BILL GATES in a Restaurant


BILL GATES in a restaurant.

After eating, he gave 5$ to the waiter as a tip. The waiter had a strange feeling on his face after the tip.

Gates realized & asked.What happened?

Waiter:
I'm just amazed Bcoz on the same table ur son gave Tip Of... 500$...
& u his Father, Richest man in the world Only Gave 5$...?

Gates Smiled & Replied With Meaningful words:

"He is Son of the world's richest man, but i am the son of a wood cutter..."

Waiter:....................????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கல் சிலைக்கு ஊற்றும் பாலை

ஒரு ஏழை குழந்தைக்கு ஊற்று ,


கடவுள் உனக்கு கடன் படுவான் !

தியானம் என்றால்



உடலை எரிக்கப் பயன்படுவது மயானம்; மனதை எரிக்கப் பயன்படுவது தியானம்-இளையராஜா வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது என்ற தனது புத்தகத்தில் தியானம் பற்றி.
————————————————————————–
கடவுள் பக்தி உள்ளவர்தாம் தியானம் செய்ய வேண்டுமா என்றால் இல்லை. தியானம் என்றால் நினைவுகளை ஒருங்கிணைப்பது; எண்ணங்களை இல்லாமல் செய்வது, மனதை ஒருங்குவிப்பது எனச் சொல்லலாம்.

கண்களை மூடிக்கொண்டு உலகை கவனி

கண்களைத் திறந்திருக்கும்போது உலகை மற!

என்ற ஆங்கிலப் பழமொழி தியானத்திலிருந்தே வந்திருக்கும் .

தியானம் என்றால் ஆழ்நிலைத்தியானமா? சூழ்நிலைத் தியானமா? ஈஷாவா? வேதாத்திரியா? ரவிசங்கரா? என்றெல்லாம் கேட்பவ்ர்கள் தியானத்தைப்பற்றி ஏதும் அறியாதவர்கள். தியானம் செய்வது பற்றி எல்லா மதங்களையும் விட இந்து மத நூல்களில் பகவத் கீதை; உபநிஷத்துக்கள் போன்ற வற்றில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது.

நினைவு என்ற ஒன்றை நீக்கிப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்றில்லை – ரமணர்.

நீ கடவுளை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால் அவர் ஈரடி உன்னை நோக்கி எடுத்து வைக்கிறார்-ராமகிருஷ்ணர்.

மனஸ் என்றால் அசைந்துகொண்டிருப்பது என்கிறது சம்ஷ்கிருத மொழி.

உலகிலேயெ மிக உயர்ந்தது எது என்றால் அது: தியானம்
உலகிலேயே மிக சிறந்தது எது என்றால் அது: தியானம்
அனைவர்க்கும் மிக அவசியமானது எது என்றால் அது: தியானம்.
மிருகங்களும், விலங்குகளும், தாவரங்களும் கூட சிரிப்பதை, சிந்திப்பதை, சிலிர்ப்பதை அறிவியல் சொல்கிறது. ஆனால் தியானம் ஒன்றுதான் மனிதர்க்குக் கிடைத்த அரிய வரம். ஒவ்வொருவரின் வாழ்வையும்  தியானத்துக்கு முன்/ தியானத்துக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம்.
தியானம் என்பது தேவையில்லாத பகுதிகளை செதுக்கி வாழ்வை அழகிய சிலையாக மாற்றுவது; தியானம் என்பது குரோட்டன்ஸ் செடியின் அளவற்ற அடர்த்தியை வெட்டி அழகாக மாற்றுவது போன்றது. தியானம் என்பது ஒரு செடியோ மரமோ தடை மீறி சூரியஒளியை நோக்கி வலைந்து வளர்ந்து செல்வது போன்று வாழ்வை செலுத்துவது.

ரமண மஹரிஷி அழகாக சொல்வார்: அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை (ஏன் என்றால்) எல்லா நூல்களிலுமே இறுதியாக மனோநிக்ரஹமே வழி என்று சொல்லப்பட்டிருக்கிறபடியால். (மனசின் ஆர்ப்பாட்டதை அடக்குவது நினைவைப் பிரித்து மனம் என்ற ஒன்று இல்லாமலிருப்பதை கண்டுகொல்வது.)அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை என்பார்.
தியானம் என்பதன் அடிப்படையில் “தனியிடத்தில் அமர்ந்தவனாகி” என்ற சொல் கீதை போன்ற பழம் பெரும் நூலில் உண்டு. இதை ஒப்பு நோக்குகையில் கூட்டம் கூட்டிக்கொண்டு தற்போது இவர்கள் சொல்வதும் செய்வதும் தொடர்பில்லாமல்  நடப்பதும் உமக்கு விளங்கும்.

இவர்கள் எல்லாமே நானும் கூட “சர்வ சமய தியான வழி வாழ்வு முறை” என்று குரான், பைபிள்; பௌத்தம்; சமணம்; கீதை எல்லாம் சேர்த்து பயிற்சி கொடுத்துவருகிறேன் எனினும் இதற்குஎல்லாம் யாரும் காரண கர்த்தாவல்ல. அனைவரும் கற்றுக்கொண்ட வழித்தடத்தை காணிக்கையாக்குகிறார்கள் எந்தக் கொடித்தடம் யார் யாருக்கு பிடிக்கிறதோ அதன் வழி மக்கள் பயணப்படுகிறார்கள் கட்சிகள் போல.

பொதுவாக யோகப்பயிற்சியில் 4 வகையான யோகம் இடம்பெற்றிருக்கின்றன.:

1.மந்திர யோகம்: மந்திர உச்சரிப்புகள், ஜெபம், பிரார்த்தனைகள்; பாடல்கள் வழியே கடவுள் மார்க்கம் தேடுவது. இதன்வழிதான் காந்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. இலய யோகம்: உலகில் உள்ள எல்லாமே இயற்கையின் ஒரு அம்சமே, மனிதனும் இயற்கையின் ஒரு சிறு துகளே. என்று எல்லாவற்றையும் இறை அம்சத்தில் பார்த்து வியப்பது இலயித்துக் கிடப்பது.ஒரு பைத்யக்கார நிலை என்று கூட சொல்லலாம்.

3. ஹடயோகம்: ஆசனம், சக்ரா, கிரியைகள், முத்திரைகள் எல்லாம் தியானத்துக்கு ஏதுவாக  ஒரு உபகரணமாக ஒரு கருவியாக தயார்படுத்தி வைப்பது – இராமதேவ் பாபா இவ்விஷியத்தில் கில்லாடி.எண்ணற்ற  ஆசனங்கள் இதில் அடங்கும். ஏன் நடனத்தையே கூட இதில் சேர்க்கலாம். நாட்டிய வழியில் கூட ஆன்மாவோடு இலயித்தல் இருக்கலாம்.

4. இராஜ யோகம்:  நீ உண்மையிலேயே உனது உடலைக் கடந்து உயிரோடு – ஆன்மாவோடு கலக்க வேண்டுமானால் அதற்கு இந்த வழிதான்  இந்த யோகப் பயிற்சிதான் சிறந்தது. இதை அஷ்டாங்க யோகம் என்றும் சொல்வார்கள் இதுவே நம் வழி திறப்பு விழி.

விவேகானந்தர், இராமகிருஷ்ணர்; அரவிந்தர் ஏன் இன்றைய சித்பவானந்தர் வரை அவரவர்கள் அவரவர்கள் பாணியில் இக்கலையை நமக்குப் பகிர்ந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். எது நன்றாக  இருக்கிறதொ? எப்பகுதி சுலபமாக இருக்கிறதோ? எவ்வழி பிடித்திருக்கிறதோ? அதன் படி நாம் பயணம் செய்ய…






அஷ்டாங்க யோகம் அல்லது ராஜ யோகம் என்பதில் எட்டு நிலைகள் அல்லது 8 படிகள் உண்டு. யமம்; நியமம்; ஆசனம், பிரணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம் , சமாதி என. இதில் இந்த 8 நிலைகளிலும் தேர்ச்சியுற்ற மேதைகள் ஞானிகள்தான், சித்தர்தான், துறவிகள்தான், முனிவர்கள்தான், புத்தர்கள்தான்.

இவர்கள்தான் ராமகிருஷ்ணராக, விவேகானந்தராக, ரமணராக, ராகவேந்திரராக, சங்கரராக, ராமனுஜராக யேசுவாக இன்ன பிற உலகை திருத்த வந்த உத்தமராக பரிணமிக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் அடிப்படை: யமம்: அடிப்படை ஒழுக்கம். வாழ்க்கை முழுதும் கடைப்பிடிக்க வெண்டியதாக:-

1.நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாதிருத்தல்(எங்கள் வீட்டில் கொசு அடிக்கப்படுகிறது தியானம் அமர முடிய வில்லையே என; எலி அடிக்கப்படுகிறது அக்கப்போர் தாங்க முடியவில்லையே என்று).

2.நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிறர் பொருள் மேல் ஆசைப்படாதிருத்தல்.

3.நினைவாலும் சொல்லாலும் செயலாலும் உண்மையைக் கடைப்பிடித்தல்.

4.பிரமசாரியம் காத்தல்

5.பிறரிடமிருந்து எதுவும் ஏற்றுக்கொள்ளாதிருத்தல். இவையே.

இவற்றில் ஒன்றிரண்டையாவது கொஞ்சமாவாது கடைப்பிடிப்பவரிடம் கடவுள் இருக்கும்.ஏன் எனில் இப்போதெல்லாம் முழுதும் இவற்றை எல்லாம் கடைப்பிடிக்க ஆள் யாரும் இல்லை. எனவே கடவுளுக்கு ஆள் கிடைப்பது அரிதாகிவிட்டது என்பதால் நிபந்தனைகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டுள்ளது.அப்படியும் இலட்சக்கணக்கானவர்களில் கோடியில் ஒருவருக்கு மட்டுமே இந்த உணமையான நாட்டம் ஏற்படுகிறது. இதை கொஞ்சம் உரசிப்பார்த்தால் தற்போது சாமியார்கள் எல்லாம் நடத்தும் நாடகம் யாவும் புரியும். வியாபாரம் என்று தெரியும். மேல் சொன்ன 5 ஒழுக்கங்களும் பெரும்பாலும் எல்லா சமயங்களிலும் கிறிஸ்தவம்; புத்தம், சமணம், இந்து, முகமதியம் ஆகிய எல்லா மதங்களுக்கும் பொருந்துவதுதான். இவை ஆர்வமுள்ள மாந்தரால் ஆயுள் முழுதும் வாழ்வு முழுதும் கடைப்பிடிக்கவேண்டியதாக தியான முறைகள் சொல்கின்றன.

இதன்படிதான் சித்தர்கள் , யோகிகள்,  ஞானிகள் எல்லாம் வாழத்தலைப்பட்டனர்.நோ காம்ப்ரமைஸ். பூமிப்பூங்காவை நமது கைகளில் தாரை வார்த்துச் சென்றனர். ஆனால் இப்போதிருப்பதோ நம்மால் அள்ளிக் கொட்டவும் முடியா அசிங்கங்கள்.

நியமம்:- நியமம் என்றால் அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய உடல் சுத்தம் தியான நேரம், அளவான உறக்கம், அளவான சாப்பாடு போன்றவை பற்றி சொல்வது.

ஆசனம்:- எங்கு எப்படி எந்த நேரத்தில் அமர்வது என்பது பற்றிய குறிப்புகள் இதைப்பற்றி பகவத்கீதையிலும், சித்பவானந்தரும் அழகாக குறிப்பிட்டுள்ளார்கள்.

பிரணாயாமம்:- முச்சுப்பயிற்சி இது தியானம் அமர்வதற்கு அவசியமான உடல் தயாரிப்பாக சொல்லப்படுகிறது. எண்ணங்களைத் தூய்மை செய்வதற்கு முன் இந்த பயிற்சி எவ்வளவு இன்றியமையாததாகிறது என்பதை சொல்வது ஆயுளை அதிகம் விருத்தி செய்ய பயன்படும்.

பிரத்யாஹாரம்:- அரவிந்தரும் , விவேகானந்தரும் இந்த பிரத்யாஹாரம் அடுத்து வரும் தாரணை பற்றி மிக அழகாக எளிதில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளது குறிப்பிடவேண்டியது. இது நமது தியான நேரத்தில் நமை தொந்தரவு செய்யும் எண்ணங்களை எப்படி விரட்டுவது என்பது பற்றி சொல்வது.

தாரணை:- இது ஒரு பொருள் பற்றி சிந்தித்தல் என்பது. முன் சொன்னதன் தொடர்ச்சி அதாவது: எண்ணங்களை வடிகட்டி நமக்கு தேவையான ஒரே எண்ணம் மீது மட்டும் நாம் கவனம் செலுத்தவேண்டும் என்பதை கற்பிப்பது. யேசு இது குறித்து நமது சீடர்களுக்கு நன்கு விளக்குவார்.

தியானம்:- இந்த நிலையை எட்டுவதுதான் தற்போதைய தியான வழிகளின் படிகளின் இலக்கு இதன் சில பல படிகளை கடக்கும்போது:

சமாதி நிலை: அல்லது முக்தி நிலை பெறலாம். சித்தி பெறலாம் புத்தர் ஆகலாம்.இது போன்ற சமாதி நிலையை உயிர் வாழும்போதே விவேகானந்தர் போன்றோர் அனுபவித்திருக்கிறார். இது போன்ற சமாதி அல்லது உணர்வற்ற உடலின் நிலையைத்தான் வாழும்போதே நமது முனிவர்கள் சித்தர்கள் பெற்றார்கள் அவர்களிடம் இயற்கையும் இயங்கியது.

தியானம் வெட்ட வெட்ட நீண்டு கொண்டே செல்லும் அற்புதச் சுரங்கம். முடிவில்லாமல் செல்லும். அள்ள அள்ளக் குறையாத அற்புதப் பரிசு. விண்வெளியில் ஒரு சிறு பறவை பறக்கும் அனுபவம்.வழி. மண்ணை அகல அகல வைரமணிகளாய் கிடைக்கும் விழி. இதன் சுழலில் சுழியில் அகப்பட்டவர்க்கு வெளிவரவே தோன்றாது.சுகம் . பரமசுகம். பேரின்பம் என்பது இது ஒன்றைத்தான். இது உங்களது வாழ்வில் உயரிய வழியில் உங்களைக் கேட்காமலே வழிநடத்தும் அளப்பரிய சக்தி மிக்கது. இருளின் ஆக்ரமிப்பைக் களையும் மெல் ஒளி.

இந்த மனவடக்கமே மாபெரும் வெற்றி எனத் தாயுமானவர் இதன் பெருமை பற்றி சொல்வதைக் கேளுங்கள்:

                         மனவடக்கமே மாபெரும் வெற்றி
                         —————————–
கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
          கரடி வெம்புலி வாயையும்
        கட்டலாம் ஒரு சிங்க முதுகின் மேற் கொள்ளலாம்
           கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
            வேதித்து விற்றுண்ணலாம்
     வேறொருவர் காணாமல் உலகது லாவலாம்
         விண்ணவரை  யேவல் கொளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
          சரீரத்தி மும் புகுதலாம்
       சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
                தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற
              திறமரிது சத்தாகி யென்
         சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே
                   தேசோ மயானந்தமே.
                 – தாயுமானவர்.
கந்து= குதிரை, கட்செவி= பாம்பு. சந்ததம்= ஆயுள்


நன்றி:
கவிஞர் தணிகை.





தேர்வு முடிவுகள் வெளிவரும் காலம். பெற்றோர்களும் பிள்ளைகளும் திருப்புமுனைகளை சந்திக்கும் நேரம். கல்லூரிகளும் பள்ளிகளும் கல்வி விழாக்கள் நடத்தும் முக்கியமான தருணத்தில் உங்களுடன் சில பகிர்தல்கள்.
கல்வி உலகம் மிகப் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது பிரபஞ்சத்தைப் போல. அதில் தாம் எங்கு எப்படி பயணம் செய்வது தம் வாழ்வை எங்கிருந்து துவக்குவது எப்படி வாழ்வது என இளந்தளிர்கள் புரியாமல் புரிபடாமல் இரண்டுங்கெட்டான் வயதில் வலம் வந்து கொண்டு பெற்றோர் வழிகாட்டலில், நட்பின் சார்தலில், சுற்றுப்புற பாதிப்புகளில், சகோதர சகோதரிகளின் அழுத்தத்தில் ஒரு பாடப் பிரிவை தேர்வு செய்துவிட்டு அதன் பிறகு இந்தப் பாடப் பிரிவை எடுத்ததால் எனது வாழ்வே பாழாகிவிட்டதே என அங்கலாய்த்துப் பலனில்லை.

ஒரு கல்லூரி வளாகம் அருமையான கொன்றை மர சிவப்பு பூக்களுடன் செடி கொடிகளுடன் இயற்கை கொஞ்ச அழகு கொலுவீற்றிருந்தது கண்ட மாணவன் ஒருவன் படித்தால் இந்தக் கல்லூரியில் தான் படிப்பது என்றெல்லாம் முடிவெடுத்திருக்கிறார்கள். தமது முதிய மாணவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவர்கள் நல்லபடியாகத் தான் வழிகாட்டுவார்கள் என்று எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தவர்களும், கல்லூரியில் புதுப் பாடப் பிரிவு ஒன்று புகுத்தப்பட்டுள்ளது அதற்கு ஆள் சேர்க்கவேண்டும் அந்த படிப்பு எமது கல்லூரியில் தான் உள்ளது என அந்த பாடப் பிரிவை தக்கவைத்துக்கொள்ள கல்லூரி நிர்வாகமும் ஆசிரியர் குழாமும் மாணவர்களை அதில் சேர்க்கவைத்த முடிவுகளும் உண்டு.

மூத்த சகோதரர்கள், பெற்றோர்கள் தமது காலத்தில் அந்தப் படிப்பை படிக்க வாய்ப்பு கிடைக்காத பழங்கனவுகளுடன் தமது குடும்பத்திலும் ஒரு பொறியாளர், ஒரு மருத்துவர், ஒரு அரசு அலுவலர் உருவாகவேண்டும் அதற்கு இந்த பாடம்தான் அந்தப் பிரிவில் படித்தால் நல்லது என முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம்.

இப்படி எந்தப் பக்கம் போவது எனத் தெரியாமல் இருக்கும் புதுமனிதர்களுக்கு ஆயிரக்கணக்கான வழிகாட்டுதல்கள். அத்தனையும் ஒரு காலத்தில் தப்பிப் போகலாம். மாணவருக்கு எதில் ஆர்வம் அதிகம், எந்த பாடப் பிரிவை எடுத்தால் அவர் சுலபமாக பிரகாசிப்பார், எதிர்காலத்தில் தமது வாழ்வை சாதனையாக்கிக் கொள்வார் என்ற காரணிகள் அவருக்கு நன்கு விளக்கப்பட்டு அவரையே அவர் முடிவை எடுக்க நாம் உதவுவதுதான் சரியான வளம் தரும் முடிவைத் தரும். அல்லாமல் நம்து முடிவை அவர்பால் திணிப்பது என்பதில் தான் ஏற்படும் எதிர்காலச் சிக்கல்கள், விடுதி தற்கொலைகள் சமூகச் சீரழிவுகள் எல்லாமே.
இந்த ஒரு விஷியத்தில் யார் சொல்லும் முடிவையுமே இந்த இளையோர் ஏற்கக் கூடாது உளமார தம்மால் முடிவதை, தமக்கு ஆர்வம் தரும் படிப்பை, எதிகால ஒளிமயமான வாழ்வை நம்பி தன்னம்பிக்கையுடன் எடுக்க வேண்டும். அப்படித்தான் வெங்கி இராமகிருஷ்ணன் எடுத்து நோபெல் வரை சென்றிருக்கிறார். அவர் தந்தையின் விருப்பப்படி படித்திருந்தால் அவர் யாராலும் அடையாளம் காணப்படாத ஒரு பொறியாளராகவே இருந்திருப்பார்.
சில வேளைகளில் அப்துல் கலாமுக்கு விமானப்படைப் பிரிவில் பணியில் சேர வாய்ப்பு கிடைக்காதது போல வாய்ப்புகள் கிடைக்காமல் கூட (விரும்பியபடி) போகலாம் அதற்காக மனம் சோர்வடையாமல் அடுத்துள்ள அல்லது தாம் தமக்கு கிடைத்த பாடத்தில் எப்படி எவ்வளவு அதிகபட்சம் முயற்சி செய்வதன்றி விட்டுவிடக் கூடாது.

சில கல்லூரிகளில் நல்ல பாடப் பிரிவுகளே கிடைத்தால் கூடப் பயனில்லை. சில நல்ல கல்லூரிகளில் மோசமான பாடப் பிரிவு என்று நினைத்திருப்பதைப் படித்தாலும் நல்ல வரவேற்பிருப்பதைக் காணமுடிகிறது. கட்டுமானவியல் ஒரு காலத்தில் சரிந்திருந்த பாடப்பிரிவு இன்று வரவேற்புள்ள பாடப் பிரிவாக மாறியுள்ளதை காணமுடிகிறது.

நிறைய படிப்பின் வழிப்போக்குகள் இதழ் இதழ்களாக விரிய ஆரம்பித்துள்ளன. முதலில் மருத்துவம் என்றால் அலோபதி, ஹோமியோபதி,சித்தா, அக்குபஞ்சர்,மூலிகை வைத்தியம் என்று மட்டுமே சொல்வார்கள் இன்றோ அலோபதியில் மட்டுமே ஆயிரக் கணக்கான உட்பிரிவுகள் அதல்லாமல் எத்தனையோ நவீனத்வங்கள் ஆஞ்சியோ பிளாஸ்ட், அப்படி இப்படி என வாயில் நுழையாத துறைகள் ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் ஒரு பிரிவு என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதே போலத்தான், பொறியியல், விண்ணியல், மண்ணியல், கடல் சார்ந்த படிப்பு, கனிமையல், பறவை விலங்கியல் , கணினி இப்படி எல்லாவற்றையும் பற்றி சொல்வது இந்தக் கருத்துக் கோர்வையை திசை திருப்பி விடும். எனவே : நானறிந்த ஒரு நண்பர் ஒரு துறையில் சேர்ந்து படிக்க முடியாது விலகி (அவர் நல்ல அறிவாளிதான்) அதன் பிறகு அடிப்படைமுதல் படித்து இன்று பலரும் வியக்கும் நீதியரசராக விளங்குகிறார். மற்ற நண்பர் ஒருவர் தமது படிப்பை முடிக்காமலேயே தொழில் அதிபராகி இருக்கிறார். ஏன் நான் அறிந்த் பெரியவர் ஒருவர் 4 வது கூட படிக்காதவர் கறவை மாடு வாங்கி பால் ஊற்றி, சைக்கிள் கடை வைத்து, லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி இரசாயன ஆலை நிறுவி பெரும் பணச் செல்வந்தராகி ஆங்கிலத்தில் உரையாடி தனது வணிகத்தை நடத்துபவர்.
நிறைய கனவான்கள்: ஆல்ப்ரட் ஐன்ஸ்டீன், மைக்கேல் ஸ்டீவ் ஜாப் போன்றோர் யாவரும் கல்வி நிறுவனத்திலிருந்து பாதியில் வெளியேறியவர்தான். ஏன் நமது கொங்குநாட்டு G.D.நாயுடு கூட கல்வி நிறுவனம் வழியே படிக்காதவர்தானே. எனவே அறிவுக்கும் படிப்புக்கும் நிறைய தொடர்பிருப்பதாக தோன்றினாலும் கட்டாயமாக படிப்பது என்பது எல்லாம் ஆர்வமில்லாத துறைகளில் அறிஞர்களாலும் ஆகாத காரியம்.

எனவே வாழ்வு எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கும். சிலருக்கு முடிவிலிருந்தும் கூட துவங்கலாம். ஆனால் என்ன கெட்டவழிக்குத்தான் செல்லக் கூடாது. அந்த தீயவை அவர் வாழ்வையும் அவர் உடலையும் நிர்மூலப்படுத்திவிடும் என்பதால். எந்தக் காரணம் கொண்டும் தன்ன்ம்பிக்கை ஒன்றை மட்டும் கை விட்டு விடக் கூடாது.

நானறிந்த ஒரு இளைஞர் வெறும் டிப்ளமோ படித்தவர்தான். நன்கு படிக்க வேண்டியவயதில் தீ விபத்தில் சிக்கிய இவரின் தந்தைக்காக பெரும் தொகை செலவிட வேண்டி நேர்ந்ததால் தந்தையிடம் போதுமப்பா இந்த டிப்ளமோவை வைத்தே நான் வாழமுடியும் என இன்று சிங்கப்பூரில் 1,20,000 ரூபாய் சம்பளம் பெற்று பிழைப்பதுடன் தமது உறவினர் ஒருவரையும் பணிக்கு அழைத்து பணி பெற்று தந்துள்ளார். இப்போது இந்திய மாணவர்களுக்கு ஆண்டுக்கு பல கோடி கொடுக்குமளவு கம்பெனிகள் தயாராக உள்ளன. ஆனால் சமயமறிந்து முடிவு செய்து உயர்வோர்க்கு மட்டுமே இது சாத்தியம். முன் சொன்ன டிப்ளமோ இளைஞர் தமது 2 ஆண்டில் தமது பாடப் பிரிவை மாற்றக் கோரினார். அந்தக் கல்லூரியில் முன்னால் முடியாது என்றார்கள். அந்த இளைஞரின் தந்தையும் உடன் சென்று மாற்ற முடிந்தால் செய்யுங்கள் இல்லாவிட்டால் என் பையனின் மாறுதல் சான்றிதழ் கொடுங்கள் வேறு கல்வி நிறுவனத்தில் சேர்ந்து கொள்கிறோம் எனக் கேட்டபின் பையனின் மதிப்பெண் பற்றி பார்த்த பின் அவன் கல்லூரியில் முதல் மாணவன் என்றறிந்து அவன் கேட்ட பாடப்பிரிவை அந்தக் கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாகம் வழங்கியதாக அந்த மாணவனின் தந்தை பெருமை பொங்க கூறுகிறார். ஆடு மேய்க்கும் அவன் தாயார் அவனுடன் ஒரு ஆண்டு சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கிறார். இப்படி கணக்கில் அடங்கா வாழ்வின் உண்மைகள்.

இதெல்லாம் சொல்வது என்னவெனில் : ஆர்வம் இருக்கும் துறை தேர்வு செய்யப்பட வேண்டும், ஆட்டு மந்தைக் கூட்ட்மாக அனைவரும் ஒரே வழிப்பாதையில் செல்வதாக இருக்கக் கூடாது . சமயோசிதமாக முடிவு எடுக்கும் திறன் நிறைய வாய்ப்புகள் வழங்கும் அதன் பின் அவரது திறனும், விடாமுயற்சியும், என்றும் அவர் சார்ந்து துறையில் அவரை சாதனையாளாரக மாற்றிக் காட்டும். தேவையெல்லாம் உண்மை சார்ந்த கடின உழைப்பே. கல்பனாவின் கனவும் அப்துல் கலாமின் நினைவும் தெரஸாவின் தெய்வீகப் பணியும் எமது இளையோர்க்கு முன் மாதிரியாக வேண்டும்.
வாழ்த்துக்கள்.


நன்றி:
கவிஞர் தணிகை.

விஸ்வநாதன் ஆனந்த்

ஒரு மயிரிழையில் ஒரு விண்ணுயரம்



ஒரு புள்ளி வித்தியாசத்தில் உலகப் புகழும், செஸ் உலக 5 வது சாம்பியன்சிப்பும் சுமார் 8கோடி ரூபாயும் வென்ற ஒரு தமிழனுக்கு இது ஒரு மரியாதைப் பதிவு.

பாரத ரத்னா தருவதில் சிக்கலை ஏற்படுத்திய கபில்சிபல் போன்றவர்க்கு இது பெருத்த அடி. இனி கொடுத்துவிடுவார்கள்.ஒன்றுமில்லா ஐ.பி.எல் சூதாட்டப் போட்டியில் வென்றதற்கே கல்கத்தா நகரை கலக்கி உள்ளார்கள் ஷா ருக் கானும், ஜுஹி சாவ்லாவும், உஷா உதூப்பும், மம்தா பானர்ஜியும், சரியாக விளையாடாத யூசுப் பதான் கூட வெற்றிக் கோப்பையை தூக்கி பிடித்துக் கொண்டாடுகிறார் சற்றும் பொருத்தமில்லாமலே அந்த ஹிமாச்சல் பிரதேச விக்கெட் கீப்பர் மன்வீந்தர் பிஸ்லாவின் ஒரு நாள் சத்தமில்லாத அடி அந்த வெற்றியை அவர்க்கு குவித்து விட்டது அதிலும் கபில்தேவுக்கு தரவேண்டிய 1.5 கோடி பண முடிப்பை தராமல் விட்டு விட்டதாக தெரிவிக்கின்றன செய்திகள்.

இந்நிலையில் ஒரு தமிழன் உலக அளவில் சதுரங்க ஆட்டத்தின் 5 ஆம் முறையாக முதல்வனாக வென்றிருப்பது உண்மையிலேயே தமிழராகிய நமக்கெல்லாம் பெருமைதான். நாசாவில் ஔவைப் பிராட்டியின் வாசகம்: கற்றது கையளவு கல்லாதாது… போல இது ஒரு மகத்தான தமிழ் சொல்லும் தமிழன் பேர் சொல்லும் சாதனைதான். ஆனந்த் விஸ்வநாதன் உலக குடிமகனாக இருக்கவே தகுதி பெற்றுள்ளார் இதில் இரட்டைக் குடிமகன் உரிமை பெற்றிருந்தால் என்ன தவறு? என்பதை நிருபித்து விட்டார். அவர் பெற்றோர் இன்னும் சென்னை மண்ணில் தமிழ் மண்ணில் வாழ்ந்து வருகையில் அவர் ஸ்விஸ் குடியுரிமை பெற்றிருந்த போதும் இந்தியர் என்றே குறிப்பிடப்படுகிறார் என்பதை நமது நாடும் அரசுகளும் ஆள்பவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சதுரங்கம் அல்லது செஸ் ஆட்டம் நிறைய பேருக்குத் தெரியாத ஆட்டம். சற்று கடினமானதுகூட. வி.ஆனந்த் அப்படிப்பட்ட செஸ் ஆட்டத்தில் உலக அளவில்: 12+4 ஆட்டங்கள் இஸ்ரேல் ஆட்டக்காரர் போரிஸ் ஜெல்பேண்ட் உடன் ஆடி மொத்தம் 8.5 புள்ளிகள் பெற்று ஜெல்பேண்டை விட ஒரு புள்ளி கூடுதலாக பெற்றதால் (தோற்றவருடையது 7.5 புள்ளிகள் என்பதும் அவர் உலக தர வரிசையில் 17 ஆம் இடத்தில் உள்ளவர் இவர் முதலாம் இடத்தில் உள்ளவர் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது.) இவருக்கு இவ்வளவு புகழ் மாலைகளும். 2 ஆட்டம் வெற்றி ஒரு ஆட்டம் தோல்வி மற்ற 13 ஆட்டங்களும் சமன் செய்து இவ்வெற்றி பெற்றிருப்பதில் உள்ள சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல.

சதுரங்கம் ஆடுவோர்க்கு உடல், மனம், மூளை எல்லாம் ஒருங்கிணைந்து செயல் படவேண்டியதும் எப்போதும் புத்துணர்வோடு இருக்கவேண்டியதும் அவசியமானதாகும். சற்று உடல் தளர்ந்து சோர்வடைந்திருந்தால் கூட இந்த ஆட்டம் ஆட முடிவதில்லை. உடல் எனும் கருவி, சாதனம், உபகரணம், எந்திரம் எவ்வளவு செல்லமுடியுமோ அந்த அளவு செலுத்தி மனிதன் தம் வாழ்வு முடிவதற்குள் சாதிக்கப் பார்க்கிறான் அதில் இந்த செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்தின் பயணம் தொடர்வது இந்தியர் ஒவ்வொருவர்க்கும் பெருமைப் படக் கூடியதே.

இந்த விளையாட்டில் பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடும் வயது வித்தியாசமும் பெரிதும் பார்ப்பதற்கில்லை. ஒரு விளையாட்டிலேயே கூட நாம் எல்லாம் களைத்து விடுமளவு மூளைக்கு அதிக படியான வேலை. அப்படி இருக்க இந்த 40க்கும் மேற்பட்ட வயதிலும் இளைஞராகவே காட்சி அளித்துக் கொண்டு உலக அரங்கில் தமது வெற்றிக் கொடியை மேன் மேலும் இவர் நாட்டி வருவது உண்மையிலேயே மனித குலத்திலேயே இவரின் சகிப்புத்தன்மைக்கும் எந்த சமயத்திலும் மூளையை செயல் படவைக்கும் ஆற்றலும், முடிவு எடுக்கும் வல்லமையும் அதிக திறனும் பெற்றவர் என்பதைக் காட்டுகிறது. இவர் பிறந்த சாதிக்காக இவரை பின்னுக்குத் தள்ளிப் பேசக்கூடாது. அப்படிப் பேசுவது நம்மை நாமே கொச்சைப் படுத்திக் கொள்வதாகும். அவருக்கு கற்றுக் கொடுத்த அவரின் தாய் சுசீலா அம்மையாரையும், தற்போது உறுதுணையாக இருந்து வரும் மனைவி அருணா அவர்களையும் தந்தை விஸ்வநாத அய்யர் மற்றும் அவர் தம் குழந்தைகள் அடங்கிய குடும்பத்தார் அனைவருக்கும் எமது அன்பும் ஆசிகளும் வாழ்த்துக்களும் என்றும் உரித்தானது.

இவரின் வெற்றிகள் மேன்மேலும் தொடர.........................

நன்றி:
கவிஞர் தணிகை.



அசாத்யம் யாவும் சாத்யமாகும் சத்தியம்: பிடல் காஸ்ட்ரோ – சே குவேரா- ஹிட்லர்- பிராணாப் முகர்ஜி- டாக்டர் அ.ப.ஜெ. அப்துல் கலாம் சில தனி மனித வராலாறுகளுள் புதைந்துள்ள வியப்புகள்.

எப்போதும் குறை சொல்லிக் கொண்டு பிறரை சாடிக் கொண்டே எழுதிக் கொண்டிருப்பதைவிட அவற்றுள் உள்ள நல்லவற்றையும் பார்க்க வேண்டி எழுதும் கருத்து சில உம் முன். ஆனால் எம் போன்றோர் சாடுவதும் கூட வன்முறையை தூண்டுவதற்காக அல்ல. திருத்த திருந்த ஏதாவது வாய்ப்பு ஏற்பட்டு அதனால் நாம் வாழும் பூமிக்கு நமது சமுதாயத்துக்கு ஏதேனும் நன்மை விளைந்திடாதா என்ற நல் எண்ணத்தில்தான் ஒரு நப்பாசையில்தான்.(அந்த எண்ணத்தில்தான் இன்று உங்களுடன் பகிர நினைத்தது: செய்திகளை பிந்தி தருவது பொதிகை தொலைக்காட்சி என்று எழுத நினைத்தவன் சாத்யமான அசாத்யத்தைப் பற்றி எழுதியபடி இருக்கிறேன்)

மரணம் என்பது நாம் நினைக்கும்போது வரவேண்டும் என நினைத்து மாய்ந்துபோகும் கோழைகளுக்கு இடையே மாமனிதர்கள் எத்தனையோ தலை போகும் உயிர் அபாயங்களை சந்தித்து மீண்டு சாதித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பிரபஞ்சத்தை விட மனித சக்தி அளப்பரியது என அடிக்கடி டாக்டர்.அ.ப.ஜெ. அப்துல் கலாம் சொல்வது போலவும் விவேகானந்தர் சொல்வது போலவும் எப்படி எல்லாம் சாதித்திருக்கிறார்கள் என்னும்போது ஏதோ ஒரு சக்தி மரணத்திற்கும் மனிதத்திற்கும் இடையே ஊடாடிக் கொண்டே தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

மகாத்மாவின் சுயசரிதை கணக்குப் படி அவருக்கு அவரின் உயிருக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்தே குறி வைக்கப்பட்டு 8 ஆவது முயற்சியில் சுட்டுக் கொல்லப்படுகிறார் நாதுராம் கோட்ஸேவால்.

பிடல் காஸ்ட்ரோவை 638 வழிகளில் கொலை செய்ய சி.ஐ.ஏ முயற்சி செய்துள்ளதாக நூல்கள் குறிப்பிடுகின்றன. அவரே: “அதிகப்படியான கொலை முயற்சிகளுக்குப் பிறகும் உயிர் பிழைத்தவர்களுக்கான ஒலிம்பிக் போட்டி வைத்தால் நிச்சயமாக நான் தங்கம் வெல்வேன்”. எனக் குறிப்பிடுகிறார். அவருக்கு தற்போது 86 வயது. இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்பது மாபெரும் செய்தி. ஏன் எனில் அவருடைய வாழ்வில் 15 வயதிலிருந்தே போராடுகிறார். நாட்டுக்காக நாட்டு விடுதலைக்காக. மக்கள் நல்வாழ்வுக்காக. மயிரிழையில் நூல் இழையில் பல முறை மரணத்தின் பிடியிலிருந்து தமது போராட்டக் காலத்திலிருந்தே தப்பி வருகிறார். நித்ய கண்டம் பூரண ஆயுசு என்பது போல. நாட்டை மீட்டதுடன் அதன் நிர்வாகத்தை பொறுப்பை கையில் எடுத்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக நாட்டை முன் எடுத்துச் செல்வதுதான் அவரது வாழ்வின் வெற்றியும் அந்த கியூபா நாட்டின் வெற்றியுமாக விளங்குகிறது.

சீனாவின் மாவோவும், ரஷ்யாவின் லெனினும் இப்படிப்பட்ட பாக்ய சாலிகளாக விளங்கினார்கள். ஏன் ஹோசிமின் வியட்நாம் உட்பட அந்த வாய்ப்பைத்தான் இந்தியா பெற வில்லை. விடுதலைக்குப் பிறகு நேருதான் முயன்றிருக்கிறார். மகாத்மா சுடப்பட்டார். மேலும் இந்திய தேசம் கியூபா போன்று சிறியதாக இருந்திருந்தால் இது சாத்யமாய் இருக்குமோ எனத் தோன்றுவதை சீனாவும், ரஷ்யாவும் இந்தியாவை விட பரப்பளவில் பெரிதாக இருந்தபோதிலும் கூட அந்த தலைவர்களால் எப்படி பொருளாதார சீர்படுத்தலை மேற்கொள்ள முடிந்தது என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

சே குவேரா எனச் சொல்லப்படும் டி லா குவேரா (சே என்பது அடச் சே என்பது போன்ற ஒரு அர்த்தமுடையதான பொருள்பட்டதாம் கியூபா நாட்டில்) லத்தீன் நாடுகளில் புரட்சி விதைகளை விதைக்க புறப்பட்டு பொலிவியா காடுகளில் வாழ்வு முடிந்துபோனபோதும் இவர் கியூபாவின் மந்திரியாக முதலில் நிதிமந்திரியாக இருந்தபோதும் பிறகு அது ஒத்துவராது என தொழில் மந்திரியாக இருந்து பார்த்து அதுவும் ஒத்துவராமல் க்யூபாவின் குடி உரிமைகூட வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டு புறப்படுகிறார். போர்புரியும், மருத்துவம் புரியும் இவரால் நிர்வாகம் புரிய முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார். அந்த நாட்டின் ரூபாய்த் தாள்களில் கையொப்பமிடும் நிலையில் இருந்தபோதும் வேலை, சம்பளம், நிதி, நிர்வாகம் என்பதெல்லாம் இவருக்கு பிடித்தமானதாயில்லை. ஆனால் பிடல் காஸ்ட்ரோ 15 வயதுமுதல் நாட்டுக்காக போராட ஆரம்பித்து 32 வயதில் நாட்டின் தலைமை இடத்தை பிடித்து 45 ஆண்டுக்கும் மேலாக அந்த நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்தவராக சில ஆண்டுக்கும் முன் தான் தமது தம்பி ரால் காஸ்ட்ரோவுக்கு தமது இடத்தை அளித்து ஓய்வு பெற்றவராக முதிய 86 வயதுடன் வலம் வருகிறார். இவர் வாழ்வை பார்த்தால் வியக்காமல் இருக்க வழியில்லை.

அடுத்து சர்வாதிகாரி ஹிட்லருக்கு வருவோம்: இவர் கொடூரம் உலகெங்கும் பிரசித்தம். ஆனால் பதுங்கு குழிக்குள் ஈவாவை சாகும் முன் நாளில் மணந்து கொண்டு மறுநாளில் தற்கொலை செய்து கொள்கிற இவர் தாயை இழந்தவுடன் தட்டுத் தடுமாறி நகர்புறம் சென்று கிடைக்கும் வேலைகளை செய்து , தொழிற்சங்கம் சேர்ந்து, இராணுவத்தில் பணியாற்றி, அதன் பின் அதன் பிரதிநிதியாய் சில கூட்டங்களுக்கு சென்று கேள்வி கேட்க ஆரம்பித்து பின் பேச ஆரம்பித்து பிறகு 6அல்லது 7 நண்பர்களை வைத்துக் கொண்டு தேசிய சமத்துவ ஜெர்மன் தொழிலாளர் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து பல கூட்டங்களை மிகச் சொற்ப எண்ணிக்கையுள்ள பார்வையாளர்களுடனே அதாவது 7பேர் 9 பேர் இப்படி அது பின் பெருகி நூற்றுக் கணக்காகி ஆயிரக்கணக்காகி முதல் கட்சியின் கொள்கை அறிவுப்பு மாநாட்டில் 2000 பேருக்கும் மேல் பெருகி முதலில் 20 நிமிடம் மட்டுமே பேசி பின் 30 நிமிடம், 1 மணி நேரம் பிறகு 2 மணி நேரத்துக்கும் மேல் இப்படி சிறந்த பேச்சால் அனைவரையும் கட்டி நாட்டில் கொடி கட்டி பறந்திருக்கிறார். அதில் ஒரு கூட்டத்தில் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பயங்கர கூச்சலும் குழப்பமும் எதிர்ப்பும் கம்யூனிஸ்ட் கட்சியினரால் நடந்ததாகவும் அதை இவரின் ஆயுதம் தாங்கிய தோழர்கள் சமாளித்ததாகவும் அதன் பின் கூட்டம் பேச பேச கைதட்டல் ஆரவாரமாக மாறியதாகவும் அவரது மெய்ன் காம்ப்F ல் தெரிவிக்கிறார்.

ஹிட்லர் மற்றும் பிடல் காஸ்ட்ரோ இருவரின் வாழ்விலுமே இரு துருவங்களானாலும் இவர்கள் வைத்திருந்த பெரும் நம்பிக்கை, மலையினும் பெரிய நம்பிக்கை இவர்களை மாபெரும் மனிதர்களாக மாற்றியுள்ளதை இவர்களின் வாழ்வின் சரித்திரத்தை படிக்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. காஸ்ட்ரோவும் சிறிய குழுவை வைத்துத்தான் ஆரம்பித்துள்ளார். படிப்படியாக பலமுறை பல முனைகளில் போராடி ஆய்தம் ஏந்தி கொரில்லா முறைகளில் சண்டையிட்டு கடைசியில் ஆட்சியைக் கைப்பற்றும் அளவு அந்த சிறு குழு வளர்கிறது அதிக எண்ணிக்கையுடன். அப்படித்தான் ஹிட்லர் கூட்டமும். ஏன் ஏசுநாதர் கூட தமது கறுப்பு ஆடு யூதாஸ் கரியாஸ் உட்பட 12 பேருடன் தான் உலக சீர்திருத்தம் செய்ய கிளம்பினார் என்கிறது விவிலியம்.
24 அரசு பாராளுமன்ற நிலைக் குழுக்களில் பிரணாப் முகர்ஜி தலைவராம். இவர் நிதி மந்திரி பொறுப்புடன் இவ்வளவு பொறுப்புகளுடன் இருந்தது மட்டுமல்லாமல் பாராளுமன்ற சபை முன்னவராகவும் இருந்து வருகிறார் என்பதெல்லாம் செய்தி. இவர் ஒரு சாலை விபத்தில் தலையில் அடிபட்டு மூளை நரம்பு வரை பாதிப்பில் இருந்த வயதான இந்த மேற்கு வங்க காங்கிரஸ்காரரை விட மறுக்கிறது காங்கிரஸ். உள் என்ன நீரோட்டம் ஓடுகிறதோ ஆனால் இவர்தானே காங்கிரஸ் குடியரசு தலைவர் வெட்பாளர் என்கிறது நாடு.

டாக்டர் கலாம். கல்லூரி கட்டணத்தை கட்டுவதற்கே தமது தமக்கையின் வளையல்களை அடகு வைத்ததாகவும்; செய்தித் தாள் போடும் சிறுவனாகவும் தமது வாழ்வை ஆரம்பித்துள்ளதாக சுய சரிதையில் குறிப்பிடுபவர் நாட்டின் முதல் குடிமகனான பெருமையை விட ஏவுகணை மனிதராக, பொக்ரான அணு விஞ்ஞானியாக இந்த நாட்டின் கோடான கோடி இளைஞர்களின், நல்ல ஒழுக்கமான சிறுவர் சிறுமிகளின் ஆதர்சமான முன்மாதிரியான (ரோல் மாடல்) மனிதராக உலக அறிவியாலாளர் வரிசையில் ஒரு உன்னத மனிதராக இவரின் பிறந்த நாளை உலக இளைஞர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையே அறிவிக்கும் வண்ணம் வளர்ந்தது இன்னும் பதவிக்காக நானல்ல எனக்காகத் தான் பதவியே என இமயமாகத் திகழ்வதும்

இந்த மாமனிதர்களின் அரிய பெரிய மாமலை போன்ற நம்பிக்கையின் அளவீட்டை காட்ட முடியாமல் எழுத்துக்கள் தோற்றுவிடுகின்றன. முகமது நபி கூட தமது வாழ்வில் இப்படித்தான் நம்பிக்கைத் தளராமல் போராடியதாக வரலாறு சொல்கிறது இப்படி எத்தனை எத்தனை மாமனிதர்கள் அலெக்ஸ் சான்டர் முதல் அப்துல் கலாம் வரை சில பெயர்கள் என்னால் இந்த கருத்தோட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அதன் தொகை மனிதப் பால்வெளியில் எண்ணிறந்தன.

இந்த அரிய மாமலைகளை பெரும் நம்பிக்கைகளை எல்லாம் காணும்போது தான் எவ்வளவு பெரிய அரிய கோட்டையை தவற விட்டிருக்கிறோம் என நம்மையே நாம் திரும்பிப் பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது. நாம் நினைத்திருந்தால் கூட நாட்டைப் பிடித்திருக்கிலாமோ? வெறும் சோற்று வழிகளுக்காக வழி தெரியாமல் அல்லவா போய்விட்டோம்? பாதி வாழ்வை கழித்து கெட்டோம் எனத் தோன்றுகிறது. மாட மாளிகைகளும், மக்களை கொள்ளை அடித்து புத்தி சாதுரியத்தால் வாழ்வின் தந்திரத்தால் பள்ளி நுழைவாயிலில் உள்ள இரும்புக் கிராதிகளில் தமது பெயர்களை எழுதிக் கொள்ளும் பணவான்களும் கனவான்களும் நமக்கு ஒரு பொருட்டாக அல்லவா தோன்றுகிறது? நாம் எவ்வளவு சிறுத்துள்ளோம்? இன்னும் பெரிதாக வளரவேண்டும். காலம் சாய்க்கும் முன்.

நன்றி:
கவிஞர் தணிகை.

தமிழன் பெருமை

தாழி..!
தமிழன் தெரிந்துகொள்ளவேண்டிய தன் இனத்தின் பெருமை..!

அதை உலகிற்கே உரக்க சொல்லவேண்டியது ஒவ்வோர் தமிழனின் கடமை..!

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.

தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.
நன்றி: தமிழ்ச்சாரல்

மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே !



மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே !

பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே!

வணங்கினோம் உன்னையே…
{மலர்போல் } 
ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே,

நதி காய நேராமல் நீரூற்று தாயே

இந்நிலம் பார்த்து நீயே..!

எளியோரை மகிழ்வாக்க வழிகாட்டு தாயே!

வலியோர்கள் வாழ்த்தாமல் வசைக்காட்டு தாயே!

என் வளமான தாயே!

பசிதாகம் காணாமல் வயிறாக்கு தாயே…

இசைப்போர்கள் செவிதேடி இசைஊட்டு தாயே!                
{மலர் போல }

புகழ் செல்வம் நலம் கல்வி குறவின்றி வாழ

புவி மீதில் இறைஞானம் எமை என்றும் நாட

ஒரு குறையாமல் வாழ

அருளோடு பொருள் வேத அறிவோடு ஞானம்,

தெளிவோடு தினம் காண நிலை வேண்டும்

வேண்டுமது அது திரளாக வேண்டும்,

பல வீடு பல நாடு பல தேசம் என்று

உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே…

உறவோடுமகிழ்வோடுஎன்னைமாற்று தாயே!                           
 {மலர்போல}