உடல் எடை குறைய
உடல் எடை அதிகமானவர்களைப் பார்த்து நீ எந்தக்கடை அரிசி சாப்பிடுகிறாய்? என்று கிண்டலாக கேட்பார்கள். அதிகமாகச் சாப்பிடுவதைத்தான் அவ்வாறு கேலி செய்வார்.
பெண்களாக இருந்தால் திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் தைராய்டு பிரச்சினை ஒரு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சியின்மை எப்போதும் ஓய்வு, நொறுக்குத் தீனி, போன்றவை எடையைக் கூட்டிவிடும்.
ஆண்களுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், மது அருந்துவதாலும் எடைகூடும். மனதில் மகிழ்ச்சி அதிகமானால் கூட எடை கூடுவதை நடுத்தர வர்க்கத்தினரிடையே காணலாம்.
குண்டானவர்கள் தங்கள் பணிகளை உற்சாகமாய் செய்ய முடியாது. மூட்டு வலி, முதுகு வலி, தசை வலி என அடிக்கடி சிரமப்பட நேரிடும். தங்கள் வயதைவிட முதியவராகவும், கவர்ச்சியமான தோற்றமும் இல்லாமல் இருப்பர். மேலும் ஐம்பது வயதுக்கு மேல் இதய நோய், இரத்தக்கொதிப்பு, நீரழிவு நோய் போன்றவையும் சேர்ந்துகொள்ளும்.
உடல் எடையை குறைக்க சில வழிமுறைகள்
சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சி ஈடுபடுவதுதான் சிறந்தது.
சரியான நேரத்தில் சாப்பிடவும்.
எண்ணெப் பதார்த்தங்களை தவிர்க்கவும்.
மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.
மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும்.
இரவில் பாதி சாப்பாடு அல்லது சிற்றுண்டி பாதி வயிற்றுக்கு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும்.
பால், தயிர், பச்சை வெங்காயம் (50 கிராம்) சாப்பிடவும்.
பசிக்கும்போது நொறுக்குத்தீனி தவிர்த்து தண்ணீர், தக்காளிச்சாறு அல்லது முட்டைகோஸ் சாப்பிடலாம்.
மாவுச்சத்து குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண்டு.
வயதுக்கேற்ப உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும் சிறந்தது.
மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை உகந்தவை.
சோம்பேறித்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்காமல் ஏதாவது ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத் தடுத்துவிடும்.
விடியற்காலையில் மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால் விரைவில் உடல் இளைத்து விடும் தேன் உடலில் உள்ள கொழுப்புகளை எளிதில் கரைத்து விடும்.
இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடு படுத்தி ஆற வைத்து காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும் மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால் தொப்பை குறையும்.
உடல் எடையை குறைக்க உணவில் கொள்ளு சேர்க்க வேண்டும்.
பப்பாளியை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவற்றில் எதாவது ஒன்றை வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை குறையும் அழகான தோற்றம் கிடைக்கும்