உங்கள் ஆண்ராய்டில், ஜியோ 4ஜி சிம் பொருத்த 8 எளிய வழிமுறைகள்..!

உங்கள் ஆண்ராய்டில் ஜியோ 4ஜி சிம் பொருத்த 8 எளிய வழிமுறைகள் இதோ..!


வழிமுறை #01 உங்களிடம் ஒரு ஜியோ சிம் கார்ட், பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ எண், 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்ட, எக்ஸ்போஸ்டு ஐஎம்இஐ சேஞ்சர் ஆப் கொண்ட, ரூட் செய்யப்பட்ட ஆண்ராய்டு கருவி இருக்க வேண்டும்.

வழிமுறை #02 உங்களிடம் இருக்கும் ஆண்ராய்டு ஆனது ரூட் செய்யப்பட்டு இருக்க வேண்டும் உடன் அது 4ஜி எல்டிஇ இணைப்பை ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஜியோவின் வேகமான 4ஜி இலவச சேவையை அனுபவிக்க முடியும்.

வழிமுறை #03 உங்கள் சாதனம் ரூட் செய்யப்பட்டதும் நீங்கள் எக்ஸ்போஸ்டு ஆப் மற்றும் ஐஎம்இஐ சேஞ்சர் ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வழிமுறை #04 பின்னர், எக்ஸ்போஸ்டு இன்ஸ்டாலர் அண்ட் ஆக்டிவேட் பிரேம்வெர்க் (Xposed Installer and Activate Framework) சென்று மாடூல்ஸ் (Modules) தனை கிளிக் செய்யவும். அங்கு, நீங்கள் ஐஎம்இஐ சேஞ்சர் ப்ரோ ஆப்பை எனேபிள் செய்ய வேண்டும்.
வழிமுறை #05 பின்னர், அந்த ஆப்பை ஜியோ சிம் பயன்படுத்த விரும்பும் மொபைலில் திறந்து ஐஎம்இஐ எண்ணை பதிந்து அப்ளை கொடுக்கவும். உடன் நீங்கள் அளித்த ஐஎம்இஐ நம்பரின் கடைசி மூன்று எண்களை, உங்கள் விருப்பமான எண்கள் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.

வழிமுறை #06 இப்போது உங்கள் தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்து, சிம் கார்ட் ஸ்லாட் ஒன்றில் ஜியோ சிம் கார்டை பொருத்தவும் பின் சுவிட்ச் ஆன் செய்யவும்.இப்போது உங்கள் ஜியோ சிம் ஆக்டிவேட் ஆகியுள்ளதை காண முடியும்.

வழிமுறை #07 ஒருவேளை உங்களுக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்றால் இதை பின்பற்றவும். செட்டிங்ஸ் - மொபைல் நெட்வெர்க் - நெட்வெர்க் ஆப்ரேட்டர்ஸ் - சர்ச் மேனுவலி - ரிலையன்ஸ் ஜியோ. செட்டிங்ஸ் - மோர் - மொபைல் நெட்வெர்க்ஸ் - அக்கசஸ் பாயிண்ட் நேம்ஸ் - புதிய ஏபிஎன் ஒன்றை உருவாக்கவும், முக்கியமாக ஏபிஎன் ஆனது ஜியோநெட் ஆக இருக்க வேண்டும். மீதமுள்ளவைகளை காலியாக விடவும்.

வழிமுறை #08 பின்னர் இறுதியாக மொபைல் நெட்வொர்க்ஸ் சென்று எல்டிஇ ஒன்லி தேர்வு செய்யவும் உடன் உங்கள் டேட்டாவை ஆன் செய்யவும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் எந்த ஆண்ராய்டுமொபைலிலும் ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற 4ஜி டேட்டாவை உங்களால் அனுபவிக்க முடியும்.


வாசகர்களின் கவனத்திற்கு: 

இந்த வழிமுறையானது ஒரு அதிகாரப்ப்பூர்வமான ஒன்றல்ல என்பதும், இந்த பணியின் போது ஏதேனும் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டால்அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, 

இதை உங்கள் சொந்த விருப்பத்தின் கீழ் செயல்படுத்தி பார்த்துக் கொள்ளவும்






No comments:

Post a Comment