ஜியோ சவால் : ஏற்றுக்கொள்ளும் பிஎஸ்என்எல், சாதிக்குமா..?இந்திய அரசின்கீழ் இயங்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது ரிலையன்ஸ் ஜியோ சேவையானது, பிற அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் ஒரு "சவால்" ஆகும். இருப்பினும் ரிலையன்ஸ் ஜியோவின் சலுகைக்கு நிகரனான சலுகைகளை வழங்கி தீவிரமான போட்டியை பிஎஸ்என்எல் நிலைநிறுத்தும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது. 

அப்படியாக ஜியோவிற்கு நிகரான நிலையை அடைய பிஎஸ்என்எல் என்னென்ன எதிர்கால திட்டங்கள் வகுக்கின்றது, என்னென்ன வியூகங்கள் கொண்டுள்ளது என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஆக்கிரோஷம் : அதாவது ஒரு ஆக்கிரோஷமான நிலைப்பாடு கொண்ட சலுகைகளை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் பிஎஸ்என்எல் மாற இருக்கிறது என்று அதன் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனரும் ஆன அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

1 ரூபாய் : ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் வெளியான மறுநாளே மிக அதிக பயன்பாடு சந்தாதாரர்களுக்கு 1 ஜிபி பதிவிறக்கத்திற்கான செலவு 1 ரூபாய்க்கும் குறைவான விலையில் என்ற தனது அதிரடி திட்டத்தை பிஎஸ்என்எல் வெளியிட்டது.

உறுதி : அந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் ஆனது வெற்றிகரமாக ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு நிகராக பொருந்திக்கொள்ளும் நிலைப்பாட்டை உறுதி செய்து கொண்டதாக நம்பியது.

உண்மை நிலை : "ஆனால், தற்போதைய உண்மை நிலை என்னவென்றால் ஜியோ சலுகைக்கு நிகரனான (டரிஃப்-டு-டரிஃப்) சலுகைகள் சந்தையில் வழங்கப் படவில்லை எனில் ஜியோ உடனான போட்டியில் நிலைத்திருக்க இயலாது."

ஆக்கிரமிப்பு : அப்படியான ஜியோ கட்டண சலுகைகள் மிகவும் ஆக்கிரமிப்பு மிகுந்ததாக இருந்தால், பிஎஸ்என்எல் மற்றும் பிற அனைத்து ஆபரேட்டர்களின் கட்டண சலுகைகளும் ஆக்கிரமிப்பு மிக்கதாய் இருக்க வேண்டும்" என்று ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

சிறப்பான சலுகை : ரிலையன்ஸ் ஜியோவின் வருகையானது அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் கடுமையான போட்டிதான் என்பதுடன் இந்த போட்டி மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான சலுகைகளை வழங்க முடியும் என்பதையும் சேர்த்தே ஒற்றுக்கொள்ளவேண்டும்.

சொந்த நெட்வொர்க் : லேண்ட்லைன் மற்றும் ஒளியிழை ஆப்ரேட்டர் இருப்பதால் பிஎஸ்என்எல் அதன் சொந்த நெட்வொர்க்கில் பிராட்பேண்ட் சேவையை வழங்கும், ஆக கொள்முதல் தொடங்க, முதலீடு செய்ய வேண்டிய நிலை பிஎஸ்என்எல்-க்கு கிடையாது.

இலவச இரவு நேர அழைப்பு : ஏற்கனவே பிஎஸ்என்எல் இரவு 9 மணி தொடங்கி காலை 7 மணி வரையிலான வரம்பற்ற இலவச இரவு நேர அழைப்புகளை அதன் அனைத்து லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குகிறது.

3ஜி : மேலும் பிஎஸ்என்எல் வரம்பற்ற 3ஜி மொபைல் டேட்டாவை ரூ.1099-க்கு வழங்கும் திட்டத்தை அறிவித்து சந்தையில் போட்டியை எதிர்கொள்ள துவங்கியது, மற்றும் சில ஏற்கனவே இருக்கும் திட்டங்களில் தரவு பயன்பாட்டு வரம்பை இரண்டு மடங்காக உயர்த்தியது.

இலவச வாய்ஸ் கால் சேவை : சந்தையில் உள்ள நிலைமையை பொறுத்து 2 அல்லது 3 மாதங்களில் இலவச வாய்ஸ் கால் சேவையை பிஎஸ்என்எல் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment