ஜியோவிடம் ஏர்டெல் 'அடிவாங்குறது' ஒருபக்கம் இருக்க, ஏர்செல் நிலை என்ன..?



இலவச குரல் அழைப்புகள், ரோமிங் மற்றும் சாத்தியமான உலகின் மலிவான தரவு திட்டங்கள் என போட்டியாளர்களே இல்லாத வண்ணம் தனது அதிரடி சலுகைகளை வெளியிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியா முழுக்க ஜியோ அலைகளை பரப்பி ஏர்டெல், ஐடியா போன்ற முன்னணி நெட்வெர்க் நிறுவனங்களை மூச்சுப்பிடித்து போராட வைக்கும் நிலைக்குள் தள்ளியுள்ளது என்றே கூற வேண்டும். 

அப்படியாக, ரிலையன்ஸ் ஜியோவிடம் ஏர்டெல் 'அடிவாங்குறது' ஒருபக்கம் இருக்க, ஏர்செல் போன்ற நிறுவனங்களின் நிலை என்ன..?

நிலைபாடு : பெருநிறுவனங்களே ஜியோவை சமாளிக்க முடியாது போராடிக் கொண்டிருக்க ஏர்செல், டெலினார் இந்தியா, டாடா டெலிசர்வீசஸ் போன்ற (ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் சேவை உட்பட) சிறிய மொபைல் சேவை வழங்குநர்கள் எல்லாம் இன்னும் முற்றிலும் வெளியேறாத ஒரு நிலைபாட்டுக்குள் தான் இருக்கின்றன என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

உறுதி : நடுத்தர கால அளவில், ரிலையன்ஸ் ஜியோவானது ஏர்செல், டெலினார் இந்தியா , டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய சேவைகள் வெளியேறுவதை உறுதி செய்யும்" என்கிறது ஒரு யூபிஎஸ் குறிப்பு.

உறுதி : நடுத்தர கால அளவில், ரிலையன்ஸ் ஜியோவானது ஏர்செல், டெலினார் இந்தியா , டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய சேவைகள் வெளியேறுவதை உறுதி செய்யும்" என்கிறது ஒரு யூபிஎஸ் குறிப்பு.

டேட்டா நெட்வொர்க் : அந்த குறிப்பில் ஜியோவின் மலிவான குரல் அழைப்புகள் மற்றும் தரவு சலுகைகள் ஆனது பலவீனமான ஆபரேட்டர்களை முக்கியமாக டேட்டா நெட்வொர்க்குகளில் முதலீடு செய்யாதவர்களை வெளியேற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
25% தொழில் வருமானம் : அம்மாதிரியான பலவீனமான ஆபரேட்டர்கள் 25% தொழில் வருமானத்திற்காக போராடுகிறது என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலவீனம் : கட்டுக்குட்பட்ட நிதிநிலை கொண்ட பலவீனமான ஆப்ரேட்டர்கள் ரிலையன்ஸ் ஜியோவிற்கு நிகரான ஆக்கிரமிப்பு மிகுந்த சலுகைகளை வழங்க இயலாது என்பது நிதர்சனம்.

டெர்மினேஷன் ரேட் : மறுபக்கம் இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கத்தின் ( COAI) கீழ் உள்ள சிறிய (டெலினார் , ஏர்செல் மற்றும் வீடியோகான்) ஆப்ரேட்டர்கள் 'டெர்மினேஷன் ரேட்'களை குறைக்ககோரி வலியுறுத்தி வருகின்றன.

மொபைல் வேலெட் : ஏர்செல் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிக் கேஷன்ஸ் உடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது என்பது சமீபத்தில் மொபைல் வேலெட் சேவைக்குள் நுழைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை : பிற வேலெட் சேவைகளை போலின்றி புதிய வாடிக்கையாளர்களை ஐந்தே சேவை மூலம் பெறுவோம் மற்றும் ஒரு நாள் 80 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டிருப்போம் என்றும் ஏர்செல் நம்பிக்கை அளித்துள்ளது.

No comments:

Post a Comment