பதே மேல்...

நம்பி கெடுப்பவனுடன் நட்பாய் இருப்பதை விட... நம்பாமல் இருப்பவனின் நட்பு மேல்..

எதிரிகளை ஒழிக்க, அவர்களை நண்பனாக்குங்கள்...

"முடியாது" என்று சொல்ல வேண்டிய இடங்களில் "தயவு செய்து முடியாது" என்று கனிவாக சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்..

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால்       இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்...

“பாரதரத்னா” காமராஜர்



படிக்காத மேதை, ஏழை பங்காளன், கர்ம வீர்ர், பாரத ரத்னா, கிங் மேக்கர் என்று எல்லோராலும் புகழப்படுகின்ற  கர்மவீரர்  காமராஜர் பல்வேறு தொண்டுகள் ஆற்றி மக்களின்மனதில் நீங்காத இடம் பெற்றவர். தமிழக முதலமைச்சராக, அகில இந்திய காங்கிரஸின் தலைவராக, சிறப்பாகப் பணியாற்றிய – அவரது ஆட்சிக்காலத்தில்தான் கல்விக்கூடங்கள் அதிகமாகத்திறக்கப்பட்டன.
இலவச சீருடை, மதிய உணவுத் திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை உருவாக்கி, அதனைச் செம்மையாகச் செயல்படுத்தியவர் நம் தலைவர் காமராஜர். அவரது எளிமையான, புனிதமான வாழ்க்கையை இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைகிறது.
1. வாழ்க்கை நிகழ்வுகள்