தினம் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

பழங்களில் நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் தான் திராட்சை. இந்த திராட்சையை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும், இப்பழத்தை ஜூஸ் போட்டுக் குடித்தாலும் இப்பழத்தின் முழு சத்துக்களையும் பெறலாம்.


அதிலும் திராட்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். சரி, இப்போது திராட்சை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். 

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் ஆய்வு ஒன்றில், கருப்பு திராட்சையால் ஜூஸ் போட்டு குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

மாரடைப்பு தடுக்கப்படும் திராட்சை ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 

மெட்டபாலிசம் மேம்படும் திராட்சை ஜூஸ் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். அதிலும் சிவப்பு திராட்சையால் தயாரிக்கப்படும் ஜூஸைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் பல மடங்கு அதிகரிக்கும். 

இரத்த அழுத்தம் திராட்சை ஜூஸ் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை தான் காரணம். மேலும் திராட்சை ஜூஸ் இதய தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதைத் தடுக்கும். 

எடை குறைவு திராட்சை ஜூஸ் நேரடியாக உடல் எடையைக் குறைக்க உதவாவிட்டாலும், இதனை உடற்பயிற்சி செய்து முடித்த பின் ஒரு டம்ளர் குடிப்பதன் மூலம், மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும். 

ஒற்றைத் தலைவலி திராட்சை ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால், ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இரத்தம் சுத்தமாகும் திராட்சை ஜூஸ் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுத்து, உடலில் இருக்கும் இரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அதிகாலையில் கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்!

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நாம் பல்வேறு செயல்களை அன்றாடம் மேற்கொண்டு வருகிறோம். அதுவும் இயற்கை வழிகளின் மூலமே நாம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புகிறோம். அப்படி இயற்கையாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஓர் வழி தான் ஜூஸ் குடிப்பது.



அதிலும் வீட்டிலேயே காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்தால், நாம் தினமும் அடிக்கடி அவஸ்தைப்படும் நோய்களில் இருந்து விடுபட முடியும். இங்கு அப்படி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பானங்களில் ஒன்று கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பது. 

இப்போது இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் இருக்கும் எந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும் என்று காண்போம். 

பார்வை மேம்படும் கண் பிரச்சனை இருந்தால், கேரட் ஜூஸில் இஞ்சி சாறு கலந்து குடியுங்கள். இதனால் அந்த பானம் கண்களில் உள்ள நரம்புகளுக்கு ஊட்டமளித்து, வலிமைப்படுத்தி, பார்வையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

புற்றுநோய் தடுக்கப்படும் கேரட் இஞ்சி ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அபாயகரமான புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். 

நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் கேரட் மற்றும் இஞ்சியில், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து, நோய்களிடமிருந்து பாதுகாத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். 

குமட்டல் குறையும் இந்த இயற்கை பானம், வயிற்றில் உள்ள அமிலத்தை நிலைப்படுத்தி, குமட்டல் மற்றும் வாந்தி உணர்வைக் குறைக்கும். 

தசை புண்கள் கேரட் மற்றும் இஞ்சியில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் ஏராளமாக உள்ளது. இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், தசைகளில் இருக்கும் உட்காயங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறையும். 

இதய நோய்கள் கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ் இதயத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இதய நோய்கள் வராமல் தடுக்கும். 

வாய் ஆரோக்கியம் கேரட் இஞ்சி ஜூஸ், ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இது வாயில் எச்சிலின் உற்பத்தியைத் தூண்டி, வாய் வறட்சியடைவதைத் தடுத்து, வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும். 

ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்: 
கேரட் - 1 (துண்டுகளாக்கப்பட்டது) 
இஞ்சி - சிறிது (துருவியது) 
தண்ணீர் - தேவையான அளவு 

ஆரஞ்சு ஜூஸ் - சிறிது (விருப்பமிருந்தால்) 

செய்முறை: மிக்ஸியில் துண்டுகளாக்கப்பட்ட கேரட், துருவிய இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டினால், ஜூஸ் ரெடி!

2 மாதம் வெந்தய நீரில் தேன் கலந்து குடித்தால், எந்த பகுதியில் உள்ள கொழுப்பு கரையும் என்று தெரியுமா?


இன்றைய மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் ஏராளமான நோய்கள் உடலை தாக்குகின்றன. முக்கியமாக உடலில் நச்சுக்களின் அளவும அதிகரிக்கிறது. குறிப்பாக இரத்த குழாய்களினுள் கொழுப்புக்கள் படித்து இரத்த குழாய்களை அடைத்து, இதயத்திற்கு இரத்தம் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, இதய பிரச்சனைகள் மற்றும் மூளை பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 

இப்படி இரத்த குழாய்களினுள் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி, பல்வேறு உணவுகளும், பானங்களும் உதவுகின்றன. மருந்து மாத்திரைகள் கூட சில சமயங்களில் பக்க விளைவுகளை உண்டாக்கும். ஆனால் இயற்கை பானங்களும், உணவுகளும் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. 

இப்போது நாம் இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் இயற்கை பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


வெந்தயம் 
இரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்கும் கொழுப்புக்களின் தேக்கத்தைக் கரைக்க வெந்தயம் பெரிதும் உதவியாக இருக்கும். 

ஆய்வுகள் 
பல்வேறு ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள ஏராளமான நார்ச்சத்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாகவும் மற்றும் இந்த கரையக்கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டள்ளது. 

வெந்தயத்தின் இதர நன்மைகள் 
வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்து உண்ணும் உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்வதோடு, பித்தநீரின் உற்பத்தியைச் சீர்செய்யும். மேலும் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றச் செய்யும். 

வெந்தய நீர் தயாரிப்பு முறை #1 
ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து தினமும் இருமுறை குடிக்க வேண்டும்.

வெந்தய நீர் தயாரிப்பு முறை #2 
வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 

குறிப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றை 1-2 மாதங்கள் தினமும் குடித்து வந்தால், நிச்சயம் இரத்தக் குழாய்கள் சுத்தமாகி, இதயம் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

கீழே இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மனதில் கொண்டு பின்பற்றினால், இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கலாம்.   

டிப்ஸ் #1 எண்ணெயில் பொரித்த உணவுகள், சர்க்கரை உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 

டிப்ஸ் #2 புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களை விட்டுவிட வேண்டும். 

டிப்ஸ் #3 பிரகாசமான நிறங்களைக் கொண்ட பழங்களான தர்பூசணி, மாம்பழம், ஆரஞ்சு மற்றும் ப்ளூபெர்ரி போன்றவற்றை அன்றாடம் சிறிது உட்கொண்டு வந்தால், கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கலாம். 

டிப்ஸ் #4 தினமும் காலை மற்றும் மாலையில் 1 கப் க்ரீன் டீ குடித்து வருவதன் மூலம், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்படும். இதனால் உடல் எடையும் குறையும். 

டிப்ஸ் #5 அன்றாட சமையலில் சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி சமைத்து வர, இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவது தடுக்கப்படும். 

டிப்ஸ் #6 கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், கிரான்பெர்ரி ஜூஸ் கிடைக்கும் போது, தவறாமல் வாங்கிப் பருகுங்கள். ஏனெனில் இது கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, கொழுப்புக்கள் இரத்த குழாய்களில் படிவதைத் தடுக்கலாம்.

ஒல்லியான உருவமா உங்களுக்கு? நீங்கள் குண்டாக ஒரு அற்புத மூலிகை !!

இந்தியா முழுவதும் சாலை, மலை, என பார்க்கும் இடங்களிலெல்லாம் ஒருகாலத்தில் மூலிகைகளாகவே இருந்தது என நம்புவீர்களா? இப்போதும் அப்படித்தான். என்ன செடி என்றே அறியாமல் அதனை தேவையில்லாத புதர்கள் என நினைத்து வெட்டியெறிந்துவிடுகிறோம்.

அப்படி வேலிகளில் படர்ந்து வளரும் ஒரு தாவரம்தான் பிரண்டை. நீர் அவசியமில்லாதது. அதன் தண்டை நட்டு வைத்தா போதும் அதுவே வளர்ந்து விடும். பிரண்டை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பிரண்டை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடியாகும். இந்த பிரண்டையின் மகத்துவத்தை இப்போது படியுங்கள்.

பிரண்டை வகைகள் : 
பிரண்டைச் செடிகளில் ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டைஎன இன்னும் பல வகைகள் உள்ளன. அதில் முப்பிரண்டை என்னும் வகை கிடைப்பதற்கரியது. இது மலைப் பகுதியில்தான் அதிகம் காணப்படும். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. இத்தாவரத்தில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன.

மருத்துவ குணங்கள் : 
இலைகளும், இளம் தண்டுப் பகுதிகளும் உடல்நலத்திற்கு வலிமை தருபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீரணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளாறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.

உடல் குண்டாக :
ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையில் உள்ள நாரை உரித்த பின், நெய்யில் அல்லது நல்லெண்ணெயில் கடுகு தாளித்து, இஞ்சி வரமிளகாயுடன் வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் பூசியதுபோல் இருக்கும்,

பசியின்மைக்கு :
பசி எடுக்கதவர்கள் அல்லது அஜீரணத்தால் அவதிப்படுபவர்கள் பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் , வாயுத் தொல்லை மட்டுப்படும். சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

முதுகுப் பிடிப்பிற்கு : 
வாய்வினால் எலும்பு மற்றும் நரம்புகளின் இணைப்புகளில் தேவையற்ற நீர் தங்கிவிடும். பின் அவை முதுத் தண்டு மற்றும் கழுத்துப் பகுஇதிக்கு இறங்கி பசை போல் அங்கேயே இருந்து தாங்க முடியாத கழுத்து மற்றும் முதுகு வலியை தரும். இதனால் கழுத்தை திருப்பவோ, குனியவோ முடியாமல் அவஸ்தை படுவார்கள்.

இவர்கள் பிஞ்சு பிரண்டையை உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பற்று போட்டால், முதுகு மற்றும் கழுத்தில் உள்ள நீர்ப்பசை இளகி, முதுகுவலி மற்றும் கழுத்துவலி குணமாகும்.

மாத விடாய் வலிக்கு : 
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

இதய நோய்களை தடுக்க :
உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

உடல் அசதியை போக்க இந்த சிம்பிள் யோகாவை செய்யுங்க!

ஊருக்கு போறப்போ கூட தெரியாது. எல்லா வேலையும் முடிச்சுட்டு திரும்பி வந்தவுடன் இருக்குமே பாருங்க ஒரு அசதி. நாள் பூராவும் படுத்துக் கொண்டேயிருக்கலாம் என்றிருக்கும். ஆனல் என்ன செய்வது வந்தவுடன் வேலைக்கும் போக வேண்டும். அந்த மாதிரியான சமயங்களில் சிலர் உடல் அசதி போக மாத்திரை அல்லது சத்து மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இது தேவையில்லாதது. வேறு என்ன பண்ணலாம் என நீங்கள் யோசித்தால் உங்களுக்கு அறிவுறுத்துவது என்ன தெரியுமா? யோகா.

யோகா : 
யோகா உடல் அசதியை போக்கி புத்துணர்வு தருவது கியாரண்டி. அதிலும் உர்த்வ முக ஸ்வனாசனா என்ற யோகா உங்கள் உடல் மற்றும் மனச் சோர்வை கூட போக்கி, புத்துணர்வை தருகிறது. 

உர்த்வ முக ஸ்வனாசனா : உர்த்வ என்றால் மேல் நோக்கி, முக என்றால் முகம் ஸ்வன என்றால் நாய். மேல்னோக்கி நாய் பார்ப்பது போல் செய்யப்படும் இந்த யோகாவிற்கு இந்த பெயர் பெற்றுள்ளது.எப்படி செய்வது என பார்க்கலாம். 

செய்முறை : 
முதலில் நேராக நின்று ஆழ்ந்து ஒருமுறை மூச்சை இழுத்து விட்டபின், தரையில் குப்புற படுங்கள். உங்கள் கைகள் பக்க வாட்டில் வைத்து, கால்களை நேராக வைத்திருங்கள்.
 
செய்முறை : 
பின்னர் உள்ளங்கைகளால் ஊன்றி உடலை வளையுங்கள். முகம் மேலே பார்த்தபடி எவ்வளவும் முடியுமோ அவ்வளவு வளைக்க வேண்டும். கை மற்றும் கால்கள் நேராக இருக்க வேண்டும். உடல் மட்டும் வளைந்தபடி சில நொடிகள் இருக்க வேண்டும். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும். இது போல் 5 முறை செய்யலாம்.
  

பலன் : 
உடல் வலி தீரும். கை, கால்கள் பலம் பெறும். மார்புக் கூடு விரிவடையும். சுவாசப் பாதை சீராகும். தசை, சுளுக்கு , இடுப்பு வலி ஆகியவை குணமாகும். 

குறிப்பு : 
முதுகில் காயம்பட்டவர்கள், கை மூட்டுகளில் அடிப்படவர்கள் இந்த யோகாவை தவிர்க்கவும்.


அதீத மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? இந்த யோகாவை செய்து பாருங்கள்!

பள்ளி செல்லும் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்படாதவர்கள் இன்று குறைவு. 

ஏதேனும் ஒருவகையில் எல்லாருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறோம். இது எப்பவாவது வந்தால் அதனைப் பற்றி கலவைப்படத் தேவையில்லை. ஏனெனில் வாழ்க்கையில் எல்லாரும் இதனை அனுபவிப்பதுதான். தவிர இவை அன்றாட பிரச்சனைகளால் வரக் கூடியது. 

ஆனால் அடிக்கடி வந்தால் உடல் அல்லது மனதால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆகவே இதற்கான தீர்வை உடனடியாக காண வேண்டியது அவசியம். 

இல்லையென்றால் உங்கள் தினசரி வாழ்க்கை பாதிக்கக் கூடும். நிம்மதி சீர்குலைய வாய்ப்பிருக்கிறது.

யோகா : 
உங்களுக்கு மருத்துவரிடம் போக விருப்பமில்லையென்றால் நௌகாசன யோகாவை செய்து பாருங்கள். உங்களை சிறப்பாக உணர்வீர்கள் என்றால் மிகையாகாது. இப்போது உலகம் முழுவதும் நமது யோகாவை ஒரு சிகிச்சையாக பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். யோகாவில் இருக்கும் ஒவ்வொரு ஆசாகனங்களும் அர்த்தமுள்ளது. பயனுள்ளது.

நௌகாசனா : 
நௌகா என்றால் சமஸ்கிருதத்தில் பரிசல் என்று அர்த்தம். பரிசல் போன்று செய்யப்படும் வடிவில் செய்யப்படும் இந்த யோகா மன அழுத்தத்தை குறைத்து மனதிற்கும், உடலிற்கும் புத்துணர்வு தரும்.எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை : முதலில் தரையில் படுத்து ஆழ்ந்து மூச்சை நிதானமாக விடுங்கள். 

பின்னர் மெதுவாக காலை தரையிலிருந்து மேலே தூக்கவும். பிறகு கைகளை மெதுவாக உந்தி உடலை மெதுவாக மேலே தூக்கவும்.


சிறிது பேலன்ஸ் செய்த பின் கைகளை நீட்டிக் கொள்ளுங்கள். உங்கள் கண்கள் முன்னோக்கி இருக்க வேண்டும். கால்கள் மேலே பார்த்த நிலையில் நேராக இருக்க வேண்டும்.



இது பார்ப்பதற்கு பரிசல் வடிவில் இருக்கும். இந்த நிலையில் சில நொடிகள் இருந்தபின், மெதுவாக இயல்பான நிலைக்கு வரவும். இவ்வாறு 4- 5முறை செய்யவும்.

பலன்கள் : உங்கள் அடிவயிற்றை பலப்படுத்துகிறது. தொடைக்கும், கால்களுக்கும் வலுவளிக்கிறது. ஜீரணத்தை தூண்டும். மலச்சிக்கலை நீக்கும். மனதிற்கு புத்துணர்வு அளிக்கிறது.

குறிப்பு : இந்த ஆசனம் மனதிற்கு சிறந்த முறையில் புத்துணர்வு அளிக்கிறது. ஒற்றைத் தலைவலி, குறைவான ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.

உங்களுக்கு விட்டமின் டி குறைபாடு இருக்கா? எப்படி தெரிந்து கொள்ளலாம்?

நமது உடலில் செல்களுக்கும், உறுப்புக்களுக்கும் போஷாக்கு அளிக்க மட்டுமே விட்டமின் தேவைப்படுகிறது என்று நினைப்பது தவறு. அவை ஹார்மோன் சுரப்பிற்கும், கண்பார்வைக்கும், என்சைம் சுரப்பதற்கும் இன்னும் பலபல வேலைகளை செய்ய விட்டமின்கள் அவசியம்.

விட்டமின் டி இதன் முக்கியத்துவம் தெரிந்தால் இதன் அருமையை புரிந்து கொள்வீர்கள். விளம்பரங்களில் வருவது போல் கால்சியம் உடலில் அதிகமாவதற்கு மட்டும் விட்டமின் டி பயன்படவில்லை. ஹார்மோன் சுரப்பதற்கும் தசை வளர்ச்சிக்கு, புற்று நோயை வரவிடாமல் தடுக்க, என பலவகையில்  இது தேவைப்படுகிறது.

விட்டமின் டி எவ்வாறு பெறப்படுகிறது? 
சூரிய புற ஊதாக் கதிர்கள் நம் சருமத்தின் மீது படும்போது கொலஸ்ட்ரால் மூலமாக விட்டமின் டி பெறப்படுகிறது.

இந்த விட்டமின் டி இரைப்பை, மற்றும் இறுதியாக சிறு நீரகத்தை அடைந்து அங்கே கால்சிட்ரையால் என்னும் ஹார்மோனாக மாறுகிறது.

இங்குதான் விட்டமின் டி யின் உயிர்பெறுகிறது. இந்த கால்சிட்ரையால் ஹார்மோனாக மாறி கால்சியம் உறிதலுக்கு தூண்டுகிறது.  

அதிகமாக வியர்க்கிறதா? 
எந்த வித வேலையும் செய்யாமல் அதிகமாக வியர்க்கிறதா? அப்படியென்றால் இது விட்டமின் டி குறைப்பாட்டின் அறிகுறியே. உங்கள் டயட்டில் சாலமன் மீன், முட்டை, ஆகியவ்ற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் விட்டமின் டி தேவை நிவர்த்தியாகும்.

தூக்கம் இல்லையா?
காஃபியும் குடிப்பதில்லை. மொபைலும் பார்ப்பதில்லை. இருந்தாலும் தூக்கம் வரலையே என்று புலம்புகிறீர்களா? விட்டமின் டி குறைபாட்டினால் தூக்கம் வருவது குறையும் என ஆய்வு கூறுகின்றது.

எலும்பு எளிதில் உடைகிறதா? 
தடுக்கி விழுந்ததும் எலும்பு விரிசல்அல்லது முறிதல் ஏற்படுகிறதா? அப்படியென்றால் விட்டமின் டி குறைப்பாட்டினால் கால்சியம் போதிய அளவு எலும்பில் சேர்க்க முடியாமல் போகும். இதனால் எலும்பு பலவீனமடைந்து எளிதில் உடைய நேரிடும்.

அடிக்கடி நோய்வாய்படுகிறீர்களா? 
சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் விட்டமின் டி குறைவால் எங்கு சென்றாலும் எளிதில் சளி, காய்ச்சல் என அவதிக்குள்ளாவர்கள். சுவாச பிரச்சனைகளும் உண்டாகும். விட்டமின் டி குறைபாட்டினால் நோய் எதிர்ப்பு செல்களும் குறைவாகவே இருக்கும்.

எப்போதும் டென்ஷன் உண்டாகிறதா? 
விட்டமின் டி குறைந்தால் செரடோனின் போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இதனால் பதட்டம், டென்ஷன் ஆகியவை உண்டாகும்.

இரத்தத்தை சுத்தம் செய்ய சாப்பிட வேண்டிய உணவுகள்!

உடலுறுப்புக்களின் சீரான இயக்கத்திற்கு தேவையான சத்துக்களை வழங்குவது இரத்தம் தான். இத்தகைய இரத்தம் நாம் தற்போது உட்கொண்டு வரும் ஜங்க் உணவுகளால் அசுத்தமாக உள்ளது. இதன் காரணமாக உடலுறுப்புக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகக்கூடும்.

எனவே ஒவ்வொருவரும் தினமும் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து சாப்பிட்டு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கீரைகள்
கீரைகள் இரத்தத்தையும், கல்லீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே அடிக்கடி கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பசலைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது மிகவும் நல்லது.
  
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதோடு, பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவையும் உள்ளது. இவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இரத்தத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.
 
அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸ் என்னும் கீரையும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தின் தரத்தை அதிகரிக்கும். மேலும் அஸ்பாரகஸை அடிக்கடி உட்கொடு வந்தால், இரத்த நாளங்களின் ஆரோக்கியமும் மேம்படும்.
  
மாதுளை
மாதுளை இதய நோயாளிகளுக்கு நல்லது என்று சொல்வார்கள். ஏனெனில் அது இதயத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, இரத்த நாளங்களுக்கு பாதுகாப்பை வழங்கி, இரத்த நாளம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.
 

பெர்ரிப் பழங்கள்
பெர்ரிப் பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புதிய செல்களின் வளர்ச்சியைத் தூண்டி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே பெர்ரிப் பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.
 
மஞ்சள் தூள்
மஞ்சளில் உள்ள குர்குமின், தமனிகளின் சுவர்களில் உள்ள அழற்சி மற்றும் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கும். மேலும் உணவில் மஞ்சள் சேர்ப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, இரத்தம் சுத்தமாக இருக்கும்.

ஒரே நிமிடத்தில் ஆழ்ந்த உறக்கம் பெற வேண்டுமா? அப்ப இந்த 4-7-8 ட்ரை பண்ணுங்க!

உறக்கம் ஒன்று சீர்குலைந்து போனாலே மெல்ல, மெல்ல ஆரோக்கியம் நலம்கெட ஆரம்பித்துவிடும். நீங்கள் இதை கண்கூட பார்த்திருக்க முடியும். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் தூக்கமின்மை கோளாறு இருக்கிறது என கூறப்படுபவர்கள் ஏறத்தாழ ஒரு நோயாளி போல நிறைய குறைகள் கூறிக்கொண்டே இருப்பார்கள்.

இதற்கு மாத்திரைகள் மூலம் தீர்வுக் காண நினைப்பது தவறு. மாத்திரைகள் உடல் நல கேடுகளுக்கு தற்காலிக தீர்வு தான் அளிக்கும். எனும் போது உறக்கத்திற்கு ஒருபோதும் நிரந்தர தீர்வாக அமையாது. ஆனால், மூச்சு பயிற்சி மூலம் இதற்கு நல்ல தீர்வு காணலாம்...

மூச்சு பயிற்சி! மூச்சு பயிற்சி சரியாக செய்தாலே உடல்நலத்தை பேணிக்காக்க முடியும் என்பார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நல்ல உறக்கம் பெற வேண்டும். இந்த இரண்டும் ஒரே செயலில் கிடைத்தால் சிறப்பு தானே!

4-7-8 ட்ரிக்! 
நான்கு நொடிகள் மூச்சை உள் இழுத்து, ஏழு நொடிகள் மூச்சை ஹோல்ட் செய்து, எட்டு நொடிகளில் மூச்சை விட வேண்டும். இதை சுழற்சி முறையில் சில நிமிடங்கள் செய்தாலே ஆழ்ந்த உறக்கம் பெற உதவும்.

ஆக்சிஜன்! 
4-7-8 ட்ரிக் உடலுக்கு நிறைய ஆக்சிஜன் கிடைக்க செய்கிறது. இதனால் மூளை அதிக ஆக்சிஜன் பெற்று சுறுசுறுப்பாக செயற்படும். மூளையில் மந்த நிலை இருந்தாலே நல்ல உறக்கம் பெற முடியும்.

அமைதி! 
இந்த 4-7-8 ட்ரிக் மூச்சு பயிற்சி இயற்கையான முறையில் நரம்பு மண்டலத்தில் அழுத்தம் குறைத்து இலகுவாக உணர வைக்கிறது. நரம்பு மண்டலம் அமைதி நிலை அடைவதால் நீங்கள் எளிதாக ஆழ்ந்த உறக்கம் பெற முடியும்.

மூளை, இதயம்! 
இந்த 4-7-8 ட்ரிக் மூளை மற்றும் இதய துடிப்பை சீராக்கி, உறக்கம் கெடாமல் இருக்கவும் உதவுகிறது. மேலும்ம், இது நுரையீரல் செயற்திறன் அதிக படுத்தவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது.

தாங்க முடியாத முதுகுவலியா? குணப்படுத்த உத்தனாசனம் செஞ்சு பாருங்க!!

தொடர்ந்து ஒரே அமர்ந்து கொண்டே வேலை செய்பவர்களுக்கு அல்லது ஒரே மாதிரி நின்று கொண்டே இருப்பவர்களுக்கு முதுகு வலி இருந்து கொண்டேயிருக்கும். உடல் பருமனானவர்களும் இதில் அடக்கம்.

இதற்கு அதிகப்படியாக முதுகிற்கு அழுத்தம் தரப்படுவதால் உண்டாகும் பாதிப்பே. அதனை கவனிக்காமல் விடும்போது, முதுகுத் தண்டுவடம், கழுத்து ஆகிய இடங்களுக்கும் பரவி, உங்கள் இரவு தூக்கத்தை கெடுத்துவிடும்.

முதுகு வலியால் நீங்கள் அவதிப்பட்டால் உத்தனாசனாவை செய்து பாருங்கள். இது முதுகில் நெகிழ்வுத்தன்மை தந்து உங்கள் வலியை போக்கி, புத்துணர்வு தரும். அதோடு, முதுகிற்கு பலமும் அளிக்கிறது.


உத்தனாசனா : முதுகு வலியால் நீங்கள் அவதிப்பட்டால் உத்தனாசனாவை செய்து பாருங்கள். இது முதுகில் நெகிழ்வுத்தன்மை தந்து உங்கள் வலியை போக்கி, புத்துணர்வு தரும். அதோடு, முதுகிற்கு பலமும் அளிக்கிறது.


செய்முறை : முதலில் தடாசனத்தில் நில்லுங்கள். நேராக முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நிற்க வேண்டும். பிறகு ஆழ்ந்து மூச்சை விடுங்கள்.

செய்முறை : பின்னர் மெதுவாக குனியவும். வயிறும் மார்பும் தொடைப்பகுதிக்கு அருகில் வர வேண்டும்.
 


நீங்கள் இப்போது சௌகரியமான நிலையை ஏற்படுத்திக் கொண்டதும், மெதுவாக குனிந்து உங்கள் கைகளால் பாதங்களை தொடவும்.

செய்முறை : இப்போது உங்களால் முடிந்தால் முகத்தை கால்களுக்கு இடையே பொத்திக் கொண்டு கைகளை பின்னுக்கு கொண்டு சென்று குதி கால்களை பிடித்துக் கொள்ளலாம். முடியவில்லையென்றால் கைகளால் பாதத்தை பிடித்தபடி சில நொடிகள் இந்த நிலையில் இருந்தபின் இயல்பான நிலைக்கு வரவும்.
பலன்கள் : முட்டியை பலப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. கழுத்து, தோள்பட்டையை வலுப்படுத்தும். மன அழுத்தத்தைன்போக்கும். கல்லீரல் இயக்கத்தை தூண்டுகிறது.

குறிப்பு : மூட்டு, கால் அறுவை சிகிச்சை செய்தவர்கள், முதுகில் அடிப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.






உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து வருகிறது என்பது வெளிபடுத்தும் 14 அறிகுறிகள்!

நாம் உண்ணும் உணவில் இருந்து சாதாரணமாக பருகும் பாட்டில் நீர் வரை அனைத்தும் நமது உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க செய்கிறது. இதை எப்படி உணர்வது. பெரும்பாலும் நாம் அதன் தாக்கம் வீரியம் அடைந்த பிறகு தான் உணர்கிறோம். மருத்துவரிடன் சென்றி பரிசோதனை செய்து ஊர்ஜிதம் செய்கிறோம். இதை எப்படி ஆரம்பத்திலேயே கண்டிறிவது?

அறிகுறி #1
அடிக்கடி சிறுநீர் வருவது, முக்கியமாக இரவு நேரங்களில்
  
அறிகுறி #2
கண்பார்வை திடீரென மங்க துவங்குவது
  
அறிகுறி #3
எந்த ஒரு விஷயத்திலும் சீராக கவனம் செலுத்த முடியாமல் போகும்.
  
அறிகுறி #4
எவ்வளவு நீர் அல்லது நீர் பானம் உட்கொண்டாலும் வாய் வறட்சியான உணர்வு தொடர்ந்து இருக்கும். தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும்.

அறிகுறி #5
சிறு காயங்களாக இருந்தாலும், அது சரியாக நீட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.
  
அறிகுறி #6
வயிறு சார்ந்து கோளாறுகள் அடிக்கடி உண்டாகும்.
  
அறிகுறி #7
சருமத்தில் ஒருவிதமான அரிப்பு அல்லது எரிச்சல் இருந்துக் கொண்டே இருக்கும்.
  

அறிகுறி #8
அடிக்கடி பசிக்கும். எத்தனை உணவு உண்டாலும், சிறிது நேரத்தில் மீண்டும் சாப்பிட தூண்டும்.
  
அறிகுறி #9
தளர்ச்சி, நடுக்கம் போன்ற நரம்பு மண்டல கோளாறுகள் உண்டாகும்.
  
முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
இரத்த சர்க்கரை அளவு உடலில் அதிகமாக இருப்பவர்கள் பிரெட், அரிசு உணவுகள், உருளைக்கிழங்கு உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
  
அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை!
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் அதிகமாக விரும்பி உண்ண வேண்டிய உணவுகள் தானியங்கள், காய்கறிகள், முட்டை!

கொலஸ்ட்ராலைக் குறைத்து இரத்தக் குழாய்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் அற்புத நாட்டு மருந்து!

தற்போதைய அவசர உலகில் ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும், மோசமான வாழ்க்கை முறையாலும் நிறைய பேர் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இப்படி ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது, அது இரத்தக் குழாய்களில் படித்து, அதனால் இதய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடுகிறது.

இதனைத் தடுக்க ஒவ்வொருவரும் உண்ணும் உணவுகளில் அதிக அக்கறை காட்டுவதோடு, உடலில் கொலஸ்ட்ரால் தேங்குவதைத் தடுக்கவும், கரைக்கவும் உதவும் இயற்கை வழியைத் தெரிந்து கொண்டு அவற்றைப் பின்பற்றினால், இதய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

இங்கு இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதை சாப்பிட கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்தும், இரத்த குழாய்களை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம். 

இஞ்சி இந்த நாட்டு மருந்தில் இஞ்சி சேர்க்கப்பட்டுள்ளது. இஞ்சியில் உள்ள நொதிகள் கொழுப்புக்களைக் கரைக்கும். மேலும் ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரும் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவைக் குறைக்கும். இதற்கு ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குளோராஜெனிக் அமிலம், கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, இதய நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும். 

எலுமிச்சை எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, கெட்ட கொழுப்புக்களின் அளவை சீரான அளவில் குறைக்கும். 

தேவையான பொருட்கள்: 
இஞ்சி சாறு - 1 கப் 
ஆப்பிள் சீடர் வினிகர் - 1 கப் 
வெங்காய சாறு - 1 கப் 
எலுமிச்சை சாறு - 1 கப் 

தயாரிக்கும் முறை மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சாறுகளையுஙம் ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் குறைவான தீயில் வைத்து, 30 நிமிடம் கிளறி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும். 

பின் அதில் 3 கப் தேன் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.   

உட்கொள்ளும் முறை இந்த மருந்தை தினமும் காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவிவிட்டு, வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். 

இப்படி கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் உட்கொண்டு வந்தால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இரத்தக் குழாயில் உள்ள கொழுப்பு படிகங்கள் கரைக்கப்பட்டு, இரத்தக் குழாய் சுத்தமாகும்.

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

உடலினுள் நுழையும் புழுக்கள் உணவு மற்றும் தண்ணீரின் வழியாகத் தான் உடலை அடைகிறது. உடலில் புழுக்கள் அதிகம் இருந்தால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்து, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் சரியாக கிடைக்காமல் உடல் பலவீனமாகிவிடும். 

எனவே ஒவ்வொருவரும் தங்கள் உடலில் உள்ள புழுக்களை அவ்வப்போது ஒருசில உணவுகளை உட்கொண்டு வெளியேற்றிவிட வேண்டும். இங்கு வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து உட்கொண்டு உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். 

பூண்டு பூண்டில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிப் புழுக்களை அழித்து வெளியேற்றும். எனவே அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பதோடு, அவ்வப்போது ஒரு பச்சை பூண்டு சாப்பிட்டும் வாருங்கள். 

வெங்காயம் வெங்காயத்தில் உள்ள சல்பர், ஒட்டுண்ணிப் புழுக்களை அழிக்கும். அதற்கு வயிற்றை சுத்தம் செய்ய நினைக்கும் போது, 2 டீஸ்பூன் வெங்காய சாற்றினை தினமும் 2 முறை என 2 வாரத்திற்குப் பருக வேண்டும். 

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் இயற்கையான சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் வளமாக உள்ளது. இவை வயிற்றில் உள்ள புழுக்கை அழித்து வெளியேற்றும். 

பூசணி விதை பூசணி விதை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிற்றில் இருக்கும ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராடி வெளியேற்றும். 

பப்பாளி விதை பப்பாளி விதையும் உடலினுள் உள்ள ஒட்டுண்ணிகளை வெளியேற்றும். அதற்கு பப்பாளி விதையை நன்கு உலர வைத்து, சாலட்டின் மேல் தூவி, தினமம் உட்கொண்டு வர, வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம். 

அன்னாசி அன்னாசியில் உள்ள புரோமெலைன் என்னும் செரிமான நொதி, டாக்ஸின்கள் மட்டுமின்றி, புழுக்களையும் வெளியேற்றும். 

பாதாம் பாதாம் வயிற்றில் இருக்கும் புழுக்களின் வளர்ச்சியைத் தடுத்து, அழித்து வெளியேற்றும். எனவே பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா?

நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான சூழ்நிலையில் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வழிகளை நாடினால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இங்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் மஞ்சள் தூள் கலந்த துளசி நீர். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். பானம் தயாரிக்கும் முறை ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால் பானம் ரெடி!


சளி குணமாகும் அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலில் உள்ள அழற்சி மற்றும் சளித் தேக்கத்தைக் குறைத்து, சளி பிடிப்பதைத் தடுக்கும்


ஆஸ்துமா துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவும்.


சிறுநீரகம் சுத்தமாகும் இந்த இயற்கை பானம் சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

மன அழுத்தம் நீங்கும் துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கல் நீங்கும் நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், இந்த பானம் குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சனையை உடனடியாக தடுக்கும்.

அசிடிட்டி குறையும் துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி பிரச்சனையைக் குறைக்கும்.

அல்சர் சரியாகும் இந்த இயற்கை பானத்தில் உள்ள மருத்துவ குணங்கள், வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்து, அல்சர் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

செரிமானம் மேம்படும் மஞ்சள் கலந்த துளசி நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

தலைவலி குணமாகும் தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

புற்றுநோய் இந்த இயற்கை பானத்தை ஒருவர் தினமும் குடித்தால், தற்போது பலரைத் தாக்கும் பல்வேறு புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். இதற்கு அவற்றில் உள்ள சக்தி வாய்ந்த பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் தான் காரணம்.

கொலஸ்ட்ரால் குறையும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும்.