உடலை, ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விருப்பம் கொள்வர். பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆங்காங்கே கொழுப்புகளை தேக்கிவைக்கிறது. குறிப்பாக வயிறு, தொடை, பின்புறம் போன்றவற்றில் கொழுப்பு அதிகரிப்பதால் பெண்களின் வடிவம் மாறி அழகு காணமல் போய்விடுகிறது. இது அவர்களின் மகிழ்ச்சியை பாதிக்கிறது. எனவே இயற்கையிலேயே ஆழிலை போன்ற வயிறு வேண்டும் என்று விரும்பும் பெண்கள் உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை படியுங்கள்.
சரிவிகித நீர்ச்சத்து
உடலில் கொழுப்பு சேர்ந்து தொப்பை போட்டுள்ளதா? அதைப்பற்றி கவலைப்படாமல் அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இது உடலின் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு பசி உணர்வை கட்டுப்படுத்தும். மேலும் தண்ணீரானது நாம் உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. மேலும் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றிவிடும். தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவதில்லை என்பதால் தொப்பை வயிறு ஏற்பட வாய்ப்பே இல்லை.
தொடர்ச்சியான உணவுக்கு முற்றுப்புள்ளி
தொப்பை இருக்கிறது என்பதற்காக உணவு உண்ணாமல் தவிர்ப்பது ஆபத்தானது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர் உணவியல் நிபுணர்கள். எனவே சரியான நேரத்திற்கு சரிவிகித சத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் அதிக அளவில் எப்பொழுது பார்த்தாலும் அரைத்துக்கொண்டு இருப்பது உடல் நலத்திற்கு ஏற்றதல்ல என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
உற்சாகமான நடை
தொப்பை வயிறு குறைய தினசரி அரைமணிநேரமாவது உற்சாகமாக நடக்கவேண்டும் என்பது உணவியல் நிபுணர்களின் அறிவுரை. இது இதயத்திற்கும் இதமான ஒரு உடற்பயிற்சி. நடை பயிற்சியானது தொப்பையை கரைப்பதோடு அன்றைய நாளை உற்சாகத்துடன் நடத்திச் செல்லும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் நீச்சலானது உடலை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். இது உற்சாகமான உடற்பயிற்சியும் கூட. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
பழங்கள், காய்கறிகள்
நமது அன்றாட உணவில், பழங்கள், காய்கறிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அவற்றில் உள்ள நார்ச்சத்தானது உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளதால் உடலின் ஜீரணமண்டல இயக்கத்தை சரியாக நடைபெறச் செய்கின்றன.
செயற்கை குளிர்பானங்கள்
வயிற்றில் தொப்பை போடுவதற்கு செயற்கை குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணமாகும். இதில் உள்ள ஆல்கஹால் அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது. ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப்படுத்தப்படுகிறது. இது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. வயிற்றில் தொப்பை சேருகிறது. எனவே இலைபோல வயிறு வேண்டும் என்பவர்கள் நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டோடு இருந்தால் இரண்டு வாரங்களுக்கு அழகான மாற்றம் தெரியும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
தொப்பை வயிறு உள்ள பெண்கள் இதை கடைபிடிக்கலாமே?